ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு
- ஸ்ரீவில்லிபுத்தூரில் கடந்த 79 ஆண்டுகளாக தயாரிக்கப்பட்டுவரும் பால்கோவாவுக்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கப்பட்டது.
- மத்திய அரசின் புவிசார் குறியீட்டுத் துறை சார்பில் இதுவரை காஞ்சிபுரம் பட்டு, மதுரை மல்லி, கொடைக்கானல் மலைப்பூண்டு, பழனி பஞ்சாமிர்தம், காரைக்குடி கண்டாங்கி சேலை, திண்டுக்கல் பூட்டு ஆகியவற்றுக்கு அண்மையில் புவிசார் குறியீடு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு மத்திய அரசு விருது
- ஸ்வச் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் சிறந்த தூய்மை பராமரிப்பிற்கான இடங்களுக்கு (Best maintained iconic place) கடந்த வாரத்தில் ஜல் சக்தி அமைச்சகம் விருதுகளை வழங்கியது.
- அதில், தூய்மை பராமரிப்புகளுக்கான இரண்டாவது இடமாக மீனாட்சியம்மன் கோயில் தேர்வு செய்யப்பட்டு, மாநகராட்சிக்கு விருது வழங்கப்பட்டுள்ளது.
- ஜம்மு- காஷ்மீரில் உள்ள வைஷ்னோ தேவி கோயில் சிறந்த தூய்மை பராமரிப்பு சின்னத்திற்கான முதலிடத்தைப் பிடித்துள்ளது.
திருவொற்றியூரில் ரூ.200 கோடி செலவில் ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகம்
- ஆழ்கடல் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் சென்னை திருவொற்றியூரில் ரூ. 200 கோடியில் அமைய உள்ள ஆழ்கடல் மீன்பிடித் துறைமுகத்துக்கு மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் அடிக்கல் நாட்டினார்.
- கடல் பகுதியில் சுமார் 75 ஏக்கர் பரப்பளவிலும், நிலப்பகுதியில் சுமார் 40 ஏக்கர் பரப்பளவிலும் இத்துறைமுகம் அமைய உள்ளது. ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ள தூண்டில் வளைவுகளையொட்டி வடபுறம் 852 மீட்டர் நீளமும், தென்புறம் 1,088 மீட்டர் நீளமும் கொண்ட அலைத் தடுப்புச் சுவர்கள் அமைக்கப்பட உள்ளன. படகுத் துறையின் நீளம் சுமார் 300 மீட்டர் நீளத்திற்கு படகுத்துறை அமைக்கப்பட உள்ளது.
18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத்தூண், கல்வெட்டு கண்டெடுப்பு
- சிவகங்கை அருகே 18-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமிழி மடைத் தூண் மற்றும் கல்வெட்டினை தொல்லியல் ஆய்வாளர்கள் கண்டெடுத்துள்ளனர்.
- மேலும் இத்தூண்களின் உள்பகுதிகளில் எழுத்து பொறிக்கப்பட்டுள்ளது.
- பொதுவாக தற்போது கண்மாய்களில் காணப்படும் மடைகள் கரையோரங்களில் காணப்படுகின்றன. ஆனால் கோவானூரில் உள்ள குமிழி மடையானது கண்மாயின் பள்ளமான நடுப்பகுதியில் காணப்படுகிறது. மேலும் சுண்ணாம்பு செங்கல் காரைக்கட்டு அரை வட்ட வடிவில் மடைத் தூணிலிருந்து கரையை நோக்கி செல்கிறது.
- மடைத் தூண் 9 அல்லது 10 அடி உயரமாக உள்ளது. இரண்டு தூண்களுக்கும் இடையே இருந்த படுக்கைக் கற்கள் சிதிலமடைந்து காணப்படுகின்றன. பொதுவாக மடைத் தூணின் மேற்பகுதி அரை வட்ட வடிவில் காணப்படும். இங்கு தூணின் வெளிப்புறத்தில் முகம் போன்ற அழகிய வடிவமைப்பு இரண்டு தூண்களிலும் காணப்படுகின்றன.
- கிழக்குப் பகுதியில் உள்ள தூணின் உள் பகுதியில் எழுத்துக்கள் காணப்படுகின்றன. இதில் 1708 விரோதி ஆண்டு வைகாசி மாதம் 12-ஆம் தேதி இரகுனாத முத்து வீரத் தேவராகிய, திருப்புவன இறைவனின் பெயர் கொண்ட பூவணனாத தேவர் கட்டி வைத்த இரகுனாத பழ வணம் மடை எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
- மேலும் காளிசுரம் பிள்ளை மணியாச்சியில் நடப்பட்ட மடைத்தூண் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பரியேறும் பெருமாளுக்கு புதுச்சேரி அரசு விருது
- புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் இந்திய திரைப்பட விழாவை நடத்துகிறது. இந்த விழாவில் தமிழில் கடந்த ஆண்டு வெளியான 'பரியேறும் பெருமாள்' சிறந்த படமாக விருதுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
துப்புரவுத் தொழிலாளர்களோடு சேர்ந்து பிளாஸ்டிக்கைப் பிரித்தெடுத்த பிரதமர்
- உத்தரப் பிரதேச மாநிலத்தின் மதுராவில், 'தூய்மையே சேவை' (Swachhta Hi Sev) என்ற பெயரில் செய்யப்படும் தூய்மைத் திட்டத்திற்காக ஒரு கூட்டம் நடந்தது.
- இந்தத் திட்டத்தில் வேலை செய்துகொண்டிருக்கும் பெண் துப்புரவுத் தொழிலாளர்கள் இருபத்தைந்து பேர் முகமூடி, கையுறை போன்றவற்றோடு குப்பைகளையும் எடுத்துக்கொண்டு வந்து, அந்தக் கூட்டத்தில் பங்கேற்ற பிரதமரைச் சந்தித்தனர்.
கால்நடைகளுக்கான நோய் தடுக்கும் திட்டத்தை தொடங்கி வைத்தார் மோடி
- இதன் தொடக்க விழாவை உத்தரப்பிரதேச மாநிலம் மதுராவில் தேசிய அளவிலான கால்நடைகள் நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தர்.
- கோமாரி மற்றும் புரூசெல்லா நோய்களில் இருந்து கால்நடைகளைக் காக்கும் பொருட்டு தேசிய அளவிலான நோய் கட்டுப்பாட்டு திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது.
- கால்நடைகள், எருமை, செம்மறி ஆடு, ஆடு, பன்றிகள் உள்ளிட்ட 500 மில்லியனுக்கும் அதிகமான கால்நடைகளுக்கு நோய்க்கு எதிராக தடுப்பூசி போடுவதை இந்த திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
- இது ரூ .12,652 கோடி செலவில் 2024 வரை ஐந்தாண்டு காலத்திற்கு செயல்படுத்தப்படும். இந்த நிகழ்ச்சியில் பசுக்கள், எருமைகள், ஆடுகள் உட்பட 1,750 விலங்குகள் இடம் பெற்றுள்ளது.
காஷ்மீர் ஆப்பிள் - நேரடியாக மத்திய அரசே கொள்முதல்
- காஷ்மீரில் 370 சிறப்புப் பிரிவை ரத்து செய்ததை அடுத்து காஷ்மீர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக ஆப்பிள்களை மத்திய அரசே கொள்முதல் செய்யும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- இதனால் காஷ்மீர் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக மத்திய அரசே ஆப்பிள்களைக் கொள்முதல் செய்யும் என மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
- ஏ, பி மற்றும் சி என அனைத்து வகையான ஆப்பிள்களும் வாங்கப்பட்டு அதற்குரிய பணம் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு அனுப்பப்படும்' எனத் தெரிவிக்கப்பட்ர்ருள்ளது.
பிரதமர் மோடியின் முதன்மை ஆலோசகர் மற்றும் முதன்மை செயலாளர் நியமனம்
- மத்திய அமைச்சரவையின் பணிநியமனக் குழு பி.கே.சின்ஹாவை மோடியின், முதன்மை ஆலோசகராக, சிறப்பு பணி அதிகாரியாக பிரதமரின் அலுவலகத்தில் நியமித்து உத்தரவிட்டு உள்ளது. இவர் இன்றுமுதல் பணியில் சேர ஆணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது.
- அதுபோல, டாக்டர் பி.கே.மிஸ்ராவை கூடுதல் முதன்மை செயலாளராகவும் மத்திய கேபினட் நியமன குழுவினர் நியமித்து உள்ளனர். அவரும் இன்றுமுதல் இந்த பணியை ஏற்க உத்தரவிடப் பட்டு உள்ளது.
காஷ்மீர் மாநிலத்தை பிரிக்க மூவர் குழுவை அமைத்த மத்திய அரசு
- மத்திய உள்துறை அமைச்சகம் காஷ்மீர் மாநிலத்தைப் பிரிக்க மூவர் குழு ஒன்றை அமைத்துள்ளது. அந்தக் குழுவில் முன்னாள் ராணுவ செயலர் சஞ்சய் மித்ரா தலைவராகவும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி அருண் கோயல் மற்றும் முன்னாள் ஐசிஎஸ் அதிகாரி கிரிராஜ் பிரசாத் குப்தா ஆகியோர் உறுப்பினர்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
- இந்த மூவர் குழு நிலம் மற்றும் இரு யூனியன் பிரதேசங்களுக்கான எல்லை வரைமுறை குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளது. உடனடியாக இந்தப் பணிகள் தொடங்கப்படும் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- அடுத்த மாத இறுதிக்குள் இப்பனிகள் முடிவடைந்து இரு யூனியன் பிரதேசங்கள் உருவாக்கப்பட உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தியா - நேபாளம் இடையே பைப் மூலம் பெட்ரோல் அனுப்பும் திட்டம்
- இந்தியாவில் பீகாரில் உள்ள மோதிஹாரி - நேபாளத்தின் அம்லேகஞ்ச் நகர் இடையிலான பைப் மூலம் பெட்ரோல் விநியோக திட்டத்தை வீடியோ கான்பரன்ஸ் முறையில் பிரதமர் மோடி , டில்லியில் இருந்தவாறு துவக்கி வைத்தார்.
- பிரதமர் மோடி பேசுகையில், குறிப்பிட்ட காலத்திற்குள் எல்லை தாண்டிய பெட்ரோலியம் பைப் திட்டத்தை நிறைவேற்றியது மகிழ்ச்சி. குறிப்பிட்ட காலத்திற்கு முன்னதாகவே, இந்த திட்டம் நிறைவு பெற்றுள்ளது.
- இதற்கான பெருமை, நேபாளத்தின் பிரதமருக்கும், நேபாள அரசுக்கும் சேரும். 2015ல் நேபாளத்தில் ஏற்பட்ட பெரிய பூகம்பத்திற்கு பின்னர், அந்நாட்டு அரசு மீட்பு பணிகளை துவக்கியது.
- இதற்கு, அண்டை நாடு மற்றும் நெருங்கிய நட்பு நாடு என்ற அடிப்படையில், இந்தியா உதவி செய்தது. நமது கூட்டு முயற்சியால், நேபாளத்தின் கூர்கா மற்றும் நுவால்கோட் பகுதியில் வீடுகள் கட்டப்பட்டுள்ளன.
இந்திய கடற்படையில் இணைய உள்ள நவீன நீர்மூழ்கி கப்பலான INS காந்தேரி
- இந்தியாவில் கட்டப்பட்ட கல்வாரி வகுப்பின் இரண்டாவது வகை நீர்மூழ்கிக் கப்பல் ஐ.என்.எஸ்.கந்தேரி (INS KHANDERI) கடற்படையில் சேர்க்கப்பட உள்ளது.
- இந்த நீர்மூழ்கி போர்க்கப்பல் அனைத்து விதமான சூழலிலும், வெப்பமான காலங்களிலும் இயங்கும் தன்மை கொண்டது.
- இதுபோன்ற மொத்தம் 7 போர் கப்பல்கள் தயாரிக்கப்படும். அவற்றில் நான்கு மும்பை மசாகான் கப்பல் கட்டும் தளத்திலும், மற்ற மூன்று கொல்கத்தாவில் உள்ள ஜி.ஆர்.இ.சி.கப்பல் கட்டும் தளத்திலும் தயாரிக்கப்பட உள்ளது.
- இந்த நீர்மூழ்கி கப்பல் பிரான்சின் ஒத்துழைப்புடன் தயாரிக்கப்பட்டு வருகிறது, இது உலகின் மிகச்சிறந்த நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
- அவை கடலுக்கு அடியில் மணிக்கு 37 கிலோமீட்டர் (20 கடல் மைல்) வேகத்திலும், மேற்பரப்பில் 20 கிலோமீட்டர் (11 கடல் மைல்) வேகத்திலும் இயக்க முடியும்.
டாங்கிகளை தாக்கி அழிக்கும் ஏவுகணை சோதனை வெற்றி
- போரின் போதும் எதிரி நாட்டுடனான சண்டையின் போதும் ராணுவ டாங்கிகளை தகர்ப்பதற்காக மேன் போர்ட்டபிள் ஆன்டி டேங்க் ஏவுகணைகளை பயன்படுத்தப்படுவது வழக்கம். இதை வைத்து நாம் சரியாக குறி வைத்து தாக்க வேண்டும்.
- டிஆர்டிஓ மூலம் இது உருவாக்கப்பட்டு வருகிறது. இதற்கு ''மேன் போர்ட்டபிள் ஆன்டி டேங்க் கைடட்'' ஏவுகணைகள் என்று பெயர். இது தானாக தாக்க வேண்டிய புள்ளிகளை குறி வைத்து எங்கிருந்து தாக்கினாலும் துல்லியமாக தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்டது.
- இதை சுருக்கமாக MPATGM என்று அழைப்பார்கள். இது 2.5 கிமீ தூரம் வரை சென்று தாக்கி அழிக்க கூடிய சக்தி கொண்டது ஆகும். இதன் இரண்டு தலைமுறை ஏவுகணைகள் ஏற்கனவே சோதனை செய்யப்பட்டுவிட்டது.