Type Here to Get Search Results !

31st OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

தாய்லாந்து மொழியில் திருக்குறள்; மோடி வெளியிடுகிறார்
  • தென்கிழக்கு ஆசிய நாடான தாய்லாந்துக்கு 2ம் தேதி முதல் 4ம் தேதி வரை அரசு முறை பயணமாக பிரதமர் மோடி செல்கிறார். தலைநகர் பாங்காக்கில் நடக்கும் ஆசியான் - இந்தியா கிழக்கு ஆசியா ஆர்.சிஇ.பி. என்படும் பிராந்திய ஒருங்கிணைந்த பொருளாதார கூட்டணி ஆகிய அமைப்புகளின் மாநாடுகளில் பிரதமர் மோடி பங்கேற்கிறார்.
  • மேலும் தாய்லாந்து தலைநகர் பாங்காக்குக்கு நவ. 2ல் செல்லும் பிரதமர் அங்கு வசிக்கும் இந்தியர்களை சந்தித்து பேசுகிறார். அப்போது தாய்லாந்து மொழியில் எழுதப்பட்டுள்ள திருக்குறளை வெளியிடுகிறார். 
  • அத்துடன் சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் 550வது பிறந்த ஆண்டையொட்டி நினைவு நாணயம் ஒன்றையும் வெளியிடுகிறார். 
  • தாய்லாந்தில் 2.5 லட்சத்துக்கும் அதிகமான இந்தியர்கள் வசிக்கின்றனர். பாங்காக்கில் உள்ள சுலாலாங்கோர்ன் பல்கலை பேராசிரியர் டாக்டர் சுவித் விபுல்ஸ்ரீஸ்த் திருக்குறளை தாய்லாந்து மொழியில் மொழிபெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூ.611 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு
  • மேட்டூர் அணையின் உபரி நீரை சேமிக்கும் திட்டத்திற்கு ரூ.611 கோடி ஒதுக்கி அரசாணை வெளியிட்டுள்ளது. மேட்டூரில் இருந்து உபரியாக வெளியேறும் நீர் வீணாக கடலில் கலப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.



தமிழகத்தில் இதுவே முதல் முறை: திருச்சியில் கூடியது காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழு கூட்டம்
  • காவிரி நீா் ஒழுங்காற்றுக் குழுவின் தலைவா் நவீன்குமாா் அறிவித்தபடி, திருச்சியில் காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் 19-ஆவது கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • காவிரி ஒழுங்காற்று குழுவின் கூட்டம் இதுவரை தில்லி, பெங்களூருவில் மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், முதல் முறையாக இன்று தமிழகத்தில் நடைபெறுகிறது.
  • தமிழகத்துக்கு காவிரியில் ஆண்டுக்கு மொத்தம் 177.25 டிஎம்சி தண்ணீரை கா்நாடக அரசு விடுவிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கான மாதாந்திர ஒதுக்கீட்டு அட்டவணையையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. 
  • இதன்படி, ஜூன், ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பா், அக்டோபா் மாதங்களுக்கான ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. காவிரி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்த மழையளவு, காவிரிப் படுகையில் வானியல் சூழல், மழைப் பொழிவு மற்றும் பருவகால, ஆண்டுக்கான நீா் கணக்கீடுகள் குறித்து இக் கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்படுகிறது.
ஜம்மு காஷ்மீரின் 370-வது பிரிவு நீக்கத்தை வல்லபாய் பட்டேலுக்கு அர்ப்பணிக்கிறேன்: பிரதமர் மோடி
  • இந்தியாவின் இரும்பு மனிதர் என போற்றப்படும் முன்னாள் துணை பிரதமரும் நாட்டின் முதலாவது உள்துறை அமைச்சருமான சர்தார் வல்லபாய் பட்டேலின் 144-வது பிறந்த நாள் உலக ஒற்றுமை தினம், ஒருமைப்பாட்டு தினமாக இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • குஜராத்தின் நர்மதை நதிக்கரை சாதுபெட் தீவில் உலகின் உயரமான பட்டேல் சிலைக்கு பிரதமர் மோடி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
  • பின்னர் அங்கு நடைபெற்ற கலை நிகழ்ச்சிகளை பிரதமர் மோடி பார்வையிட்டார். மேலும் ஒருமைப்பாட்டு தின உறுதிமொழியும் இந்நிகழ்ச்சியில் மேற்கொள்ளப்பட்டது. 
  • தற்போது அந்த 370-வது பிரிவு நீக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சர்தார் வல்லபாய் பட்டேலின் கனவை நினைவாக்கி இருக்கிறோம். கடந்த ஆகஸ்ட் மாதம் 5-ந் தேதி 370-வது பிரிவை நீக்குவது என எடுத்த முடிவினை சர்தார் வல்லபாய் பட்டேலுக்கு அவரது பிறந்த நாளான இன்று அர்ப்பணிக்கிறேன். 
  • இந்தியாவின் இரும்பு மனிதரான சர்தார் வல்லபாய் பட்டேலின் பிறந்த நாள் முதல் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் வளர்ச்சியை நோக்கி பிரகாசமான எதிர்காலத்தை நோக்கி முன்னேறி செல்கின்றன.



கார்கிலில் வெற்றி வாகை சூடிய மிக்-27 க்கு ஓய்வு
  • கார்கில் போரில் வெற்றி வாகை சூடிய மிக் -27 ரக போர் விமானங்கள் வரும் டிசம்பரில் ஓய்வு பெறுகின்றன. கடந்த 1999 ல் காஷ்மீர் மாநிலம் கார்கில் பகுதியில் பாகிஸ்தான் படை ஊடுருவி ஆக்கிரமிப்பு செய்தது. 
  • மே மாதம் 3 ம் தேதி முதல் ஜூலை 26-ம் தேதி வரையில் இருநாடுகளிடையே போர் ஏற்பட்டது. இந்த போரில் மிக் 27 ரக போர் விமானங்கள் முக்கிய பங்காற்றியது. மிக் 27 ரக போர் விமானங்கள் விமானப்படையில் கடந்த 1981 ல் சேர்க்கப்பட்டது. 
  • 38 ஆண்டுகள் பணியாற்றிய பின்னர் அவைகளுக்கு ஓய்வு கொடுக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. ராணுவத்தின் பல்வேறு பிராந்தியங்களில் உள்ள விமான படை பிரிவில் மிக் 27 ரக விமானங்கள் இயக்கப்பட்டு வந்தது. 
  • கடந்த மூன்றாண்டுகளுக்கு முன்னர் மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள ஹாசிமாரா வில் உள்ள பிராந்திய பகுதியில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது. இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள பிராந்தியத்தில் இருந்து வரும் டிசம்பர் மாதத்துடன் முற்றிலுமாக மிக் 27 ரக விமானங்கள் விலக்கிகொள்ளப்பட உள்ளன.
பெங்களூரு குப்பை பிரச்னைக்கு ரூ.900 கோடி:முதல்வர் எடியூரப்பா அமைச்சரவை முடிவு
  • ''பெங்களூரில் குப்பை பிரச்னையை சமாளிக்க, 2019 முதல் 22 வரை, 900 கோடி ரூபாய் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கு, 160 கோடி ரூபாய் வழங்கப்படும்,'' என, மாநில சட்டத்துறை அமைச்சர் மாதுசாமி தெரிவித்தார்.
  • ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை தொழிலை மேம்படுத்தும் வகையில், புதிய ஜவுளி கொள்கை கொண்டு வரப்படுகிறது. ஏ, பி, சி, டி என, நான்கு மண்டலங்களாக தரம் பிரித்து, மானியம் அதிகப்படுத்துவது
  • இரும்பு கம்பிகள் ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது. அதே வேளையில் இரும்பு தாது பொருட்கள் ஏற்றுமதி செய்யலாம்
  • நெலமங்களா தொழிற்பேட்டையில், பல ஏக்கர் நிலம் இதுவரை எந்த நிறுவனமும் வாங்கவில்லை. இதனால், 818 ரூபாயாக இருந்த ஒரு சதுர அடி நிலம், 675 ரூபாயாக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது
  • பொதுப்பணித்துறை பொறியாளர்களை நியமிக்க தனி கமிட்டி இயங்கி வந்தது. இதை ரத்து செய்து, கர்நாடக ஊழியர்கள் தேர்வாணையம் சார்பில், நியமிக்க முடிவு
  • கர்நாடகத்தில் புதிதாக தொழில் துவங்கும் நிறுவனங்களில், சி, டி, குரூப் ஊழியர்கள் நியமனத்தில், கன்னடர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், சட்ட திருத்தம் கொண்டு வர அனுமதி
  • கல்யாண கர்நாடகா மாவட்டங்களில், காலியாகவுள்ள 61 கால்நடை மருத்துவர்கள், 83 கால்நடை மருத்துவ உதவியாளர்கள் நியமிக்க ஒப்புதல்
  • ராய்ச்சூர், குடகு ஆகிய அரசு மருத்துவமனை வளாகங்களில், தலா 300 படுக்கைகள் கொண்ட புதிய கட்டடம் கட்ட 137.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு
  • அரசு மற்றும் அரசு உதவி பெறும் சட்ட கல்லுாரி பேராசிரியர்களுக்கு, மத்திய பல்கலைக்கழக ஆணையப்படி, 7வது சம்பள கமிஷன் அமல்படுத்த முடிவு
  • திடக்கழிவு மேலாண்மை செய்ய, பெங்களூரு மாநகராட்சி சமர்ப்பித்திருந்த அறிக்கைக்கு ஒப்புதல் வழங்கி, 2019 - 20, 2020 - 21, 2021 - 22 ஆகிய ஆண்டுகளுக்கு 900 கோடி ரூபாய் வழங்க முடிவு. இதில், நடப்பாண்டுக்கு, முதல் கட்டமாக 160 கோடி ரூபாய் வழங்கப்படும்
  • பெங்களூரு மாவள்ளிபுரத்திலுள்ள குப்பை மறுசுழற்சி மையத்தின் 46 ஏக்கர் நிலத்தில், 20 ஏக்கர் நிலத்தை, 25 ஆண்டுகளுக்கு, தனியார் நிறுவனம் ஒன்றுக்கு குத்தகைக்கு விட முடிவு.
பாக்தாதி இறந்ததை உறுதிசெய்த ஐ.எஸ்: புதிய தலைவர் அறிவிப்பு
  • இஸ்லாமிய அரசு என்று தங்களை கூறிகொள்ளும் ஜிகாதி குழுவான ஐ.எஸ் அமைப்பு தங்கள் அமைப்பின் புதிய தலைவராக அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமியை அறிவித்துள்ளது.
  • முந்தைய தலைவரான அல்-பாக்தாதியின் இறப்பை முதல்முறையாக அது உறுதி செய்துள்ளது.
  • அபு இப்ராஹிம் அல்-ஹாஷிமி புதிய தலைவராக இருப்பார் என்று தகவல் சேவை வழங்கும் டெலகிராம் மூலம் ஐ,எஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel