Type Here to Get Search Results !

29th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

ஒப்பந்த சாகுபடி செய்யும் விவசாயிகள் நலன் காக்க புதிய சட்டம்: இந்தியாவிலேயே முதல்முறையாக தமிழகத்தில் அமல்
  • ஒப்பந்த அடிப்படையில் சாகுபடி மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன்களைக் காப்பதற்கு புதிய சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • தமிழகத்தில் கரும்பு, இறைச்சிக் கோழி, மூலிகைப் பயிா்கள் போன்ற வகைகளில் சாகுபடி முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளன. 
  • ஆனாலும், ஒப்பந்த சாகுபடியில் பங்குபெறும் விவசாயிகளின் நலன்களைப் பாதுகாக்க சட்டம் ஏதும் நடைமுறையில் இல்லை. இதைக் கருத்தில் கொண்டு புதிய சட்டம் கொண்டு வரப்படும் என்று முதல்வா் பழனிசாமி அறிவித்திருந்தாா்.
  • இதன்படி, தமிழ்நாடு வேளாண் விளைபொருள், கால்நடை ஒப்பந்தப் பண்ணையம், சேவைகள் ஊக்குவிப்பு மற்றும் எளிதாக்குதல் சட்ட மசோதா பேரவையில் தாக்கல் செய்யப்பட்டு, அதற்கு ஒப்புதல் பெறப்பட்டது. இந்த சட்டமானது அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது.
  • அகில இந்திய அளவில் ஒப்பந்த சாகுபடி முறைக்கென்று, பிரத்யேகமாக எந்தச் சட்டமும் எந்த மாநிலத்திலும் இதுவரை இயற்றப்படவில்லை. தமிழக அரசுதான் முதல்முதலாக தனிச் சட்டத்தை வடிவமைத்துள்ளது.
  • புதிய சட்டத்தின்படி, கொள்முதலாளா் அல்லது உணவு பதப்படுத்தும் நிறுவனத்துடன் விவசாயிகள் ஒப்பந்தம் செய்யும்போது, அன்றைய தினத்தின் விலையையே, பொருள்களைப் பரிமாற்றம் செய்யும்போதும் நிா்ணயிக்கும் வகையில் பாதுகாப்பு அளிக்கப்படுகிறது. 
  • ஒப்பந்தப் பண்ணையச் சட்டத்தின் கீழ் பதிவு செய்துள்ள கொள்முதலாளா், அந்தப் பகுதியைச் சோந்த வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறையால் அனுமதிக்கப்பட்ட அலுவலரிடம் பதிவு செய்து கொள்ளவேண்டும். மேலும், ஒப்பந்தப் பண்ணைய உற்பத்தியாளருடன் ஒப்பந்தத்தை அலுவலா் முன்னிலையில் பதிவு செய்ய வேண்டும்.
  • ஒப்பந்த சாகுபடி முறையால் விவசாயிகளுக்கு பல நன்மைகள் உள்ளன. அதிக விளைச்சல் காரணமாக விலை வீழ்ச்சி ஏற்படும் நேரங்களில், விவசாயிகள் பெரும் இழப்புக்கு ஆளாகின்றனா். இந்தப் புதிய சட்டத்தால் விவசாயிகளுக்கு எந்தவித பொருள் அல்லது பண இழப்பும் ஏற்படாது. முன்னரே ஒப்பந்தம் செய்யப்பட்ட விலையில் பொருள்கள் விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.
  • ஒப்பந்த பண்ணைய சாகுபடி முறையால் விவசாயிகளுக்கும், வேளாண் சாா்ந்த தொழிற்சாலைகளுக்கும் இடையே நல்ல புரிதல் ஏற்படும். விதைப்பு காலத்துக்கு முன்பே விளைபொருள்களின் விலை நிா்ணயம் செய்யப்படுவதால், அனைத்துத் தொழில்நுட்பங்களையும் பின்பற்றி, அதன் மூலம் விளைச்சல் அதிகரித்து, விவசாயிகளுக்கு அதிக வருமானம் ஈட்டிட வாய்ப்பு ஏற்படும்.
  • கொள்முதலாளருக்கும், விவசாயிகளுக்கும் ஒப்பந்தம் செய்யப்பட்ட பிறகு, அது மீறப்பட வாய்ப்புள்ளது. அப்படி மீறப்பட்டால் விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய தொகையைப் பெற்றுத் தரும் வகையில் அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் சட்டத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், இதில் ஏற்படும் சிக்கல்களை களைய வருவாய் கோட்ட அளவிலும், மாவட்ட, மாநில அளவிலும் அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • தமிழக அரசு, மத்திய அரசு அல்லது இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தால் தடை செய்யப்பட்ட எந்தவொரு விளைபொருள்களையும் புதிய சட்டத்தின் மூலமாக ஒப்பந்தங்களைச் செய்து விற்பனை செய்ய முடியாது என தமிழக அரசின் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் முதலீடு செய்ய வாருங்கள் பிரதமர் மோடி அழைப்பு
  • ரியாத்தில் நடைபெற்ற 'எதிர்கால முதலீடு' குறித்த நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசிய அவர், அடுத்த 5 ஆண்டுகளுக்குள் 100 பில்லியன் டாலரை, எண்ணெய் சுத்திகரிப்பு போன்றவற்றில் இந்தியா முதலீடு செய்யும் என்று கூறினார். சவுதி அரேபியாவின் அராம்கோ நிறுவனம் இந்தியாவில் முதலீடு செய்யவுள்ளது மகிழ்ச்சி அளிப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார். 
  • தொழில் தொடங்குவதற்கு ஏதுவான நாடுகளில், உலகளவில் இந்தியா 3ஆவது இடத்தில் இருப்பதாகக் கூறிய பிரதமர் மோடி, சர்வதேச முதலீட்டாளர்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஆழ்துளை கிணறு: மழைநீர் சேகரிப்பாக மாற்ற அதிரடி உத்தரவு
  • திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த, நடுக்காட்டுப்பட்டி கிராமத்தில், மூடப்படாத ஆழ்துளை கிணற்றில், 2 வயது ஆண் குழந்தை சுஜீத் வில்சன், தவறி விழுந்தார். சுமார் 80 மணி நேர போரோட்டம் தோல்வியில் முடிந்தது. இறுதியாக சுஜித்தின் சடலம் மீட்கப்பட்டு, அடக்கம் செய்யப்பட்டது. இந்த சோக சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. 
  • இதனையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகளை மூட குடிநீர் வாரியம் உத்தரவிட்டுள்ளது.குடிநீர் வாரிய பொறியாளர்கள், 24 மணி நேரத்தில் தமிழகம் முழுவதும் உள்ள பயனற்ற ஆழ்துளை கிணறுகள், திறந்தவெளி கிணறுகளை மழைநீர் சேகரிப்பு கட்டமைக்க மாற்ற வேண்டும். 
  • கட்டமைப்பாக மாற்ற தவறும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். பொதுமக்களும் இந்த நடவடிக்கைக்கு உதவலாம். மழைநீர் சேகரிப்பு முறைகள் பற்றிய சந்தேகம் இருந்தால் 9445802145 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். 
  • மேலும், https://www.twadboard.tn.gov.in/ என்ற இணையதளத்திலோ, சமூக வலைதளங்களிலோ விளக்கங்கள் பெறலாம். இவ்வாறு இந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.



47 ஆவது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி - எஸ்.ஏ. பாஸ்பேட் நியமனம் 
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் வரும் நவம்பர் 17ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதையடுத்து அடுத்த நீதிபதியாக ரஞ்சன் கோகாய் எஸ். ஏ. பாப்டே என்பவரை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரை செய்துள்ளார்.
  • இதை ஏற்றுக்கொண்ட குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த்இன்று அவரின் பதவி நியமன ஆணையில் கையெழுத்திட்டுள்ளார். பாப்டே வரும் நவம்பர் 18ஆம் தேதி தலைமை நீதிபதியாக பொறுப்பேற்றுக்கொள்ள உள்ளார். இவரின் பதவிக் காலம் 2021ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி வரை உள்ளது.
சவுதி அரேபியா தலைநகர் ரியாத்தில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் பிரதமர் மோடி சந்திப்பு
  • சவுதி அரேபியா சென்றுள்ள பிரதமர் மோடி தலைநகர் ரியாத்தில் ஜோர்தான் மன்னர் அப்துல்லாவுடன் சந்திப்பு மேற்கொண்டுள்ளார். இருதரப்பு வர்த்தகம், முதலீடு உள்ளிட்டவை குறித்து மோடியும் அப்துல்லாவும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
பிரபல கிரிக்கெட் வீரருக்கு இரண்டு ஆண்டுகள் விளையாட தடை: ஐசிசி அதிரடி
  • இந்தியா - வங்கதேசம் இடையேயான டெஸ்ட் தொடர் நவம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்நிலையில் வங்கதேச கிரிக்கெட் வீரரான சகிப் அல் ஹசன் சூதாட்டம் தொடர்பான புகாரில் சிக்கியுள்ளார். நடந்து முடிந்த உலக கோப்பை தொடரில் அபாரமாக விளையாடி கவனம் ஈர்த்தவர் அல் ஹசன்.
  • இந்நிலையில் அவரை சூதாட்டத்தில் ஈடுபடும்படி சிலர் அவரது போனுக்கு கால் செய்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த விஷயத்தை வெளியே சொல்லாமல் அல் ஹசன் மறைத்துள்ளார். 
  • இதை கண்டுபிடித்த ஐசிசி அவரை சர்வதேச போட்டிகளில் விளையாட முடியாதபடி இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதித்துள்ளது. இந்த சம்பவம் வங்கதேச அணி இந்தியாவுடன் விளையாட இருக்கும் நிலையில் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel