Type Here to Get Search Results !

18th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

அசுத்தமான பால் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழகத்திற்கு முதலிடம்
  • பாக்கெட்டுகளில் விற்கப்படும் பால் பாக்கெட்டுகள் சுகாதாரமற்றவையாக இருப்பதாக இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
  • நாடெங்கிலும் உள்ள தனியார் பால் பாக்கெடுகள் மாதிரிகளை ஆய்வு செய்ததில் அவற்றில் மூல பாலின் அளவை விட பூச்சிக்கொல்லிகளும், அப்லாடாக்சின் என்ற அசுத்தமும் அதிகளவில் கலந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. 
  • சுமார் 3825 பால் மாதிரிகள் சோதிக்கப்பட்ட நிலையில் அதில் 47 சதவீதம் மட்டுமே ஆரோக்கியமான பால் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
  • மேலும் அசுத்தமான பால் விற்பனையாகும் மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடத்தில் இருப்பதாக தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது. இரண்டாம் இடத்தில் டெல்லியும், மூன்றாம் இடத்தில் கேரளாவும் உள்ளன.
அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம்
  • அசாம் தேசிய குடிமக்கள் பதிவேடு ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா மத்திய பிரதேசத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டார். அதிகாரி பிரதீக் ஹஜேலாவை அயல்துறைக்கு அதிரடியாக பணியிடமாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை பரிந்துரை செய்தார் கோகாய்
  • உச்சநீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக எஸ்.ஏ. பாப்டேவை தற்போதைய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் பரிந்துரைத்து மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
  • உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்கும் ரஞ்சன் கோகாய் நவம்பர் 17-ந் தேதி ஓய்வு பெறுகிறார். பொதுவாக தலைமை நீதிபதியாக இருப்பவர்கள் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்து கடிதம் அனுப்புவது மரபு.



கர்நாடக நாட்டுப்புறக்கலை அகாடமிக்குத் தலைவரான திருநங்கை
  • மஞ்சம்மா என்னும் 62 வயது நாட்டியக் கலைஞரை மாநிலத்தின் நாட்டுப்புறக்கலை மற்றும் கலைஞர்கள் நல்வாழ்வு அகாடமியின் தலைவராக அறிவித்துள்ளது கர்நாடக மாநில அரசு. இவர் ஒரு திருநங்கை. 
  • திருநங்கை ஒருவர் அகாடமிக்குத் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல்முறை. கர்நாடகாவின் 'ஜோகட்டி' நாட்டியக் கலையில் தேர்ந்த நிபுணர் மஞ்சம்மா. 
சரித்திர சாதனை படைத்தது ரிலையன்ஸ்
  • ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம், இந்திய வரலாற்றில் இதுவரை இல்லாத சாதனையாக, 9 லட்சம் கோடி ரூபாய் சந்தை மதிப்பை எட்டிய நிறுவனமாக உருவெடுத்துள்ளது.
விண்வெளியில் பெண்கள் நடைப்பயணம் 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை
  • அமெரிக்க விண்வெளி வீராங்கனையரான கிறிஸ்டினா கோச் ஜெசிகா மேர் ஆகியோர் விண்வெளியில் நடைபயணம் மேற்கொண்டனர். 
  • இதன்மூலம் முதல் முறையாக விண்வெளியில் பெண்களை மட்டுமே நடைபயணம் மேற்கொள்ள வைத்து 'நாசா' விஞ்ஞானிகள் சாதனை படைத்துள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel