Type Here to Get Search Results !

28th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேலைக்கு புவிசார் குறியீடு
  • திண்டுக்கல் பூட்டு, காரைக்குடி கண்டாங்கி சேவை உள்ளிட்ட 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.
  • கைவினை பொருட்கள் மற்றும் கலைஞர்களை காக்கும் பொருட்டு இந்திய அரசு 1999 ம் ஆண்டு பல வகையான பொருட்களுக்கு புவிசார் குறியீடு மற்றும் பாதுகாப்பு சட்டத்தை கொண்டு வந்தது. இதன்படி புவிசார் குறியீடு வழங்கப்பட்ட பொருட்களை மற்ற பகுதியினர் விற்பனை செய்வதும், போலிகளும் தடுக்கப்படுகிறது.
  • புகழ்பெற்ற திண்டுக்கல் பூட்டு 150 ஆண்டுகளுக்கு முன் சங்கரலிங்காச்சாரி சகோதரர்களால் தயாரிப்பு துவங்கப்பட்டது. 
  • பல்வேறு வடிவங்களில் தனித்தன்மையுடன் தயாரிக்கப்பட்டு வரும் திண்டுக்கல் பூட்டு பிரசித்தி பெற்றதாக விளங்குகிறது. 2013 ம் ஆண்டு பூட்டு தொழிலாளர்கள் சங்கத்தால் விண்ணப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. 
  • ராஜீவ்காந்தி கைத்தறி நெசவாளர் கூட்டுறவ சங்கமும் 2013 ம் ஆண்டு புவிசார் குறியீட்டிற்காக விண்ணப்பித்திருந்தது.
  • சமீபத்தில் கொடைக்கானல் மலைப்பூண்டு, திண்டுக்கல் பஞ்சாமிர்தம், ஈரோடு மஞ்சள் ஆகியவற்றிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்ட நிலையில், தற்போது மேலும் 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
  • இதன்படி, சேலம் மாம்பழம், ஓசூர் ரோஜா, ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா, திண்டுக்கல் பூட்டு, ராஜபாளையம் நாய், காரைக்குடி கண்டாங்கி சேலை, கோடாலிகருப்பூர் சேவை ஆகிய 7 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பதிவு கிடைத்துள்ளது.
சீலநாயக்கனூரில் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுப்பு
  • தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே சீலநாயக்கனூரில் சுமார் 4,000 ஆண்டுகளுக்கு முந்தைய பாறைக் கீறல் ஓவியங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்த ஆய்வில், அங்கு வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த அரியவகை தொல்லியல் சின்னங்களான இரண்டு பாறைக் கீறல் ஓவியங்கள் இருப்பதைக் கண்டறிந்தனர். 
  • இவை புதிய கற்காலத்தைச் சேர்ந்த பண்பாட்டுச் சின்னங்கள் ஆகும். இக் கீறல் ஓவியங்களில் ஒன்று குண்டுப் பாறையிலும் மற்றொன்று சமதளமாக உள்ள பாறையின் உயரமான முகப்பிலும் கீறப்பட்டுள்ளன. 
  • இரண்டிலும் மாட்டின் உருவம் திமிலுடன் சற்று விரிந்து, நீண்ட கொம்புகளுடன் செதுக்கப்பட்டுள்ளன. இவற்றின் அழகிய வடிவமைப்பும், நேர்த்தியும் போற்றத்தக்க வகையில் உள்ளன. தமிழகத்தில் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தைச் சார்ந்த பாறைக் கீறல் ஓவியங்கள் கிடைத்துள்ளன.
கீழடியில் சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிப்பு
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெற்று வரும் 5-ஆம் கட்ட அகழாய்வு பணியில் சுடு மண்ணால் செய்யப்பட்ட குழாய் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
  • ஏற்கெனவே தண்ணீர் தொட்டி , தண்ணீர் செல்வதற்கான வடிகால் கண்டுபிடிப்பை தொடர்ந்து சுடுமண்ணால் செய்யப்பட்ட குழாய் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 
  • இதன் மூலம் இங்கு வாழ்ந்த மக்கள் தங்கள் புழக்கத்துக்கு தேவையான நீரினை ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கடத்துவதற்கு இதுபோன்ற வடிகால் மற்றும் குழாய்களை பயன்படுத்தி இருக்கலாம் என தொல்லியல் துறை அலுவலர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.



செஞ்சி அருகே பாண்டியர் கால கல்வெட்டுகள்
  • செஞ்சி அருகே கோயில் பகுதியில் பாண்டியர் கால கல்வெட்டுகள் கண்டறியப்பட்டுள்ளன. இதன் மூலம், பழங்காலத்தில் அங்கு அகதிகள் முகாம் இருந்தது தெரிய வந்துள்ளது. 
  • கோயில் பகுதியில் கண்டறியப்பட்ட இரு கல்வெட்டுகள் ஜடாவர்ம சுந்தரபாண்டியன் ஆட்சிக் காலமான கி.பி.1312-இல் பொறிக்கப்பட்டவை. 
  • கோயிலில் கண்டறியப்பட்ட முதல் கல்வெட்டில் இந்த ஊர் ஜெயங்கொண்ட சோழமண்டலத்து சிங்கப்புர நாட்டு செவ்வலப்புரையூர் என்று அழைக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 
  • மேலும், இந்தப் பகுதியில் சோழர் ஆட்சிக்குப் பிறகு, பாண்டியர் ஆட்சி ஏற்பட்டதையும், இந்தக் கோயில் அகத்தீசுரமுடைய நாயனார் என்று அழைக்கப்பட்டதையும், கோயிலுக்கு நிலங்களை தானமாக வழங்கியதையும் கல்வெட்டு மூலம் அறிய முடிகிறது.
ஃபிட் இந்தியா இயக்கத்தை தொடக்கி வைக்கிறார் பிரதமர் மோடி
  • பிரதமர் நரேந்திர மோடி இன்று 'ஃபிட் இந்தியா இயக்கத்தை துவக்கி வைக்கிறார். இதில் கல்லுாரி மாணவர்கள் உறுதிமொழி எடுக்க, வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. 
  • மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு மத்திய அரசின் சார்பில், துாய்மை இந்தியா, யோகா தினம், டிஜிட்டல் இந்தியா, ஸ்கில் இந்தியா என, பல்வேறு திட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த வரிசையில், ''ஃபிட் இந்தியா'' என்ற திட்டத்தை, பிரதமர் மோடி இன்று தொடக்கி வைக்கிறார்.
  • ஒவ்வொருவரும் உடல் திறனை வளர்த்து கொள்ளவும், உடல் உறுதியை பேணும் வகையிலும், உடற்பயிற்சி மற்றும் உணவு கட்டுப்பாடு போன்றவற்றை பின்பற்ற வேண்டி , இந்த திட்டம் துவங்கப்படுகிறது. டில்லியில், இன்று நடக்கும் விழாவில், பிரதமர் மோடி, திட்டத்தை தொடக்கி வைக்கிறார்.
75 புதிய மருத்துவக் கல்லூரிகள் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • நாடு முழுவதும், புதிதாக, 75 மருத்துவக் கல்லூரிகளை, 2021 - 22க்குள் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், எம்.பி.பி.எஸ்., படிப்பில், கூடுதலாக 15,700 இடங்கள் கிடைக்க உள்ளது.
காம்பியாவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பயணம்
  • மேற்கு ஆப்பிரிக்க நாடான காம்பியாவுக்கு, ஜனாதிபதி, ராம்நாத் கோவிந்த் சமீபத்தில் பயணம் மேற்கொண்டார். 
  • அப்போது நமது பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்டவை தொடர்பாக ஒப்பந்தம் செய்யப்பட்டன. அதற்கு, அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.



பல்கலைக்கழகங்களில் டாக்டர் ராதாகிருஷ்ணன் இருக்கை: யுஜிசி தகவல்
  • நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்களில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கையை அமைப்பதற்கான நடவடிக்கையில் மாநிலங்களவை ஈடுபட்டுள்ளதாக பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) தெரிவித்தது.
  • இத்திட்டமானது மாநிலங்களவை ஆராய்ச்சிக் கல்வித் திட்டம் (ஆர்எஸ்ஆர்எஸ்) எனும் பெயரில் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்தில் டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் இருக்கை, மாநிலங்களவை பயிற்சி நிதி ஆதரவுத் திட்டம், மாநிலங்களவை மாணவர்கள் பங்கேற்பு பயிற்சித் திட்டம் ஆகியவை இடம் பெற்றுள்ளன.
நாடு முழுவதும் 15 லட்சம் பள்ளிகளை இணைக்கும் 'ஷாகுன்'
  • நாடு முழுவதும் உள்ள 15 லட்சம் பள்ளிகளை இணையம் மூலம் இணைக்கும் 'ஷாகுன்' இணைய தளத்தை மனிதவள மேம்பாட்டு அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் நிஷாங் துவக்கி வைத்தார். 
  • இந்த போர்டல் மூலம் 2.3 லட்சம் கல்வி இணையதளங்கள் ஒருங்கிணைக்கப்படும். மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தேசிய கல்வி கருவூலம் அமைக்கப் பட்டு, நாட்டில் உள்ள மாணவர்கள், ஆசிரியர்கள், பள்ளிகளின் தகவல்கள் பார்வைக்கு வைக்கப்படும்என்றார்.
  • மனிதவள மேம்பாட்டு அதிகாரி, கேந்திரியா வித்யாலா, நவோதயா வித்யாலயா, சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் இணையதளங்கள், தேசிய ஆசிரியர் கல்வி கவுன்சிலுடன் இணைக்கப்பட்ட மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி கவுன்சில்களும் ஒருங்கிணைக்கப்படுகிறது, என்றார்.
நிலக்கரி துறையில் 100% அன்னிய நேரடி முதலீடுக்கு அனுமதி
  • நிலக்கரி சுரங்க மற்றும் அதனுடன் தொடர்புடைய உள்கட்டமைப்பு துறையில், தானியங்கி வழியில், 100 சதவீத அன்னிய நேரடி முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது என்று, அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார்.
  • 'டிஜிட்டல் மீடியா' எனப்படும் மின்னணு செய்தி துறையில், 26 சதவீத அன்னிய முதலீட்டுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இஸ்ரேலிடம் இருந்து நவீன ரக ஷெல் குண்டுகளை வாங்க இந்தியா ஒப்பந்தம்
  • இஸ்ரேலிடம் இருந்து நவீன ரக ஷெல் குண்டுகளை வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது. 
  • ஸ்பைஸ் 2000 ரக ஷெல் குண்டுகளை ரூ.300 கோடி செலவில் இஸ்ரேலிடம் இருந்து இந்தியா வாங்குகிறது.
உலகின் 100 சிறந்த இடங்களின் பட்டியலில் படேலின் சிலை, சோஹோ ஹவுஸ்
  • குஜராத்தின் 597 அடி உயரமுள்ள படேலின் ஒன்றுமை சிலை மற்றும் மும்பையின் சோஹோ ஹவுஸ் டைம் இதழ் வெளியிட்டுள்ள உலகின் மிகச்சிறந்த 100 இடங்கள் 2019 இன் இரண்டாவது பட்டியலில் இடம் பெற்றுள்ளது. 



இந்தியாவின் முதல் பெண் விமானப்படை தளபதி ஆன ஷாலிஜா தாமி
  • ஹிண்டன் விமான தளம் இந்திய விமானப்படையில் கீழ் அமைந்துள்ளது. இது ஆசியாவின் மிகப்பெரிய விமானப்படை தளம் ஆகும். 
  • இந்த தளத்தின் சேதக் ஹெலிகாப்டர் பிரிவு பயணம், விபத்தில் உள்ளோரை மீட்பது, அவசர மருத்துவச் சேவை உள்ளிட பணிகளைச் செய்து வருகிறது.
  • இந்த பிரிவில் விங் கமாண்டராக ஷாலிஜா தாமி பணி புரிந்து வந்தார். தற்போது ஷாலிஜா தாமி முதலாம் விமானப்படை தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இந்த பதவியில் நியமிக்கப்படும் முதல் பெண் அதிகாரி என்னும் பெருமையை இவர் பெறுகிறார். இந்த பதவி இந்த பகுதியின் உயர் அதிகாரிகள் பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத் ஒப்புதல்
  • பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க இரண்டாம் எலிசபெத் ராணியிடம் அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் ஒப்புதல் கேட்டு இருந்த நிலையில் அக்டோபர் 14-ஆம் தேதி வரை பிரிட்டன் நாடாளுமன்றத்தை முடக்க ராணி எலிசபெத்தின் ஒப்புதல் அளித்து உள்ளார்
  • 'செப்டம்பர் 9 முதல் செப்டம்பர் 12 வரையிலும் மற்றும் அதைத் தொடர்ந்து அக்டோபர் 14-ஆம் தேதி வரையிலும் பிரிட்டன் நாடாளுமன்றம் முடக்கப்படுவது அறிவித்துள்ளார். 
  • இந்த நிலையில் ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறுவது உறுதி என பிரதமர் போரிஸ் ஜான்சன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி: தமிழக வீராங்கனைக்கு தங்கம்
  • பிரேசில் நாட்டில் இன்று நடைபெற்ற துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் 10 மீட்டர் ஏர் ரைபிள் பிரிவில் 251.7 புள்ளிகள் எடுத்து இளவேனில் வளரிவான் சாதனை புரிந்துள்ளார்
  • ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்றவர் தான் இந்த இளவேனில் வளரிவன் என்பது குறிப்பிடத்தக்கது. 
  • 20 வயதான இளவேனில் வளரிவான் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வெல்லும் மூன்றாவது வீராங்கனை என்பது குறிப்பிடத்தக்கது. 



உலக திறன் அறியும் போட்டி: தங்கம் வென்று அசத்திய அஸ்வத் நாராயணன்
  • ரஷ்யாவில் நடந்த உலக திறன் அறியும் போட்டியில் இந்தியாவைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்கபதக்கம் வென்று சாதனை படைத்தார்.ரஷ்யாவின் காஸன் நகரில் உலக திறன் அறியும் போட்டிகள் நடந்தன. 
  • இதில் தண்ணீர் தொழில்நுட்பத்தில் திறமையை நிரூபித்த இந்தியாவின் ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த அஸ்வத் நாராயணன் தங்க பதக்கம் வென்றார். 
தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப்: பதக்க வேட்டையில் தமிழக வீரர்கள்
  • மாநிலங்களுக்கு இடையிலான 59ஆவது தேசிய சீனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில், 5000 மீட்டர் ஓட்டத்தில் தமிழக வீரர் லஷ்மணன் கோவிந்தன் தங்கம் வென்றார்.
  • மகளிர் பிரிவில் 200 மீட்டர் ஓட்டத்தில் முதல் 3 இடங்களையும் தமிழக வீராங்கனைகள் பிடித்து 3 பதக்கங்களையும் கைப்பற்றினர்.
  • மகளிர் பிரிவு 200 மீட்டர் ஓட்டத்தில், தமிழகத்தைச் சேர்ந்த அர்ச்சனா சுசீந்திரன் 23.39 விநாடிகளில் இலக்கை அடைந்து தங்கமும், வி.ரேவதி 2ஆவது இடம் (23.59 விநாடிகள்) பிடித்து வெள்ளியும் வென்றனர். மற்றொரு தமிழக வீராங்கனை தனலஷ்மி (24.22 விநாடிகள்) இதே பிரிவில் வெண்கலம் வென்றார்.
  • ஆடவர் பிரிவு 200 மீட்டர் ஓட்டத்திலும் தமிழகம் தங்கம் வென்றது. இதில் தமிழக வீரர் நிதின் தங்கம் வென்றார். அக்ஷய் நரேன் (புது தில்லி) வெள்ளியும், அபினவ் பன்வார் (புதுதில்லி) வெண்கலமும் வென்றனர்.
  • ஆடவர் பிரிவில் 800 மீட்டர் ஓட்டப் பந்தயத்தில் தமிழக வீரர் முஜாமில் அமீர் வெள்ளி வென்றார். இந்தப் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த பி. முகமது தங்கம் வென்றார்.
  • மும்முறை தாண்டுதலில் ஆடவர் பிரிவில் தமிழக வீரர் எஸ்.என்.முகமது வெண்கலம் வென்றார். இதில், ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற பஞ்சாப் வீரர் அர்பிந்தர் சிங் முதலிடத்தையும், கர்நாடக வீரர் கார்த்திக் 2ஆவது இடத்தையும் பிடித்தனர்.
  • ஆடவர் பிரிவு டெக்காத்லானில் தமிழக வீரர்கள் 2 பதக்கங்களை வென்றனர். துரை முருகன் வெள்ளியும், கிருஷ்ண குமார் வெண்கலமும் வென்றனர். சண்டீகரைச் சேர்ந்த குர்பிரீத் சிங் தங்கம் வென்றார்.
  • மகளிர் பிரிவு 400 தடை தாண்டுதலில் தமிழக வீராங்கனைகள் ஆர்த்தி வெள்ளியும், திவ்யா வெண்கலமும் வென்றனர். கர்நாடகத்தைச் சேர்ந்த அர்பிதா மஞ்சுநாதா தங்கம் வென்றார்.
  • மகளிர் பிரிவு நீளம் தாண்டுதலில் தமிழகத்தைச் சேர்ந்த வீராங்கனைகள் நயனா ஜேம்ஸ் தங்கமும், ஹர்ஷினி சரவணன் வெண்கலமும் வென்றனர். ஜார்க்கண்டைச் சேர்ந்த பிரியங்கா கெர்கெட்டா வெள்ளி வென்றார்.
சைக்கிள் மராத்தானில் சாதனை படைத்த இந்திய ராணுவ அதிகாரி
  • பாரீசில் தொடங்கி பிரெஸ்ட் சென்றடைந்து பின்னர் அங்கிருந்து பாரீஸ் செல்லும் மிக பழமையான சைக்கிள் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்த மாரத்தானில் இந்திய ராணுவத்தின் லெப்டினன்ட் ஜெனரல் பதவியில் இருக்கும் 59 வயதாகும் அணில் புரி கலந்துகொண்டார்.
  • இவர் இந்த போட்டியின் பயண தூரமான 1200 கிலோ மீட்டரை 90 மணி நேரங்கள் தொடர்ந்து தூக்கமின்றி சைக்கிளில் கடந்து முடித்துள்ளார். இந்திய ராணுவத்தில் பொறுப்பில் இருக்கும் ஒருவர் இந்த மாரத்தான் பயணத்தை முடித்திருப்பது இதுவே முதல் முறையாகும்.
  • 1931ஆம் ஆண்டு முதல் நடைபெறும் இந்த மாராத்தான் போட்டியில் இதுவரை 31 ஆயிரத்து 125 பேர் பயண தூரத்தை முழுமையாக கடந்து இலக்கை எட்டி உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel