Type Here to Get Search Results !

20th AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

வாணியம்பாடி அருகே 2 நடுகற்கள் கண்டெடுப்பு
  • வாணியம்பாடியை சுற்றியுள்ள பகுதிகள் ஆந்திர எல்லைப் பகுதியில் இருப்பதால் அக்காலத்தில் அந்நியர் படையெடுப்பு மிகுதியாக இருந்தது. அப்போது, நடந்த போரில் வீர மரணம் அடைந்த வீரர்களுக்கு ஆங்காங்கே நடுகற்கள் அமைக்கப்பட்டுள்ளதைக் காணமுடிகிறது. 
  • அதன்படி, சின்ன வடசேரியில் கற்திட்டை வடிவிலான நடுகல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதன் அமைப்புப் பிற்காலச் சோழர் காலத்தைச் சேர்ந்ததாகத் தெரிகிறது. 
  • இந்த நடுகல் மூன்றடி ஆழத்தில் புதைந்த நிலையில் உள்ளது. 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடி, மேற்பகுதியிலும் பெரிய பலகைக் கல்லைக் கொண்டு மூடும் அமைப்புக்கு கற்திட்டை வடிவம் என்று பெயர். 
  • இந்த நடுகல்லும் 3 பக்கமும் பலகைக் கல்லால் மூடப்பட்டு, மேலே ஒரு பலகைக் கல் கொண்டு மூடப்பட்டுள்ளது. ஆனால் இந்தக் கல் சேதமடைந்த நிலையில் உள்ளது. இக்கலில் உள்ள வீரன் வலது பக்கக் கொண்டையிட்டு ள்ளான். 
  • இடது கையில் வில் ஏந்திய நிலையில் உள்ளது. வீரனின் மார்பு வரை மட்டுமே மேலே தெரிகிறது. சின்ன வடசேரியைச் சேர்ந்த சில குடும்பங்கள் தங்களது குல தெய்வமாக இக்கல்லை வழிபடுகின்றனர்.
கலையூரில் கண்டெடுக்கப்பட்ட 10-ம் நூற்றாண்டு கற்சிற்பங்கள்
  • ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே கலையூர் வில்லார் உடையார் ஐயனார் கோயிலில் கி.பி.10-ம் நூற்றாண்டைச் சேர்ந்த உடைந்த நிலையிலான சமணத் தீர்த்தங்கரர் சிற்பம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 
  • தற்போது கலையூரில் கண்டுபிடிக்கப்பட்ட சிற்பம் 2 அடி உயரமும் 1½ அடி அகலமும் உள்ளது. முழுவதும் கருங்கல்லால் ஆனது. இச்சிற்பத்தில் அசோகமரத்தின் வளைந்த கிளைகளின் கீழ் பிரபாவளி என்னும் ஒளிவட்டம் உள்ளது. 
  • அசோகமரத்தின் கிளைகள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. பிரபாவளியின் உள்ளே அமர்ந்தநிலையில் சமண தீர்த்தங்கரர் சிற்பம் இருந்திருக்க வேண்டும். தீர்த்தங்கரர் உருவம் இருந்த பகுதி முழுவதும் உடைத்து சிதைக்கப்பட்டுள்ளது.
  • தீர்த்தங்கரரின் இரு பக்கமும் சாமரம் வீசும் இரு இயக்கர்களின் சிற்பங்கள் இருக்கும். இதில் பிரபாவளியின் வலப்பக்கத்தில் இயக்கனின் தலை மட்டும் உள்ளது. இடதுபக்கம் இருந்த இயக்கன் சிற்பமும் தீர்த்தங்கரரின் கீழ்ப்பகுதியும் உடைத்து தனியாக்கப்பட்டுள்ளது. பிரபாவளியின் மேல்பகுதியில் சந்திராதித்தம், நித்தியவிநோதம்.
  • சகல பாசனம் ஆகியவற்றைக் குறிக்கும் முக்குடை என்ற அமைப்பு உள்ளது. முக்குடை என்பது சமண சமயச் சின்னம் ஆகும். இச்சிற்பத்தின் அமைப்பைக் கொண்டு இது சமண சமயத்தின் 24 வது தீர்த்தங்கரரான மகாவீரரின் சிற்பமாக இருக்கும் என ஊகிக்கலாம். மேலும், இதன் காலம் கி.பி.10-ம் நூற்றாண்டாகக் கருதலாம்.



கோவை அருகே கிபி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் கண்டுபிடிப்பு
  • கோவை மாவட்டம், பொள்ளாச்சி அருகே சிஞ்சுவாடி எனும் கிராமத்தில் கி.பி 17- ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் ஒன்று கண்டறியப்பட்டுள்ளது.
  • புலியுடன் நடந்த சண்டையில் இறந்து போன வீரனுக்காக எடுக்கப்பட்ட நடுகல் இது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.
  • தலையின் வலது புறம் கொண்டை அமைத்த வீரன் நெற்றிப் பட்டத்துடன் காணப்படுகிறான். எடுப்பான மீசையுடன் காதுகளில் தோடு அணிந்த நிலையில் கழுத்தில் சரப்பளி, கண்டிகை, ஆரம் ஆகியவற்றையும் அணிந்திருக்கிறான். 
  • சிற்ப வடிவமைப்பு, வீரன் ஊர்த் தலைவனாகவோ அல்லது ஊரில் முக்கியவனாகவோ இருக்கலாம் என்ற யூகத்தைக் கொடுக்கிறது. எனினும் கால்களில் வழக்கமாக காட்டப்படும் வீரக்கழல் இந்தச் சிற்பத்தில் இல்லை. 
  • வீரன் பயன்படுத்திய ஈட்டியானது மரத்தால் செய்யப்பட்டு ஈட்டியின் நுனி இரும்பாலான வேலுடன் இணைக்கப்பட்டுள்ளது.புலியைக் கழுத்தில் குத்தியதால் ஈட்டியின் வேல் பகுதி கழுத்தைத் துளைத்துக்கொண்டு பிடரிப் பகுதியில் வெளிப்பட்டிருப்பதும் தெளிவாக வடிக்கப்பட்டுள்ளது.
  • இந்த நடுகல்லானது 67 செ.மீ உயரமும் 46 செ.மீ அகலமும் 113 செ.மீ சுற்றளவும் கொண்டதாக உள்ளது. நடுகல் வீரனுக்கு அருகிலேயே இடதுபுற கொண்டையுடன் கும்பிட்ட நிலையில் ஒரு சிற்பம் இருக்கிறது. 
  • சிற்ப வடிவியலில் அனுபவமில்லாத சிற்பி இந்தக் கும்பிட்ட சிலையை வடித்திருக்கிறான்.நடுகல் வீரனின் வழி வந்தவர்கள் பிற்காலத்தில் இந்த சிலையை வடித்து நடுகல் சிற்பத்திற்கு அருகிலேயே அமைத்திருக்கலாம்
ஒடிசா, கர்நாடகா, ஹிமாச்சலுக்கு ரூ.4,432 கோடி ஒதுக்கீடு
  • கடந்த, 2018 - 19 நிதியாண்டில், இயற்கை சீற்றங்களால் ஏற்பட்ட பாதிப்புகளுக்காக, ஒடிசா, கர்நாடகா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசமாநிலங்களுக்கு, கூடுதலாக, 4,432 கோடிரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
  • கடந்த நிதியாண்டில், ஒடிசாவில், போனிபுயலால் கடும் பாதிப்புஏற்பட்டது. கர்நாடகாவில், கடும் வறட்சி ஏற்பட்டது. ஹிமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு, பனிச்சரிவு மற்றும் பனிப் புயல் பாதிப்பு ஏற்பட்டது.
  • இதனால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு இழப்பீடாக, ஒடிசாவுக்கு, 3,338 கோடி ரூபாய், கர்நாடகாவுக்கு, 1,029 கோடி ரூபாய், ஹிமாச்சலப்பிரதேசத்துக்கு, 64 கோடி ரூபாய் ஒதுக்கப்படுகிறது.
  • மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்ட தொகையைத் தவிர,இந்த நிதி, தேசிய பேரிடர் மீட்பு நிதியில் இருந்து கூடுதலாக ஒதுக்கப்படும்.
  • கடந்த, நிதியாண்டில், அனைத்து மாநிலங்களுக்கும், 9,658 கோடி ரூபாய், மாநில பேரிடர் மீட்பு நிதிக்கு ஒதுக்கப்பட்டது. இந்தாண்டில் இதுவரை, 6,104 கோடி ரூபாய்ஒதுக்கப்பட்டுள்ளது. 
மத்திய தூர சீரியங்கு ஏவுகணையை பரிசோதித்தது அமெரிக்கா - ரஷ்ய ஒப்பந்தத்தில் இருந்து விலகல் எதிரொலி
  • மத்திய தூர சீரியங்கு ஏவுகணை ஒன்றை அமெரிக்கா பரிசோதனை செய்துள்ளது.
  • கலிஃபோர்னியா கடற்பகுதியில் ஞாயிற்றுக்கிழமை இந்த சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டதாக அமெரிக்க ராணுவத் தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது.
  • இத்தகைய சோதனைகளை தடை செய்யும் வகையில், ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து இம்மாதம் 2-ம் தேதி அமெரிக்கா விலகியது. இதையடுத்து, தற்போது இந்த சோதனையை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.
  • மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.
  • 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் வரை சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel