இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 6.1% ஆக குறையும் - ஐ.எம்.எஃப் கணிப்பு
- இந்தியாவில் நடப்பாண்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.1 சதவீதமாக இருக்குமென ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
- முன்னதாக நாட்டின் பொருளாதாரம் 7.3 சதவீதமாக இருக்குமென கணித்திருந்த போதிலும், உலக பொருளாதார மந்த நிலையில் 1.2 சதவீதம் குறைத்தே கணிப்பிடப்பட்டுள்ளது.
- உலகப் பொருளாதாரமானது, வணிகத்தில் நிலவும் நிலையற்ற தன்மையினால், அடுத்துவரும் ஆண்டுகளில் மந்தமான நிலையை காணுமென்று ஐ.எம்.எஃப் நிறுவனம் தனது ஆய்வில் கூறியுள்ளது. இதனை 3.2 சதவீதத்திலிருந்து 3 சதவீதமாகக் குறைத்து மதிப்பிட்டுள்ளது.
- சீனாவின் வளர்ச்சி விகிதமும் மெதுவானதாகவே இருக்கும். அது 4.4 சதவீதம் குறைந்து காணப்படும். உலக வளர்ச்சிக்கு அமெரிக்காவின் பங்கு அதிகமாக எதிர்பார்க்கப்பட்டாலும் அது 2024ல் இந்தியாவை விட குறைந்த அளவே பங்களிப்பு செய்யுமென ஐ.எம்.எஃப் கணித்துள்ளது.
- மேலும், இப்போது எடுக்கப்பட்டு வரும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் மூலம் வரும் ஆண்டு இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 7 சதவீதமாக இருக்குமெனவும் சர்வதேச நிதியமான ஐ.எம்.எஃப் தெரிவித்துள்ளது.
ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக பயணிகளுக்கு கிடைத்த நஷ்ட ஈடு
- இந்திய ரயில்வே ஆரம்பித்து 150 வருடங்கள் ஆகியுள்ள நிலையில் முதல் முறையாக ஒரு ரயில் தாமதமாக சென்றதற்காக அந்த ரயிலில் பயணம் செய்யும் பயணிகளுக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டுள்ளது
- லக்னோவில் இருந்து புதுடெல்லிக்கு செல்லும் தேஜஸ் ரயிலில் 450 பயணிகள் பயணம் செய்தனர். இந்த நிலையில் இரண்டு பக்கமும் அந்த ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வருவது வருவது தெரியவந்தது
- அதில் தேஜஸ் ரயில் இரண்டு மணி நேரம் தாமதமாக வந்ததை அடுத்து ஒவ்வொருவருக்கும் ரூபாய் 250 நஷ்ட ஈடு கொடுக்கப்படுவதாகவும் இந்த நஷ்ட ஈட்டை மொபைலில் அனுப்பப்பட்டுள்ள லிங்கில் கிளிக் செய்து அவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது
- 150 ஆண்டு கால ரயில்வே வரலாற்றில் முதல்முறையாக ஒரு ரயில் தாமதமாக செல்வதற்கு நஷ்டயீடு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்தோனேஷியா அதிபராக 2வது முறையாக பதவியேற்ற ஜோகோ
- இந்தோனேஷியா: இரண்டாவது முறையாக பதவியேற்றார்... இந்தோனேஷியா அதிபராக தொடர்ந்து 2ஆவது முறையாக ஜோகோ விடுடு பதவியேற்றுக் கொண்டார்.
- ஜகார்த்தாவிலுள்ள நாடாளுமன்றத்தில் அதிபர் பதவியேற்கும் விழா நடைபெற்றது. இதில் கடவுளின் பெயரால் தொடர்ந்து 2ஆவது முறையாக அதிபராக விடுடு பதவியேற்றுக் கொண்டார்.
மிகச் சிறந்த விமான இருக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை தேர்வு
- சிறந்த விமான இருக்கையாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தின் இருக்கை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
- லண்டனில் உள்ள ஹீத்ரு விமானநிலையத்தில் இருந்து சிங்கப்பூர் செல்லும் ஏர்பஸ் ஏ380 விமானத்தின் இருக்கைகள் பயணிகளிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளன. ஒவ்வொரு பயணிக்கும் 50 சதுர அடி உள்ள தனி அறையாக இந்த இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
- இரட்டை படுக்கைகள் கொண்ட பெட் வசதி, தனியான குளியலறையுடன் கூடிய கழிவறை, முழுச்சுற்று சுழலும் இருக்கைகள். விருப்பப்படி திருப்பிக் கொள்ளக் கூடிய டிவிக்கள் என அனைத்து சிறப்பம்சங்களும் இந்த விமானத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- தற்போது 6 அறைகள் மட்டுமே கொண்ட இந்த விமானத்தில் லண்டனில் இருந்து சிங்கப்பூருக்கு பயணிக்க நபர் ஒருவருக்கு இந்திய மதிப்பில் 4 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் வசூலிக்கப்படுகிறது.
பிலிப்பைன்சில் மஹாத்மா காந்தி சிலை திறப்பு
- பிலிப்பைன்சில், மஹாத்மா காந்தி சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் அரசு முறை பயணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு சென்றுள்ளார்.
- முதல்கட்டமாக பிலிப்பைன்ஸ் சென்ற அவர், அந்நாட்டு அதிபரை சந்தித்து பேசினார். அப்போது, இரு தரப்பிற்கு இடையே பல ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. பின்னர், இந்தியாவில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 35 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோருடன் ஜனாதிபதி கலந்துரையாடினார்.
- மஹாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு, பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலாவில் மஹாத்மா காந்தியின் மார்பளவு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் திறந்துவைத்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம்: தங்கம் வென்றாா் ரொனால்டோ
- வரும் 2020-இல் இன்சியானில் ஆசிய டிராக் சைக்கிளிங் பந்தயம் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி நடைபெறுவதால், இப்பந்தயம், 2019 அக்டோபா் மாதம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- அதன்படி ஞாயிற்றுக்கிழமை தனிநபா் கியா்ன் பிரிவில் 10.384 விநாடிகளில் கடந்து தங்கம் வென்றாா் ரொனால்டோ. ஜேம்ஸ் சிங் 11.146 விநாடிகளில் கடந்து வெண்கலம் வென்றாா்.
- ஆடவா் ஜூனியா் அணிகள் ஸ்பிரிண்ட் பிரிவில் ரோஜித் சிங், பால் காலிங்வுட்டுடன் இணைந்து வெண்கலம் வென்றாா் ரொனால்டோ.
- மகளிா் ஜூனியா் 500 மீ பிரிவில் திரியஷா பால் 2 வெண்கலம் வென்றாா்.