Type Here to Get Search Results !

21st OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவிற்கு தபால் அஞ்சல் சேவையை நிறுத்தியது பாகிஸ்தான்
  • பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பயங்கரவாத முகாம்களில் இந்தியா பீரங்கித் தாக்குதலை நடத்திய ஒரு நாள் கழித்து, பாகிஸ்தான் இரு நாடுகளுக்கும் இடையிலான தபால் அஞ்சல் சேவையை ஒருதலைப்பட்சமாக நிறுத்தியது.
  • பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை குறைத்து, இந்தியா சர்வதேச விதிமுறைகளுக்கு இச்செயல் முரணானது என்று குறிப்பிட்டுள்ளது.
நீண்ட தூரம் பயணிக்கும் விமானம்: குவாண்டாஸ் நிறுவனத்தின் உலக சாதனைப் பயணம்
  • ஆஸ்திரேலியாவின் கேரியர் குவாண்டாஸ் விமான போக்குவரத்து சேவை இடைவிடாது மிக நீண்ட தூரம் பயணிக்கும் பயணிகள் விமானத்தின் சோதனையை முடித்துள்ளது. இந்த சோதனையில் பயணிகள், விமான ஓட்டுனர்கள்,மற்றும் பணியாளர்களின் பயணம் எந்த விதத்தில் பாதிக்கிறது என்பது குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
  • போயிங் 787-9 ரக விமானம் 49 பயணிகளுடன் 19 மணிநேரம் 16 நிமிடங்கள் நியூயார்கில் இருந்து சிட்னி வரை 16,200 கிலோ மீட்டர் தூரம் பயணித்துள்ளது.



அமீரகத்தின் லூவ்ரு அருங்காட்சியகத்தை அலங்கரிக்கவுள்ள உலகின் பழமையான முத்து
  • உலகின் பழமையானது என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கூறும் 8,000 ஆண்டுகள் பழமையான முத்து, அபுதாபியில் உள்ள லூவ்ரு அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸின் தலைநகரான மராவா தீவில் அகழ்வாராய்ச்சியின்போது கண்டுபிடிக்கப்பட்ட ஒரு அறையின் தரையில் இந்த இயற்கை முத்து கண்டெடுக்கப்பட்டது. அந்த அறை அந்நாட்டில் காணப்பட்ட ஆரம்பகால கட்டிடக்கலைகளை வெளிப்படுத்தியது.
  • முத்து வந்த அடுக்குகள் கிமு 5800-5600 வரை, புதிய கற்காலத்தில் கார்பன் தேதியிட்டவை என்று அமீரகத்தின் கலாச்சார மற்றும் சுற்றுலாத் துறை தெரிவித்துள்ளது.
தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக அணித்திரளும் ஆஸ்திரேலிய பத்திரிகைகள்
  • ஆஸ்திரேலியாவில் ஊடகங்களுக்கு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளை எதிர்த்து அந்நாட்டின் பெரும் செய்தித்தாள்கள் தங்களுக்குள் உள்ள போட்டிகளை மறந்து ஒரேகுரலில் தங்களின் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
  • நியூஸ் கார்ப் ஆஸ்திரேலியா மற்றும் நைன் மாஸ்ட்ஹெட்ஸ் ஆகிய இரண்டு பெரும் செய்திதாள்களும் தங்களின் முதல் பக்கத்தில் செய்தியை கருப்பு மையால் மறைத்து அதற்கு மேலே 'ரகசியம்' என்ற வாசகத்துடன்கூடிய சிவப்பு நிற முத்திரையுடன் வெளிவந்தன.
  • இந்த நூதன போராட்டமுறை அந்நாட்டில் உள்ள தேசிய பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நடத்தப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel