Type Here to Get Search Results !

19th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவிலேயே முதல்முறையாக கிண்டி பூங்காவில் Augmented Reality தியேட்டர்
  • Augmented reality என்கிற புனை மெய்யாக்கத் தொழில்நுட்பம். இந்தத் தொழில்நுட்பத்தில் திரையரங்கம் அமையப்போகிறது. 
  • ``இது இந்தியாவிலேயே முதன்முறையாக கிண்டி சிறுவர் பூங்காவில் அமையப்போகும் திரையரங்கம். கொல்கத்தா மற்றும் மும்பையில் இந்தத் தொழில்நுட்பத்துக்கான சோதனை முயற்சி வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. 
  • Zoo Authority of TamilNadu (ZAT) நிதியிலிருந்து 40 லட்சம் ரூபாய் இதற்காக ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. 
  • இதில், ஒவ்வொரு காட்சியும் 13 நிமிடங்கள் நடைபெறும். ஒருநாளைக்கு 6 காட்சிகள் நடத்தலாம் எனத் திட்டமிட்டுள்ளோம்.டைனோசர்
மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம்: அனைத்துப் பள்ளிகளிலும் அமைக்க மத்திய அரசு உத்தரவு
  • அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஊட்டச்சத்து மிகுந்த, மாணவா்களுக்கான காய்கறித் தோட்டம் அமைக்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
  • கிராமங்கள் மற்றும் நகரங்களில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும், ஊட்டச்சத்து மிகுந்த மாணவா்களுக்கான காய்கறித் தோட்டங்களை உருவாக்க வேண்டும். தோட்டத்தை உருவாக்கத் தேவையான விதைகள், மரக்கன்றுகள், இயற்கை உரங்கள், தொழில்நுட்ப உதவிகள் மற்றும் முறையான பயிற்சி ஆகியவை வழங்கப்படும். 
  • இதற்கு, 'கிரிஷி விக்யான் கேந்திரா' (அறிவியல் தோட்ட மையம்), தோட்டக்கலைத் துறை, விவசாயத் துறை, உணவு மற்றும் ஊட்டச்சத்து மையம், மாநில வேளாண்மை பல்கலைக்கழகங்கள் மற்றும் வனத்துறையின் உதவியையும் வழிகாட்டுதலையும் பெற்றுக்கொள்ளலாம்.
  • தோட்டத்துக்கான எல்லைச் சுவரை அமைப்பது, நிலத்தைச் சமப்படுத்துவது ஆகியவற்றுக்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு (100 நாள்கள் வேலை) தொழிலாளா்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
  • பள்ளிகளில் ஊட்டச்சத்தை அதிகப்படுத்தவும், நகரமயமாகி வரும் சூழலில் நமக்குத் தேவையான காய்கறி, பழங்களை நாமே உருவாக்கிக் கொள்ளும் திறனை வளா்த்துக் கொள்ளவும் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 
  • பெருகிவரும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும் காய்கறித் தோட்டத்துக்கான யோசனை முன்னெடுக்கப்பட்டுள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



DNA ஒழுங்குமுறை மசோதா, பாராளுமன்ற நிலைக்குழுவுக்கு பரிந்துரை
  • குற்றவாளிகள், பாதிக்கப்பட்டவர்கள், சந்தேக நபர்கள் மற்றும் குற்றவாளிகள் உள்ளிட்ட சில வகை நபர்களின் அடையாளத்தை நிறுவுவதற்கான deoxyribonucleic acid (டி.என்.ஏ) தொழில்நுட்பத்தின் பயன்பாடு மற்றும் பயன்பாட்டைக் கட்டுப்படுத்த முற்படும் மசோதா ஜூலை மாதம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டது.
  • இந்நிலையில் இந்த மசோதாவை அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் காடுகள் தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவுக்கு மாநிலங்களவை தலைவர் எம்.வெங்கையா நாயுடு பரிந்துரைத்துள்ளார்.
  • மாநிலங்களவை தலைவர், சபாநாயகருடன் கலந்தாலோசித்து, மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்ட DNA தொழில்நுட்ப (பயன்பாடு மற்றும் விண்ணப்பம்) ஒழுங்குமுறை மசோதா, 2019-ஐ அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் நிலைக்குழுக்கு பரிந்துரை செய்துள்ளதாக உறுப்பினர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது என்று மக்களவை செயலகம் வெள்ளிக்கிழமை ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.
ராணுவ வீரர்களுக்கு குண்டு துறைக்காத ஜாக்கெட்: ஒப்பந்தப்படி ராணுவத்திடம் வழங்கிய SMPP நிறுவனம்
  • ராணுவ வீரர்களுக்கு குண்டு துளைக்காத ஜாக்கெட்களை, போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி SMPP நிறுவனம் இந்திய ராணுவத்திடம் வழங்கியுள்ளது.
  • காஷ்மீர் பள்ளத்தாக்கில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள பாதுகாப்புப் படையினருக்காக, உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 40,000 குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகள் ராணுவத்தால் வழங்கப்பட்டுள்ளது.
  • 2021ம் ஆண்டுக்குள் 1.8 லட்சம் குண்டு துளைக்காத ஜாக்கெட்டுகளை வழங்க வேண்டும் என்பதே ஒப்பந்தம். 
  • தலைக்கவசம், ஜாக்கெட் மற்றும் முக பாதுகாப்பு என இதன் அனைத்து பாகங்களும் ஏ.கே 47 ரக துப்பாக்கியிலிருந்து சுடப்பட்ட ஹார்ட்கோர் எஃகு வெடிமருத்துகளை தாங்கும் சக்தி கொண்டதாகும். 



என்எஸ்ஜி தலைமை இயக்குனராக ஐபிஎஸ் அதிகாரி அனுப்குமார் நியமனம்
  • கடந்த 1985-ஆம் ஆண்டு குஜராத் பிரிவு ஐபிஎஸ் அதிகாரியான அனுப் குமாரின் நியமனத்துக்கு, பிரதமா் மோடி தலைமையிலான நியமனங்களுக்கான மத்திய அமைச்சரவை குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.
  • இவா், அடுத்த ஆண்டு செப்டம்பா் வரை அல்லது அடுத்த உத்தரவு வரும் வரை, என்எஸ்ஜி தலைமை இயக்குநராக பதவி வகிப்பாா் என்று மத்திய பணியாளா், பயிற்சித் துறை வெளியிட்ட ஆணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • பயங்கரவாதிகளுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபடவும், விமான கடத்தல் சம்பவங்களைத் தடுக்கவும் கடந்த 1984-இல் என்எஸ்ஜி உருவாக்கப்பட்டது. மிக முக்கியப் பிரமுகா்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் பணியிலும் இப்படையினா் ஈடுபடுத்தப்படுகின்றனா்.
சைனிக் பள்ளிகளில் பெண் மாணவர்களை அனுமதிக்க ராஜ்நாத் சிங் ஒப்புதல்
  • 2021-22 கல்வி அமர்வில் இந்தியா முழுவதும் செயல்பட்டு வரும் ராணுவ கல்விக்கான சைனிக் பள்ளிகளில் இனி மாணவிகளையும் சேர்த்துக் கொள்ள பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஒப்புதல் அளித்துள்ளார். 
  • மேலும், அந்த கல்வி நிறுவனங்களில் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் போதுமான பெண் ஊழியர்கள் கிடைப்பதை உறுதி செய்யுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு சிங் அறிவுறுத்தினார்.
  • இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மிசோரத்தில் உள்ள சைனிக் பள்ளி சிங்சிப்பில் சிறுமிகளை அனுமதிக்க பாதுகாப்பு அமைச்சகம் தொடங்கிய பைலட் திட்டத்தின் வெற்றியைத் தொடர்ந்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
டெல்லியை வீழ்த்தி ப்ரோ கபடி சாம்பியனான பெங்கால் 
  • ஜூலை மாதம் 20 -ம் தேதி தொடங்கிய `ப்ரோ கபடி லீக் சீசன் 7' தொடர் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மொத்தம் 12 அணிகளுடன் தொடங்கிய இந்த தொடரில், தபாங் டெல்லி, பெங்கால் வாரியர்ஸ், உ.பி யோத்தா, யு மும்பா, ஹரியானா ஸ்டீலெர்ஸ், பெங்களூரு புல்ஸ் ஆகிய 6 அணிகள் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.
  • இதனை தொடர்ந்து நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் டெல்லி அணி பெங்களுரு அணியையும், பெங்கால் அணி மும்பை அணியையும் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. நேற்று அகமதாபாத்தில் நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் டெல்லி அணியும் பெங்கால் அணியும் மோதியது.
  • இறுதியாக பெங்கால் அணி 39-34 என்ற புள்ளி கணக்கில் டெல்லி அணியை வீழ்த்தி முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel