Type Here to Get Search Results !

27th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மின்சார வாகனங்களுக்கு வரி குறைப்பு

  • ஜி.எஸ்.டி., கவுன்சிலின், 36வது கூட்டம், 25ம் தேதியன்று நடைபெறுவதாக இருந்த நிலையில், அக்கூட்டம் தள்ளி வைக்கப்பட்டது. கூட்டம் ரத்து அன்றைய தினம், பார்லிமென்ட் கூட்டத்தில்,நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன் பங்கேற்கஇருந்ததால், கூட்டம் ரத்து செய்யப்பட்டது.
  • இதன் பின், இக்கூட்டம் நேற்று, காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இக்கூட்டத்தில், மின்சார வாகனங்களுக்கான, ஜி.எஸ்.டி., வரியை, 12 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைப்பதாக முடிவெடுக்கப்பட்டது. 
  • இந்த வரி குறைப்பு, ஆகஸ்ட், 1ம் தேதி முதல், அமலுக்கு வர உள்ளது. மின்சார வாகனங்களுக்கு மட்டுமின்றி, மின்சார வாகனங்களுக்கான, 'சார்ஜர்'கள் மீதான, வரியையும், தற்போது உள்ள, 18 சதவீதத்திலிருந்து, 5 சதவீதமாக குறைத்து அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆந்திர விக்ஞான் பல்கலைக்கழகம் சார்பில் இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம்

  • ஆந்திர விக்ஞான் பல்கலைக்கழகம் சார்பில் இசைஞானி இளையராஜாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், வொட்லமுடி கிராமத்தில் உள்ள விக்ஞான் பல்கலைக்கழகத்தில் நேற்று 7வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 
  • விழாவில் ஐதராபாத் மத்திய பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ஹரி நாராயணா 1500 மாணவ, மாணவிகளுக்கு பட்டம் வழங்கினார். மேலும் இசைஞானி இளையராஜா, அப்போலோ மருத்துவமனையின் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் கோபால கிருஷ்ண கோகலே, தனியார் நிறுவன அமைப்பின் மூத்த துணை தலைவர் ராஜண்ணா ஆகியோருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.



இந்தியாவுக்கு வந்த அபாச்சே ஹெலிகாப்டர்கள் - அமெரிக்காவில் தயாரானவை

  • இந்திய ராணுவத்தை பலப்படுத்த இந்திய அரசு பல்வேறு மேம்பாட்டு திட்டங்களை செய்து வருகிறது. ரஷ்யாவிடமிருந்து ஆயுத கப்பல், பிரான்ஸிடமிருந்து ரஃபேல் விமானம் என பல நாடுகளிலுருந்தும் ராணுவ தளவாடங்களை வாங்கி வருகிறது இந்தியா. 
  • அந்த வகையில் அமெரிக்காவின் போயிங் நிறுவனத்துடன் அதிநவீன ஹெலிகாப்டர்கள் வாங்குவதற்காக 2015ம் ஆண்டு ஒப்பந்தம் போடப்பட்டது. அதன்படி போயிங் நிறுவனத்திடம் அபாச்சே ஏ64 ரக விமானங்கள் 22 வாங்க இந்தியா ஒப்பந்தம் செய்துள்ளது.
  • அமெரிக்காவில் போயிங் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு முதல் தவணையாக 4 ஹெலிகாப்டர்கள் இந்தியாவிற்கு வந்து சேர்ந்துள்ளன. அடுத்த வாரத்தில் இன்னும் 4 ஹெலிகாப்டர்கள் வந்து சேரும். மீதமுள்ள ஹெலிகாப்டர்கள் 2020ம் ஆண்டில் தவணை முறையில் டெலிவரி செய்யப்படும்.
  • உலகின் அதிவேக ராணுவ ஹெலிகாப்டர்களில் ஒன்றான அபாச்சே மணிக்கு 290 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்க கூடியது. வானிலிருந்து பூமிக்கு ஏவப்படும் ஏவுகணைகள், சரமாரியாக குண்டுமழை பொழியும் 30எம்.எம் மெஷின் கன், டாங்கிகளை சுட்டு வீழ்த்தக்கூடிய ஹெல்ஃபயர் ராக்கெட்டுகள் ஆகியவை இதன் சிறப்பம்சங்கள். 
  • அபாச்சே ரக ஹெலிகாப்டர்களில் மூன்று வகை உள்ளது. அதில் முதல்வகைதான் இந்த ஏ64. இதன் தயாரிப்பு விலை 20 மில்லியன் டாலர்கள். 
5ஆண்டுகளில் 1கோடிக்கும் மேலான மரங்கள் அழிப்பு: பாராளுமன்றத்தில் மத்தியஅரசு தகவல்

  • சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக மரங்கள் வெட்டப்படுவது குறித்து உறுப்பினரின் கேள்விக்கு பாராளுமன்றத்தில் மத்திய வனத்துறை அமைச்சகம் பதில் தெரிவித்து உள்ளது.
  • சுற்றுச்சூழலை பாதுக்காக்க மரங்களை வெட்டக்கூடாது என்று சமூக ஆர்வலரகள் கூக்குரலிட்டு வரும் வேளையில், மற்றொரு புறம் சாலை விரிவாக்கம் போன்ற பணிகளுக்காக மரங்கள், வனங்களை மத்திய, மாநில அரசுகள் அழித்து வருகின்றன.
  • அதன்படி, அரசின் அனுமதிப்பெற்று வெட்டப்பட்டுள்ள மரங்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன. அதில், கடந்த 2014-15ம் ஆண்டு, 2334319 மரங்களும், 2015-16ம் ஆண்டு 1696917 மரங்களும், 2016-17ம் ஆண்டில் 1701416 மரங்களும், 2017-18ம் ஆண்டில் 2552164 மரங்களும், 2018-19ம் ஆண்டில் 2691028 மரங்களும் வெட்டப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 1,09,75,844 (1கோடியே, 9 லட்சத்து 75ஆயிரத்த 844 மரங்கள் அனுமதிப் பெற்று வெட்டப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தென்கொரியாவில் நடந்த உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டியில் புதிய உலக சாதனை

  • உலக நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி தென்கொரியாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த கலப்பு 4 x 100 மீட்டர் பிரிஸ்டைல் தொடர் நீச்சலில் காலெப் டிரஸ்செல், ஜாச் ஆப்பிள், மலோரி கமர்போர்ட், சிமோன் மானுல் ஆகியோர் அடங்கிய அமெரிக்க குழுவினர் 3 நிமிடம் 19.40 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கத்தை வென்றதுடன் புதிய உலக சாதனையும் படைத்தனர். 
  • 2 ஆண்டுக்கு முன்பு அமெரிக்கா 3 நிமிடம் 19.60 வினாடிகளில் இலக்கை எட்டியதே முந்தைய சாதனையாக இருந்தது.




தேசிய மகளிர் செஸ் சாம்பியன் போட்டி: பட்டத்தை தக்க வைத்தார் பக்தி குல்கர்னி

  • காரைக்குடியில் 46-ஆவது மகளிர் தேசிய செஸ் சாம்பியன் போட்டி நடைபெற்று வருகிறது. இறுதிச் சுற்றில் நடப்பு சாம்பியனான ஏர் இந்தியாவின் பக்தி குல்கர்னி, ஆந்திரத்தைச் சேர்ந்த சர்வதேச மாஸ்டர் பிரதியுஷா போத்தாவும் மோதினர். இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.
  • பக்தி குல்கர்னி, பிரதியுஷா இருவரும் தங்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்புகளை தவற விட்டனர்.
  • 62 நகர்த்தல்களுக்கு பின் இருவரும் ஆட்டத்தை முடித்துக் கொள்ள ஒப்புக் கொண்டனர். இறுதியில் 11 சுற்றுகளில் 10 புள்ளிகளைப் பெற்ற பக்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தக்க வைத்து
  • க் கொண்டார். அவருக்கு ரூ.4 லட்சம் ரொக்கப் பரிசு வழங்கப்பட்டது.8.5 புள்ளிகளுடன் தில்லியின் வந்திகா அகர்வால் இரண்டாம் இடத்தைப் பெற்றார். அவருக்கு ரூ.3 லட்சம் ரொக்கப் பரிசு தரப்பட்டது.
  • திவ்யா தேஷ்முக் 8.5 புள்ளிகள், பிரதியுஷா போத்தா,மிருதுள் தினகர், ஸ்ரீஜா சேஷாத்திரி, நிஷா 8 புள்ளிகளைப் பெற்றனர்.
தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை: தங்கம் வென்றார் ஆஷிஷ் குமார்

  • பாங்காக்கில் நடைபெற்று வரும் இப்போட்டியின் இறுதிச் சுற்று ஆட்டங்கள் சனிக்கிழமை நடைபெற்றன. 37 நாடுகளைச் சேர்ந்த உலகின் தலைசிறந்த குத்துச்சண்டை வீரர்கள் இதில் கலந்து கொண்டதால் இது முக்கியத்துவம் பெற்றது. 
  • ஆடவர் 75 கிலோ பிரிவில் இந்தியாவின் ஆஷிஷ் குமார் 5-0 என்ற புள்ளிக் கணக்கில் கொரியாவின் கிம் ஜின்ஜேவை வீழ்த்தி தங்கம் வென்றார். 2 மாதங்களுக்கு முன்பு தான் இந்திய ஓபனில் வெள்ளி வென்றிருந்தார் ஆஷிஷ்.
  • மகளிர் 51 கிலோ பிரிவில் நிஹாத் சரீன் 0-5 என்ற புள்ளிக்கணக்கில் சீனாவின் ஆசிய சாம்பியன் சேங் யுவானிடம் தோல்வியுற்று வெள்ளி வென்றார். 56 கிலோ பிரிவில் முகமது ஹஸிமுதீன், 49 கிலோ பிரிவில் தீபக், 81 கிலோ பிரிவில் பிரிஜேஷ் யாதவ் ஆகியோர் வெள்ளி வென்றனர்.
  • மகளிர் 48 கிலோ பிரிவில் மஞ்சு ராணி, 75 கிலோ பிரிவில் பாக்யபதி கச்சாரி. ஆடவர் 69 கிலோ பிரிவில் ஆஷிஷ் ஆகியோர் வெண்கலம் வென்றனர்.
  • தாய்லாந்து ஓபன் குத்துச்சண்டை போட்டியில் இந்திய வீரர் ஆஷிஷ் குமார் தங்கம் வென்றார். இப்போட்டியில் 4 வெள்ளி, 3 வெண்கலத்தையும் வென்றது இந்தியா.
மாநில ஹாக்கி: சென்னை ஐசிஎப் சாம்பியன்

  • மதுரை ரிசர்வ் லைன் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில், மாநில அளவிலான ஹாக்கி போட்டி கடந்த 21-ஆம் தேதி தொடங்கியது. இப் போட்டியில், 24 அணிகள் பங்கேற்றன. 
  • சனிக்கிழமை நடைபெற்ற இறுதி ஆட்டத்தில், பலமிக்க சென்னை ஐசிஎப் அணியும், இந்தியன் வங்கி அணியும் மோதின. எனவே, 3-0 என்ற கோல் கணக்கில் சென்னை ஐசிஎப் அணி வென்றது.
  • ஒட்டுமொத்த ஆட்டங்களிலும் சிறந்த வீரராக ஐசிஎப் அணியைச் சேர்ந்த பழனியப்பன், கோல் கீப்பராக ஐசிஎப் அணி வீரர் குர்மீத் சிங், தடுப்பு ஆட்டக்காரராக சென்னை மாநிலக் கணக்காயர் அலுவலக மனமகிழ் மன்ற அணி வீரர் நம்பி கணேஷ், சிறந்த மைய கள வீரராக இந்தியன் வங்கியின் புனித், முன்கள வீரராக கோவில்பட்டி விளையாட்டு விடுதி அணி வீரர் செல்வராஜ், சிறந்த இளம் வீரராக முகமது யாசீன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel