Type Here to Get Search Results !

30th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி. ஷாஹி நியமனம்
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக அம்ரேஷ்வர் பிரதாப் சாஹியை நியமித்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹிலராமாணீ மேகாலயா உயர்நீதிமன்றத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். இந்த உத்தரவுக்கு அதிருப்தி தெரிவித்த தஹிலராமாணீ தனது பதவியை ராஜிநாமா செய்தார். 
  • அவருக்குப் பதிலாக, மேகாலயா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க, உச்சநீதிமன்ற கொலீஜியம் முடிவு செய்தது.
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.கே.மிட்டலை நியமிப்பதற்குப் பதிலாக, பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியான ஏ.பி. ஷாஹியை நியமிக்க முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, கடந்த அக்டோபர் 17-ஆம் தேதி ஏ.பி. ஷாஹியை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரைத்தது.
இந்தியாவின் இளவயது மாணவன் கணக்கு புதிரில் சாதனை
  • சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டியில் இந்தியாவை சேர்ந்த மாணவர் பிரஞ்சால் ஸ்ரீவத்சவா தங்கப்பதக்கம் வென்றார். மேலும் நாட்டிலேயே இளவயதில் தங்கப்பதக்கம் வென்றவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.
  • சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டி கடந்த 1959-ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. பள்ளி பயிலும் மாணவர்கள் இதில் பங்கேற்று வருகின்றனர். இந்தாண்டுக்கான போட்டியில் பெங்களூரூவை சேர்ந்த பள்ளி மாணவர் பிரிஞ்சால் ஸ்ரீவத்சவா கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றுள்ளார். 



ஜம்மு காஷ்மீர் இரண்டு யூனியன் பிரதேசங்களானது
  • ஜம்மு காஷ்மீர் என்ற மாநிலம் நள்ளிரவு முதல் இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டு விட்டது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் துணை நிலை ஆளுநர்கள் இன்று பதவியேற்றுக் கொள்கின்றனர்.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் பிரிக்கப்பட்டு ஜம்மு காஷ்மீர், லடாக் என்ற இரு யூனியன் பிரதேசங்களாக உருவெடுத்துள்ளது. கடந்த ஆகஸ்ட் 9ம் தேதியிட்ட காஷ்மீர் மறுசீரமைப்புக்கான மத்திய அரசின் 
  • உத்தரவுக்கு குடியரசுத் தலைவரிடமிருந்து ஒப்புதல் பெறப்பட்டுள்ளது.குஜராத்தை சேர்ந்த முன்னாள் அரசு அதிகாரியான ஜி.சி.முர்மு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக பதவியேற்க உள்ளார். இதே போன்று லடாக்கின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணன் மாத்தூர் பதவியேற்க உள்ளார்.
  • லடாக் யூனியன் பிரதேசத்திற்கு சட்டமன்றம் கிடையாது. இது மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி நிர்வாகத்தின் கீழ் வந்துவிடும். ஜம்மு காஷ்மீரில் அமையவிருக்கும் சட்டமன்றம் டெல்லியை முன்மாதிரியாக கொண்டு துணைநிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில் இருக்கும். 
  • புதிய யூனியன் பிரதேசங்களான ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக்கில், தேசிய மனித உரிமை சட்டம், ஜிஎஸ்டி, மத்திய தகவல் சட்டம், எதிரி சொத்து பறிமுதல் சட்டம், பொதுசொத்துகளுக்கு சேதம் விளைவிப்பதை தடுக்கும் சட்டம் உள்ளிட்ட மத்திய அரசின் 108 சட்டங்கள் இவ்விரு யூனியன் பிரதேசங்களிலும் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளன.
  • நாட்டின் பல யூனியன் பிரதேசங்கள் மாநிலங்களாக உருவெடுத்த நிலையில், முதன்முறையாக ஜம்மு- காஷ்மீர் யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டுள்ளது. மொத்த மாநிலங்களின் எண்ணிக்கை 28 ஆக குறைந்துள்ள நிலையில், யூனியன் பிரதேசங்களின் எண்ணிக்கை 9 ஆக அதிகரித்துள்ளது.
கண்டம் விட்டு கண்டம் சென்று தாக்கும் புதிய ஏவுகணை சோதனை
  • ரஷியாவால் உருவாக்கப்பட்ட க்நாஸ் விளாடிமிர் அணுசக்தி நீர்மூழ்கி கப்பல், அந்நாட்டு கடற்படையின் வடக்கு படைப்பிரிவில் வரும் டிசம்பர் மாதம் சேர்த்து கொள்ளப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்நிலையில், வெள்ளை கடல் பகுதியில் அந்த நீர்மூழ்கியில் இருந்து புலுவா எனப்படும் புதிய ஏவுகணை வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.
குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு பாகிஸ்தான் புதிய நாணயம் வெளியீடு
  • சீக்கியர்களின் முதல் குருவான குரு நானக் கடந்த 1469 ஆம் ஆண்டு பிறந்தார். அவருடைய 550 ஆம் பிறந்த நாள் வரும் நவம்பர் 9 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. குருநானக் நினைவிடம் பாகிஸ்தானில் உள்ள கர்தார்பூரில் அமைந்திருக்கும் குருத்வாரா தர்பார் சாகிப்பில் உள்ளது.
  • இதையொட்டி இந்தியாவில் இருந்து கர்தார்பூர் செல்ல வழித்தடம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. வரும் 9 ஆம் தேதி அதாவது குருநானக் பிறந்த நாள் அன்று இந்த வழித்தடம் திறக்கப்பட உள்ளது. இந்த வழித்தடத்தைப் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் திறந்து வைக்கிறார்.
  • நேற்று பாகிஸ்தான் அரசு குருநானக் 550 ஆம் பிறந்த நாளை முன்னிட்டு புதிய நாணயம் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த நாணயத்தின் புகைப்படத்தைப் பிரதமர் இம்ரான்கான் தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
  • கர்தார்பூரில் வரும் 9 ஆம் தேதி வழித்தடம் திறக்கப்படும் முன்பு இந்த நாணயம் வெளியானது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel