Type Here to Get Search Results !

26th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

உயிர் தியாகம் செய்த இந்திய வீரருக்கு விருது
  • ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றி, உயிர் தியாகம் செய்த இந்திய வீரருக்கு விருது வழங்கி, ஐக்கிய நாடுகள் சபைகவுரவித்துள்ளது.ஐக்கிய நாடுகள் சபை சார்பில், ஐ.நா., அமைதிப் படை, 70 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது.
  • இந்த படைக்கு, அதிகப்படியான வீரர்களை அனுப்பி வைத்திருக்கும் நாடுகளில், இந்தியா, மூன்றாம் இடத்தில் இருக்கிறது.இந்திய வீரர்கள், 6,693 பேர், அபேய், சிப்ரஸ், காங்கோ, ஹைதி, லெபனான், தெற்கு சூடான், மேற்கு சஹாரா ஆகிய நாடுகளில் பணியாற்றி வருகின்றனர்.
  • தற்போது, 96 ஆயிரம் வீரர்கள், ஐ.நா., அமைதிப் படையில் உள்ளனர். 15 ஆயிரம் அதிகாரிகளும், 1,600 தன்னார்வலர்களும் சேவையாற்றுகின்றனர்.இந்நிலையில், மத்திய கிழக்கு நாடான லெபனானில், ஐ.,நா., அமைதிப் படையில் பணியாற்றி வந்த இந்திய வீரர், ரமேஷ் சிங், சமீபத்தில் இறந்தார்.
  • ஐ.நா., அமைதிப் படையில் சிறப்பாக பணியாற்றியதற்காக, ரமேஷ் சிங் குடும்பத்துக்கு, ஐ.நா., அமைதிப் படையின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.இந்த விருதை, லெபனானுக்கான, ஐ.நா., அமைதிப் படையின் கமாண்டர், ஸ்டீப்போன டெல் கோல், அவரது குடும்பத்தினரிடம் வழங்கினார்.
  • இந்திய ராணுவம், காவல் துறை மற்றும் பிற அதிகாரிகளைச் சேர்த்து, இதுவரை, 163 பேர், ஐ.நா., அமைதிப் படையில் பணியாற்றி, வீர மரணம் அடைந்துள்ளனர்.
மொசாம்பிக் செல்கிறார் ராஜ்நாத்
  • மூன்று நாள் அரசு முறைப் பயணமாக மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத்சிங், நாளை (ஜூலை 28) ஆப்ரிக்க நாடான மொசாம்பிக் நாட்டிற்கு பயணம் மேற்கொள்கிறார்.
  • இந்த பயணத்தின் போது அந்நாட்டு அதிபர், வெளியுறவு அமைச்சர் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து ராணுவ ஒத்துழைப்பு உள்ளிட்ட மூன்று ஒப்பந்தங்களை மேற்கொள்கிறார். ராஜ்நாத்துடன் ராணுவ அமைச்சக செயலர் சஞ்சய் மித்ரா உள்ளிட்ட அதிகாரிகள் உடன் செல்கின்றனர்.



4 ஆவது முறை: கர்நாடக முதலமைச்சராக பதவியேற்றார் எடியூரப்பா
  • கர்நாடகா முதலமைச்சர் எடியூரப்பா பதவி ஏற்றார். அவருக்கு ஆளுநர் வஜூபாய் வாலா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
  • எடியூரப்பா 4வது முறையாக கர்நாடக முதலமைச்சராக இன்று மாலை பதவியேற்றுள்ளார். அவர் இந்த மாதம் 31ந்தேதிக்குள் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று கவர்னர் உத்தரவிட்டு உள்ளார்.
  • இன்று மாலை 6 மணி அளவில் கவர்னர் மாளிகையில் எளிய முறையில் முதல்வராக எடியூரப்பா கடவுளின் மீது சத்தியம் செய்து பதவியேற்றார்.
பள்ளி வாகனங்களில் சிசிடிவி, கேமரா, ஜிபிஎஸ் கருவி பொறுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை
  • தனியார் பள்ளி வாகனங்களில் சிசிடிவி, கேமரா, ஜிபிஎஸ் கருவி பொறுத்த தமிழக பள்ளிக்கல்வித் துறை சுற்றறிக்கை வெளியிட்டு உத்தரவிட்டுள்ளது. உயர்நீதிமன்ற உத்தரவை பின்பற்றி தமிழக பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டு உள்ளது. 
முதல் முறை: இங்கிலாந்தின் உள்துறை அமைச்சராக இந்திய வம்சாவளிப் பெண் ப்ரீத்தி படேல் நியமனம்
  • இங்கிலாந்தின் புதிய பிரதமராக பதவியேற்றுக்கொண்ட போரிஸ் ஜான்ஸன் அமைச்சரவையில் முதல் முறையாக இந்திய வம்சாவளிப்பெண் ப்ரீத்தி படேல் உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • ப்ரீத்தி படேல் இந்தியாவில் பிறக்கவில்லை என்றபோதிலும் இவரின் தாய்,தந்தை இருவரும் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் பிறந்து, வளர்ந்து இங்கிலாந்தில் குடியேறியவர்கள்.
  • ப்ரீத்தி படேல் தவிர நிதியமைச்சராக பாகிஸ்தானைப் பூர்வீகமாகக் கொண்ட சாஜித் ஜாவித், சர்வதேச மேம்பாட்டு அமைச்சராக அலோக் சர்மா, நிதி அமைச்சகத்தின் முதன்மைச் செயலாளர் அல்லது இணையமைச்சராக ரிஷிசுனக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் தெற்காசியப் பின்புலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
  • உள்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள 47 வயது ப்ரீத்தி படேல் தீவிரமான பிரெக்ஸிட் ஆதரவாளர். பிரெக்ஸிட் கோரிக்கைக்கு ஆதரவாக குரல் எழுப்பி வந்த கன்சர்வேட்டிவ் (பழமைவாதக் கட்சி) கட்சியின் தலைவரும் பிரதமருமான போரிஸ் ஜான்ஸனுக்கு பக்கபலாக ப்ரீத்தி படேல் செயல்பட்டார்.
  • கடந்த 2010-ம் ஆண்டு எசெக்ஸ் மாநிலத்தில் உள்ள விதாம் பகுதியில் இருந்து எம்.பி.யாக ப்ரீத்தி படேல் தேர்வு செய்யப்பட்டார். டேவிட் கேமரூன் தலைமையிலான அரசில் இளநிலை அமைச்சராக ப்ரீத்தி படேல் நியமிக்கப்பட்டு இருந்தார்.
  • 2014-ம் ஆண்டில் நிதி அமைச்சகத்தில் அமைச்சராக இருந்தார். அதன்பின் 2015-ம் ஆண்டு தேர்தலில் மீண்டும் ப்ரீத்தி படேல் வென்றபின், அவரை வெளியுறவுத்துறைக்கு உயர்த்தினார் முன்னாள் பிரதமர் தெரஸா மே. ஆனால், பிரதமர் தெரஸா மேயுடன் ஏற்பட்ட கருத்து மோதலால், கடந்த 2017-ம் ஆண்டு அமைச்சர் பதவியை ப்ரீத்தி படேல் ராஜினாமா செய்தார்.



புதிய பயிற்சியாளரை தேர்ந்தெடுக்க கபில்தேவ் தலைமையில் குழு
  • இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக இருக்கும் ரவி சாஸ்திரி, பந்துவீச்சு பயிற்சியாளராக பரத் அருண், பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பாங்கர், பீல்டிங் பயிற்சியாளர் ஸ்ரீதர் ஆகியோரின் பதவி காலமும் உலகக் கோப்பை தொடருடன் முடிவடைந்தது. 
  • இதனையடுத்து இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டுள்ளன. இந்தப் பதவிகளுக்கு விண்ணப்பிக்க வரும் 30ஆம் தேதி வரை கால அவகாசம் உள்ளது.
  • இந்நிலையில் இந்தப் பதவிக்கு தகுதியான நபரை தேர்ந்தெடுக்க இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழுவில் கபில்தேவ், அன்ஷுமன் கெயிவாட் (Anshuman Gaekwad), சாந்தா ரங்கசாமி உள்ளிட்டவர்கள் இடம்பெற்றுள்ளனர். 
  • இவர்கள் இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்தவர்களை வரும் ஆகஸ்ட் மாதம் 13 அல்லது 14ஆம் தேதி நேர்காணல் நடத்தவுள்ளனர்.
அதிக விக்கெட் எடுத்த 9வது வீரர் என்ற சாதனை படைத்த லசீத் மலிங்கா
  • கிரிக்கெட் உலகில் யார்கர் மன்னன் என்று அழைக்கப்படுபவர் இலங்கை அணியின் நட்சத்திர வீரர் லசித் மலிங்கா. இங்கிலாந்தில் நடைபெற்ற உலக கோப்பை போட்டியில் மலிங்கா சிறப்பாக பந்து வீசி 13 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 
  • உலகக்கோப்பையுடன் ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கபட்ட நிலையில் இவர் பங்களாதேஷ் மேற்கொள்ளும் சுற்றுபயண தொடரின் முதல் போட்டிற்கு பிறகு ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார்.
  • இந்நிலையில் இன்று நடைபெற்ற பங்களாதேஷ் எதிராக முதல் தொடரில் லசித் மலிங்கா 3 விக்கெட்களை பெற்று அதிக விக்கெட் எடுத்த 9வது வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். முதல் இடத்தில் இலங்கை அணியின் நடச்த்திர பந்துவீச்சாளாரான முத்தையா முரளிதரன் 534 ரன்கள் குவித்து முதல் இடத்தில் உள்ளார்.
பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு
  • பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது அமீர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தார். 
  • டெஸ்ட் போட்டியில் இருந்து விலகினாலும் ஒருநாள் மற்றும் டி.20 போட்டிகளில் தொடர்ந்து விளையாடுவதாக அமீர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel