Type Here to Get Search Results !

TNPSC GROUP 4 & VAO RULES & REGULATION - குரூப் 4 எழுத்து தேர்வு கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள்

  • கிராம நிர்வாக அலுவலர் உள்பட குரூப் 4 தொகுதியில் 6 ஆயிரத்து 491 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு, ஒரே கட்டமாக தமிழகத்திலுள்ள 301 தாலுகாக்களிலும் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி 1 மணியுடன் நிறைவடைகிறது.
  • தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு களை தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net, www.tnpscexams.in ஆகியவற்றில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். 
  • விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப எண், பயனாளர் குறியீடு மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளீடு செய்து நுழைவுச் சீட்டைப் பெறலாம்.
  • சரியான முறையில் விண்ணப்பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தியும் நுழைவுச் சீட்டு கிடைக்கப் பெறாதவர்கள் கவலை கொள்ளத் தேவையில்லை. 
  • தேர்வுக் கட்டணம் செலுத்தியதற்கான ரசீதின் நகலுடன் விண்ணப்பதாரரின் பெயர், பதிவு எண், தேர்வுக் கட்டணம், கட்டணம் செலுத்திய இடம் (அஞ்சலம் அல்லது வங்கி), பரிவர்த்தனை எண் மற்றும் தேதி ஆகிய விவரங்களை தேர்வாணையத்துக்கு மின்னஞ்சல் (contacttnpsc@gmail.com) மூலமாக அனுப்ப வேண்டும்.
  • வரும் 28-ஆம் தேதிக்குப் பிறகு அனுப்பப்படும் மனுக்களின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படாது.
  • எழுத்துத் தேர்வு மொத்தம் 200 கேள்விகளைக் கொண்டதாக இருக்கும். பொதுப்பிரிவில் இருந்து 75 கேள்விகளும், 25 கேள்விகள் ஆப்டிடியூட் மற்றும் மனத்திறன் பிரிவில் இருந்தும் கேட்கப்படும். மீதம் உள்ள 100 கேள்விகள் பொது தமிழ் அல்லது பொது ஆங்கிலம் பிரிவில் இருந்து கேட்கப்படும்.



எழுத்துத் தேர்வின் போது கடைப்பிடக்க வேண்டிய விதிமுறைகள் குறித்த விவரங்கள்
  • தேர்வு அறைக்குள் அனுமதிக்கப்பட்ட பொருட்களை தவிர்த்து புத்தகம், நோட்ஸ், தாள்கள், செல்போன், ப்ளூடூத், வாட்ச் போன்ற எலக்ட்ரானிக் பொருட்கள், கால்குலேட்டர்கள் உள்ளிட்டவற்றை கொண்டுச் செல்வதற்கு அனுமதி இல்லை.
  • லாக் டேபிள், ஸ்டென்சில்ஸ், மேப்புகள், ரஃப் தாள்கள் கொண்டுச் செல்லக் கூடாது.
  • தேர்வு அறைக்கு 30 நிமிடம் தாமதமாக வருபவர்கள் தேர்வு எழுத அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • விண்ணப்பதாரர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையத்தில்தான் எழுத வேண்டும். அதற்கு பதிலாக வேறொரு மையத்தில் எழுதினால், விடைத்தாள் செல்லாததாக கருதப்படும்.
  • தேர்வு தொடங்குவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாக வினாத்தாள் வழங்கப்படும்.
  • வினாத்தாள் வழங்கப்பட்ட பின்னர், அது முழுவதும் அச்சடிக்கப்பட்டுள்ளதா, பழுதின்றி இருக்கிறதா என்பதை தேர்வர்கள் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். குறைபாடு ஏதும் இருந்தால் தரப்பட்ட 10 நிமிடங்களுக்குள் கண்காணிப்பாளரிடம் அளித்து மாற்றிக் கொள்ள வேண்டும். தேர்வு தொடங்கிய பின்னர் முறையிட்டால் வினாத்தாள் மற்றும் OMR விடைத்தாள் மாற்றித் தரப்பட மாட்டாது.
  • ஹால் டிக்கெட் (Hall Ticket), நீலம் அல்து கருப்பு மை பேனா மட்டுமே தேர்வு அறைக்குள் எடுத்து வர வேண்டும். மற்ற எந்த பொருளை கொண்டுவரவும் அனுமதியில்லை. 
  • விதியை மீறுவோர் எதிர்காலத்தில் நடத்தப்படும் தேர்வுகளில் பங்கேற்க தகுதியற்றவர்களாக கருப்படுவார்கள்.
  • தேர்வர்கள் மற்றவர்களிடம் இருந்து எந்த பொருளையும் வாங்க தடை செய்யப்பட்டுள்ளது.
  • தேர்வு நேரம் நீட்டிக்கப்பட மாட்டாது. அதேபோன்று தேர்வு நேரம் முடிவதற்கு முன்பாக தேர்வர்கள் அறையை விட்டு வெளியே செல்ல அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
  • வினாத்தாள் (Question Paper) தவறுள்ளதாக கருதினால் தேர்வு முடிந்த 2 நாட்களுக்குள் விண்ணப்பதாரரின் பெயர், பதிவெண், முகவரி, கேள்வி எண், வினாத்தாள் வரிசை எண் உள்ளிட்டவற்றை குறிப்பிட்டு வினாத்தாள் நகலுடன் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலருக்கு முறையீடு செய்ய வேண்டும். 2 நாட்களை தாண்டினால் கோரிக்கை ஏற்கப்படாது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel