Type Here to Get Search Results !

16th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

உத்தரமேரூர் அருகே கண்டறியப்பட்ட 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய கல்திட்டை
  • உத்தரமேரூரை அடுத்த பெருநகர் கிராமத்தில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இறந்தவர்களைப் புதைக்கும் கல்திட்டை என்னும் ஈமச்சின்னம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
  • மூன்று பெரிய கற்களை செங்குத்தாக வைத்து அதன் மீது ஒரு பெரிய தட்டையான கற்பலகை போன்ற கல்லைக் கொண்டு மூடிய நிலையில் வைக்கப்பட்டிருக்கும் நினைவுச் சின்னமாகும். 
  • இது ஆறரை அடி உயரமும், ஆறு அடி அகலமும் கொண்டது. 3 கற்களை செங்குத்தாக நிறுத்தி அதன் மீது ஒரு பெரிய கல்லால் மூடிய நிலையில் காணப்படுகிறது.
  • அக்காலத்தில் வேட்டைக்குச் சென்றபோதோ அல்லது வயது மூப்பின் காரணமாகவோ இறந்தவரின் உடலைப் புதைத்த பிறகு, அதை நரி உள்ளிட்ட காட்டு விலங்குகள் சிதைக்காமல் இருக்க, புதைத்த இடத்தின் மீது பெரிய, பெரிய கற்களை வைத்திருக்கின்றனர்.
  • இதற்கு கல்திட்டை என்று பெயர். இறந்தவர்களுக்கான ஈமச்சின்னங்களில் இதுவும் ஒரு வகையாகும். இது தொல்லியல் துறையினரால் பாதுகாக்கப்பட வேண்டிய ஒன்று என்றார்.
பாரதியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தராக பி.காளிராஜ் நியமனம்
  • கோவை பாரதியாா் பல்கலைக்கழகப் புதிய துணைவேந்தராக பி.காளிராஜ் நியமிக்கப்பட்டுள்ளாா்.
  • அண்ணா பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்ப மையத்தில் கெளரவ மருத்துவ விஞ்ஞானியாக தற்போது பணியாற்றி வரும் பி.காளிராஜ், 31 ஆண்டுகள் பேராசிரியா் பணி அனுபவம் கொண்டவா்.
  • அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறுப்பு துணைவேந்தா், உயிரி தொழில்நுட்பத் துறை தலைவா், ஆட்சிக் குழு உறுப்பினா் என 20 ஆண்டுகளுக்கும் மேலாக நிா்வாகப் பணி அனுபவத்தையும் கொண்டவா்.
  • 1999 முதல் 2004 ஆம் ஆண்டு வரை அமெரிக்காவின் மேரிலேண்டில் உள்ள தேசிய சுகாதார கல்வி நிறுவனம், பிரிட்டனின் ஸ்காட்லாண்டில் உள்ள கிளாஸ்கோ பல்கலைக்கழகம், அமெரிக்காவின் ராக்ஃபோா்டு இல்லிநாய்ஸ் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் கூட்டு ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளாா். இதுவரை 69 ஆராய்ச்சிக் கட்டுரைகளை வெளியிட்டுள்ள இவா், 42 ஆராய்ச்சி மாணவா்களுக்கு வழிகாட்டியாகவும் இருந்துள்ளாா்.
  • 2009-ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியக் குழுவின் (யுஜிசி), பேராசிரியா்களுக்கான அடிப்படை அறிவியல் ஆராய்ச்சியாளா் (பி.எஸ்.ஆா்.) விருதையும், 2013-இல் இந்திய உயிரி தொழில்நுட்ப ஆராய்ச்சி அமைப்பின் வாழ்நாள் சாதனையாளா் விருதையும் இவா் பெற்றுள்ளாா்.



ஆராய்ச்சி மேம்பாடு: பிரேசிலுடன் தமிழ்நாடு மருத்துவப் பல்கலை. புரிந்துணா்வு ஒப்பந்தம்
  • பிரேசிலின் கியூயாபா நகரில் அமைந்துள்ளது ஃபெடரல் யுனிவா்சிட்டி ஆஃப் மேட்டோகிராஸோ பல்கலைக்கழகம். கடந்த 1970-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பல்கலைக்கழகமானது பிரேசில் நாட்டின் மத்தியப் பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். 
  • மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நடவடிக்கைகளில் சா்வதேச அளவில் சிறந்து விளங்கும் அப்பல்கலைக்கழகத்தில் சிறப்பு விரிவுரையாளராக வருகை தந்து மாணவா்களிடம் உரையாற்றுமாறு தமிழ்நாடு டாக்டா் எம்ஜிஆா் மருத்துவப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் டாக்டா் சுதா சேஷய்யனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
  • அதன்பேரில், அங்கு சென்று அவா் விரிவுரையாற்றியபோது இரு பல்கலைக்கழகங்களுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தானது. 
  • ஆங்கிலம் மற்றும் போா்ச்சுகீசிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருந்த அந்த உடன்படிக்கையில், ஃபெடரல் யுனிவா்சிட்டி ஆஃப் மேட்டோகிராஸோவின் வேந்தா் (ரெக்டாா்) டாக்டா் மிரியன் தெரசா மற்றும் டாக்டா் சுதா சேஷய்யன் ஆகியோா் கையெழுத்திட்டனா். 
  • பிரேசில் நாட்டு கல்வி நிறுவனம் ஒன்றுடன் மாநில மருத்துவப் பல்கலைக்கழகம் ஒப்பந்தம் மேற்கொள்வது இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
'பட்டினி இல்லா உலகத்தை உருவாக்குவோம்' - ஐ.நா அழைப்பு
  • சர்வதேச அளவில் இன்று, 'உலக உணவு தினம்' கொண்டாடப்பட்டுவருகிறது. அனைவருக்கும் தேவை உணவு, ஆரோக்கியமான உணவு எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில், ஒவ்வோர் ஆண்டும் உலக உணவு தினத்தன்று விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படும்.
  • இதில், உலகமயமாக்கல், நகரமயமாக்கல் காரணமாக உணவுப் பழக்க வழக்கங்கள் பெரிதும் மாற்றம் கண்டுள்ளன. ஆரோக்கியமான உணவு உட்கொள்வது குறைந்துகொண்டே வர, இன்ஸ்டன்ட் உணவுகளின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. 
  • ஒருபுறம் உணவுப் பழக்கங்கள் மாறினாலும், மறுபுறம் பல லட்சம் மக்கள் ஒருவேளை உணவின்றித் தவித்துவருவது கவலையான நிதர்சனம்.
  • ஒவ்வோர் ஆண்டும், சர்வதேச உணவுக்கொள்கை ஆராய்ச்சி மையம் சார்பில், 'உலகப் பட்டினி குறியீட்டு தரவரிசை' வெளியிடப்படும். இந்த ஆண்டு வெளியிடப்பட்ட அறிக்கையில், கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்ட 117 நாடுகளில் இந்தியா 102-வது இடத்தில் உள்ளது. கணக்கெடுக்கப்பட்ட நாடுகளிலி ருந்து, குறைந்த பாதிப்புடைய நாடுகள் முதல் அதிக பாதிப்புடைய நாடுகளாக வரிசைப்படுத்தப்பட்டன. 
  • இதில், அதிக பாதிப்புள்ள கடைசி 20 நாடுகளுக்குள் இருக்கும் இந்தியாவில், அதிக மக்கள் பசியால் வாடுவதாக அதிர்ச்சித் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.பட்டினி



பட்டினி நாடுகள்: 102 வது இடத்தில் இந்தியா
  • 2019 ம் ஆண்டில் 117 நாடுகளை கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 102 வது இடத்திற்கு சரிந்துள்ளது. இந்த பட்டியலில் அண்டை நாடுகளான பாக்., நேபாளம், வங்கதேசம் ஆகியவற்றை விட இந்தியா பின்தங்கி உள்ளது.
  • 2030 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் ஏழைகளே இல்லாத நிலையை ஏற்படுத்த மத்திய அரசு உறுதி பூண்டுள்ளது. இந்நிலையில் உலக அளவில் 100 அம்சங்களின் அடிப்படையில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பட்டினி நாடுகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. 
  • இதில் இந்தியாவுக்கு 30.3 புள்ளிகள் வழங்கப்பட்டுள்ளது. 2014 ல் 76 நாடுகளைக் கொண்ட பட்டினி நாடுகளின் பட்டியலில் இந்தியா 55 இடத்தில் இருந்தது. 2017 ல் 119 நாடுகளைக் கொண்ட பட்டியலில் இந்தியா 100 வது இடத்தில் இருந்தது. 
  • 2018 ல் 119 நாடுகளின் பட்டியலில் 103 வது இடத்தில் இருந்து, 2019 ல் 102 வது இடத்திற்கு சரிந்துள்ளது.பட்டினி நாடுகளின் பட்டியலில் பாக்., 94வது இடத்திலும், வங்கதேசம் 88 வது இடத்திலும், நேபாளம் 73வது இடத்திலும் உள்ளன. இந்தியாவில் குழந்தைகள் வீணடிக்கும் உணவின் அளவு மட்டும் 20.8 சதவீதம் என கணக்கிடப்பட்டுள்ளது. 
  • அதிகரிக்கும் மக்கள் தொகை, உணவு வீணடிப்பு, வறுமை, ஊட்டச்சத்து குறைபாடு ஆகியன பட்டினி நாடுகள் பட்டியலில் இந்தியா பின்தங்குவதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.
நாட்டிலேயே தூய்மையான மருத்துவமனை 
  • தூய்மையில் உறுதியாக இருக்கும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் காயகல்ப விருதுகளை மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் டெல்லியில் நேற்று வழங்கினார். அதில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை முதலிடம் பிடித்தது.
  • இண்டாவதாக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது. காயகல்ப விருதை அந்த மருத்துவமனையின் இயக்குனர் ராகேஷ் அகர்வால் உள்ளிட்டோர் பெற்றுக்கொண்டனர். மேலும் ஜிப்மர் மருத்துவமனைக்கு ஒன்றரை கோடி ரூபாய் பரிசும் வழங்கப்பட்டுள்ளது.
 தெற்காசிய கால்பந்தில் இந்திய பெண்கள் சாம்பியன்
  • பூடானில் 15 வயதுக்குட்பட்ட பெண்கள் அணிகள் பங்கேற்கும் தெற்காசிய கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியா, வங்கதேசம் மோதின. 
  • இந்திய அணி 5-3 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel