Type Here to Get Search Results !

பழைய எலெக்ட்ரானிக் பொருள்களிலிருந்து தயாராகும் ஒலிம்பிக் பதக்கங்கள் / OLYMPIC MEDAL JAPAN 2020 CREATED FROM WASTE ELECTRONICS ITEMS

  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கான 365 நாள் கவுன்ட்டவுன் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு ஜூலை 24-ம் தேதி தொடங்கும் ஒலிம்பிக் போட்டிகள், ஆகஸ்டு 9-ம் தேதி வரை நடைபெற உள்ளன. 
  • இதையொட்டி, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடந்த கொண்டாட்ட நிகழ்ச்சியில், வெற்றியாளர்களுக்கு வழங்கப்படும் தங்கம், வெள்ளி, வெண்கலப்பதக்கங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • வழக்கமான ஒலிம்பிக் பதக்கங்கள் தயாரிப்பில் இருந்து ஜப்பான் முற்றிலுமாக வேறுபட்டுள்ளது. எலெக்ட்ரானிக் பொருள்களுக்கு பெயர்போன ஜப்பானில், மறுசுழற்சி செய்யப்பட்ட பழைய எலெக்ட்ரானிக் பொருள்களில் இருந்தே ஒலிம்பிக் பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன.
  • இதற்காக, 2017-ம் ஆண்டு பயன்பாட்டில் இல்லாத பழைய எலெக்ட்ரானிக் பொருள்களை நன்கொடை அளிக்குமாறு ஜப்பான் பொதுமக்களுக்கு டோக்கியோ ஒலிம்பிக் அமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. 
  • அதைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 6 மில்லியன் செல்போன்கள் உட்பட, 79,000 டன் பழைய எலெக்ட்ரானிக் பொருள்கள் சேகரிக்கப்பட்டன. அதில், 32 கிலோ தங்கம், 3500 கிலோ வெள்ளி, 2200 கிலோ காப்பர் பெறப்பட்டுள்ளன.2020 ஒலிம்பிக் பதக்கம்
  • 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு, கிட்டத்தட்ட 5,000 பதக்கங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒலிம்பிக் பதக்கத்தின் வடிவமைப்புக்காக 400-க்கும் மேற்பட்டோர் டிசைன்களை சமர்ப்பித்திருந்தனர். 
  • அதிலிருந்து, ஜூனிஷி கவானிஷி என்பவரின் டிசைன் தேர்வுசெய்யப்பட்டுள்ளது. 1964 ஒலிம்பிக்கை அடுத்து, 56 ஆண்டுகளுக்குப் பிறகு டோக்கியோவில் ஒலிம்பிக் தொடர் நடைபெறுவதால், தயாரிப்பு, ஏற்பாடு விஷயங்களில் மும்முரமாகக் களமிறங்கியுள்ளது ஜப்பான்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel