Type Here to Get Search Results !

BUDGET 2019 - 2020 / மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள் 2019 - 2020

2019-2020-ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார் நிர்மலா சீதாராமன்
  • நாடாளுமன்றத்தில் 2ஆவது பெண் நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமன் 2019-2020-ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இது அவர் தாக்கல் செய்த முதல் பட்ஜெட்டாகும்.
  • சூட்கேஸுக்கு பதிலாக சிவப்பு நிற பையில் பட்ஜெட் ஆவணங்களை கொண்டு வந்தார் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பட்ஜெட் உரையை தொடங்கி வைத்த நிர்மலா பட்ஜெட்டை தாக்கல் செய்தார். 
  • "சீர்திருத்தம், செயல்திறன் மற்றும் மாற்றம் ஆகியவை வெற்றிபெற முடியும் என்பதை நாங்கள் செய்து காட்டியுள்ளோம்" என்றார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்.



Budget 2019: மத்திய பட்ஜெட் சிறப்பம்சங்கள்

  • ரயில் நிலையங்களை நவீனமயமாக்க மாபெரும் திட்டம் மேற்கொள்ளப்படும். தேசிய அளவில் விளையாட்டு மேம்பாட்டு வாரியம் அமைக்கப்படும்.
  • ஏர் இண்டியா நிறுவனத்தின் பங்குகள் விற்பனை புதிய உத்தியுடன் மீண்டும் துவக்கப்படும். ஒரு லட்சத்து ஐயாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை விற்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார். பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பதற்கு முன்னுரிமை அளிக்கப்படும். பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விரைவில் புதிய வரிசையிலான நாணயங்கள் வெளியிடப்படும். 20 ரூபாய் நாணயம் விரைவில் வெளியிடப்படும்.
  • புதிய வரி விதிப்புகளால் தங்கம், பெட்ரோல், டீசல் விலை உயரும்.
  • ரூ.5 கோடிக்கும் குறைவாக விற்றுமுதல் உள்ள நிறுவனங்கள் மாத மாதம் ஜிஎஸ்டி தாக்கல் செய்ய தேவையில்லை.
  • ஜிஎஸ்டி நடைமுறையை மேலும் எளிமையாக்க நடவடிக்கை.
  • ரூ.5 கோடிக்கும் அதிகமாக வருமானம் உள்ளவர்களுக்கு கூடுதலாக 7% வரி.
  • ஆண்டுக்கு ரூ.2 கோடி முதல் ரூ.5 கோடி வரை வருமானம் உள்ளவர்களுக்கு 3% கூடுதல் வரி.
  • டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கான கட்டணத்தை வங்கிகளே ஏற்க வேண்டும். வாடிக்கையாளர்கள் செலுத்த தேவையில்லை.
  • வருமான வரி விசாரனைக்கு நேரில் ஆஜராகத் தேவையில்லை.
  • ஆண்டுகு ரூ. 1 கோடிக்கும் அதிகமாக வங்கி கணக்கில் இருந்து ரொக்கப் பணம் எடுத்தால் 2 சதவீதம் டிடிஎஸ் பிடித்தம் செய்யப்படும்.
  • பான் கார்டு இல்லாமலும் ஆதார் கார்டு கொண்டு வருமான வரி செலுத்தலாம்.
  • 15 ஆண்டுகள் வீட்டுக் கடனுக்கு 7 லட்சம் ரூபாய் வரை மிச்சமாகும்.
  • குறைந்த விலை வீடு வாங்குபவர்களுக்கு வரி சலுகை 3.50 லட்சமாக அதிகரிப்பு.
  • வருமான வரி வரம்பில் புதிய அறிவிப்புகள் இல்லை; இடைக்கால பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ள வருமான வரி சலுகை தொடரும்.
  • கடனில் மின்சார வாகனங்கள் வாங்குபவர்களுக்கு 1.5 லட்சம் ரூபாய் வரை வரி சலுகை.
  • வீட்டு வசதி நிதித் துறையை இந்திய ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்தும். அடுத்த ஐந்தாண்டுகளில் கட்டமைப்புத் துறையில் 100 லட்சம் கோடி ஒதுக்கப்படும்.
  • தனியார் மற்றும் அரசு பங்களிப்புடன் மகளிர் மேம்பாட்டு திட்டங்களை மேற்கொள்ள நடவடிக்கை.
  • இந்திய பாஸ்போர்ட் உடனான வெளிநாட்டுவாழ் இந்தியர்களுக்கு நாடு திரும்பிய உடன் 180 நாட்கள் காத்திருப்பு இல்லாமல் ஆதார் அட்டை வழங்க அரசு முன்மொழியும்.
  • ஓவ்வொரு சுய உதவிக் குழுவிலும் ஒரு பெண்ணுக்கு ரூ.1 லட்சம் கடன் உதவி வழங்கப்படும்.
  • வேளாண் சார்ந்த ஊரகத் தொழில் துறையில் 75 ஆயிரம் தொழில் முனைவோரை உருவாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். நாட்டில் உள்ள பல்வேறு தொழிலாளர் சட்டங்கள் நெறிப்படுத்தப்படும். முறைசாரா தொழிலாளர்களுக்கு ஓய்வூதியம் அளிக்கப்படும். உஜாலா யோஜனா திட்டத்தின் மூலம் நாட்டின் 35 கோடி எல்ஈடி விளக்குகள் வழங்கப்பட்டுள்ளதன.
  • நாட்டில் தூய்மை இந்தியா திட்டம் விரிவுபடுத்தப்படும். நாட்டில் உள்ள 95 சதவீத நகரங்களில் திறந்த வெளியில் மலம் கழிக்கும் நிலை தவிர்க்கப்பட்டுள்ளது. நாட்டில் புதிய தேசிய கல்விக் கொள்கை கொண்டுவரப்படும். இதன்மூலம் நாட்டில் உயர்கல்வியின் தரம் மேம்படுத்தப்படுவதோடு, பள்ளிகளின் கல்வித்தரமும் மேம்படுத்தப்படும். தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளை அமைக்கப்படும். பல்வேறு அமைச்சகங்களிலிருந்து வழங்கப்படும் நிதி தேசிய ஆராய்ச்சி அறக்கட்டளையில் ஒருங்கிணைக்கப்படும்.
  • பொதுத் துறை வங்கிகளுக்கு 70 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டு மூலதனம்.
  • மின்சார வாகனங்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கப்படும். பிரதம மந்திரி கிராம் யோகி திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தில் பயன்பெற ஆதார் அடையாள அட்டை மட்டுமே போதுமானது. இதற்கு ஆண்டுக்கு ரூ.20 லட்சம் கோடி முதலீடு தேவைப்படுகிறது. தடங்கலற்ற முதலீட்டுக்குத் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
  • ஒரு லட்சத்து 25 ஆயிரம் கிலோமீட்டர் தூர சாலைகள் மேம்படுத்தப்படும். மகாத்மா காந்தியின் 150 ஆவது பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் கிராமங்கள், ஏழை மக்கள் மற்றும் விவசாயிகளின் மேம்பாட்டுக்கு அதிக முன்னுரிமை அளிக்கப்படும். விவசாயிகளின் வருமானம் இரட்டிப்பாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
  • நாட்டின் இறக்குமதி செலவைக் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாட்டில் அனைத்து மக்களுக்கும் குடிநீர் வசதி அளிப்பதற்கு அரசு முன்னுரிமை அளிக்கும்.
  • காப்பீட்டு நிறுவனங்களில் 100 சதவீத அந்நிய முதலீடு அனுமதிக்கப்படும். இந்தியா விண்வெளித்துறையில் சக்திவாய்ந்ததாக உருவாகியிருப்பதாக குறிப்பிட்ட அவர், இந்தத் துறை தற்போது வர்த்தகமயமாக்கப்படுவது அவசியமாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.
  • சமூகப் பாதுகாப்பு திட்டங்களுக்கு உத்வேகம் அளிக்கும் வகையில் சமூகப் பங்கு சந்தை ஏற்படுத்தப்படும்.
  • சிறுவியாபாரிகள், சிறு கடைகள் போன்றவற்றில் ஆண்டு விற்றுமுதல் ஒன்றரை கோடி ரூபாய்க்குள் இருந்தால் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும். இதன்மூலம் 3 கோடி வர்த்தகர்கள் பயன்பெறுவார்கள்.
  • சரக்குகளை நீர்வழிப் போக்குவரத்து மூலம் எடுத்துச் செல்வது ஊக்கப்படுத்தப்படும்
  • மின்சக்தித்துறையில் ஒரே நாடு ஒரே கிரிட் என்பதை நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறோம்.
  • சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ 1 கோடி வரை கடன் வழங்கப்படும்.
  • வாடகை, குத்தகை சட்ட நடைமுறைகள் இன்றைய காலத்துக்குப் பொருந்தாத வகையில் மிகவும் பழமையானதாக உள்ளது. குத்தகை எடுப்பவருக்கும் குத்தகை விடுபவருக்கும் இடையேயான உறவு நியாயமான முறையில் இருப்பதில்லை. மத்திய அரசு இதற்கான சட்ட நடைமுறைகளை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தும்.
  • கார்ப்பரேட் கடன் சந்தை சீரமைப்புக்கு கண்காணிப்பு அமைப்புகள் ஏற்படுத்தப்படும்.
  • தன்னார்வ நிறுவனங்களை செபியின் கீழ் பட்டியலிட நடவடிக்கை எடுக்கப்படும்.
  • 2018-19 நிதியாண்டில் அன்னிய முதலீடு வலுவான நிலையில் உள்ளது.
  • விமான போக்குவரத்து மற்றும் ஊடகத்துறையில் அன்னிய முதலீட்டை அனுமதிக்க திட்டம்..
  • இஸ்ரோவின் வணிகரீதியான செயல்பாடுகளுக்காக புதிய அமைப்பு தொடங்கப்படும்.
  • விமானப் போக்குவரத்து மற்றும் ஊடகத்துறையில் அந்நிய முதலீடுகளை அனுமதிப்பது தொடர்பாக மத்திய அரசு ஆலோசிக்கும். தன்னார்வ நிறுவனங்கள் நிதி ஆதாரங்களை திரட்டுவது வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும்.
  • இலவச சமையல் எரிவாயு திட்டம், சவுபாக்யா திட்டங்கள் மக்களின் வாழ்கைத் தரத்தை மேம்படுத்தியுள்ளன.
  • அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 9.9 கோடி வீடுகள் கட்டப்படும்.
  • 13,000 கிராம சாலைகள் பசுமை திட்டத்தின் கீழ் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு கட்டமைக்கப்பட்டுள்ளன.
  • விவசாய ஆன்லைன் சந்தைகள் மூலம் மாநில அரசுகளுடன் இணைந்து செயல்படுவோம். வேளாண்துறை உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.
  • வருகிற 2022-ம் ஆண்டுக்குள் ஒவ்வொரு கிராமத்திலும் உள்ள ஒவ்வொரு குடும்பத்துக்கும் மின்சார வசதி ஏற்படுத்தப்படும். பிரதான் மந்திரி கிராம் சதக் யோஜனா என்ற திட்டத்தின் மூலம் 80,200 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 1,25,000 கி.மீ தொலைவுக்கான சாலைகள் மேம்படுத்தப்படும்.
  • 2024-க்குள் ஒவ்வொரு வீட்டுக்கும் தண்ணீர் கிடைப்பதை உறுதி செய்வோம்.
  • 5.6 லட்சம் கிராமங்களில் திறந்தவெளி கழிப்பறைகள் ஒழிக்கப்பட்டுள்ளன.
  • கல்வியில் ஆராய்ச்சிப் பணிகளை மேற்கொள்ள புதிய அமைப்பு உருவாக்கப்படும்.
  • இந்தியாவின் உயர்கல்வியை உலக தரத்திற்கு மேம்படுத்துவதற்காக புதிய கல்விக் கொள்கை.
  • 5 ஆண்டுகளுக்கு முன் உலக தரவரிசையில் முதல் 200 இடங்களில் ஒரு இந்திய பல்கலைக்கழகம் கூட இல்லை; தற்போது 3 கல்வி நிறுவனங்கள் உள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel