Type Here to Get Search Results !

6th & 7th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

பகவதிமலையில் 1,800 ஆண்டுகள் பழைமையான தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
  • வேலூர் அருகே உள்ள பகவதி மலையில் இருந்து சுமார் 1,800 ஆண்டுகள் பழைமை வாய்ந்த 3 தமிழி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • தமிழ் மொழியின் காலத்தால் முந்தைய எழுத்து வடிவத்துக்கு பெயரே தமிழி ஆகும். 
  • பகவதிமலையில் சமண முனிவர்களுக்கு அமைக்கப்பட்ட படுகையின் மீது மூன்று தமிழி கல்வெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளன. படுகைகள் கரடுமுரடாக வெட்டப்பட்டுள்ளன. எழுத்துகளும் மிகவும் மெல்லியதாக உள்ளன. இந்த மூன்று கல்வெட்டுகளும் கி.பி. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்தவைகளாகும்.
  • தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தமிழி எழுத்துகளுடன் கூடிய 96 கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தற்போது கண்டறியப்பட்டுள்ள இந்த 3 கல்வெட்டுகளுடன் சேர்த்து அவற்றின் எண்ணிக்கை 99-ஆக உயர்ந்துள்ளது என்றார் அவர்.
  • பிரிக்கப்பட்ட வேலூர் மாவட்டத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் முதல் தமிழி கல்வெட்டு இவையாகும். முதல் கல்வெட்டில் "ள மகன் ஈதி பாளிய்' என எழுதப்பெற்றுள்ளது. இதில், "ஈத்த' என்ற சொல் "ஈதி' என்று தவறுதலாக எழுதப்பெற்றுள்ளது. 
  • இதுதவிர, கல்வெட்டு மரபில் "இள' என்று எழுதாமல் "ள' என்றே எழுதுவர். அந்தவகையில், இங்கு "ள' மகன் (இள மகன்) என்பது அப்பகுதியை ஆண்ட தலைவனைக் குறிக்கும். சங்க காலத்தில் அரசியல் தலைவர்கள் சமண முனிவர்களுக்கு அவ்வப்போது பள்ளி எனும் நினைவுச் சின்னங்களை உருவாக்குவர். இந்தக் கொடை சமயத் தலைவர் ஆதரவினை எதிர்பார்த்து அளிக்கப் பெறுவதாகும்.
  • இரண்டாம் கல்வெட்டில் "மாறன் மழவன்' என எழுதப்பட்டுள்ளது. "மாறன்' என்ற பெயர் பாண்டியர் மரபிற்குரிய பெயராகும். இந்தப் பெயர் தொண்டை நாட்டில் கிடைப்பது புதுமையானது. "மாறன்' என்ற பெயர் தலைமை பெற்றிருப்பவனைக் குறிக்கும். 
  • "மழவன்' என்பது இளம் வீரனைக் குறிக்கும். அந்த வகையில், இக்கல்வெட்டும் இளம் வீரனைக் குறிப்பிடுகின்றன. மூன்றாம் கல்வெட்டில் "தி' என்ற எழுத்து மட்டும் படிக்க முடியும் நிலையில் உள்ளது என்றார் அவர்.
இதய சிகிச்சையில் கதிா்வீச்சு தொழில்நுட்பம்: சென்னையில் சா்வதேச மாநாடு
  • கதிா்வீச்சு தொழில்நுட்பம் வாயிலாக இருதய பரிசோதனைகள் மேற்கொள்ளும் மருத்துவ முறைகள் தொடா்பான சா்வதேச மாநாடு சென்னையில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெற்றது. அதில், சுவிட்சா்லாந்து, ஃபிஜி உள்ளிட்ட நாடுகளைச் சோந்த மருத்துவ நிபுணா்கள் பலா் கலந்துகொண்டனா்.
'துாய்மை இந்தியா' திட்டத்தில் தேசிய விருது பெற்ற பெண்
  • 'துாய்மை இந்தியா' திட்டத்தில், மதுரை ஊராட்சிகளில், தனி ஒருவராக களம் இறங்கி, 5,000க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் கட்டித் தந்த, செல்விக்கு, மத்திய அரசு, தேசிய விருது அளித்து கவுரவித்துள்ளது. 
  • மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் தற்காலிக வட்டார ஒருங்கிணைப்பாளராக பணிபுரிவர், செல்வி, 36. துாய்மை இந்தியா திட்டத்திற்கு முன், 'நிர்மல் பாரத்' திட்டத்தில், சமூகப்பணிகள் செய்தார்.
  • கடந்த, 2014ம் ஆண்டுக்கு பின், துாய்மை இந்தியா திட்டத்தில் சேவைபுரிய, ஊராட்சிகளை நோக்கி பயணித்தார். 



இந்தியாவின் முதல் கார்ப்ரேட் ரயில்
  • 500 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நகரங்களை இணைக்கும் வகையில், தனியார் ரயில்கள் விடப்படும் என மத்திய அரசு தெரிவித்து வந்தது. 
  • அதன் படி, டெல்லி-லக்னோ. மும்பை-ஷீரடி, சென்னை-பெங்களூர், திருவனந்தபுரம்-கண்ணூர், மும்பை-அகமதாபாத் ஆகிய வழித்தடங்களில் தனியார் ரயில்கள் விடப்படும் என அறிவித்தது.
  • இந்நிலையில் இதன் முதன் முயற்சியாக லக்னோ முதல் புதுடெல்லி வரையிலான இந்தியாவின் முதல் கார்பரேட் ரயிலை உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதல் பயணமாக 389 பயணிகள் பயணம் செய்தனர் என கூறப்படுகிறது.
  • இந்த ரயில் காலை 6.10 மணிக்கு லக்னோவிலிருந்து புறப்பட்டு 12.25 புது டெல்லிக்கு சென்றடையும், அதே போல் மீண்டும் புது டெல்லியிலிருந்து மாலை 3.35 மணிக்கு புறப்பட்டு இரவு 10.05 மணிக்கு லக்னோ சென்றடையும் என்பது குறிப்பிடத்தக்கது.
ரெப்போ வட்டி விகிதம் குறைப்பு
  • வங்கிகளுக்கான குறுகிய கால கடன் வட்டி விகிதத்தை 5 வது முறையாக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி.
  • வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் பணத்திற்கான வட்டி விகிதம்தான் ரெப்போ விலை எனப்படுகிறது. தற்போது வங்கிகள் பல பண வீக்கத்தை சந்தித்திருப்பதால் இந்த ரெப்போ வட்டியை 0.25 ஆக குறைத்துள்ளது இந்திய ரிசர்வ் வங்கி. இந்த ஆண்டில் 5வது முறையாக ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்பட்டுள்ளது.
  • கடந்த ஆண்டு 5.40 சதவீதமாக இருந்த ரெப்போ வட்டி விகிதம் தற்போது 5.15 சதவீதமாக குறைந்துள்ளது. 



உலக அளவில் சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது: மத்திய சுற்றுலாத்துறை
  • உலக அளவில் சுற்றுலாத்துறையில் இந்தியா 34வது இடத்தில் உள்ளது என மத்திய சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 
  • இந்தியாவிற்கு சுற்றுலா வரும் வெளிநாட்டினர் எண்ணிக்கை கடந்தாண்டை விட இந்தாண்டு உயர்ந்துள்ளதாகவும் அதற்காக சுற்றுலாத்துறையை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுத்து வருகிறது என்றும் தெரிவித்துள்ளது.
IFFI 2019 நவம்பர் 20-28 வரை கோவாவில் நடைபெற உள்ளது: பிரகாஷ் ஜவடேகர்
  • இந்தியாவில் ஆண்டுதோறும் நடத்தப்படும் சர்வதேச திரைப்பட விழாக்களில் ஒன்று கோவா சர்வதேச திரைப்பட விழா. 
  • இந்த ஆண்டுக்கான 50-வது சர்வதேச திரைப்பட விழா வருகின்ற நவம்பர் 20 ஆம் தேதி முதல், 28 ஆம் தேதி வரை தொடர்ந்து 8 நாட்கள் நடைபெற்றுகிறது. இந்த விழாவில் சுமார் 80 நாடுகளைச் சேர்ந்த 200 படங்கள் திரையிடப்படுகிறது.
  • திரைப்பட விழாவில் சுமார் 26 திரைப்படங்கள் மற்றும் பல்வேறு இந்திய பிராந்திய மொழிகளில் 15 அல்லாத திரைப்படங்கள் திரையிடப்படும், எனவும் தெரிவித்துள்ளார்.
JeM முகாமையை அழித்த IAF போர் விமானங்களுக்கு 'ஸ்பைஸ்' என பெயர்
  • கடந்த பிப்ரவரி 26 ஆம் தேதி அன்று பாகிஸ்தானின் பாலாக்கோட்டில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது (JeM) பயங்கரவாத முகாமை அழித்த இந்திய விமானப்படையின் (IAF) 12 மிராஜ் 2000 போர் விமானங்கள் 'ஸ்பைஸ்' என்ற குறியீட்டு பெயரிடப்பட்டன. 
  • இந்த குறியீட்டு சொல் பாலகோட் வான்வழித் தாக்குதல்களில் ஈடுபட்ட IAF இன் மிராஜ் ஜெட் விமானங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், பாலகோட் ஆபரேஷன் ரகசியத்தை பராமரிக்க 'ஆபரேஷன் பந்தர்' என்ற குறியீட்டு பெயரிடப்பட்டது.



அமெரிக்க, பிரிட்டன் விஞ்ஞானிகளுக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு
  • உடலில் ஆக்சிஜன் அளவு எவ்வளவு உள்ளது என்பதை உணர்ந்து அதற்கேற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து கண்டுபிடித்த, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடான பிரிட்டனைச் சேர்ந்த, மூன்று விஞ்ஞானிகள், மருத்துவத்துக்கான நோபல் பரிசுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • உடலில் உள்ள ஆக்சிஜன் அளவை உணர்ந்துக் கொண்டு அதற்கு ஏற்ப அணுக்கள் செயல்படுவது குறித்து ஆய்வு செய்ததற்காக, இவர்களுக்கு இந்த விருது வழங்கப்பட உள்ளது. 
  • இந்த ஆராய்ச்சியின் மூலம், அனீமியா, புற்றுநோய் உள்பட பல நோய்களுக்கான சிகிச்சை அளிப்பதற்கு வழி ஏற்பட்டுள்ளது' என, தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. வில்லியம் கெலின், அமெரிக்காவின் ஹாவர்டு ஹூக்ஸ் மருத்துவ மையத்தில் ஆராய்ச்சி யாளராக உள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக அனுமுலா கீதேஷ் ஷர்மா நியமனம்
  • ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக அனுமுலா கீதேஷ் ஷர்மா நியமிக்கப்பட்டுள்ளார். 
  • 1986 பேட்ச் ஐ.எஃப்.எஸ். அதிகாரியான அனுமுலா கீதேஷ் ஷர்மா ஆஸ்திரேலியாவுக்கான இந்திய தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை தொடங்கி வைத்தார் மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன்
  • இணையவழி பல்மருத்துவ தகவல் சேவை, செல்பேசி செயலியை மத்திய அமைச்சர் ஹர்ஷ்வர்தன் டெல்லியில் தொடங்கி வைத்தார். 
  • பார்வை குறைபாடு உடையவர்களுக்கான ப்ரைல் குறிப்பேட்டையும், ஒலிப்பதிவையும் ஹர்ஷ்வர்தன் வெளியிட்டார்.
அபிநந்தன் இடம்பெற்றுள்ள விமானப் படைக்கு துணிச்சல் விருது
  • பாகிஸ்தானின் பாலகோட்டில் விமானப்படை நடத்திய துல்லிய தாக்குதலில் சிறப்பாக செயல்பட்ட விமானப்படை வீரர்களுக்கு துறை ரீதியிலான விருது வழங்கப்பட்டுள்ளது.
  • கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தானின் எஃப் 16 போர் விமானத்தை தாக்கி அழித்த விங் கமாண்டர் அபிநந்தனின் 51-வது படைப்பிரிவின் துணிச்சலை பாராட்டி விருது வழங்கப்பட்டுள்ளது. 
  • இந்த விருதை 51-வது படைப்பிரிவின் குழுத் தலைவர் கேப்டன் சதீஷ் பவார் பெற்றார். ஆப்ரேஷன் BANDAR என்ற பெயரில் மிராஜ் 2000 போர் விமானத்தை வைத்து பாகிஸ்தானின் பாலகோட்டில் உள்ள பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்த படைப்பிரிவு எண் ஒன்பதுக்கும் விருது வழங்கப்பட்டுள்ளது.
  • பாகிஸ்தானின் தாக்குதலை தவிடு பொடியாக்கிய 601 என்ற ராணுவ சிக்னல் பிரிவின் தலைவர் மின்டி அகர்வால் என்ற பெண் அதிகாரியின் துணிச்சலைப் பாராட்டியும் விருது வழங்கப்பட்டுள்ளது.



அக்., 21ல் விண்வெளியில் பெண்கள் நடைபயணம்
  • 'விண்வெளியில், பெண்கள் மட்டுமே பங்கேற்கும், முதலாவது விண்வெளி நடைபயணம், வரும், 21ல் நடைபெறும்' என, அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான, 'நாசா' அறிவித்துள்ளது.
  • இதில், விண்வெளி வீராங்கனையான கிறிஸ்டினா கோச்சுடன், ஜெசிகா மேயர் என்ற வீராங்கனை பங்கேற்கிறார். 
வெளிநாட்டவருக்கு சவுதி அரசு சலுகை
  • சவுதி அரேபியாவுக்கு வரும், வெளிநாட்டைச் சேர்ந்த ஆண், பெண் சுற்றுலா பயணியர், அவர்களின் உறவுமுறையை நிரூபித்தால் மட்டுமே, ஓட்டல் அறையில் ஒன்றாக தங்க அனுமதிக்கப்பட்டனர்.
  • இப்போது, சுற்றுலா கொள்கையில், சில சீர்த்திருத்த நடவடிக்கைகளை, சவுதி அரசு மேற்கொண்டுள்ளது. அதன்படி உறவுமுறையில்லாத வெளிநாட்டைச் சேர்ந்த ஆணும், பெண்ணும், ஓட்டல்களில் அறைகளை பகிர்ந்து கொள்ள, சவுதி அரசு அனுமதி அளித்துள்ளது. 
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா இமாலய வெற்றி
  • இந்தியா வந்துள்ள தென் ஆப்ரிக்க அணி மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. 
  • விசாகப்பட்டனம் டெஸ்டின் இரண்டாவது இன்னிங்சில் 'வேகத்தில்' ஷமியும், 'சுழலில்' ரவிந்திர ஜடேஜாவும் அசத்த, இந்திய அணி 203 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. 
  • இந்தியா சார்பில் அதிகபட்சமாக ஷமி ஐந்து, ஜடேஜா நான்கு விக்கெட் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருதை இந்தியாவின் ரோகித் வென்றார். 
  • இவ்வெற்றியின் மூலம் 40 புள்ளிகள் பெற்ற இந்திய அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் (160) உள்ளது. 



ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசை இந்திய பெண்கள் அணி 'நம்பர்-2'
  • ஐ.சி.சி., ஒருநாள் போட்டி தரவரிசையில், இந்திய பெண்கள் அணி 2வது இடத்தை தக்கவைத்துக் கொண்டது.சர்வதேச ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் பெண்கள் அணிகளுக்கான தரவரிசை பட்டியலை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) துபாயில் வெளியிட்டது. 
  • இதில் இந்திய அணி 125 புள்ளிகளுடன் 'நம்பர்-2' இடத்தில் நீடிக்கிறது. இதனையடுத்து இந்திய அணி, 3வது இடத்தில் உள்ள இங்கிலாந்தை (121) விட 4 'ரேங்கிங்' புள்ளிகள் கூடுதலாக பெற்றது. முதலிடத்தில் ஆஸ்திரேலியா (148 புள்ளி) தொடர்கிறது.
  • சர்வதேச 'டுவென்டி-20' போட்டி அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் இந்திய பெண்கள் அணி 5வது இடத்தில் உள்ளது. 
  • கடந்த ஆண்டு வெஸ்ட் இண்டீசில் நடந்த ஐ.சி.சி., 'டுவென்டி-20' உலக கோப்பை தொடரில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றிய ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த 3 இடங்களில் இங்கிலாந்து, நியூசிலாந்து, விண்டீஸ் அணிகள் உள்ளன.
ஐஸ்லாந்து வாள்வீச்சுப் போட்டி: பவானிதேவிக்கு வெண்கலம்
  • ரெய்க்ஜாவிக் நகரில் இப்போட்டிகள் நேற்று முன்தினம் நடைபெற்றன. அரை இறுதிப் போட்டியில் பவானிதேவியும், அமெரிக்காவின் பிரான்செஸ்கோ ரூசோவும் மோதினர். இதில் ரூசோ 15-13 என்ற கணக்கில் பவானிதேவியை வென்றார். 
  • இதையடுத்து பவானி தேவிக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்தது. இந்தப் பிரிவில் அமெரிக்காவீன் மய்யா சாம்பர்லைன் தங்கமும், ரூசோ வெள்ளியும் வென்றனர். 
  • கடந்த வாரம் பெல்ஜியத்தில் நடைபெற்ற டூர்னோய் சாட்டிலைட் வாள்வீச்சுப் போட்டியில் பவானி தேவி வெள்ளியைக் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக தடகளம்: ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் அமெரிக்க குழுவினர் முதலிடம்
  • கத்தார் தலைநகர் தோகாவில் 10 நாட்களாக நடந்த 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் ஆண்களுக்கான 4 x 100 மீட்டர் தொடர் ஓட்டத்தில் கிறிஸ்டியன் கோல்மன், ஜஸ்டின் கேத்லின், மைக்கேல் ரோஜர்ஸ், நோவா லைலெஸ் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 37.10 வினாடிகளில் முதலிடத்தை பிடித்து தங்கப்பதக்கத்தை அறுவடை செய்தனர். 
  • இந்த பிரிவில் 2007-ம் ஆண்டுக்கு பிறகு இப்போது தான் அமெரிக்க அணி பட்டம் வென்று இருக்கிறது. இதன் பெண்கள் பிரிவில் ஷெல்லி அன் பிராசெர் பிரைஸ், நதாலி ஒயிட்டி, ஜோனிலே சுமித், ஷெரிக்கா ஜாக்சன் ஆகியோர் கொண்ட ஜமைக்கா அணியினர் (41.44 வினாடி) தங்கப்பதக்கத்தை சொந்தமாக்கினர்.
உலக தடகளம்: ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் எத்தியோப்பியா வீரர் முதலிடம்
  • கத்தார் தலைநகர் தோகாவில் 10 நாட்களாக நடந்த 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் நள்ளிரவில் நடந்த ஆண்களுக்கான மாரத்தான் போட்டியில் (42.19 கிலோ மீட்டர் தூரம்) டாப்-2 இடங்களை எத்தியோப்பியா வீரர்கள் பிடித்தனர். 
  • அதில் லெலிசா டேசிசா 2 மணி 10 நிமிடம் 40 வினாடிகளில் பந்தய தூரத்தை கடந்து தங்கப்பதக்கம் தனதாக்கினார். 
  • உலக மாரத்தானில் எத்தியோப்பியா வீரர் ஒருவர் பட்டம் வெல்வது 2001-ம் ஆண்டுக்கு பிறகு இதுவே முதல் முறையாகும். இதில் பங்கேற்ற 73 வீரர்களில் 55 வீரர்கள் மட்டுமே பந்தய தூரத்தை நிறைவு செய்தனர்.



உலக தடகள போட்டி: பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் சிபன் ஹசன் சாம்பியன்
  • 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் பெண்களுக்கான 1500 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் நெதர்லாந்து வீராங்கனை சிபன் ஹசன் 3 நிமிடம் 51.95 வினாடிகளில் முதலாவது வந்து தங்கப்பதக்கத்தை தட்டிச்சென்றார். 
  • இந்த தொடரில் அவர் வென்ற 2-வது தங்கம் இதுவாகும். ஏற்கனவே 10 ஆயிரம் மீட்டர் ஓட்டத்திலும் 26 வயதான சிபன் ஹசன் மகுடம் சூடியிருந்தார்.
உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி: பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியன் மீண்டும் சாதனை
  • 17-வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டி கத்தார் தலைநகர் தோகாவில் நேற்றுடன் முடிவடைந்தது. இந்த போட்டியில் பெண்களுக்கான 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் நடப்பு சாம்பியனான கென்யா வீராங்கனை ஹெலென் ஓபிரி புதிய போட்டி சாதனையுடன் பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். அவர் இலக்கை 14 நிமிடம் 26.72 வினாடிகளில் கடந்தார்.
சர்வதேச டென்னிஸ் போட்டி- ஜோகோவிச், ஒசாகா 'சாம்பியன்'பட்டம் வென்றனர்
  • ஜப்பான் ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி டோக்கியோவில் நடந்தது. இறுதி ஆட்டத்தில் 'நம்பர் ஒன்' வீரரான செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-2 என்ற நேர் செட் கணக்கில் ஜான் மில்மானை (ஆஸ்திரேலியா) தோற்கடித்து சாம்பியன் பட்டத்தை வசப்படுத்தினார். 
  • ஜப்பான் ஓபனில் அறிமுகம் ஆன முதலாவது ஆண்டிலேயே பிரமாதப்படுத்தியுள்ள ஜோகோவிச்சுக்கு ரூ.2¾ கோடி பரிசுத்தொகையும், 500 தரவரிசை புள்ளிகளும் கிடைத்தது. மொத்தத்தில் இது அவரது 76-வது சர்வதேச பட்டமாகும்.
  • இதே போல் பீஜிங்கில் நடந்த சீன ஓபன் டென்னிஸ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் நம்பர் ஒன் வீராங்கனை ஆஷ்லி பார்டியும் (ஆஸ்திரேலியா), 4-ம் நிலை வீராங்கனை நவோமி ஒசாகாவும் (ஜப்பான்) பலப்பரீட்சையில் இறங்கினர். 1 மணி 50 நிமிடங்கள் நீடித்த இந்த மோதலில் ஒசாகா 3-6, 6-3, 6-2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று பட்டத்தை வென்றார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel