Monday, 8 July 2019

8th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

10% இட ஒதுக்கீடு: 16 கட்சிகள் எதிர்ப்பு, 6 கட்சிகள் ஆதரவு
 • பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு 10 சதவிகித இட ஒதுக்கீடு வழங்குவதற்கு 16 கட்சிகள் எதிர்ப்பும் 6 கட்சிகள் ஆதரவும் அளித்துள்ளன.
 • திமுக, மதிமுக, மக்கள் நீதி மய்யம், நாம் தமிழர், விடுதலைச்சிறுத்தைகள், பாமக, உள்ளிட்ட கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தன.
 • பாஜக, அதிமுக, காங்கிரஸ், புதிய தமிழகம், மார்க்கிஸ்ட், உள்ளிட்ட 6 கட்சிகள் 10% இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்தன.
என்எல்சியில் 242.49 லட்சம் டன் பழுப்பு நிலக்கரி உற்பத்தி: மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல்
 • நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) கடந்த 2018-19 நிதியாண்டில் நிலக்கரி உற்பத்தி 242.49 லட்சம் டன்னாகும். இதே போல 2017-18-இல் 251.52 லட்சம் டன்னாகவும், 2016-17-இல் 276.17 டன்னாகவும் இருந்தது. 
சென்னையில் ரூ.5 ஆயிரம் கோடியில் இரண்டு எரிவாயு சுழலி மின் நிலையங்கள்: முதல்வர் அறிவிப்பு
 • அதிகரித்து வரும் மின் தேவையைப் பூர்த்தி செய்யும் வகையில், சென்னையில் தலா 730 மெகாவாட் மின் உற்பத்தித் திறனுள்ள இரண்டு கூட்டு சுழற்சி முறையிலான எரிவாயு சுழலி மின் நிலையங்கள் ரூ.5 ஆயிரம் கோடியில் அமைக்கப்படும். 
 • தமிழகத்தில் இயக்கப்படும் ஐந்து அனல்மின் நிலையங்களில் இருந்து வெளியேறும் கழிவுகள், தூசுகள் காற்றில் கலப்பதைக் கட்டுப்படுத்த ரூ.3 ஆயிரம் கோடியில் புதிய உபகரணங்கள் நிறுவப்படும். 



விருப்பத்தின் அடிப்படையில் ஆதார்: நாடாளுமன்றத்தில் நிறைவேறியது மசோதா
 • விருப்பத்தின் அடிப்படையில் ஆதாரை பயன்படுத்திக் கொள்ள இந்த மசோதா வழிவகை செய்கிறது. ஆதார் எண்ணை அடையாள ஆவணமாக பயன்படுத்திக் கொள்வதற்கு முன்பு ஆதார் உரிமையாளரிடம் ஒப்புதல் பெற வேண்டும்.
 • மானியங்களை உரிய நபர்களுக்கு அளிக்கவும், தவறுகள் நிகழ்வதை தவிர்ப்பதற்காகவும்தான் ஆதார் கொண்டு வரப்பட்டது என்பதை உச்சநீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்தியாவில் தற்போது 123.81 கோடி பேரிடம் ஆதார் அட்டை உள்ளது. 69.38 கோடி செல்லிடப்பேசி எண்கள் ஆதாருடன் இணைக்கப்பட்டுவிட்டன. 65.91 கோடி வங்கிக் கணக்குகளிலும் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது. 
 • நேரடி மானியம் அளிக்கும் 240-க்கும் மேற்பட்ட திட்டங்களின் கீழ், நேரடியாக பயனாளர்களின் வங்கிக் கணக்கில் ரூ.7.48 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது. ஆதார் இருந்ததால், ரூ.1.41 லட்சம் கோடியை சேமிக்க முடிந்தது.
 • ஆதார் எண் அளிப்பது கட்டாயம் என்பதற்கு பதிலாக, விருப்பத்தின் அடிப்படையிலானது என்று டெலிகிராப் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது.
 • வங்கிகளும் ஆதாரை கட்டாயமாகக் கருதக் கூடாது. கடவுச்சீட்டு போன்ற ஆவணங்களையும் ஏற்கலாம்.
 • ஆதார் இல்லை என்பதற்காக, எந்தவொரு வாடிக்கையாளருக்கும் சேவை மறுக்கப்படக் கூடாது. 
 • ஆதார் எண் தொடர்பான விதிமுறைகளை மீறினால், சம்பந்தப்பட்ட வங்கிகள், தொலைத் தொடர்பு நிறுவனங்கள் ஆகியவற்றுக்கு நாளொன்றுக்கு ரூ. 10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை அபராதம் விதிக்கப்படும் என்றார் ரவிசங்கர் பிரசாத்.
நாக் ஏவுகணை சோதனை வெற்றி 
 • டாங்கர் எதிர்ப்பு ஏவுகணைகளான நாக்(NAG) ஏவுகணை சோதனை வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக டிஆர்டிஓ சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 • ரூ.524 கோடி செலவில் உருவாக்கப்பட்ட இந்த நாக் ஏவுகணை அமைப்பை ராணுவத்தில் சேர்ப்பதற்கு, கடந்த ஆண்டே த டிஃபென்ஸ் அக்யூசிஷன் கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதை ராணுவத்தில் சேர்ப்பதன் மூலம், இந்திய ராணுவத்தின் டாங்கி எதிர்ப்புத் திறன் மேலும் வலுவடையும் என்று நம்பப்படுகிறது.
மாற்று திறனாளிகளுக்கான உலக செஸ் போட்டியில் தமிழக வீராங்கனை ஜெனித்தா தங்கம் வென்றார்
 • சுலோவாக்கியா நாட்டில் உள்ள ரூசோம்பர்க் நகரில் நடந்த மாற்று திறனாளிகளுக்கான 19-வது உலக செஸ் போட்டியில் தனிநபர் பிரிவில் கலந்து கொண்டார். 
 • இந்த போட்டியில் ஜெனித்தா தங்கப்பதக்கம் வென்றார். அவர் தொடர்ந்து 6-வது முறையாக தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். 
தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவரானார் ராகுல் டிராவிட்
 • இந்திய கிரிக்கெட் அணியில் ராகுல் டிராவிட்டுக்கு தனி இடம் எப்பொழுதும் உண்டு. இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று செல்லமாக அழைக்கப்படும் டிராவிட், ஓய்வுப்பெற்ற பிறகு 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட் அணிக்கு பயிற்சியாளர் ஆனார். 
 • திறமைவாய்ந்த இளம் வீரர்களை உருவாக்கி இந்திய அணிக்கு ஏற்றுமதி செய்யும் தார்மீக பொறுப்பை டிராவிட் சிறப்பாக செய்து வருகிறார். 
 • இந்நிலையில் டிராவிட்டை தேசிய கிரிக்கெட் அகாடமியின் தலைவராக பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.



கோப்பை வென்றது பிரேசில் கோபா அமெரிக்கா கால்பந்து
 • கோபா அமெரிக்கா கால்பந்து போட்டித் தொடரின் பைனலில் பெரு அணியுடன் மோதிய பிரேசில் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வென்று 12 ஆண்டுகளில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. 
 • அந்த அணியின் சோசா சோரெஸ் (15வது நிமிடம்), கேப்ரியல் ஜீசஸ் (45+3'), ரிச்சர்லிசன் (90வது நிமிடம், பெனால்டி) ஆகியோர் கோல் அடித்தனர். பெரு வீரர் குவரெரோ 44வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி கிக் வாய்ப்பில் கோல் அடித்தார். 
 • கோபா அமெரிக்கா தொடரில் பட்டம் வென்ற பிரேசில் அணி வீரர்கள் எவர்ட்டன் (அதிக கோல்), அலிஸான் (சிறந்த கோல் கீப்பர்), டானி ஆல்வ்ஸ் (மதிப்பு வாய்ந்த வீரர்) ஆகியோர் விருதுகளை அள்ளினர்.
400 மீ ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்றார் இந்திய வீரர் முகமது அனாஸ்
 • போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸில் ஆண்கள் பிரிவில் முகமது அனாஸ் 20 மீட்டரை 21.18 வினாடிகளில் கடந்து தங்கப்பதக்கம் வென்றார். எம்பி ஜபிர் ஆண்களுக்கான 400 மீட்டர் தடைதாண்டும் ஓட்டப்பந்தையத்தில் தங்கப்பதக்கம் வென்றார்.
தங்கப்பதக்கம் வென்ற இந்திய வீராங்கனை ஹீமா தாஸ்
 • இந்தியாவின் முன்னணி தடகள வீராங்கனை ஹீமா தாஸ். கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை போலந்தில் நடைபெற்ற போஸ்னன் தடகள கிராண்ட் பிரிக்ஸில் தங்கம் வென்றார். 
 • குட்னோ தடகள போட்டியில் கலந்து கொண்டார். இதில் 23.97 வினாடிகளில் பந்தைய தூரத்தை கடந்து தங்கப் பதக்கம் வென்றார் ஹீமா தாஸ். விகே விஸ்மயா 24.06 வினாடிகளில் கடந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a comment