Type Here to Get Search Results !

9th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ரஷியாவிடம் சுகோய் Su-30 MKI & MiG-29 போர் விமானங்களை வாங்கும் IAF
  • இந்திய விமானப்படை (IAF) மேலும் 18 சுகோய் சு -30 எம்.கே.ஐ மல்டிரோல் போர்விமானம் மற்றும் 21 மிக்கோயன் மிக் -29 விமான மேன்மையுடனான ஜெட் விமானங்களை ரஷ்யாவிலிருந்து தனது ஆயுதக் களஞ்சியத்தில் கூடுதல் பலத்தை சேர்ப்பதற்கும், பாகிஸ்தான் மற்றும் சீனாவின் இரட்டை அச்சுறுத்தல்களைச் சமாளிப்பதற்கும் கவனம் செலுத்துகிறது. 
  • IAF ஏற்கனவே 272 Su-30 MKI களின் அனுமதிக்கப்பட்ட வலிமையைக் கொண்டுள்ளது, மேலும் 69 மிக் -29 UPG களையும் இயக்குகிறது.
  • இந்திய விமானப்படை தனது பயன்பாட்டுக்காக ரஷியாவிடம் இருந்து 18 புதிய 'சுகோய் Su-30 MKI' ரக போர் விமானங்களை வாங்குகிறது. 
  • மேலும், இந்தியாவுக்கு பல்வேறு ராணுவ தளவாடங்கள் அளிப்பதற்கான 6 ஒப்பந்தங்கள் எங்களுக்கு வந்துள்ளன. அவற்றில், 20 அதிநவீன 'MiG-29' ரக போர் விமானங்கள் வினியோகம், 450 டி90 ரக டாங்கிகளை நவீனப்படுத்துதல், இந்தியாவில் ராணுவ உதிரிபாகங்கள் உற்பத்தி செய்தல், விமானங்கள், ஹெலிகாப்டர்கள், கவச வாகனங்கள், விமான எதிர்ப்பு பீரங்கிகள், கடற்படை சாதனங்கள், விக்ரமாதித்யா விமானம் தாங்கி கப்பல் ஆகியவற்றை தயாரித்தல் ஆகியவை தொடர்பாக 6 ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட உள்ளன.



தைவானுக்கு ரூ.13 ஆயிரம் கோடிக்கு ராணுவ தளவாடங்கள் விற்பனை செய்ய அமெரிக்கா ஒப்புதல்
  • தைவானுக்கு ஆயுதங்களை விற்பனை செய்ய தயாராக இருப்பதாக அமெரிக்கா அண்மையில் தெரிவித்ததை தொடர்ந்து, அந்நாட்டிடம் இருந்து சுமார் 2.2 பில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில், சுமார் 13,744 கோடி ரூபாய் மதிப்பிலான ஆயுதங்களை வாங்க தைவான் முடிவுசெய்தது.
  • இது தொடர்பாக தைவான் விடுத்த கோரிக்கையை ஏற்று, அமெரிக்கா 108 எம்1ஏ2டி ஆப்ராம் பீரங்கிகள், ஜேவ்லின் பீரங்கி தகர்ப்பு ஏவுகணைகள், தோளில் ஏந்தி இயக்கக்கூடிய 250 ஸ்டிங்கர் ஏவுகணைகளை வழங்க ஒப்புக்கொண்டுள்ளது.
தேர்வுத்துறை ஆலோசகராக வசுந்தரா தேவி நியமனம்
  • பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையின் இயக்குநராக இருந்த வசுந்தரா தேவியின் பதவிக்காலம் முடிவடைந்ததையொட்டி அவர் கடந்த வாரம் ஓய்வு பெற்றார்.
  • இந்நிலையில், அவர் ஓய்வு பெற்று ஒரு வாரமே ஆன நிலையில்வசுந்தரா தேவி, தமிழக பள்ளிக்கல்வித் தேர்வுத்துறை ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • பள்ளிக்கல்வித் தேர்வுகள் துறையில் அவர் மிகச்சிறந்த அனுபவம் பெற்றுள்ளதால், அதனை உபயோகித்துக்கொள்ளும் பொருட்டு மீண்டும் அவருக்கு தேர்வுகள் துறையில் பதவி வழங்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை விளக்கமளித்துள்ளது.



டில்லி - லக்னோ தேஜாஸ் எக்ஸ்பிரஸ் : முதல் தனியார் மயமாகும் ரெயில்
  • ரெயில்களின் சேவையை மேம்படுத்த சோதனை முறையில் 100 நாட்களுக்கு மத்திய அரசின் ரெயில்வே துறை ஒரு சில ரெயில்களை தனியார் வசம் ஒப்படைக்க திட்டமிட்டுள்ளதாக அரசு அறிவித்தது. 
  • டில்லி - லக்னோ இடையே செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் கடந்த 2016 ஆம் வருடம் முதலே சேவையில் இருந்தாலும் இந்த மாதம் ஜூலை 10 முதல் அதன் நேரம் மற்றும் நிறுத்தங்கள் மாற்றப்பட்டு புதிய சேவையாக தொடங்குகிறது. அரசின் 100 நாள் சோதனை திட்டத்தின் கீழ் முதல் முதலாக டில்லி - லக்னோ செல்லும் தேஜாஸ் எக்ஸ்பிரஸ் தனியார் வ்சம் ஒப்படைக்கப்பட உள்ளது
சிறந்த வீரராக செத்ரி தேர்வு
  • இந்திய கால்பந்து கூட்டமைப்பு (ஏ.ஐ.எப்.எப்.,) சார்பில் ஆண்டுதோறும் சிறந்த வீரருக்கான விருது தரப்படும். இம்முறை, கேப்டன் சுனில் செத்ரி, 34, தேர்வாகி உள்ளார். 
  • சிறந்த வீரருக்கான விருதை ஆறாவது முறையாக வென்றுள்ளார். ஏற்கனவே, 2007, 11, 13, 14, 17ல் கைப்பற்றி உள்ளார். கடந்த ஐ.எஸ்.எல்., தொடரில் இவரது தலைமையிலான பெங்களூரு அணி கோப்பை வென்றது.
  • இதுவரை 109 போட்டியில் 70 கோல் அடித்துள்ளார். இந்திய அணிக்காக, பாய்ச்சங் பூட்டியாவுக்குப்பின், அதிக போட்டியில் விளையாடிய வீரர் என்ற பெருமை பெற்றவர்.தற்போது விளையாடிக்கொண்டிருக்கும் வீரர்களில், அதிக கோல் அடித்தவர்கள் (70) பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார்.
காமன்வெல்த் சீனியர் பளுதூக்குதல்: தங்கம் வென்றார் மீராபாய் சானுஅபியா
  • காமன்வெல்த் சீனியர் பளுதூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய நட்சத்திர வீராங்கனை மீராபாய் சானு 49 கிலோ பிரிவில் தங்கம் வென்றார்.
  • முன்னாள் உலக சாம்பியனான மீராபாய், மகளிர் பிரிவில் 191 கிலோ தூக்கி தங்கம் வென்றார். இது ஒலிம்பிக் தகுதி பெறுவதற்கான போட்டியாகவும் உள்ளது. 2020 டோக்கியோ ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெறுவதற்காக வீரர்களுக்கு 6 போட்டிகளின் முடிவுகள் அடிப்படையாக அமைந்துள்ளன.
  • 45 கிலோ பிரிவில் ஜில்லி டலேபேரா (154 கிலோ) தங்கம், 55 கிலோ பிரிவில் பிந்திய ராணி (தங்கம்), மட்ஸா சந்தோஷி (வெள்ளி) வென்றனர். ஆடவர் 55 கிலோ பிரிவில் ரிஷிகாந்தா சிங் 235 கிலோ தூக்கி தங்கம் வென்றார்.
  • இதனால் இன்று மட்டும் இந்திய அணி 8 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என மொத்தம் 13 பதக்கங்களை குவித்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel