Type Here to Get Search Results !

4th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுப்பு
  • சிவகங்கை மாவட்டம் கீழடியில் புதன்கிழமை ஒரே குழியில் அருகருகே 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய தானியம் சேகரிக்கும் பானை, தண்ணீர் தொட்டி கண்டெடுக்கப்பட்டன.
மகாத்மா காந்திக்கு சிறப்பு அஞ்சல் தலை: ரஷ்யா கவுரவம்
  • அக்.,2 ம் தேதி நாடு முழுவதும் மகாத்மா காந்தியின் பிறந்த நாள் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் "மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாளையொட்டி சிறப்பு அஞ்சல் தலையை வெளியிட ரஷ்ய அரசு முடிவு செய்துள்ளது. 
தமிழகத்தில் ரூ.2,780 கோடியில் புதிய தொழில் முதலீடுகள்: முதல்வர் முன்னிலையில் அமெரிக்காவில் ஒப்பந்தங்கள்
  • தமிழகத்திற்கு முதலீடுகளை ஈர்க்க நியூயார்க்கில் 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்தார். 200-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் பங்கேற்ற கூட்டத்தில் முதலமைச்சர் உரையாற்றினார். 
  • இதைத் தொடர்ந்து JEAN MARTIN, JOGO HEALTH, ASPIRE CONSULTING உள்ளிட்ட 16 நிறுவனங்கள் தமிழகத்தில் 2 ஆயிரத்து 780 கோடி ரூபாய் முதலீடு செய்ய ஒப்புக்கொண்டு முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. 
  • இந்நிறுவனங்களின் முதலீட்டால் தமிழகத்தில் 20 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்புக் கிடைக்கும் என அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • இதுதவிர HALDIA PETROCHEMICALS என்ற அமெரிக்க நிறுவனம் தமிழகத்தில் 50 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் தொழிற்சாலை அமைக்க கொள்கை அளவிலான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 



சென்னை - ரஷ்யா இடையே கப்பல் போக்குவரத்து; 20 அணு உலை அமைக்க மோடி - புடின் ஒப்பந்தம்
  • ரஷ்யா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்யாவுடன், ராணுவம், வர்த்தகம், அணுசக்தி உள்ளிட்ட துறைகளில், 15 ஒப்பந்தங்கள் செய்துள்ளார். 
  • சென்னைக்கும், ரஷ்யாவின் விளாதிவோஸ்டாக் நகருக்கும் இடையே நேரடி கப்பல் போக்குவரத்து துவங்கவும், நமது நாட்டில், அடுத்த, 20 ஆண்டுகளில், மேலும், 20 அணு உலைகள் அமைப்பது தொடர்பாகவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி, இரண்டு நாள் பயணமாக, ரஷ்யா சென்றுள்ளார். ரஷ்யாவின் கிழக்கு பகுதிக்கு பயணம் மேற்கொள்ளும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை, மோடி பெற்றுள்ளார். 
  • விளாதிவோஸ்டாக்கில் நடந்த, இந்தியா - ரஷ்யா இடையேயான, 20வது ஆண்டு மாநாட்டில் அவர் பங்கேற்றார். 
  • 'நாஜிக்களுக்கு எதிராக நடந்த, 'கிரேட் பேட்ரியாடிக்' போர் வெற்றியின், 75வது ஆண்டு விழாவை, அடுத்த ஆண்டு, மே மாதத்தில் கொண்டாட உள்ளோம்; அதில் பங்கேற்க வேண்டும்' என, மோடிக்கு, புடின் அழைப்பு விடுத்தார். 
தேசிய நல்லாசிரியராக சசிகுமார் தேர்வு
  • தேசிய நல்லாசிரியர் விருதுக்கு, கூனிச்சம்பட்டு அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர் சசிகுமார் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
விசா இல்லாத புனிதப் பயணம் - இந்தியா, பாகிஸ்தான் இடையே புரிந்துணர்வு
  • சீக்கிய மத ஸ்தாபகர் குருநானக்கின் நினைவிடம் அமைந்துள்ள கர்தார்பூர் காரிடாருக்கு விசா இல்லாமல் சீக்கிய யாத்ரிகர்கள் சென்றுவரும் வகையில் இந்தியா - பாகிஸ்தான் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஏற்பட்டுள்ளது.
  • இருதரப்பிலும் நிகழும் சில குறிப்பிட்ட வேறுபாடுகளின் காரணமாக ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை. பாகிஸ்தான் தரப்பில் யாத்ரிகர்களை உள்ளே அனுமதிப்பதற்கு சேவை கட்டணம் செலுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.
  • ஆனால், பாகிஸ்தானின் இந்த நிபந்தனையானது, யாத்ரிகர்களின் இலகுவான மற்றும் எளிதான அணுகலுக்கு இடையூறாக இருக்கும் என்று இந்தியா கூறப்படுகிறது.
மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி 5% உயர்வு
  • மலேசியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு சுங்கவரி 5% உயர்த்தப்பட்டுள்ளது. 
  • 180 நாட்களுக்கு சுங்கவரி உயர்த்தி வசூலிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.



மசோதாவை திரும்ப பெறுவதாக ஹாங்காங் அரசு அறிவிப்பு
  • குற்றவாளிகளை நாடு கடத்தும் மசோதாவை திரும்பப் பெறுவதாக சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள ஹாங்காங்கின் பெண் தலைமை செயல் அதிகாரி கேரி லேம் அறிவித்துள்ளார்.
பாக்., பயிற்சியாளர் மிஸ்பா
  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மற்றும் தேர்வுக்குழு தலைவராக முன்னாள் கேப்டன் மிஸ்பா நியமிக்கப்பட்டுள்ளார்.
  • இதனையடுத்து புதிய பவுலிங் பயிற்சியாளராக முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்துவீச்சாளர் வக்கார் யூனிஸ் 3 ஆண்டுகளுக்கு நியமிக்கப்பட்டார்.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி: பதக்கப் பட்டியலில் இந்தியா முதலிடம்
  • உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் சாம்பியன்ஷிப்போட்டி பிரேசிலின் ரியோடி ஜெனீரோ நகரில் நடந்து வந்தது. 
  • இதில் கடைசி நாளான நேற்று முன்தினம் நடந்த கலப்பு 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவின் மானு பாகெர்- சவுரப் சவுத்ரி ஜோடி சக நாட்டவர்களான யாஷ்அஸ்வினி சிங் – அபிஷேக் வர்மா இணையை 17-15 என்ற புள்ளி கணக்கில் வீழ்த்தி தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது. 
  • தோல்வி அடைந்த யாஷ்அஸ்வினி- அபிஷேக் வர்மா ஜோடி வெள்ளிப்பதக்கம் பெற்றது. இந்த போட்டியில் புள்ளி பட்டியலில் இந்தியா 5 தங்கம், 2 வெள்ளி, 2 வெண்கலம் என்று 9 பதக்கங்களுடன் முதலிடத்தை பிடித்து வியக்க வைத்துள்ளது. 
  • மற்ற நாடுகள் ஒரு தங்கப்பதக்கத்துக்கு மேல் வெல்லவில்லை. சீனா ஒரு தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலம் என்று 7 பதக்கங்களுடன் 2-வது இடத்தை பிடித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel