Type Here to Get Search Results !

27th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

விருதுநகரில் புதிய தொழில் பூங்கா: முதல்வர் பழனிசாமி அடிக்கல்
  • தமிழக அரசு சார்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் உலக முதலீட்டாளர் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் புதிய ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைப்பதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழக அரசுக்கும், தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமத்துக்கும் இடையே கையெழுத்தானது.
  • அதன் தொடர்ச்சியாக, ஒருங்கிணைந்த பதனிடுதல் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.151.86 கோடி மதிப்பில் 1.5 மெகா வாட்டுக்கு 6 மில்லியன் லிட்டர் கொண்ட பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம், 1.5 மெகா வாட் திறன் கொண்ட இணை மின் உற்பத்தி நிலையம் அமைப்பதற்கான விரிவான திட்ட அறிக்கையை தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம், தமிழக அரசின் மூலமாக மத்திய அரசுக்கு சமர்ப்பித்தது. 
  • இந்தத் திட்டத்துக்காக மத்திய அரசின் 50 சதவீத மானியம் மற்றும் தமிழக அரசின் 25 சதவீத மானியம் பெறுவதற்காக தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமத்தால் விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு மத்திய ஜவுளி அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டு கொள்கை அளவிலான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. 
  • தென் மாவட்ட ஜவுளி பதனிடும் குழுமம் மற்றும் புதிய தொழில் பூங்கா அமைக்கப்படுவதன் மூலம் சுமார் 2 ஆயிரம் பேருக்கு நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு கிடைக்கும். சுமார் ரூ.2 ஆயிரம் கோடி அளவுக்கு வர்த்தகமும் நடைபெறும்.
  • தமிழகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடங்களையும் தலைமைச் செயலகத்தில் திங்கள்கிழமை நடந்த நிகழ்ச்சியில் காணொலிக் காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
கீழடி அகழாய்வில் மழைநீர் செல்லும் வடிகால் கண்டுபிடிப்பு
  • கீழடியில் 2015-ஆம் ஆண்டு மத்திய தொல்லியல் துறை அகழாய்வு மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல்பொருள்கள் கண்டறியப்பட்டன. இதனைப் பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழைமையான நகர நாகரிகம் கீழடியில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து, மத்திய தொல்லியல் துறை 2 மற்றும் 3ஆம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. 
  • இதையடுத்து, தமிழக தொல்லியல்துறை சார்பில் 4-ஆம் கட்ட அகழாய்வைத் தொடர்ந்து, 5-ஆம் கட்ட அகழாய்வு ஜூன் 13-ஆம் தேதி தொடங்கியது. இந்த அகழாய்வு, தொல்லியல் துறை துணை இயக்குநர் சிவனாந்தம் தலைமையில் நடைபெறுகிறது. இதுவரை தோண்டப்பட்ட 30 குழிகளில் 700-க்கும் மேற்பட்ட பொருள்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
  • இந்நிலையில், நீதி என்பவரது நிலத்தில் தோண்டப்பட்ட குழியிலிருந்து வடிகால் சுவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,500 ஆண்டுகளுக்கு முன்பே மழைநீர் செல்ல தமிழர்கள் வடிகால் வசதி ஏற்படுத்தியிருந்தது தெரிய வந்துள்ளது.



மத்திய கல்வி நிறுவனங்கள் மசோதா, மக்களவையில் தாக்கல்
  • மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியாளர்களில் இட ஒதுக்கீடு) மசோதா, 2019-ஐ மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது!
  • கல்வித்துறையில் சீர்திருத்தங்களை முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்ட ஒரு முக்கிய படியில், நரேந்திர மோடி அரசு மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியாளர்களில் இட ஒதுக்கீடு) மசோதா, 2019-ஐ மக்களவையில் தாக்கல் செய்துள்ளது. 
  • புதிய ஒதுக்கீட்டு முறைக்கு ஏற்ப ஆசிரியர்களின் பணியாளர்களை நேரடியாக ஆட்சேர்ப்பு செய்வதன் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களில் தற்போதுள்ள 7000 காலியிடங்களை நிரப்ப இந்த மசோதா உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இந்த மசோதா மத்திய அமைச்சரவையால் அனுமதிக்கப்பட்ட பின்னர் தற்போது மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறிப்பிடத்தக்கது.
  • மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் (MHRD) கருத்துப்படி, கல்வித்துறையில் சீர்திருத்தங்களுக்கு ஒரு பெரிய உந்துதலைக் கொடுக்கும் நோக்கில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது, இது அனைத்தையும் உள்ளடக்கியது மற்றும் பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த மக்களின் அபிலாஷைகளை மனதில் வைத்துக் கொண்டது.
  • இந்த மசோதா, மாநிலங்களவை நிறைவேற்றினால், இந்த ஆண்டு மார்ச் 7-ஆம் தேதி மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட மத்திய கல்வி நிறுவனங்கள் (ஆசிரியர் பணியாளர்களில் இட ஒதுக்கீடு) கட்டளை, 2019-ஐ மாற்றும் என குறிப்பிட்டுள்ளது.
டெல்லி ஃபெரோஷ் ஷா கோட்லா மைதானத்தின் அரங்கத்திற்கு அருண் ஜேட்லியின் பெயர் சூட்டப்பட்டது
  • முன்னாள் மத்திய நிதி அமைச்சர், மறைந்த அருண் ஜெட்லி. இந்திய கிரிக்கெட் போர்டின் துணைத்தலைவர், டில்லி கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக இருந்தார். 
  • இவரது காலத்தில் டில்லி பெரோஷா கோட்லா அரங்கம் நவீன வசதிகளுடன் மாற்றி அமைக்கப்பட்டது. இருக்கைகள் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, ரசிகர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தப்பட்டன. உலகத் தரம் வாய்ந்த வீரர்கள் 'டிரசிங் ரூம்' கட்டப்பட்டது.
  • இவரது ஆதரவு காரணமாக சேவக், நெஹ்ரா, காம்பிர், கோஹ்லி, இஷாந்த் சர்மா என பல நட்சத்திரங்கள் உருவாகினர். அருண் ஜெட்லி நினைவாக பெரோஷா கோட்லா அரங்கத்திற்கு இவரது பெயர் வைக்கப்பட உள்ளது. இங்குள்ள ஒரு கேலரிக்கு கேப்டன் கோஹ்லி பெயர் சூட்டவுள்ளனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel