Type Here to Get Search Results !

9th SEPTEMBER 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடி அகழாய்வில் வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வில் 2,500 ஆண்டுகளுக்கு முந்தைய வட்ட வடிவிலான தொழில்கூடச் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • இந்த சுவரின் மூலம் இப்பகுதியில் ஏதோவொரு தொழில் நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேலும், இந்த சுவர் நீண்டுகொண்டே செல்கிறது. 
  • தொடர்ந்து இந்த சுவரை ஒட்டி குழிகள் தோண்டப்பட்டால், இதன் நீளம் மற்றும் அது எங்கு முடிவடைகிறது என்பது தெரியவரும் என அதிகாரிகள்
கடலூர் அருகே 16-ஆம் நூற்றாண்டு பிடாரியம்மன் சிலை கண்டெடுப்பு
  • கடலூர் அருகே 16-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரியம்மன் சிலை திங்கள்கிழமை கண்டெடுக்கப்பட்டது.
  • கண்டெடுக்கப்பட்ட சிலையானது 16 அல்லது 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிடாரியம்மன் சிலை என்று தெரியவந்துள்ளது. சிலையின் பீடம், இடுப்புப் பகுதி மற்றும் தலைப்பகுதி ஆகியவை 3 துண்டுகளாக இருந்தன. 
துபையில் ரூ.3,750 கோடிக்கு 6 ஒப்பந்தங்கள் கையெழுத்து
  • முதல்வர் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், ரூ.3,750 கோடி முதலீட்டில் தமிழகத்தில் தொழில் தொடங்கிட ஆறு தொழில் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டன. இதன் மூலம் 10 ஆயிரத்து 800-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.
அஞ்சல் வங்கிக் கணக்கு: தேசிய அளவில் தமிழக வட்டம் முதலிடம்
  • இந்தியா போஸ்ட் பேமென்ட் வங்கியை (ஐபிபிபி) மத்திய அரசு கடந்த ஆண்டு செப்டம்பர் 1-ஆம் தேதி தொடங்கியது. இதன் முதலாம் ஆண்டு விழா தில்லி விஞ்ஞான் பவனில் திங்கள்கிழமை நடைபெற்றது.
  • கடந்த ஓராண்டில் இந்த அஞ்சல் வங்கி மூலம் ஒரு கோடி கணக்குகள் தொடங்கப்பட்டன. இதில் சிறப்பாகச் செயல்பட்ட மாநில வட்டங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
  • இந்நிகழ்வில், அதிக எண்ணிக்கையில் அஞ்சல் வங்கிக் கணக்குகளைத் தொடங்கியதற்காக தமிழக அஞ்சல் வட்டத்திற்கு மத்திய அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் விருது வழங்கினார். 



71 லட்சம் மரக்கன்றுகள்: தமிழக அரசு ரூ.198 கோடி நிதி ஒதுக்கீடு
  • ஒவ்வொரு ஆண்டும் மரக்கன்றுகள் நடும் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. கடந்த 2018-19-ஆம் நிதியாண்டில் 70 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டம் செயலாக்கத்துக்கு எடுக்கப்பட்டது. அதில், 63 லட்சம் மரக்கன்றுகள் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாகவும், ஏழு லட்சம் மரக்கன்றுகள் வனத்துறை வழியாகவும் செயல்படுத்தப்பட்டன.
  • இந்நிலையில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை உயரதிகாரிகளுடனான கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், நிகழ் நிதியாண்டில் 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவது என முடிவு செய்யப்பட்டது. 
  • அந்த 71 லட்சத்தில் 64 லட்சம் மரக்கன்றுகளை ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் மூலமாக நடவும், வனத்துறை வழியாக 7 லட்சம் கன்றுகளை நடவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 
  • இந்தத் திட்டத்தினை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலமாகச் செயல்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும், வனத்துறை மூலமாக நடப்படவுள்ள 7 லட்சம் மரக்கன்றுகளுக்கான செலவினத் தொகையும் உயர்த்தப்பட்டுள்ளது.
  • நிகழாண்டில் மொத்தமாக 71 லட்சம் மரக்கன்றுகளை நடுவதற்காக ரூ.198.57 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில், கூலிக்கான செலவினத் தொகை மட்டுமே ரூ.193.60 கோடியும், கருவிகளுக்கான வாடகை உள்ளிட்ட செலவினங்களுக்காக ரூ.4.97 கோடியும் செலவிடப்படும்.
ரயில்வே வாரியம் துறைத் தேர்வுகள் மாநில மொழிகளில் எழுதலாம்
  • ரயில்வேயில் துறை சார்ந்த போட்டித் தேர்வுகளை மாநில மொழிகளில் எழுதலாம் என்று ரயில்வே வாரியம் தெளிவு படுத்தியுள்ளது.
  • ரயில்வேயில் அனைத்து துறைகளைச் சேர்ந்தவர்களும் அவர்கள் பணியாற்றுகின்ற பதவிகளுக்கான தர ஊதியத்தை விட கூடுதலான தர ஊதியமுள்ள பணிகளுக்கு துறை ரீதியான தேர்வு எழுதி பதவி உயர்வு பெறுவதுதான் துறை சார்ந்த பொதுப் போட்டி என்று அழைக்கப்படுகிறது.
ஐ.எம்.எப். புதிய தலைவர் நியமனம்
  • சர்வதேச நிதியமான ஐ.எம்.எப்., தலைவராக கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன் தலைவராக இருந்த கிறிஸ்டினா லகார்டே ஒய்வு பெற்றதையடுத்து , புதிய தலைவரை தேர்வு செய்வதற்கான வாரியக்கூட்டம் நடந்தது. 
  • இதில் பல்கேரியா நாட்டைச் சேர்ந்த கிறிஸ்டாலினா ஜியார்ஜிவா தேர்வு செயப்பட்டார். இதற்கு முன் இவர் உலக வங்கியின் தலைமை நிர்வாகியாக இருந்தார். இதன் மூலம் சர்வதேச நிதியகத்திற்கு மீண்டும் பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.



பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை
  • விதிகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து பாரா ஒலிம்பிக் கமிட்டிக்கு மத்திய விளையாட்டு அமைச்சகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. 
  • இந்திய விளையாட்டு விதிமுறைகளை மீறியதாக எழுந்த புகாரை அடுத்து இந்திய பாரா ஒலிம்பிக் சங்கம் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தென்ஆப்பிரிக்கா அணியின் பேட்டிங் பயிற்சியாளராக அமோல் முஜும்தார் நியமனம்
  • இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான டி20 கிரிக்கெட் தொடர் வருகிற 15-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. அதன்பின் மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் அடுத்த மாதம் 2-ந்தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. 
  • இந்த முறை சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும் என தீர்மானித்துள்ளது. இதற்காக இந்திய உள்ளூர் கிரிக்கெட் வீரரான அமோல் முஜும்தாரை பேட்டிங் பயிற்சியாளராக நியமித்துள்ளது. 
  • அமோல் முஜும்தார் 171 முதல்தர போட்டிகளில் விளையாடி 30 சதங்கள், 60 அரைசதங்களுடன் 11167 ரன்கள் குவித்துள்ளார். சராசரி 48.13 ஆகும். 113 'லிஸ்ட் ஏ' போட்டிகளில் 3286 ரன்கள் சேர்த்துள்ளார்.
வங்கதேசத்தை 224 ரன்கள் வித்தியாசத்தில் பந்தாடியது ஆப்கானிஸ்தான்
  • வங்கதேசத்துக்கு எதிராக நடைபெற்ற ஓரே டெஸ்ட் ஆட்டத்தில் 224 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது ஆப்கானிஸ்தான். இது அந்த அணியின் 3 ஆட்டங்களில் கிடைத்த 2-ஆவது வெற்றியாகும்.
  • 2 இன்னிங்ஸ்களிலும் அபாரமாக பந்து வீசி 11 விக்கெட்டுகளை வீழ்த்தியும், அரைசதம் அடித்த ரஷீத் கான் ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.
  • டெஸ்ட் ஆட்டங்களில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கன் வீரர் முகமது நபிக்கு மைதானத்தில் சக வீரர்கள் பிரியாவிடை அளித்தனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel