Type Here to Get Search Results !

17th OCTOBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

திண்டுக்கல் அருகே கற்கால கல்வட்டம் கல்லறைகள் கண்டுபிடிப்பு
  • திண்டுக்கல் அருகே கோம்மங்கரடு பகுதியில் பெருங்கற்காலத்தை சேர்ந்த கல்வட்டம் என்ற கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
  • கல்வட்டம் என்பது தரையின் கீழ் பகுதியில் குழியை தோண்டி நான்கு பக்கமும் பலகை கற்கள் ஒன்றுடன் ஒன்றை இணைத்து சதுரமான அல்லது செவ்வகமான வடிவில் நிறுத்தி கல்லறை போன்ற தோற்றத்தில் அமைப்பது. 
  • கல்லறையின் கீழ் பகுதியும் மேல் பகுதியும் பெரிய பலகை கற்களால் மூடப்பட்டிருக்கும்.கல்வட்டங்களில் முதுமக்கள் தாழிகள், ஈமச்சடங்கிற்கான பொருட்ளோடு தொடர்புடைய மண்பாண்டங்களுடன் மண், கற்களை கொண்டு மூடிவிடுவர். 
  • இக்குழியை சுற்றிலும் உருண்டையான அல்லது சீரற்ற பெரிய கற்களை வட்டவடிவில் வைதது அடையாளப்படுத்தி கொள்வர்.
  • இந்த கல்வட்டங்கள் இறந்தவர்கள் உடல்கள் புதைக்கப்பட்ட இடத்தை அடையாளப்படுத்தவும், பாதுகாக்கவும் உருவாக்கப்பட்டவை. இது போன்ற அமைப்புடைய கல்வட்டங்கள் கொம்பங்கரடு அருகே தரிசு நிலத்தில் ஐந்து உள்ளன.
  • ஒவ்வொன்றும் 5 மீட்டர் இடைவெளியில் சீரற்ற பெரிய கற்களை வட்டமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளன.
  • பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை புதைத்த இடமாக கல்வட்டங்கள் ஒரே இடத்தில் அமைந்துள்ளன என்பதை, தமிழகத்தில் இருக்கும் கல்வட்டங்கள் உறுதிப்படுத்துகின்றன. 
காஞ்சி பெண்ணுக்கு தேசிய நெசவாளர் விருது: 'கோர்வை' ரக பட்டு சேலை நெய்தவருக்கு கவுரவம்
  • மத்திய அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறை, 2014 முதல், சிறந்த கைத்தறி துணிகளை நெய்த நெசவாளர்களுக்கு, தேசிய விருது மற்றும் சான்றிதழ்களை வழங்கி, கவுரவித்து வருகிறது. 
  • இந்த விருது வழங்கும் நடைமுறையை, 2014ல், சென்னையில், பிரதமர் மோடி துவக்கி வைத்தார். அந்தாண்டு முதல் ஆக.,7, தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 
  • இந்நிலையில், 2017க் கான சிறந்த கைத்தறி நெசவாளர் விருதுக்கு, இந்திய அளவில், 11 பேரின் பெயர் கள் அறிவிக்கப்பட்டு உள்ளன.
  • இதில், காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம், சேர்மன் சாமிநாதன் தெருவைச் சேர்ந்த ஆர்.கீதா, 38, என்ற பெண், சிறந்த நெசவாளராக தேர்வாகி உள்ளார். இவர், திருவள்ளுவர் பட்டு கைத்தறி சங்கத்தின் உறுப்பினர். தேசிய விருதுக்கு, தமிழகத்தில் இருந்து தேர்வானது இவர் மட்டுமே. நற்சான்று தேசிய நற்சான்றிதழுக்கு, 11 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 
  • தமிழகத்தில் இருந்து, காஞ்சிபுரம் எம்.எம்.அவென்யூவைச் சேர்ந்த எம்.பி.செல்வகுமார் தேர்வாகி உள்ளார்



நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக ஷீலா ப்ரியா நியமனம்
  • காவலா்களின் குறைகளைப் போக்கவும், காவல்துறையில் சீா்திருத்தங்களை கொண்டு வரவும், நான்காவது காவல் ஆணையத்தை தமிழக அரசு அமைத்துள்ளது.
  • தமிழக அரசு நான்காவது காவல் ஆணையத்தை அமைத்துள்ளது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி ஷீலா பிரியா நான்காவது காவல் ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளாா். அவா் ஏற்கெனவே தமிழ்நாடு தகவல் ஆணையத்தின் தலைவராகப் பணியாற்றியுள்ளாா். 
  • காவல் ஆணையத்தின் உறுப்பினா்களாக வேடசந்தூா் எம்எல்ஏ பரமசிவம், முன்னாள் இணைச் செயலாளா் அறச்செல்வி, ஏடிஜிபி வெங்கட்ராமன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
  • அதிமுக ஆட்சிக் காலத்தில் காவல் ஆணையம் அமைக்கப்படுவது, இதுவே முதல்முறையாகும். அதேபோல, காவல் ஆணையத்திற்கு தலைவராக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் ஷீலா ப்ரியா என்பது, குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி பரிந்துரை
  • சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா தலைமை நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் அதை ஏற்றுக்கொள்ளாத அவர், தனது பதிவியை ராஜினாமா செய்தார். 
  • இந்நிலையில் பாட்னா உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருக்கும் ஏ.பி.சாஹி எனப்படும் அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக நியமிக்க கொலிஜியம் பரிந்துரை செய்துள்ளது. 
  • ஏ.பி.சாஹியின் பதவிக்காலம் 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதனால், இவர் தேர்வு செய்யப்பட்டால் சுமார் ஓராண்டு காலம் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பணியாற்ற வாய்ப்புள்ளது.
முதலீட்டுக்கு உகந்த மாநிலங்கள்
  • நாட்டிலேயே முதலீடுகளுக்கு உகந்த மாநிலங்கள் பட்டியலில் தமிழகம் 5வது இடத்தில் உள்ளதாக மத்திய அரசின் திட்டமிடல் அமைப்பான நிதி ஆயோக் தெரிவித்துள்ளது.
  • இப்பட்டியலில் கர்நாடகா, மகாராஷ்டிரா, ஹரியானா, கேரளா முதல் 4 இடங்களில் உள்ளதாகவும் நிதி ஆயோக் கூறியுள்ளது. பல்வேறு துறைகளில் புத்தாக்கங்கள் படைப்பதில் நாட்டிலேயே கர்நாடகம், தமிழகம் முதல் 2 இடங்களில் உள்ளதாகவும் நிதி ஆயோக் பட்டியலில் கூறப்பட்டுள்ளது.



முதலாவது 5G வீடியோ அழைப்பு இந்தியாவில் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டது
  • இந்தியாவில் தற்போது இந்திய மொபைல் காங்கிரஸ் 2019 நிகழ்வு இடம்பெற்றுவருகின்றமை தெரிந்ததே. இந்நிகழ்வில் புதிய தொழில்நுட்பங்கள் பலவும் அறிமுகம் செய்யப்பட்டுவருகின்றன. 
  • இந்த வரிசையில் Ericsson மற்றும் Qualcomm நிறுவனங்கள் இணைந்து முதலாவது 5G லைவ் வீடியோ அழைப்பினை ஏற்படுத்தியுள்ளனர். இவ்வாறு 5G வீடியோ அழைப்பு வசதி ஏற்படுத்தப்படுவது இந்தியாவில் இதுவே முதல் முறையாகும்.
  • குறித்த வீடியோ அழைப்பிற்காக 28GHz அலைக்கற்றை பயன்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை MillimeterWave எனப்படும் குறித்த 5G அலைக்கற்றையானது தற்போது வட அமெரிக்கா, ஜப்பான் மற்றும் கொரியா போன்ற நாடுகளில் வர்த்தக ரீதியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இவை 28GHz மற்றும் 39GHz அதிர்வெண்களைக் கொண்டவையாகும்.
பிரிட்டன் - ஐரோப்பிய யூனியன் புதிய ஒப்பந்தம் இறுதியானது
  • 'பிரெக்சிட்' எனப்படும் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான புதிய ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி வரும் 31ல் பிரிட்டன் வெளியேறும். ஆனால் அதற்கு முன் பிரிட்டன் பார்லி. ஒப்புதல் அளிக்க வேண்டும்.
  • ஐரோப்பிய நாடுகளுக்கு இடையே பொருளாதாரம் உள்ளிட்டவற்றில் ஒத்துழைத்து செயல்படுவதற்காக அமைக்கப்பட்டது ஐரோப்பிய யூனியன். ஆனால் தன் பொருளாதாரம் வளர்ச்சி அடையாததால் யூனியனில் இருந்து வெளியேற பிரிட்டன் முடிவு செய்தது.
  • இது தொடர்பாக 2016ல் பொதுமக்களின் கருத்தை அறியும் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதில் 52 சதவீதம் பேர் ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேற ஆதரவு தெரிவித்தனர். 
17 வயதில் இரட்டை சதமடித்து இளம் வீரர் சாதனை
  • இந்தியாவின் உள்ளூர் அணிகள் பங்கேற்கும் விஜய் ஹசாரே ஒருநாள் போட்டி தொடர் தற்போது நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரின் போட்டியில் மும்பை-ஜார்கண்ட் அணிகள் மோதியது. போட்டியின் துவக்க வீரராக களமிறங்கிய யாஷஸ்வி ஜெயஷ்வால் என்ற 17 வயது இளம் வீரர் சிறப்பாக ஆடினார்.
  • போட்டியில் அதிரடியாக ஆடிய யாஷஸ்வி 17 பவுண்டரிகள், 12 சிக்சர்களுடன் 154 பந்துகளில் 203 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 
  • இதன்மூலம் மிகவும் குறைந்த வயதில், 50 ஓவர் போட்டிகளில் குறைந்த வயதில் இரட்டை சதம் விளாசிய இந்திய வீரர் என்ற சாதனையை நேற்று நிகழ்த்தியுள்ளார் யாஷஸ்வி ஜெய்ஸ்வால். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel