Type Here to Get Search Results !

21st AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய பானைக் குறியீடு கண்டெடுப்பு
  • ஏலகிரி மலைச் சரிவில் அமைந்துள்ள குண்டுரெட்டியூர் வனப் பகுதியில் சுமார் 2,000 ஆண்டுகள் பழைமையான குறியீட்டுடன் கூடிய பானை ஓடு மற்றும் பயன்படு பொருள்களைக் கண்டெடுத்துள்ளனர். 
  • அதாவது, உடைந்த சுடுமண் புகைப்பான், குறியீட்டுடன் கூடிய கருப்பு சிவப்பு பானை ஓடு, தந்தத்தால் ஆபரணம் செய்கையில் எஞ்சிய துண்டு, நெசவு செய்யப் பயன்படும் தக்ளி, சுடுமண் மணிகள், வண்ணம் தீட்டப்பட்ட களிமண் ஜாடிகளின் கைப்பிடி, சுடுமண் தாங்கிகள் ஆகிய அரிய பொருள்கள் கிடைத்தன.
  • ஆபரணங்கள் செய்ய பயன்பட்ட சுடுமண் மணிகளும் இங்கு கிடைத்துள்ளன. ராட்டையில் நூல் நூற்கும் வழக்கத்துக்கு முன் கையாலே நூல் நூற்கப் பயன்பட்ட சுடுமண் தக்ளி கிடைத்திருப்பது இப்பகுதியில் வாழ்ந்த மக்கள் நெசவுத் தொழில்நுட்பம் அறிந்தவர்கள் என்பதற்குச் சான்றாக உள்ளது.
  • பழந்தமிழர்கள் இயற்கையாகக் கிடைக்கக்கூடிய பல பொருள்களைக் கொண்டு செய்யப்பட்ட ஆபரணங்களால் தங்களை அழகுபடுத்திக் கொண்டனர். தமிழகத்தின் பல பகுதிகள் மேற்கொள்ளப்பட்ட தொல்லியல் ஆய்வுகளில் இதற்குச் சான்றுகள் கிடைத்துள்ளன. 
  • அவ்வகையில், இங்கு அறுத்தெடுக்கப்பட்டு ஆபரணம் செய்கையில், எஞ்சிய தந்தத்தின் ஒரு துண்டும் கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.



தேசிய சட்டப் பல்கலை. - என்.ஐ.டி. இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகம் மற்றும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக்கழகம் இணைந்து ஒருங்கிணைந்த வளர்ச்சிக்காக புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளன.
  • மேலும் தமிழ்நாடு தேசிய சட்டப் பல்கலைக் கழக பேராசிரியர்களின் சட்ட வரைவு ஒப்பந்த நிபுணத்துவம், காப்புரிமை, அறிவுசார் காப்புரிமை வரைவு ஒப்பந்த நிபுணத்துவங்களை திருச்சி தேசிய தொழில் நுட்பக்கழகம், தங்களது புதிய கண்டுபிடிப்பிற்கான வரைவு ஒப்பந்தங்களுக்காக பயன்படுத்திக் கொள்வது, மாணவர்களுக்கான அடிப்படை சட்ட உரிமைகள் குறித்து அறிந்து கொள்ள ஏதுவாக பயிற்சிப் பட்டறைகள் நடத்துவது ஆகியவற்றுக்கு வழிவகை செய்யப்படும்.
மத்திய அமைச்சக செயலராக ராஜுவ் கவுபா நியமனம்
  • மத்திய அமைச்சகத்தின் செயலாளரை தேர்வு செய்வதற்கான குழு ராஜுவ் கவுபாவை புதிய செயலாளராக நியமிக்கப்படுவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளது. 
  • அதன்படி மத்திய அமைச்சக செயலாளர் என்ற ராஜுவ் கவுபா வரும் 30ஆம் தேதி முதல் நியமிக்கப்படுகிறார். அவரது பதவிக்கலாம் இரண்டு ஆண்டுகள் ஆகும். மேலும், மத்திய செயலர் சிறப்பு பொறுப்பு அவருக்கு முன்கூட்டியே வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'ஒரே வளாகம்; ஒரே தலைமை ஆசிரியர்' - அரசாணை வெளியீடு
  • ஒரே வளாகத்தில் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளின் கல்விச் செயல்பாடுகளை கண்காணிக்கும் அதிகாரத்தை உயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு வழங்கி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
ரஷ்ய  உளவு பார்க்கும் புதிய ட்ரோன் விமான சோதனை வெற்றி
  • 6 டன் எடையுள்ள ட்ரோன் அல்டியஸ் யூ (drone Altius-U) வகை விமானம் 800 மீட்டர் உயரத்தில் 30 நிமிடம் பறந்து பத்திரமாக தரையிறக்கப்பட்டுள்ளது. உளவு பார்ப்பதற்காக அதில் பொருத்தப்பட்டுள்ள ட்ரோன் அமைப்பும் வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டது.
  • முழு அளவிலான உளவுப் பணிகளை நிறைவேற்றுவதற்கும், ஆப்டிகல், ரேடியோ-தொழில்நுட்பம் மற்றும் ரேடார் கருவிகளை நிர்வகிப்பதற்கும் இது பயன்படும் என்றும் கூறியுள்ளது.



நாடு முழுவதும் ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் அக்.2 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்த தடை: ரயில்வே அமைச்சகம் உத்தரவு
  • 50 மைக்ரானுக்கு குறைவான தடிமன் கொண்ட பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை என ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 
  • அக்டோபர் 2ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் எனவும் அறிவித்துள்ளது. மறு சுழற்சி செய்யக்கூடிய பைகளை உற்பத்தி செய்யவும் பயன்படுத்தவும் வலியுறுத்தப்படுகிறது.
பிசிசிஐக்கு தலைமை ஸ்பான்சராக பே டிஎம் 
  • மும்பையில் பிசிசிஐயின் தலைமை ஸ்பான்சர் உரிமை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் பிசிசிஐக்கு 2023-ம் ஆண்டு வரை தலைமை ஸ்பான்சர் பெறுப்பை பே டிஎம் நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டுள்ளது.
  • அதன்படி இந்திய அணி சர்வதேச போட்டிகள் மற்றும் இந்திய அளவிலான விளையாடும் அனைத்துப் போட்டிகளுக்கும் பே டிஎம் நிறுவனம் ஸ்பான்சர் ஆக இருக்கும். ஐந்து வருடத்தில் பெரும் வெற்றிகளுக்கு வழங்கப்படும் தொகையாக ரூ. 326.80 கோடி முடிவு செய்யப் பட்டுள்ளது. மேலும் கடந்த முறை ஒரு போட்டியில் வெற்றி தொகையாக 2.4 கோடி இருந்தது.
சர்வதேச ஹாக்கி போட்டி: இந்திய அணிகள் சாம்பியன்
  • ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் டெஸ்ட் என்ற சர்வதேச ஹாக்கி போட்டி நடந்தது. ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிபோட்டியில் இந்திய அணி, நியூசிலாந்தை அணியை, 5-0 என்ற கோல் கணக்கில் வென்று சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
  • பெண்கள் பிரிவில் நடந்த இறுதி ஆட்டத்தில், இந்திய அணி, ஜப்பானை எதிர்கொண்டது. நீண்ட போராட்டத்துக்குப் பிறகு இந்திய அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஜப்பானை வீழ்த்தி சாம்பியன் படத்தை வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel