Type Here to Get Search Results !

'என்.ஐ.ஏ சட்டத்திருத்தம்' / NIA LAW 2019

என்.ஐ.ஏ(தேசியப் புலனாய்வு முகமை)
  • 2008 -ம் ஆண்டில் நடைபெற்ற மும்பைத் தீவிரவாதத் தாக்குதலை அடுத்து, இந்தியாவின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளைவிக்கும் வகையில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொள்ள போதுமான புலனாய்வு அமைப்பு இல்லை என்று அரசு கருதியதை அடுத்து, 2009-ம் ஆண்டு, தீவிரவாதச் செயல்களுக்கு எதிரான நடவடிக்கை எடுக்க சிறப்பு அதிகாரம் கொண்ட தேசியப் புலனாய்வு முகமை (National Investigation Agency, NIA) சட்டத்தை நிறைவேற்றியது. 
  • நாடு முழுவதும் நடைபெறும் தீவிரவாதம் தொடர்புடைய குற்றங்களை மாநில அரசுகளின் அனுமதி இன்றியேகூட விசாரணைகள் மேற்கொள்ள இவ்வமைப்புக்கு உரிமையுள்ளது. இதன் முதல் தலைமை இயக்குநரான ஆர்.வி. ராஜூ பணி ஓய்வுபெற்றதை அடுத்து எஸ்.சி.சின்ஹா தலைமை இயக்குநராகப் பணியாற்றி வந்தார். 
  • தற்போதைய தலைமை இயக்குநராகவுள்ள ஒய்.சி.மோடி 18.09.2017 முதல் பணியாற்றிவருகிறார்.
  • தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத்திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும் மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர். 
  • பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக, என்.ஐ.ஏ-வுக்குக் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத்திருத்த மசோதாவை மக்களவையில் நிறைவேற்றியுள்ளது, மத்தியில் ஆளும் மோடி அரசு.
  • இச்சட்டம் கடந்த 10 ஆண்டுகளாக அமலில் இருப்பதோடு, இச்சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட புலனாய்வு அமைப்பு புலனாய்வு செய்து பல வழக்குகளில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. அவ்வழக்குகளும் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றன. தற்போது அமலிலுள்ள இந்தச் சட்டத்தில் தேசியப் புலனாய்வு அமைப்பிற்குக் கூடுதல் அதிகாரம் வழங்கும் சட்டத் திருத்த மசோதா, மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. 
  • நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், மசோதாவுக்கு ஆதரவாக 278 உறுப்பினர்களும், மசோதாவுக்கு எதிராக 66 உறுப்பினர்களும் வாக்களித்தனர். பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவு காரணமாக, என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையிலான சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 
  • இந்தச் சட்டத்தின் பிரிவுகளின் கீழ் வரக்கூடிய வழக்குகளில், முக்கியமாக நாட்டின் பாதுகாப்பு மற்றும் ஒற்றுமைக்குப் பிரச்னை தொடர்பான வழக்குகளில் மட்டுமே தேசியப் புலனாய்வு முகமை விசாரிக்க முடியும்.
  • ன்.ஐ.ஏ சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைது செய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும், அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை.
  • ரயில்வேதுறையில் வடவர்களுக்கே அனைத்து வேலைகளையும் கொடுத்து பெரும்போராட்டத்தை சந்தித்தனர். பின்னர் ரயில்வேயில் ஹிந்தி மற்றும் ஆங்கிலத்தில தான் தகவல் பரிமாற்றம் செய்யவேண்டும் என்று சுற்றறிக்கை, அதனை பெரும் கண்டணத்துக்குப் பின்னர் திரும்பப் பெற்றனர்.
  • மும்மொழிக்கொள்கை என்ற பெயரில் இந்தியைத் திணிக்கும் முயற்சி மீண்டும் தொடங்கியது; தகித்தது தமிழகம். இந்தி கட்டாயம் எனச் சொல்லவில்லை; விருப்பமான மொழி என்று வேறு வார்த்தையை பிரயோகித்தார்கள். 
  • தபால் துறைத் தேர்வில் தமிழைத் தவிர்த்தார்கள்; கொதித்தது தமிழகம். தேர்வை ரத்து செய்துவிட்டார்கள். அடுத்தடுத்து தமிழகத்தின் மீது மத்திய அரசு கற்களை எறிவதன் காரணமென்ன என்று ஆராய்ந்தால் பதுங்கியிருந்து பாய்கிறது என்.ஐ.ஏ சட்டத்திருத்தம்.
  • குட்டியைவிட்டு ஆழம் பார்ப்பதைப்போல சின்னச் சின்ன தாக்குதல்களை முதலில் கொடுத்து அதற்கான எதிர்ப்புகளைச் சோதித்துப் பார்த்த மத்திய அரசு, யாருமே எதிர்பாராதவகையில் அதிரடியாக இந்தச் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்திருக்கிறது. 
  • இந்தச் சட்டத்தால் மாநில அரசுகளின் அதிகாரம் மறைமுகமாகப் பறிக்கப்படுமோ என்ற பொதுவான கேள்வியைத் தவிர்த்து, இந்தச் சட்டம் தமிழகத்தை ஒடுக்குவதற்காகவே தனியாகத் தயாரிக்கப்பட்டதோ என்ற அச்சத்தையும் தோற்றுவித்துள்ளது.
  • தேசியப் புலனாய்வு அமைப்பு தொடர்பான சட்டத்தைத் திருத்தம் செய்து புதிய சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியிருக்கிறது, மத்திய அரசு. 
  • என்.ஐ.ஏ என்னும் தேசியப் பாதுகாப்பு அமைப்பைத் தொடங்கியபோது, 'நாட்டின் பாதுகாப்பிற்கான முகமை இது' என்று அப்போது விளக்கம் சொன்னது. கடந்த பத்தாண்டுகளில் அந்த அமைப்பின்மீது பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சட்டத்திருத்தம் பல்வேறு விவாதங்களைக் கிளப்பிவிட்டுள்ளது.



சட்டத்திருத்தத்தில் இருப்பதென்ன?
  • இச்சட்டத்தின் பிரிவுகள் இந்தியாவிற்கு வெளியிலிருந்து இந்தியாவின் நலனுக்கும் இந்தியர்களுக்கும் எதிராகக் குற்றச்செயலில் ஈடுபடும் எவருக்கும் பொருந்தும்.
  • இச்சட்டத்தின்கீழ் இயங்கும் காவல் அலுவலர்களுக்கு, இந்தியாவிற்கு வெளியிலும் சென்று குற்றம்சம்பந்தமாக விசாரிக்கும் உரிமைகள், கடமைகள், பொறுப்புகள், சிறப்புரிமைகள் ஆகியவற்றைத் தருகிறது, இந்தச் சட்டத்திருத்தம்.
  • இச்சட்டத்தின்கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றமொன்றை வெளிநாட்டில் நிகழ்த்தினாலும், அதை இந்தியாவில் நடைபெற்ற குற்றமாகவே கருதி வழக்குப்பதிவு செய்யமுடியும்.
  • இக்குற்றங்களை விசாரிக்கச் சிறப்பு நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்படும்.
  • முதலாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், உள்நாட்டுப் பாதுகாப்பு தொடர்பான விவகாரங்களை மட்டுமே கையாண்டு வந்த என்.ஐ.ஏ, தற்போது இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலமாக வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பாதுகாப்புக்கும் பொறுப்பேற்கவுள்ளது. 
  • உதாரணமாக, வெளிநாடுவாழ் இந்தியர்களின் உயிருக்கோ, உடைமைக்கோ பாதிப்பு ஏற்பட்டால் நேரடியாக என்.ஐ.ஏ. அமைப்பால் களமிறங்க முடியும். இது, அந்தக் குறிப்பிட்ட நாட்டுடன் இந்தியாவிற்கு உள்ள ராஜாங்க ரீதியிலான ஒத்துழைப்பைப் பொறுத்தது என்று கூறப்படுகிறது.
  • இரண்டாவது அம்சத்தைப் பொறுத்தவரையில், குறிப்பான வழக்குகளில் பல்வேறு தரப்பில் அனுமதிபெற்றுச் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்துவதற்கு, குறைந்தபட்சம் ஆறு முதல் 9 மாதங்கள்வரை ஆவதால், மத்திய அரசின் அனுமதியை மட்டும் பெற்றுக்கொண்டு விசாரணை நடக்கும் செசன்ஸ் நீதிமன்றத்தையே சிறப்பு நீதிமன்றமாகச் செயல்படச் செய்யும் வகையில் இந்தச் சட்டத் திருத்தத்தைக் கொண்டுவந்திருக்கிறது.
  • மூன்றாவதாக, என்.ஐ.ஏ-வால் விசாரிக்கத்தகுந்த குற்றங்களின் பட்டியலில் புதிதாகப் பல்வேறு பிரிவுகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆள்கடத்தல், கள்ள நோட்டு அச்சடித்தல், (இந்திய தண்டனைச் சட்டம் 370, 370A (1860)) ; தடை செய்யப்பட்ட ஆயுதங்கள் தயாரித்தல் அல்லது விற்பனை செய்தல் (ஆயுதச்சட்டம் (1959) பிரிவு 25 [1AA] ; இணையக் குற்றங்கள் (தகவல் தொழில்நுட்பச் சட்டம் (2000) பிரிவு 66F) ; வெடிபொருட்கள் தடுப்புச் சட்டம் (2000) ஆகிய பிரிவுகளை என்.ஐ.ஏ. விசாரிக்கும் குற்றப்பட்டியல்களில் சேர்த்துள்ளது.
  • இதுதொடர்பான குற்றங்களை விரைந்து விசாரிக்கும் வகையில் சிறப்பு நீதிமன்றங்களை அமைக்கவும் இந்தச் சட்டத் திருத்தம் வழிவகை செய்கிறது. 1908-ம் ஆண்டு வெடிபொருள்கள் தடைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குற்றங்கள் ஆகியவை குறித்து விசாரணை நடத்தும் அதிகாரமும் என்.ஐ.ஏ அமைப்புக்கு வழங்க வகை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் உள்ள தேசியப் புலனாய்வு முகமை போன்று, உலகில் உள்ள பல்வேறு நாடுகளில் சிறப்பு அந்தஸ்துகளைக் கொண்ட புலனாய்வு அமைப்புகள் உள்ளன. உதாரணத்திற்கு, அமெரிக்காவில் உள்ள சென்ட்ரல் இன்டெலிஜென்ஸ் ஏஜென்சி (CIA) மற்றும் பெடரல் பீரோ ஆஃப் இன்வெஸ்டிகேஷன் (FBI). UK-வில் Joint Intelligence Organisation (JIO) / National Crime Agency (NCA). 
  • சீனாவில் National Security Bureau, ரஷ்யாவில் Federal Security Service (FSB). பாகிஸ்தானில் Inter-Services Intelligence (ISI). கனடாவில் Canadian Security Intelligence Service (CSIS). பிரேசிலில் Brazilian Intelligence Agency (ABIN) மற்றும் அர்ஜென்டினாவில் Federal Intelligence Agency (AFI) எனப் பலவகையான அதிகாரமிக்க புலனாய்வு அமைப்புகள் உள்ளன.



தற்போது கொண்டுவந்த சட்டத்திருத்தத்தின் மூலம் இந்த அமைப்பு என்னவெல்லாம் செய்ய முடியும்?
  • புதிய குற்றப் பிரிவுகளைச் சேர்த்ததன் மூலமாகப் பல்வேறு வழக்குகளில் மாநில அரசின் அதிகாரத்தை, தேசியப் புலனாய்வு முகமையின் கையில் ஒப்படைத்திருக்கிறது மத்திய அரசு.
  • இந்தச் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட தேசியப் புலனாய்வு முகமைக்கு சி.பி.ஐ-யைவிட அதிகமான அதிகாரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இச்சட்டத்தின்படி, எந்த மாநிலத்திற்குள் நுழைவதற்கும், யார்மீதும் நடவடிக்கை எடுப்பதற்கும் தேசியப் புலனாய்வு முகமைக்கு முழு அதிகாரம் உண்டு. 
  • இதற்குக் குறிப்பான மாநில அரசிடமோ, நீதிமன்றத்திடமோ அனுமதி கேட்க வேண்டிய அவசியமில்லை. இவர்களுக்குத் தேவையான போலீஸ் பாதுகாப்பை வழங்க வேண்டியது மாநில அரசின் கடமை என்று வரையறுக்கப்பட்டுள்ளது.
  • இணையக் குற்றப்பிரிவு (66F) என்.ஐ.ஏ.-வின்கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் இந்தப் பிரிவு பின்வருமாறுதான் ஆரம்பிக்கிறது. " with intent to threaten the unity, integrity, security or sovereignty of India or to strike terror in the people or any section of the people by". 
  • அதாவது, இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, பாதுகாப்பு அல்லது இறையாண்மையை அச்சுறுத்தும் நோக்கிலோ, மக்கள் அல்லது மக்களில் ஒருபிரிவினர் மீது பயங்கரவாதமான தாக்குதலை நிகழ்த்தும் நோக்கத்துடன் ஒருவர் செயல்படுவார் எனில், அவரை NIA கைது செய்து விசாரிக்கலாம். 
  • அரசுக்கு எதிராக யார் போராடினாலும், அரசை எதிர்த்து நின்றாலும் அவர்களை இந்தச் சட்டத் திருத்தத்தின் மூலம் கைதுசெய்து ஆண்டுக்கணக்கில் சிறையில் தள்ள வாய்ப்புள்ளது.
  • இந்தச் சட்டத்தின்படி ஒருவர் மீது சந்தேகம் இருந்தாலே, அவரைக் கைதுசெய்து விசாரணைக் கைதியாகச் சிறையில் அடைக்கலாம். மேலும் அந்த நபர் ஏன் கைதுசெய்யப்பட்டார், எதன் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டார் என்ற விவரங்களை FIR-ல் கூறவேண்டிய அவசியம் இல்லை. ஒருவர் இந்தியாவிற்கு எதிரான முழக்கம்கொண்ட ஒரு சிறிய காகிதத்தை வைத்திருந்தால்கூட அவரைக் கைதுசெய்ய இயலும்.
  • NIA பட்டியலில் உள்ள குற்றத்தைச் செய்பவர், இந்தியாவிற்கு அப்பால் இருந்து குற்றத்தைச் செய்திருந்தாலும். அந்தக் குற்றத்தின்பால் இந்தியாவையோ அல்லது இந்தியர்களையோ பாதிக்கும்பட்சத்தில் இந்தச் சட்டம் பயன்படுத்தப்படும். 
  • குற்றவாளி இன்னொரு நாட்டிலிருந்தாலும் அதை விசாரிக்கும் சட்டம் நம்மிடம் இருந்தால் மட்டும் போதுமா? அதற்கு அந்த நாடுகள் தகுந்த அனுமதியை அளிக்குமா? நம்முடன் நட்புறவில் இல்லாத நாடுகளில் இது எப்படிச் சாத்தியம்? இப்படியெல்லாம் அச்சங்களும் கேள்விகளும் எழுகின்றன. அதற்கு அரசு தரும் விளக்கம் அவ்வளவு நம்பிக்கை தருவதாக இல்லை...
  • என்.ஐ.ஏ. எவ்வகையிலும் தவறாகப் பயன்படுத்தப்படாது. என்.ஐ.ஏ. இதுவரை 272 வழக்குகளைக் கையில் எடுத்துள்ளது. இவற்றில் 199 வழக்குகளில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
  • குற்றச்சாட்டு நிரூபணம் 90 சதவிகிதம் ஆகும். ஆள் கடத்தல், கள்ள நோட்டு, ஆயுத தயாரிப்பு, விற்பனை, இணையவழி பயங்கரவாதம் ஆகிய குற்றங்களையும் என்.ஐ.ஏ. விசாரிக்கும். "இந்த மண்ணிலிருந்து பயங்கரவாதத்தை வேரோடு அகற்றுவோம். 'பொடா' சட்டம், பயனுடையது. 
  • ஆனால், வாக்கு வங்கி அரசியலுக்காக அதை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு ரத்து செய்துவிட்டது. ஆனால் நாங்கள் பயங்கரவாதச் செயல்களைச் செய்தவர்கள் யார், எந்த மதம், இனத்தைச் சேர்ந்தவர்கள் என்று பார்க்காமல் உறுதியான நடவடிக்கை எடுப்போம்" என்று மத்திய அமைச்சர் அமித் ஷா கூறியுள்ளார்.
  • ஆனால், இந்த அரசு அப்படியே நடந்துகொள்ளுமா என்பதுதான் அச்சத்தை உச்சமாக்குகிறது. இந்தியா முழுவதும் ஒரே தேர்தல், ஒரே ரேஷன் கார்டு, ஒரே கல்வி, தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் திருத்தம் என்கிற வரிசையில் இப்போது தேசியப் புலனாய்வு முகமை (NIA) சட்டத் திருத்தத்தின் மூலமாக ஒரே சித்தாந்தம் என்பதை புகுத்தப் பார்ப்பதாகப் பல தரப்பிலும் சந்தேகம் கிளம்பியிருக்கிறது. 
  • இந்தச் சட்டத் திருத்தம் மாநில உரிமைகளைப் பறிப்பது மட்டுமல்லாமல், இருக்கும் அனைத்து ஜனநாயக உரிமைகளையும் பறிப்பதாகச் சொல்கிறார்கள் பலதரப்பினரும்.
சட்டதிருத்தத்தின் பாதிப்புகள்
  • ஒரு சாதாரண மனிதர் அரசாங்கத்தை எதிர்த்தால், அவரை இந்த சட்டத் திருத்தம் மூலம் `தேசத் துரோகி, தீவிரவாதி' என முத்திரை குத்தமுடியும். ஒவ்வொரு முறையும் இந்த அரசாங்கத்தைக் கேள்வி கேட்கும்போது நாம் ஏன் (எதிர்க்கட்சி) தேச விரோதி என்று அழைக்கப்படும் அபாயத்தில் இருக்கிறோம்? அரசாங்கத்துடன் உடன்படாத எதிர்க்கட்சிகளை, எதிர்க்கட்சியினரை, ஆளும் கட்சியின் ட்ரோல் (troll ) படையினர் `தேச விரோதி' என அழைக்கிறார்கள். அவர்கள் மத்தியில் இந்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டால் இன்னும் மோசமான பல விளைவுகளைச் சந்திக்க நேரிடும்"
  • ஒருபுறத்தில் அச்சமும், மறுபுறத்தில் ஆறுதலும் விதைக்கப்பட்டாலும் இந்தச் சட்டத்திருத்தம் நடைமுறைக்கு வரும்போதுதான் எது உண்மை என்பது தெரியவரும். 
  • ஆனால் மக்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் எந்தச் சட்டமும் நிலைத்ததாகச் சரித்திரம் இல்லை. தேசம் என்பது வெறும் கடலும் நிலமும் கொண்ட பரப்பளவு மட்டுமல்ல. அது அங்குள்ள மக்களின் ஆன்மாவையும் உணர்வுகளையும் உள்ளடக்கியது. 
  • தேசத்தைப் பாதுகாக்கிறோம் என்ற பெயரில் தேசத்திற்குள் உள்ள மக்களின் கருத்துச் சுதந்திரத்தையும், அடிப்படையான போராட்ட உரிமைகளையும் பறிக்க நினைத்தால் தடா, பொடா போலவே இந்தச் சட்டமும் மக்களால் முறியடிக்கப்படும் என்பதே காலம் உணர்த்தியுள்ள பாடம். அதுவே இந்திய சட்ட வரலாறு.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel