Type Here to Get Search Results !

24th & 25th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

நவம்பர் முதல் தேதி தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும்: தமிழக அரசு அரசாணை வெளியீடு
  • 1956 ஆம் ஆண்டு ஒருங்கிணைந்த சென்னை மாகாணத்திலிருந்து கர்நாடகம், ஆந்திரா மற்றும் கேரளம் ஆகிய மொழிவாரி மாநிலங்கள் நவம்பர் 1 ஆம் தேதி பிரிந்து சென்றன. இந்த நாளை அந்த மாநிலங்களில் மாநிலம் பிறந்த நாளாக சிறப்பாக கொண்டாடி வருகின்றனர். 
  • இதன் அடிப்படையிலும் நவம்பர் 1 ஆம் தேதியை தமிழ்நாடு பிறந்த நாளாக கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டு வந்தது.
  • ஒவ்வொரு நாட்களுக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அந்த வகையில், ஆண்டுதோறும் நவம்பர் 1 ஆம் தேதி தமிழ்நாடு நாள் சிறப்பாக கொண்டாடப்படும் என்ற மாபெரும் சிறப்பு அறிவிப்பினை முதல்வர் அறிவித்தார்.
  • மேலும், தமிழ் பல்கலைக்கழகத்தில் கால்டுவெல் இருக்கை அமைக்கப்படும். திருச்சியில் தியாகராஜ பாகவதருக்கு மணி மண்டபம் கட்டப்படும் என்றும் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.
  • இந்நிலையில், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமான நவம்பர் 1 ஆம் தேதியை பெருமைப்படுத்தும் வகையில் தமிழ்நாடு தினமாக கொண்டாடுவதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
  • இந்நாளினை கொண்டாடுவதற்காக, ரூ 10 லட்சம் நிதியையும் ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கீழடி உள்பட முக்கிய இடங்களில் அகழாய்வு: மத்திய அரசு அனுமதி: ஜனவரியில் பணி தொடக்கம்
  • தமிழகத்தில் இதுவரை 40 வரலாற்று முக்கியத்துவமிக்க இடங்களில் அகழாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அழகன்குளம், பட்டறைப்பெரும்புதூர், கீழடி ஆகிய தொல்லியல் மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் விரிவான தொல்லியல் அகழாய்வுகள் மேற்கொள்ளப்பட்டன.
  • ராமநாதபுரம் மாவட்டம் அழகன்குளத்தில் கடந்த 2014-15-ஆம் ஆண்டில் அகழாய்வு மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ரூ.55 லட்சம் ஒதுக்கப்பட்டது. இதன்மூலம் தமிழகத்துக்கும் ரோம் நாட்டுக்குமான வணிகத் தொடர்புக்கான சான்றுகள் வெளிப்படுத்தப்பட்டன.
  • இதைத் தொடர்ந்து, சிவகங்கை மாவட்டம் கீழடியில் அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டன. தமிழக அரசால் 2017-18-ஆம் ஆண்டுக்கு ரூ.55 லட்சமும், அதற்கடுத்த ஆண்டு ரூ.47 லட்சமும் ஒதுக்கப்பட்டது. 
  • இந்த அகழாய்வுகளின் முடிவுகளின் மூலம் கீழடி 2,600 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனவும், வைகை ஆற்றங்கரையில் நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றுகள் அறிவியல் முறைப்படி நிரூபிக்கப்பட்டுள்ளது.
மஹாராஷ்டிராவில் மீண்டும் பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி: சரத் பவார் கட்சி முன்னேற்றம்
  • மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது.மாநிலத்தில் உள்ள, 288 சட்டசபை தொகுதிகளுக்கான தேர்தல், 21ல் நடந்தது. இதற்கான தேர்தல் முடிவுகள் நேற்று அறிவிக்கப்பட்டன.
  • பெரும்பான்மைக்கு, 145 இடங்கள் தேவை என்ற நிலையில், தற்போதைய தேர்தலில், பா.ஜ., கூட்டணி, 159 இடங்களில் வென்றுள்ளது. இதில், பா.ஜ., 101 இடங்களிலும், சிவசேனா, 58 இடங்களிலும் வென்றுள்ளன.
  • கடந்த தேர்தலைப் போலவே, காங்., மற்றும் சரத் பவாரின் தேசியவாத காங்., தற்போதும் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தன.கடந்த தேர்தலில், 42 இடங்களில் வென்ற காங்., தற்போது, 45 இடங்களில் வென்றுள்ளது.
ஹரியானாவில் தொங்கு சட்டசபை ஆட்சி அமைக்க உரிமை கோர பா.ஜ., முடிவு
  • ஹரியானாவில் முதல்வர் மனோகர்லால் கட்டார் தலைமையிலான பா.ஜ. ஆட்சி நடக்கிறது. இங்கு மொத்தம் உள்ள 90 தொகுதிகளுக்கு 21ல் தேர்தல் நடந்தது. இதில் ஆளும் பா.ஜ. எதிர்க்கட்சியான காங்கிரஸ் இந்திய தேசிய லோக்தளம் ஜனநாயக ஜனதா கட்சி ஆகிய கட்சிகள் போட்டியிட்டன.
  • ஹரியானாவில் ஆட்சியமைக்க 46 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். இந்த எண்ணிக்கை எந்த கட்சிக்கும் கிடைக்கவில்லை. பா.ஜ. 40 தொகுதிகளிலும் காங்கிரஸ் 31 தொகுதிகளிலும் ஜனநாயக ஜனதா கட்சி 10 தொகுதிகளிலும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
  • சுயேச்சைகள் மற்றும் இதர கட்சிகள் ஒன்பது தொகுதிகளில் வெற்றி பெற்றன.மனோகர்லால் கட்டார் அரசில் அமைச்சர்களாக இருந்த பலர் தோல்வியை தழுவினர். இதனால் ஹரியானாவில் தொங்கு சட்டசபை ஏற்பட்டுள்ளது. 
  • ஆனாலும் அதிக தொகுதிகளில் வென்றுள்ள கட்சி என்ற அடிப்படையில் ஆளும் கட்சியான பா.ஜ. ஆட்சி அமைப்பதற்கு கவர்னரிடம் உரிமை கோர முடிவு செய்துள்ளது.பா.ஜ.



உலக வங்கி பட்டியலில் முன்னேறும் இந்தியா
  • எளிதாக தொழில் புரிவதற்கான நாடுகள் குறித்த உலக வங்கியின் பட்டியலில், இந்தியா, 14 இடங்கள் முன்னேறி, 63வது இடத்தை பிடித்துள்ளது. இதற்கு முந்தைய தர வரிசை பட்டியலில் இந்தியா, 77வது இடத்தில் இருந்தது. தற்போது, 14 இடங்கள் முன்னேறி, 63 இடத்தை பிடித்து சாதனை படைத்துள்ளது.
  • பிரதமர் மோடியின், 'மேக் இன் இந்தியா' பிரசாரம், அன்னிய முதலீட்டை ஈர்ப்பது, தனியார் துறையை மேம்படுத்துதல் நாட்டின் ஒட்டுமொத்த போட்டித் தன்மையை மேம்படுத்துதல் ஆகியவற்றில், இந்தியா அதிகம் கவனம் செலுத்தி வருவது இந்த முன்னேற்றத்துக்கு காரணம் என, உலக வங்கி தெரிவித்துள்ளது. 
  • குறிப்பாக, திவால் சட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி வருவது, இந்த முன்னேற்றத்துக்கு மிக முக்கிய காரணமாக அமைந்திருப்பதாக, உலக வங்கி தெரிவித்துள்ளது.'எளிதாக தொழில் புரிதல்' குறித்த ஆய்வறிக்கையை உலக வங்கி தொடர்ந்து வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கை, 190 நாடுகள் குறித்து ஆய்வு செய்து, வெளியிடப்படுகிறது. 
  • உலக வங்கியின் இந்த தரவரிசை பட்டியலில், நியூசிலாந்து தொடர்ந்து முதலிடத்தை தக்கவைத்துக் கொண்டு உள்ளது. இதையடுத்து சிங்கப்பூர், ஹாங்காங் ஆகிய நாடுகள் உள்ளன.கொரியா, ஐந்தாவது இடத்திலும், அமெரிக்கா ஆறாவது இடத்திலும் உள்ளது. 
நாட்டின் பொருளாதாரம் 5.5 சதவீதமாக சரியும்
  • நாட்டின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 5.5 சதவீதமாக குறையும் என பிட்ச் ரேட்டிங்ஸ் தெரிவித்துள்ளது. இந்தியாவின் பெருளாதார வளர்ச்சி குறித்து பிட்ச் நிறுவனம் கடந்த ஜூன் மாதம் கணிப்பு வெளியிட்டிருந்தது. இதில் நடப்பு நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 6.6 சதவீதமாக இருக்கும் எனவும், பெரிய நிறுவனங்களுக்கான வரி குறைப்பு உள்ளிட்ட மத்திய அரசின் சில நடவடிக்கைகள் இதை சாதகம் ஆக்கும் எனவும் தெரிவித்திருந்தது. 
  • இந்நிலையில், நேற்று இந்த அமைப்பு வெளியிட்ட கணிப்பில், நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கான குறியீடான மொத்த உள்நாட்டு உற்பத்தி 5.5 சதவீதமாக இருக்கும் என தெரிவித்துள்ளது. 
  • ஆனால், அடுத்த நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.2 சதவீதமாகவும், அதற்கு அடுத்த ஆண்டில் 6.7 சதவீதமாகவும் இருக்கும் என கூறியுள்ளது. 
  • ரிசர்வ் வங்கி இந்த மாத துவக்கத்தில் வெளியிட்ட கணிப்பில் பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்கும் என தெரிவித்திருந்தது. அதை விட குறைவாக பிட்ச் மதிப்பீடு செய்துள்ளது.
நாங்குநேரி, விக்கிரவாண்டியில் அதிமுக வெற்றி
  • விக்கிரவாண்டி மற்றும் நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தல்களில், அதிமுக அமோக வெற்றி பெற்றுள்ளது. இரு தொகுதிகளையுமே திமுக கூட்டணி இழந்துள்ளது.
  • விக்கிரவாண்டியில் அதிமுக வேட்பாளர் முத்தமிழ்செல்வன் 44,782 வாக்குகள் வித்தியாசத்தில், அமோக வெற்றி பெற்றார். திமுக வேட்பாளர் புகழேந்தி இரண்டாவது இடத்தை பிடித்தார். 
  • நாங்குநேரி தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் நாராயணன் 33,447 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் வேட்பாளர் ரூபி மனோகரன் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார்.



இந்தியா-பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை ஒப்பந்தம் கையெழுத்து
  • இந்தியா பாகிஸ்தான் இடையே கர்தார்பூர் சாலை ஒப்பந்தம் கையெழுத்தானது. பஞ்சாபில் இருந்து பாகிஸ்தானின் கர்தார்பூருக்கு சாலை அமைக்க ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • குருதாஸ்பூரில் நடந்த நிகழ்ச்சியில் இந்தியா பாகிஸ்தான் அதிகாரிகள் உடன்பாட்டில் கையெழுத்தானது.
நாடாளுமன்ற கட்டிடத்தை புதுப்பிக்கும் திட்டத்துக்கு கட்டிடக்கலை ஆலோசகராக குஜராத் நிறுவனம் தேர்வு
  • டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி அகமதாபாதை சேர்ந்த ஹெச்.சி.பி. டிசைன் பிளானிங் நிறுவனம், நாடாளுமன்ற கட்டிடத்தைப் புதுப்பிக்கும் திட்டத்துக்கு கட்டிடக்கலை ஆலோசகராக தேர்வு செய்யப்பட்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
  • கட்டுமான தொகையில் 3 முதல் 5 சதவீதம், கட்டிடக்கலை ஆலோசகருக்கு அளிக்கப்படும் என்றும், இதன்படி 229.7 கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டிருக்கிறது என்றும் கூறினார். 
  • பழைய பாரம்பரிய கட்டிடங்கள் இடிக்கப்படாமல், 250 ஆண்டுகால தேவையை பூர்த்தி செய்யும் வகையில் நாடாளுமன்ற கட்டிடம் புதுப்பிக்கப்படும் என்றும், 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்துக்குள் இப்பணி முடிவடையும் என்றும் ஹர்தீப் சிங் புரி தெரிவித்தார்.
ஜம்மு காஷ்மீர் துணை நிலை ஆளுநராக கிரிஷ் சந்திரா முர்மு நியமனம்! லடாக் துணை நிலை ஆளுநர் ராதா கிருஷ்ணா
  • ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசத்தின், முதல் லெப்டினன்ட்-கவர்னராக ஐ.ஏ.எஸ் அதிகாரி கிரிஷ் சந்திரா முர்மு நியமிக்கப்பட்டுள்ளதாக குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் அறிவித்துள்ளார்.
  • இதேபோல புதிதாக உருவாக்கப்பட்ட லடாக் யூனியன் பிரதேசத்தின் துணை நிலை ஆளுநராக ராதா கிருஷ்ணா மாத்தூர் நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ஜம்மு-காஷ்மீர் ஆளுநராக இருந்த சத்ய பால் மாலிக் கோவாவின் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • குடியரசு தலைவர் வெளியிட்ட மற்றொரு அறிவிப்பில், பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை மிசோரம் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலாசார உறவை வலுப்படுத்துங்கள் அஸர்பைஜானில் துணை ஜனாதிபதி பேச்சு
  • துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு அணிசேரா நாடுகளின் 18வது மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அரசு முறைப் பயணமாக முன்னாள் சோவியத் யூனியன் நாடான அஸர்பைஜான் வந்துள்ளார்.
  • தலைநகர் பாகுவில் நடைபெற்ற அணிசேரா நாடுகள் மாநாட்டில் துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை அஸர்பைஜான் அதிபர் இல்ஹாம் அலியேவ் வரவேற்றார். 
  • இரு தலைவர்களும் பல்வேறு விஷயங்கள் குறித்து பேச்சு நடத்தினர்.அதைத் தொடர்ந்து ஈரான் அதிபர் ஹஸன் ரவுஹானி நேபாள பிரதமர் கே.பி.ஷர்மா ஓலி மற்றும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசினா ஆகியோரையும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு சந்தித்து பேசினார்.



பொலிவியா அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்றார் இவோ மோரெல்ஸ்
  • அதிபர் பதவிக்கான தேர்தலில், அதிபர் இவோ மோரல்ஸ், முன்னாள் அதிபரும் புரட்சிகர இடது முன்னணி தலைவருமான கார்லஸ் மெசா ஆகியோருக்கிடையே கடும் போட்டி நிலவியது.
  • 88.31 சதவிகித வாக்குகள் பதிவான இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் இவோ மோரல்ஸ் 47.07 சதவீத வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கார்லஸ் 36.51 சதவீத வாக்குகளே பெற்றார்.
  • இதன்மூலம், 4வது முறையாக இவோ மோரல்ஸ் அதிபராக பதவியேற்க உள்ளார். தேர்தல் முடிவை கார்லஸ் மெசா ஏற்கவில்லை. 
  • வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்திருப்பதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார். வாக்கு எண்ணும் நடைமுறைகளை விமர்சித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றதால் பொலிவியாவில் அமைதியற்ற சூழல் நிலவியது.
இந்தியர்கள் பிரேசில் செல்ல இனி விசா வாங்க தேவையில்லை: பிரேசில் அதிபர் அறிவிப்பு
  • இந்தியர்கள் மற்றும் சீனர்கள் இனி பிரேசில் வர விசா வாங்க தேவையில்லை என பிரேசில் அதிபர் ஜயர் போல்சொனாரோ அறிவித்துள்ளார்.
  • இந்த ஆண்டு தொடக்கத்தில் பிரேசில் அதிபராக பதவி ஏற்றவர் ஜயர் போல்சொனாரோ. இவர் இந்த ஆண்டு தொடக்கத்தில் விசா விதிமுறைகளை வளர்ந்த நாடுகளை சேர்ந்தவர்களுக்கு எளிதாக்கினார். பிரேசில் நாட்டின் சுற்றுலா, வர்த்தகம் வளரும் என்ற நோக்கத்தில் இந்த அறிவிப்பினை வெளியிட்டார்
  • இதன்படி இந்த ஆண்டில் இருந்து அமெரிக்கா, கனடா, ஜப்பான், ஆஸ்திரேலியாவை சேர்ந்தவர்கள், பிரேசில் நாட்டுக்கு சுற்றுலா சென்றாலும், தொழில்-வர்த்தக நோக்கங்களுக்காக சென்றாலும் விசா தேவையில்லை.
விஜய் ஹசாரே: கர்நாடகா சாம்பியன்
  • தமிழக அணிக்கு எதிரானவிஜய் ஹசாரே டிராபி பைனலில் மழை குறுக்கிட கர்நாடகா அணி 60 ரன் வித்தியாசத்தில் வி.ஜே.டி., முறைப்படி வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.
  • கர்நாடகா அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு 4வது முறையாக (2013-14, 2014-15, 2017-18, 2019-20) கோப்பை வென்றது. தொடர் நாயகன் விருதை அபிமன்யு மிதுன் (கர்நாடகா) வென்றார்.
  • அபிமன்யு மிதுன், ஷாருக்கான், முகமது, முருகன் அஷ்வின் ஆகியோரை தொடர்ச்சியாக அவுட்டாக்கினார். இதன்மூலம் விஜய் ஹசாரே டிராபியில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய முதல் கர்நாடகா பவுலரானார். 
  • தவிர, விஜய் ஹசாரே டிராபி பைனலில் 'ஹாட்ரிக்' சாதனை படைத்த முதல் பவுலரானார். ரஞ்சி மற்றும் விஜய் ஹசாரே டிராபியில் 'ஹாட்ரிக்' விக்கெட் கைப்பற்றிய 2வது பவுலரானார். ஏற்கனவே முரளி கார்த்திக் இச்சாதனை படைத்திருந்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel