Type Here to Get Search Results !

23rd & 24th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

சென்னை உயர்நீதிமன்ற கூடுதல் நீதிபதிகள் 6 பேர் நீதிபதிகளாக நியமனம்
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் கூடுதல் நீதிபதிகளாக பொறுப்பு வகித்து வந்த நீதிபதிகள் எஸ்.ராமதிலகம், ஆர்.தாரணி, பி.ராஜமாணிக்கம், டி.கிருஷ்ணவள்ளி, ஆர்.பொங்கியப்பன், ஆர்.ஹேமலதா ஆகிய 6 பேரை நிரந்தர நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
  • சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 75 . தற்போது தலைமை நீதிபதி உள்பட 58 பேர் நீதிபதிகளாக உள்ளனர். காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை 17 ஆக உள்ளது. 
தஞ்சையில் சோழர்கால சிலை கண்டெடுப்பு
  • தஞ்சை மாவட்டம் திருவையாறு அடுத்த பெரும்புலியூர் கிராமத்தில் சோழர்காலத்தில் செய்யப்பட்ட சுப்பிரமணியர், பைரவர் கருங்கல் சிலையும் மற்றும் சுமார் 1 அடியில் உள்ள ஆண்சாமி கருங்கல் சிலையும் கிடைத்தனர்.
  • இந்நிலையில் இன்று ஆழ்வார் கருங்கல் சிலை சுமார் 3 அடி உயரத்தில் கிடைத்துள்ளது. 
காவல் ஆய்வாளருக்கு ஜனாதிபதி விருதுக்கு பரிந்துரை
  • தமிழக அளவில் விருதுகள் பெற்ற கரூர் போக்குவரத்து காவல் ஆய்வாளர் மாரிமுத்து அவர்கள், ஜனாதிபதி விருதுக்கு தமிழக காவல்துறையினால் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.



தென்னிந்தியாவின் சிறந்த ரயில் நிலையமாக ஐஎஸ்ஓ சான்றிதழ் பெற்றது எழும்பூர் ரயில் நிலையம்
  • ரயில்கள் இயக்கம், சிக்னல் மற்றும் தகவல் தொடர்பு , ரயில் நிலைய பராமரிப்பு, டிக்கெட் முன்பதிவு, பயணிகளுகான வசதிகள், பார்சல்களை கையாள்தல் ஆகியவற்றில் தென்னிந்தியா வில் எழும்பூர் ரயில் நிலையம் சிறந்து விளங்குவதாக சுற்றுச் சூழல் மேலாண்மை அமைப்பின் ஐஎஸ்ஓ தரச்சான்று (ISO 14001: 2015) விருது பெற்றுள்ளதாக தென்னக ரயில்வே.
இந்திய - அமெரிக்க கப்பல்கள் சென்னையில் கூட்டுப் பயிற்சி
  • சென்னை அருகே, இந்திய - அமெரிக்க கடலோர காவல் படையினர், கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
  • இந்திய - அமெரிக்க கூட்டுப் பயிற்சிக்காக, அமெரிக்க கடலோர காவல் படை கப்பலான, 'ஸ்ட்ராட்டன்' நேற்று, சென்னை வந்தது.
  • சென்னையில் இருந்து, 10 கடல் மைல் தொலைவில், இந்தியாவின் கடலோர ரோந்து கப்பலான, 'சவுரியா' உடன், அமெரிக்க கடலோர காவல் படை கப்பல், கூட்டுப் பயிற்சியில் ஈடுபட்டது.
பெஹ்ரைன் 200 வருட கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு : மோடி தொடங்கி வைக்கிறார்
  • பெஹ்ரைன் நாட்டின் தலைநகர் மனாமா வில் கிருஷ்ணர் கோவில் ஒன்று சுமார் 200 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்டுள்ளது. 
  • அந்தக் கோவிலைத் தட்டை இந்து வர்த்தக சமுதாயத்தினர் நிர்வகித்து வருகின்றனர். இந்த கோவிலில் 45000 சதுர அடி நிலத்தில் மூன்றடுக்கு கட்டிடம் ஒன்று கட்டப்பட்டுள்ளது. இதன் மூலம் கோவிலில் 80% அதிக பக்தர்கள் தரிசிக்க முடியும்.
  • பிரதமர் மோடி 2 நாள் அலுவலக பயணமாக பெஹ்ரைன் செல்ல உள்ளார். இந்தியப் பிரதமர் அலுவலக பயணமாக பெஹ்ரைன் வருவது இதுவே முதல் முறையாகும். 
  • அவர் தனது பயணத்தின் இடையே கிருஷ்ணர் கோவில் புனரமைப்பு பணியைத் தொடங்கி வைக்க உள்ளார். 
2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 லிருந்து 6.2ஆக சரியும் : மூடிஸ் நிறுவனம் கணிப்பு
  • 2019-ம் ஆண்டுக்கான இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.2ஆக சரியும் என்று மூடிஸ் நிறுவனம் கணித்துள்ளது. ஏற்கனவே பொருளாதார வளர்ச்சி விகிதம் 6.8 ஆக இருக்கும் என மூடிஸ் பொருளாதார ஆய்வு நிறுவனம் கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.



போர்ப்ஸ் பட்டியல்: 4வது இடத்தில் அக்ஷய்குமார்
  • அமெரிக்காவைச் சேர்ந்த, போர்ப்ஸ் பத்திரிகை, உலக அளவில், அதிக வருமானம் ஈட்டும் நடிகர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. 
  • கடந்த ஆண்டு ஜூன் முதல் இந்த ஆண்டு ஜூன் வரை நடிகர்கள் வாங்கிய சம்பளத்தை வைத்து இந்த பட்டியல் உருவாக்கப்பட்டுள்ளது.
  • அதில், முன்னாள் மல்யுத்த வீரரும், ஹாலிவுட் நடிகருமான ராக் என்கிற டுவைன் ஜான்சன் ரூ. 640 கோடி சம்பளம் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். 
  • 2ம் இடத்தில் தோர் படம் புகழ் கிறிஸ் ஹெம்ஸ்வொர்த் ரூ. 547 கோடி வருமானத்துடன் உள்ளார். 
  • அயர்மேன் நடிகர் ராபர்ட் டவுனி ஜூனியர் ரூ. 473 கோடி வருமானத்துடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளார்.
  • இந்தப் பட்டியலில், பிரபல பாலிவுட் நடிகரான அக்ஷய் குமார் நான்காவது இடத்தில் உள்ளார். இவர் ரூ. 466 கோடி சம்பளமாகப் பெற்றுள்ளார். 
ஐக்கிய அரபு எமிரேட்சின் உயர்ந்த விருது பிரதமர் மோடிக்கு கவுரவம்
  • ஐக்கிய அரபு எமிரேட்சின் தந்தை என அழைக்கப்படும், சேக் சயீது பில் சுல்தான் அல் நஹ்யான் நினைவாக, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது, ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. 
  • பிரதமர் நரேந்திர மோடியை கவுரவிக்கும் வகையில், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் நாட்டின் மிக உயரிய விருதான, 'ஆர்டர் ஆப் சயீத்' விருது அவருக்கு வழங்கப்பட்டது.
  • இந்தியா - ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான உறவு பலப்படுவதற்கு முக்கிய காரணமாக விளங்கியதற்காக, இந்த விருது, மோடிக்கு வழங்கப்பட்டதாக, அந்த நாட்டு அரசு தெரிவித்தது.
'ரூபே கார்டு' திட்டம் அபுதாபியில் மோடி துவக்கினார்
  • அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் சென்றுள்ளார் பிரதமர் மோடி . ஐக்கிய அரபு எமிரேட்சின் அபுதாபியில் நடந்த நிகழ்ச்சியில், 'ரூபே கார்டு' திட்டத்தை, பிரதமர் மோடி துவக்கி வைத்தார். 
  • இதன் மூலம், மத்திய கிழக்கு நாடுகளில், ரூபே கார்டு திட்டத்தை செயல்படுத்திய முதல் நாடாக, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், உருவெடுத்துள்ளது.



ஐக்கிய அரபு எமிரேட்சில் மோடி
  • பிரான்ஸ்,ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பஹ்ரைன் ஆகிய 3 நாடுகளுக்கு பிரதமர் மோடி அரசு முறை சுற்று பயணம் மேற்கொண்டார். பிரான்சில் சுற்றுப் பயணம் முடித்து கொண்ட அவர், பாரீசில் இருந்து ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபி வந்தடைந்தார். அங்கு அவர், அபுதாபி பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் ஜாயத் அல் நஹ்யானுடன், இரு தரப்பு உறவு, வர்த்தகம், இரு தரப்பு நலன் சார்ந்த சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளார். 
  • இந்த பயணத்தின் போது, இரு தரப்பு பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதும் முக்கிய திட்டம் ஆகும் என பதிவிட்டுள்ளார்.யுஏஇ பயணத்தை முடித்த பின்னர் பிரதமர் மோடி பஹ்ரைன் சென்று, அந்நாட்டு அரசர் ஷேக் ஹமத் பின் இசா அல் கலிபாவை சந்தித்து பேச உள்ளார். பின்னர், மீண்டும் பிரான்ஸ் செல்லும் மோடி ஜி7 மாநாட்டிலும் பங்கேற்க உள்ளார்.
என்டிடிஎல் ஆய்வகத்திற்கு தடை 
  • இந்தியாவின் போதை மருந்து சோதனை ஆய்வகமான என்டிடில்(NDTL) அமைப்பின் செயல்பாட்டை 6 மாதங்களுக்கு தடைசெய்து உத்தரவிட்டுள்ளது சர்வதேச போதை தடுப்பு ஏஜென்சியான WADA.
  • ஆய்வகங்களுக்கான சர்வதேச இயங்கு விதிமுறைகளை சரியாக அனுசரிக்காத காரணத்தாலேயே இந்த தடை விதிக்கப்படுவதாக தொடர்புடைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
  • இந்த தடையுத்தரவு ஆகஸ்ட் 20ம் தேதியே அமலுக்கு வந்துவிட்டது. இதன்மூலம், அத்தேதியிலிருந்து அடுத்த 6 மாதங்களுக்கு எந்தவிதமான போதை தடுப்பு நடவடிக்கைகளிலும் (அதாவது, ரத்தம் மற்றும் சிறுநீர் பரிசோதனைகளில்) என்டிடிஎல் ஈடுபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
துரந்து கோப்பை: கோகுலம் கேரளா எஃப்சி சாம்பியன்
  • ஆசியாவின் பழமையான கால்பந்து போட்டிகளில் ஒன்றான துரந்து கோப்பை 129-வது போட்டி கொல்கத்தாவில் நடைபெற்று வருகிறது.
  • துரந்து கோப்பை கால்பந்து போட்டியில் பலம் வாய்ந்த மோகன் பகான் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது கோகுலம் கேரளா எஃப்சி அணி.
  • இதனால் 17-ஆவது முறையாக துரந்து கோப்பையை வெல்லும் மோகன் பகான் கனவு பொய்த்துப் போனது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel