Type Here to Get Search Results !

22nd AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

டாக்டர்களுக்கு சிறந்த சேவைக்கான அரசு விருது
  • மருத்துவ துறையில், சிறந்த சேவை புரிந்ததற்கான, தமிழக அரசின் விருதை, அப்பல்லோ மருத்துவமனை, இதய மருத்துவ நிபுணர், டாக்டர் செங்கோட்டுவேலுக்கு, சுகாதாரத் துறை அமைச்சர், விஜயபாஸ்கர் வழங்கினார்.
  • இதில், சிறந்த சேவைக்கான விருது, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவ கல்லுாரி கண்காணிப்பாளர், திருநாவுக்கரசு, அப்பல்லோ மருத்துவமனை இதய மருத்துவ நிபுணர், செங்கோட்டுவேலு உள்ளிட்ட, 20 பேருக்கு வழங்கப்பட்டது. 
  • காஞ்சிபுரம் மாவட்ட, அரசு தலைமை மருத்துவமனையின், குழந்தைகள் நல டாக்டர், ஆத்மார்த்தன், ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையின், நிலைய மருத்துவ அலுவலர், உமா மகேஸ்வரி உட்பட, 480 பேருக்கு, சிறந்த டாக்டர்களுக்கான பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. 
ஹைதராபாதில் உலகின் மிகப்பெரிய அமேஸான் வளாகம் திறப்பு
  • அமெரிக்காவைச் சேர்ந்த வலைதள வர்த்தக நிறுவனமான அமேஸானுக்கு சொந்தமான உலகின் மிகப்பெரிய புதிய வளாகம் தெலங்கானா ஹைதராபாதில் திறக்கப்பட்டுள்ளது.
  • சுமார் 9.5 ஏக்கர் நிலப்பரப்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த வளாகத்தில், 40 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • இதில், 18 லட்சம் சதுர அடி பரப்பளவிலான அலுவலக அறைகள் மூலமாக இந்தியாவில் 15,000 பணியாளர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். மேலும், பிற பகுதிகளில் உள்ள நிறுவனத்தின் பணியாளர்களும் இப்புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்படவுள்ளனர். இதுவரை, 4,500 பேர் ஏற்கெனவே புதிய வளாகத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர்.
  • கடந்த 2016-ஆம் ஆண்டு மார்ச் 30-ஆம் தேதி இந்த வளாகத்துக்கு அடிக்கல் நாட்டி பணிகள் தொடங்கப்பட்டன. நாள் ஒன்றுக்கு 2,000 பணியாளர்களின் உழைப்பில் 39 மாதங்களில் இப்புதிய வளாகம் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. 
  • பிரான்ஸில் உள்ள ஈஃபில் கோபுரத்தைக் காட்டிலும் 2.5 மடங்கு அதிகமாக உருக்கு பயன்படுத்தப்பட்டு இந்த வளாகம் கட்டமைக்கப்பட்டுள்ளது என்றார் அவர்
ஆர்டிஜிஎஸ் பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு! 26ந்தேதி முதல் அமல்
  • வங்கிகளில், ஆர்டிஜிஎஸ் முறையில், ஆன்லை பணப் பரிமாற்றத்திற்கு கூடுதல் நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய நேரம் வரும் 26ந்தேதி முதல் அமல்படுத்தப்படும் என இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
  • இந்த புதிய அறிவிப்பின்படி, காலை 7 மணி முதல் இரவு 7:45 மணி வரையிலும் வங்கிகளுக்கு இடையேயான பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.
  • தற்போது ஆர்டிஜிஎஸ் அமைப்பு வாடிக்கையாளர் பரிவர்த்தனைகளுக்காக காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே நடைபெற்று வந்த நிலையில், 26ந்தேதி முதல் இரவு 7:45 மணி வரையிலும் பண பரிவர்த்தனை செய்ய முடியும்.



விருப்பப்பட்டு உறவு கொண்டால் பாலியல் வன்புணர்வில் வராது - உச்சநீதிமன்றம் அதிரடி தீர்ப்பு 
  • உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட பாலியல் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் முக்கியமான தீர்ப்பை அளித்துள்ளது. விற்பனை வரித்துறையின் உதவி ஆணையராக இருக்கும் பெண் ஒருவர் சி ஆர் பி எஃப் அதிகாரி மீது பாலியல் புகார் ஒன்றை சுமத்தினார். 
  • அதில் இருவரும் ஆறு ஆண்டுகள் நெருக்கமாகப் பழகியதாகவும் அதனால் பல முறை உடலுறவுக் கொண்டதாகவும், ஆனால் இப்போது அந்த ஆணுக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் ஏற்பாடாகியிருப்பதாகவும் அதனால் அவருக்குப் பாலியல் வன்புணர்வு பிரிவின் கீழ் தண்டனை வழங்க வேண்டும் என வாதிடப்பட்டது. 
  • இந்த வழக்கை விசாரித்த டி.ஒய். சந்திராசூட், இந்திரா பானர்ஜி அடங்கிய அமர்வு ,' திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்துவிட்டு அதனை மீறுவதை ஏமாற்றியதாக எடுத்துக் கொள்ள முடியாது' எனக் கூறியுள்ளனர். 
  • மேலும் திருமணத்துக்கு முன்னர் விருப்பப்பட்டு பாலியல் உறவுக் கொள்வதை பாலியல் வன்புணர்வாகக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.
இந்திய அணி துணை பயிற்சியாளர்கள் தேர்வு
  • இந்திய அணியின் பயிற்சியாளர்கள் பதவிக் காலம் விண்டீஸ் தொடருடன் முடிகிறது. புதிய தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். மற்ற பயிற்சியாளர்களை, தேர்வுக்குழு தலைவர் பிரசாத் தலைமையிலான குழு தேர்வு செய்தது.
  • புதிய பேட்டிங் பயிற்சியாளராக விக்ரம் ரத்தோர் தேர்வு செய்யப்பட்டார். தற்போதைய சஞ்சய் பாங்கர், விண்டீஸ் தொடருடன் வீடு திரும்ப உள்ளார். சமீபத்திய உலக கோப்பை தொடர் அரையிறுதியில் தோனியை 7வது இடத்தில் பேட்டிங் செய்ய அனுப்பியதில், இவருக்கும் பங்குள்ளதாக கூறப்பட்டது.
  • இதனால் தான் இவர் நீக்கப்பட்டதாக தெரிகிறது. மற்றபடி பரத் அருண் (பவுலிங்), ஸ்ரீதர் (பீல்டிங்) தங்களது பதவியில் தொடர்கின்றனர். தற்போதைய 'பிசியோதெரபிஸ்ட்' பாட்ரிக் பர்கத், 'டிரெய்னர்' ஷங்கர் பாசு அணியில் நீடிக்க விருப்பம் இல்லை என தெரிவித்ததாக தெரிகிறது.
  • இதனால் புதிய 'பிசியோ' ஆக நிடின் படேல் தேர்வு செய்யப்பட்டார். இந்திய கிரிக்கெட் போர்டு தலைமை அதிகாரி கூட்டத்திற்குப் பின் இந்த பயிற்சியாளர்கள் பட்டியலுக்கு ஒப்புதல் தரப்படும் எனத் தெரிகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel