Type Here to Get Search Results !

24th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஹூண்டாய் நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்: முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்
  • தொழில் துறை சார்பில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2019-ல் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனம், காஞ்சிபுரம் மாவட்டம், இருங்காட்டுக்கோட்டை, ஸ்ரீபெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் தனது நான்காவது விரிவாக்கத் திட்டத்திற்காக 7000 கோடி ரூபாய் முதலீட்டில் 500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில், கூடுதலாக ஒரு லட்சம் கார்கள் உற்பத்தி செய்யவும், சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும் தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி முன்னிலையில் ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • அதன் அடிப்படையில், ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட சுற்றுச்சூழலுக்கு மாசு விளைவிக்காத மின்சாரத்தில் இயங்கும் கோனா காரை முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கொடியசைத்து துவக்கி வைத்து, அவ்வாகனத்தில் பயணம் செய்தார். 
  • துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வமும் காரில் பயணம் செய்தார். இந்த கோனா கார் உயர் தொழில்நுட்பத்துடன் சுற்றுச்சூழலுக்கு உகந்ததாகவும், 57 நிமிடங்களில் 80 விழுக்காடு மின்னேற்றம் செய்யும் வசதி கொண்ட மின்கலன் பொருத்தப்பட்டு, ஒருமுறை முழுமையாக மின்னேற்றம் செய்வதன் மூலம் 452 கிலோ மீட்டர் தூரம் செல்லும் வகையிலும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் பிரதமர்களுக்காக பிரமாண்ட அருங்காட்சியகம் மோடி
  • முன்னாள் பிரதமர் சந்திர சேகர் பற்றி முன்னாள் துணை சபாநாயகர் ஹரிவன்ஷ் மற்றும் எழுத்தாளர் ரவிதத் பாஜ்பாய் ஆகியோரால் எழுதப்பட்ட Chandra Shekhar - The last icon of Ideological politics என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழா நடைபெற்றது. இவ்விழாவில் பிரதமர் மோடி, குடியரசு துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடு ஆகியோர் கலந்து கொண்டனர்.
  • இந்திய நாட்டின் வளர்ச்சிக்காக உழைத்த முன்னாள் பிரதமர்களை கட்சி வேறுபாடுகளைக் கடந்து கவுரவிக்கும் விதமாகவும், அவர்களது உழைப்பை நாட்டு மக்களுக்கு தெரியப்படுத்தும் விதமாகவும் டெல்லியில் மிகப்பெரிய அருங்காட்சியகம் அமைக்கப்படும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
அரசு மானியங்களுக்கு ஆதாரை ஆவணமாக பயன்படுத்தலாம்: அரசு ஒப்புதல்
  • இந்தியக் குடிமக்கள் ஒவ்வொருவருக்கும் 12 இலக்கங்களைக் கொண்ட ஆதார் அடையாள அட்டை வழங்கப்பட்டு உள்ளது. அது வங்கி கணக்குகள், பரஸ்பர நிதி முதலீடுகள், பான் அட்டை, ஓய்வூதியம், சமூக நல திட்டங்கள், செல்போன் சேவை, தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி, ஓட்டுனர் உரிமம், வாகனங்கள் பதிவு, சமையல் கியாஸ் மானியம் ஆகியவற்றுக்கு ஆதார் எண் என்னை நாம் பயன்படுத்தி வருகிறோம்.
  • மாநில அரசு மானியம் வழங்கவும் நலத்திட்ட உதவிகள் வழங்கவும் பயனாளிகளை ஆதார் மூலமாக தேர்ந்தெடுக்க இச்சட்டம் வகை செய்கிறது. பயோமெட்ரிக் அடையாளம் பொருந்திய ஆதார் அட்டைகளால் முறைகேடுகளுக்கு வாய்ப்பு இல்லை என்பதுடன் அரசின் நலத்திட்ட உதவிகள் நேரடியாக மக்களை சென்றடைய இது வழிவகுக்கும்.
  • உச்சநீதிமன்ற உத்தரவின்படி பயனாளிகள் தாங்களாகவே ஆதாரை பயன்படுத்திகொள்ள அனுமதிக்கலாம் என்று விளக்கம் அளித்த மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், இப்போது மத்திய அரசின் மானியத் தொகை ஆதார் மூலமாக பயனாளிகளுக்கு வழங்கப்படுவதைப் போல், மாநில அரசும் பயனாளிகளுக்கு மானியம் வழங்க இனி ஆதாரைப் பயன்படுத்திக் கொள்ளமுடியும் என்று விளக்கம் அளித்தார்.
  • சிம்கார்டுகள். வங்கிக்கணக்குகள் போன்றவற்றுக்காக ஆதார் அட்டையின் 12 எண் குறியீட்டை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று சட்டத்தை திருத்தியமைத்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.



பயங்கரவாத தடுப்பு மசோதா நிறைவேறியது
  • லோக்சபாவில் பயங்கரவாத தடுப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு மசோதா தொடர்பான விவாதத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா, பயங்கரவாதத்தை தடுக்க கடுமையான சட்டங்கள் அவசியம் என்றார்.
  • ''பயங்கரவாதிகளுக்கு உதவுபவர்கள், நிதி அளிப்பவர்களும் பயங்கரவாதிகளாகவே கருதவேண்டும். பயங்கரவாதத்தை வேரறுக்க வேண்டும் என்பதே இந்த சட்டத்தின் நோக்கம். அதேநேரத்தில் இந்த சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படாது,'' என்றும் அவர் உறுதி அளித்தார்.
  • இந்த சட்டத்தை, காங்கிரஸ், திமுக, பகுஜன் சமாஜ், திரிணாமுல் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகளும் ஆதரித்தது குறிப்பிடத்தக்கது.
போக்சோ திருத்தச்சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல்
  • போக்சோ திருத்தச்சட்ட மசோதாவுக்கு மாநிலங்களவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. 
  • 18 வயதுக்கு உட்பட்டவர்கள் மீதான பாலியல் குற்றங்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிரான சட்டத்தை வலுப்படுத்த திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
மக்களவையில் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதா நிறைவேறியது
  • கடந்த 1938 முதல் மோட்டார் வாகனச் சட்டம் அமுலில் உள்ளது. இந்த சட்டத்தில் அவ்வப்போது திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. கடந்த 2017 ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மேலும் திருத்தங்கள் செய்து அந்த மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • இந்த மசோதாவில் போக்குவரத்து விதிகளை மீறுவோருக்கு கடும் அபராதம் விதிப்பது, சாலை பாதுகாப்பு அதிகரிப்பு, உள்ளிட்ட பல அம்சங்கள் உள்ளன. 
மூலிகை தாய்க்கு 'வைத்ய பூஷன் விருது' ஜெர்மன் பல்கலை வழங்கிய கவுரவம்
  • ஈரோடு மாவட்டம், கணபதிபாளையத்தைச் சேர்ந்தவர் சாமியாத்தாள், 66. இவர், 16 ஆண்டுகளுக்கும் மேலாக, மூலிகை செடிகள் சேகரிப்பில், ஈடுபட்டு வருகிறார். ஐந்தாம் வகுப்பு வரையே படித்துள்ளார். 2004ல் இவரது கணவர் இறந்தார். 
  • இரண்டு மகன்களுக்கும் திருமணமாகி விட்டது. இவர், சாவடிபாளையம் கிராமத்தில், தனியாக வசித்து வருகிறார்.சாமியாத்தாளுக்கு மூலிகைகளை தேடி, சித்த மருத்துவர்களுக்கு வழங்குவது தான் வாழ்க்கையாக அமைந்துள்ளது. 
  • இவரது மூலிகை சேகரிப்பு மற்றும் விழிப்புணர்வை பாராட்டி, 2012ல், ஜனாதிபதியாக இருந்த அப்துல் கலாம், 'மூலிகை தாய்' என்ற பட்டத்தை வழங்கினார். 
  • இயற்கை மருத்துவம் சார்ந்த மாநாடு, கால்நடை மருத்துவ முகாம், கட்சி விழாக்களில், குடில்கள் அமைத்து, மூலிகை செடிகளை வழங்கி வருவதுடன், பல நோய்களுக்கும் தீர்வு கண்டு வருகிறார்.பழநி சித்த மருத்துவ சங்கம் சார்பில், சாமியாத்தாளுக்கு பாராட்டு விழா நடத்தினர். 
  • இதில், ஜெர்மனி நாட்டை சேர்ந்த, சர்வதேச அமைதி பல்கலை நிர்வாகிகள் மற்றும் சித்த வைத்திய மருத்துவர்கள், சாமியாத்தாளுக்கு, 'வைத்ய பூஷன் விருது' வழங்கி, கவுரவித்தனர்.



சிறந்த புதிய கண்டுபிடிப்பு நாடுகளின் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் முன்னேற்றம்
  • அரசியல் சூழல், கல்வி, உள்கட்டமைப்பு மற்றும் தொழில் நுட்பம் உட்பட 80 துறைகளில் குறிப்பிடத்தக்க புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவதன் அடிப்படையில் இந்தப் பட்டியலில் உலக நாடுகள் இடம் பெறுகின்றன.
  • இந்நிலையில் உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு சிறந்த புதிய கண்டுபிடிப்பு நாடுகளின் பட்டியலை வெளியிட்டது. இந்தப்பட்டியலில் இந்தியா 52-வது இடத்தை பிடித்துள்ளது. 
  • 2017-ஆம் ஆண்டு 60-வது இடத்திலும் கடந்த ஆண்டு 57-வது இடத்திலும் இருந்த இந்தியா தற்போது 52-வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப்பட்டியலில் 25-வது இடத்துக்கு முன்னேறுவதே இலக்கு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விமான நிலையங்கள் ஆணைய இயக்குனராக ஜி.சேகர் நியமனம்
  • இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தின் இயக்குனராக, ஆடிட்டர், ஜி.சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.மத்திய விமான போக்குவரத்து துறையின் கீழ் செயல்படும், 'ஏர்போர்ட் ஆத்தாரிட்டி ஆப் இந்தியா' எனப்படும், இந்திய விமான நிலையங்கள் ஆணையம், நம் நாட்டில், 77 விமான நிலையங்களையும்; வெளிநாடுகளில், 34 விமான நிலையங்களையும் நிர்வாகம் செய்கிறது. 
  • இந்த ஆணையத்தின், இயக்குனர்கள் குழுவில், 13 பேர் உள்ளனர்.தற்போது, விமான நிலையங்களின் ஆணைய இயக்குனராக, சென்னையை சேர்ந்த, ஆடிட்டர், ஜி.சேகர் நியமிக்கப்பட்டு உள்ளார். 
  • இதையடுத்து, கடந்த, 10 ஆண்டுகளில், முதல் முறையாக, ஆடிட்டர் ஒருவர், அந்த ஆணையத்தின் இயக்குனராக நியமிக்கப்பட்டு உள்ளார்.சேகர், மூன்று ஆண்டுகள், அந்த பதவியை வகிப்பார். இவர் தற்போது, ஆடிட்டர் கவுன்சிலின், மத்திய குழு உறுப்பினராகவும், 'ஆடிட் போர்டு' தலைவராகவும் உள்ளார்.
மத்திய எரிசக்தித்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா உள்துறை சிறப்பு அலுவலராக நியமனம்
  • மத்திய எரிசக்தித்துறை செயலாளர் அஜய்குமார் பல்லா உள்துறை சிறப்பு அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளார். பொருளாதார விவகாரத்துறை, நிதித்துறை செயலாளராக இருந்த சுபாஷ் சந்திர கார்க் எரிசக்தித்துறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். 
  • மேலும் முதலீடு, பொதுச்சொத்து மேலாண்மைத்துறை செயலாளர் அதானு சக்கரவர்த்தி நிதித்துறை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel