Type Here to Get Search Results !

26th, 27th & 28th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

டிஜிட்டலுக்கு தனி நிறுவனம் 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' அமைக்கிறது
  • 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' நிறுவனம், டிஜிட்டல் பிரிவில் எடுக்கப்படும் முன்முயற்சிகள் அனைத்தையும் ஒருங்கிணைக்கும் வகையில், அதற்கென தனியாக ஒரு துணை நிறுவனத்தை அமைக்க இருக்கிறது.செயலிகள் உட்பட அனைத்து விதமான டிஜிட்டல் முன்முயற்சிகளுக்கான, தனியான ஒரு துணை நிறுவனமாக இது செயல்படும்.
  • இந்நிறுவனம், 1.08 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை கொண்ட நிறுவனமாக இருக்கும் வகையில், இதில் ரிலையன்ஸ் முதலீட்டை மேற்கொள்கிறது.
தொழில் செய்ய ஏற்ற நாடுகள் உலக நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 63வது இடம்
  • உலக அளவில் 190 நாடுகளில் முதலீடு செய்வதற்கும் தொழில் தொடங்குவதற்கும் ஏற்ற நாடுகள் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் உலக வங்கி தனது ஆய்வு அறிக்கையில் வெளியிடும். அந்த பட்டியல் வெளியிடப்பட்டது. 
  • இதில், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற நாடுகளில் கடந்த ஓர் ஆண்டில் 14 இடங்குகளுக்கு முன்னேறிய இந்தியா, பட்டியலில் 77வது இடத்தில் இருந்து 63வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 
  • தொழில் தொடங்குவதற்கு ஏற்ற சூழ்நிலை நிலவுவதில் கடந்த ஆண்டு 67.3 சதவீதம் புள்ளிகள் பெற்றிருந்த இந்தியா, தற்போது 71.0 சதவீதம் பெற்றுள்ளது. இதன் மூலம் 2020ல் தொழில் தொடங்குவதற்கு நாடுகள் பட்டியலில் இந்தியா முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 
ஹரியானாவின் முதல்வராக கட்டர், துணை முதல்வராக துஷ்யந்த
  • பாஜக தலைவர் மனோகர் லால் கட்டர் மற்றும் ஜன்னாயக் ஜந்தா கட்சி (JJP) தலைவர் துஷ்யந்த் சௌதலா ஆகியோர் முறையே ஹரியானாவில் முதலமைச்சராகவும், துணை முதல்வராகவும் பதவியேற்க உள்ளனர். 
  • 90 உறுப்பினர்களை கொண்ட ஹரியானா சட்ட சபையில்., 40 உறுப்பினர்களை வென்ற பாஜக, பெரும்பான்மைக்கு ஆறு இடங்களை குறைவாக கொண்டுள்ளது. இதனையடுத்து முன்னாள் துணை பிரதமர் தேவி லாலின் பேரன் துஷ்யந்த் சௌதாலா தலைமையிலான JJP-யுடன் ஒரு கூட்டணியை அறிவித்தது.
மாற்றுத்திறனாளிகள் தபால் மூலம் வாக்களிக்கலாம் மத்திய அரசு அனுமதி
  • தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து ஆலோசித்து தேர்தல் நடத்தை விதிகளில் மத்திய சட்ட அமைச்சகம் திருத்தம் கொண்டு வந்துள்ளது.
  • இதன் மூலம் இனி வரும் காலங்களில் சிரமமின்றி முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்ற முடியும்.
  • தேர்தலில் வாக்களிக்க வரும் முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் வாக்குப்பதிவு மையங்களுக்கு வருவதற்காக ஆள் துணை தேட வேண்டிய நிலை இப்போது பரவலாக உள்ளது. 
  • மேலும், வாக்குப்பதிவு மையங்களில் சாய்தள பாதை(ரேம்ப் வசதி) இல்லை என்றால் மாற்றுத்திறனாளிகள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாக வேண்டிய அவலம் உள்ளது.
  • தேர்தல் அன்று வாக்குப்பதிவு மையங்களில் மாற்றுத்திறனாளிகள், மற்றும் முதியோர்கள் படும் சிரமங்கள் குறித்து தேர்தல் ஆணையத்துக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் அவர்களுக்கு தபாலில் வாக்களிக்க அனுமதி வழங்கலாம் என மத்திய அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
  • தேர்தல் ஆணையத்தின் பரிந்துரை குறித்து பரிசீலனை செய்த மத்திய சட்ட அமைச்சகம், தேர்தல் நடத்தை விதிகளில் திருத்தம் மேற்கொண்டு மாற்றுத்திறனாளிகளும், 80 வயதை எட்டிய முதியோர்களும் தபால் மூலம் வாக்களிக்க அனுமதி அளித்துள்ளது.
  • தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் தபால் ஓட்டு உரிமை ஏற்கனவே உள்ள நிலையில், அந்த பட்டியலில் மாற்றுத்திறனாளிகளும், முதியோர்கள் இப்போது புதிதாக இணைந்துள்ளனர்.
  • தேர்தலின் போது வாக்களிப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கில் தேர்தல் ஆணையம் இந்த புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



டில்லி பஸ்களில் பெண்களுக்கு இலவச பயணம்
  • டில்லி மாநகர பஸ்களில், பெண்கள் அக்.,29 முதல் இலவசமாக பயணிக்கலாம். பெண்களின் பாதுகாப்புக்காக, பஸ்களில் சிறப்பு பாதுகாவலர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • முதல் கட்டமாக, மாநகர பஸ்களில் இந்த இலவச பயண திட்டம், இன்று முதல் அமலுக்கு வருகிறது. வட மாநிலங்களில், 'பைதுாஜ்' என்ற பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. 
  • தங்கள் சகோதரர்கள் நீண்ட நாட்கள் ஆரோக்கியத்துடன் வாழ்வதற்காக, பெண்கள் வழிபாடு நடத்தும் பண்டிகை இது. இதையொட்டி, இந்த இலவச பயண திட்டத்தை, இன்று முதல் துவக்க, மாநில அரசு முடிவு செய்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிகள் பேச்சுவார்த்தை
  • பிரதமர் நரேந்திர மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலுடன் ஐரோப்பிய கூட்டமைப்பு பிரதிநிகள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். 
  • டெல்லி வந்துள்ள ஐ.கூ. எம்.பி.க்கள் காஷ்மீர் பிரச்சனை, 370 வது சிறப்பு சட்ட அந்தஸ்து நீக்கம் பற்றி ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
ஐ.எஸ். அமைப்பு தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்தார் அதிபர் டிரம்ப்
  • ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கத் தலைவர் அபுபக்கர் அல்-பக்தாதி, அமெரிக்க பாதுகாப்பு படைகளால் கொல்லப்பட்டதாக தகவல் வெளியானதை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிபடுத்தி உள்ளார்.
  • சிஐஏ., எனப்படும் அமெரிக்க மத்திய புலனாய்வு மூலம் இருப்பிடத்தை கண்டுபிடித்த அமெரிக்க படைகள் அவரை கொன்றுவிட்டதாக கூறப்பட்டது. 
நெருப்பு கோவிலில் வெங்கையா நாயுடு
  • ஐரோப்பிய நாடான அஸர்பைஜானுக்கு சென்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அங்குள்ள நெருப்பு கோவிலை பார்வையிட்டார்.
  • 'நாம்' எனப்படும் அணிசாரா நாடுகளின் 18வது கூட்டத்தில் பங்கேற்பதற்காக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு முன்னாள் சோவியத் யூனியன் நாடான அஸர்பைஜான் சென்றார். 
  • இந்த பயணத்தின்போது தென் அமெரிக்க நாடான வெனிசுலா அதிபர் நிகோலஸ் மடுரோவைச் சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து வெங்கையா பேசினார்.
  • அதேபோல் வெங்கையா நாயுடுவுடன் சென்ற நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் மத்தியக் கிழக்கு நாடுகளான குவைத் மற்றும் பெஹ்ரைன் வெளியுறவு அமைச்சர்களை சந்தித்து பேசினார்.
  • அஸர்பைஜானில் உள்ள நெருப்பு கோவில் எனப்படும் அதேஷ்கா கோவிலுக்கு வெங்கையா நாயுடு சென்றார்.'கடந்த 18வது நூற்றாண் டில் கட்டப்பட்ட இந்த கோவில் இந்தியா - அஸர்பைஜான் இடையேயான கலாசார உறவை பறைச்சாற்றும் வகையில் அமைந்துள்ளது' என வெங்கையா நாயுடு தெரிவித்தார். 
  • சோவியத் யூனியனில் அஸர்பைஜான் இருந்தபோது இந்தியாவின் முதல் நோபல் பரிசை வென்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூர் அங்கு பயணம் மேற்கொண்டதையும் அவர் நினைவு கூர்ந்தார்.அஸர்பைஜான் பயணம் முடிந்து வெங்கையா நாயுடு நாடு திரும்பினார்.



பெல்ஜியம் நாட்டில் முதல் முதலாக பெண் பிரதமர் நியமனம்
  • பெல்ஜியம் நாட்டில் அரசியல் நிலைமை மோசமாக உள்ளது. ஏற்கனவே கடந்த 2010-11 ஆம் வருடங்களில் இந்த நாடு அரசு அமையாமல் 541 நாட்கள் இருந்து வந்தது. அதன் பிறகு அமைக்கப்பட்ட அரசும் பல முறை பல சோதனைகளைச் சந்தித்து வந்துள்ளது.
  • இந்நிலையில் பெல்ஜியம் நாட்டு நிதிநிலை அறிக்கை அமைச்சர் சோபி வில்லியம்ஸ் தற்காலிக பிரதமராகப் பொறுப்பு ஏற்பார் என சார்லஸ் மிச்சல் அறிவித்துள்ளார். சுமார் 44 வயதாகும் சோபி வில்லியம்ஸ் பெல்ஜியம் நாட்டின் முதல் பெண் பிரதமர் ஆவார். இவருக்கு விரைவில் அந்நாட்டு அரசர் பிலிப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
அபுதாபி ஓபன் படகுப் போட்டியில் தங்கம் வென்று தமிழக வீரர் சாதனை
  • அபுதாபியில், சர்வதேச அளவிலான அபுதாபி ஓபன் படகுப் போட்டி நடந்தது. இதில் 29 நாடுகளை சேர்ந்த 200 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர். லேசர் ரேடியல், ஆப்டிமிஸ்ட் என 4 பிரிவுகளில் ஆண்கள், பெண்களுக்கு தனித்தனியே போட்டிகள் நடைபெற்றன. இந்த போட்டியை அபுதாபி படகுஓட்டுதல் மற்றும் பாய்மரப் படகு சங்கம் நடத்தியது.
  • லேசர் ரேடியல் பிரிவில் பல்கேரியா, டென்மார்க், நெதர்லாந்து, நார்வே, உக்ரைன், அமெரிக்கா என 11 நாடுகளை சேர்ந்த 23 பேர் பங்கேற்றனர். இவர்களில் இந்தியா சார்பில் தமிழகத்தை சேர்ந்த நேத்ரா குமணன் பங்கேற்றார். தொடர்ந்து 3 நாட்கள் நடைபெற்ற போட்டியில் தொடக்கம் முதல் நேத்ரா குமணன் முன்னிலை வகித்து வந்தார். ஆனால், ஓமனின் ஜக்காரியா, உக்ரைனின் ஆஸ்கர் ஆகியோர் கடும் சவாலை தந்தனர்.
  • எனினும், முடிவில் முதலிடம் பிடித்த நேத்ரா குமணன், தங்கப் பதக்கத்தை வென்றார். கூடவே 1.20 லட்ச ரூபாய் ரொக்கப் பரிசும் அளிக்கப்பட்டது. 
  • இந்தப் பிரிவில் ஓமன், நார்வே வீரர்கள் முறையே 2வது, 3வது இடங்கள் பிடித்தனர். இந்த வெற்றியின் மூலம் நேத்ரா குமணன், ஒலிம்பிக் தகுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றார். தங்கம் வென்ற அவரை, தமிழ்நாடு படகு ஓட்டும் சங்க நிர்வாகிகள் பாராட்டினர்.
உலக முப்படைகள் விளையாட்டு:வெள்ளி வென்றாா் தீபக்
  • சீனாவின் வூஹான் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக 46-59 கிலோ பிளை வெயிட் பிரிவு குத்துச்சண்டை இறுதிச் சுற்று ஆட்டம் நடந்தது. 
  • இதில் இந்தியாவின் நட்சத்திர வீரா் தீபக்-கஜகஸ்தானின் ஜுஸ்போவ் டெம்ரிடாஸுடன் மோதினாா். இதில் 5-0 என்ற புள்ளிக்கணக்கில் வென்று டெம்ரிடாஸ் தங்கம் வென்றாா்.
  • இரண்டாம் இடம் பெற்ற தீபக் வெள்ளிப் பதக்கம் வென்றாா். எனினும் இறுதிச் சுற்று முடிந்தவுடன் நடுவரின் தீா்ப்பு குறித்து தீபக், பயிற்சியாளா் ஜெய் சிங் பாட்டீல் ஆகியோா் முறையிட்டனா்.
  • ஆடவா் டென்னிஸ் போட்டியில் உஸ்பெகிஸ்தான் வீரா் சொஜி போமினை 6-2, 6-3 என்ற நோ செட்களில் வீழ்த்தி வெண்கலப் பதக்கம் வென்றாா் இந்திய வீரா் ஸ்ரீராம் பாலாஜி.



சர்வதேச டி20 போட்டியில் முதல் முறையாக சதம் அடித்த டேவிட் வார்னர்
  • இலங்கை கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் நேற்று முதல் டி20 போட்டி அடிலெய்ட் ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
  • இப்போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டேவிட் வார்னர் 56 பந்தில் 10 பவுண்டரி 4 சிக்சர்கள் சதம் விளாசினார். இதன்மூலம் சர்வதேச டி20 போட்டியில் முதல்முறையாக டேவிட் வார்னர் சதம் அடித்துள்ளார். இதுவரை டேவிட் வார்னர் 71 சர்வதேச டி20 போட்டியில் விளையாடி உள்ளார்.
  • அதில் அதிகபட்ச ரன் நேற்றைய போட்டியில் அடித்த சதம் தான். சர்வதேச டி20 போட்டியில் இதுவரை 1892 ரன்கள் எடுத்துள்ளார். அதில் 13 அரைசதம் ஒரு சதம் அடங்கும்.
82வது பட்டம் வென்று டைகர் வுட்ஸ் அசத்தல்
  • ஜப்பானில் நடைபெற்ற ஸோஸோ கோல்ப் தொடரில் அமெரிக்க நட்சத்திரம் டைகர் வுட்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.
  • முழங்கால் மூட்டு அறுவை சிகிச்சை காரணமாக ஓய்வெடுத்து வந்த டைகர் வுட்ஸ் (43 வயது), நீண்ட இடைவெளிக்குப் பிறகு களமிறங்கிய ஸோஸோ பிஜிஏ தொடரில் முதலிடம் பிடித்தார். 
  • இது அவர் வென்ற 82வது பிஜிஏ சாம்பியன் பட்டமாகும். இதன் மூலமாக 1965ல் அமெரிக்காவின் சாம் ஸ்னீட் படைத்த சாதனையை (82 பட்டங்கள்) வுட்ஸ் சமன் செய்துள்ளார்.
10வது முறையாக பட்டம் வென்றார் ரோஜர் பெடரர்
  • சுவிஸ் உள்ளரங்கு டென்னிஸ் தொடரில், நட்சத்திர வீரர் ரோஜர் பெடரர் 10வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தார்.இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவின் அலெக்ஸ் டி மினாருடன் (20 வயது, 18வது ரேங்க்) மோதிய பெடரர் (38 வயது, 3வது ரேங்க்) 6-2, 6-2 என்ற நேர் செட்களில் மிக எளிதாக வென்று கோப்பையை முத்தமிட்டார். 
  • சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்பாக பெற்ற இந்த சாதனை வெற்றியால் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட பெடரர் ஆனந்தக் கண்ணீர் வடித்தார். ஒரே தொடரில் 10 முறை சாம்பியன் பட்டம் வெல்லும் சாதனையை அவர் 2வது முறையாக நிகழ்த்தியுள்ளார். 
  • முன்னதாக, ஜெர்மனியில் நடைபெறும் ஹாலே தொடரில் அவர் 10 முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது குறிப்பிடத்தக்கது. பிரான்சில் நடைபெறும் பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் தொடரில் இருந்து விலகுவதாக பெடரர் நேற்று அறிவித்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel