Type Here to Get Search Results !

21stc JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா நியமனம்
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக எஸ். சுதாகர் ரெட்டி இருந்து வந்தார். இதனிடையே, உடல்நிலை காரணமாக, அண்மையில் தனது பதவியிலிருந்து எஸ். சுதாகர் ரெட்டி ராஜிநாமா செய்தார்.
  • இந்நிலையில் தில்லியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் 3 நாள்கள் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார்.
  • இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள டி.ராஜா, தமிழகத்தை சேர்ந்தவர். அவரது சொந்த ஊர், வேலூர் மாவட்டத்திலுள்ள சித்தாத்தூர் ஆகும். அவரது மனைவி ஆனி ராஜா, இந்திய பெண்கள் தேசிய கூட்டமைப்பின் தேசிய பொதுச் செயலாளராக உள்ளார்.
கடற்படைக்காக புதிய செயற்கைகோள் ஜிசாட் 7 ஆர்
  • இந்தியக் கடற்படையின் தகவல் தொடர்பை மேம்படுத்தும் வகையில் ஜிசாட்-7 ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது. 
  • கடந்த, 2013ஆம் ஆண்டு இஸ்ரோ தயாரித்து விண்ணுக்கு அனுப்பிய ஜிசாட் 7 என்ற செயற்கைக்கோள் மூலம், இந்தியக் கடற்படையின் தகவல் பரிமாற்றம் எளிதானது. 
  • தற்போது கடற்படையின் தகவல் தொடர்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளை மேலும் நவீனப்படுத்தும் வகையில், ஜிசாட் 7ஆர் என்ற செயற்கைக்கோளை தயாரிக்கும் பணியில் இஸ்ரோ ஈடுபட உள்ளது. 
  • ரூ.589 கோடி ஒப்பந்தம் இதற்காக, இஸ்ரோவுடன், ஆயிரத்து 589 கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தில் இந்திய கடற்படை கையெழுத்திட்டுள்ளது. 2022ஆம் ஆண்டிற்குள்ளாக இந்த செயற்கைக்கோள் ஏவப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 
  • கடலில் கண்காணிப்புப் பணியில் ஈடுபடும் கடற்படை கப்பல்கள், நீர் மூழ்கிகள், போர் விமானங்கள் ஆகியவற்றை ஒன்றுடன் ஒன்று தொடர்பில் வைத்திருக்கவும், அவை, கரையில் உள்ள செயல்பாட்டு மையங்களுடன் தொடர்பில் இருக்கவும் ஜிசாட் 7ஆர் உதவும்.2013ஆம் ஆண்டுக்கு முன்பு வரை, தகவல் பரிமாற்றத்திற்காக இன்மார்சாட் என்ற பிரிட்டன் நிறுவனத்தையே, இந்தியக் கடற்படை சார்ந்து இருந்தது.



இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுவை பல்கலைக்கழகம் முன்னேற்றம்
  • இந்திய பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசையில் புதுச்சேரி பல்கலைக்கழகம் 11-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது. ஒட்டுமொத்த இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனப் பட்டியலில் 69 புள்ளிகளுடன் 67-வது இடத்தில் உள்ளது என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
உலக வெல்டர்வெயிட் குத்துச்சண்டை: மேன்னி பாக்கியோ சாம்பியன்
  • லாஸ்வேகாஸ் எம்ஜிஎம் கிராண்ட் அரங்கில் உலக குத்துச்சண்டை சங்கம் (டபிள்யுபிஏ) சார்பில் 40 வயதான பாக்கியோவும், அவரை விட 10 வயது குறைந்த நடப்பு சாம்பியன் கீய்த் துர்மேனும் மோதினர். 
  • முதல் சுற்றிலேயே பாக்கியோவின் அபார குத்துகளை சமாளிக்க முடியாமல் நிலைகுலைந்தார் துர்மேன். 
  • இறுதியில் 114-113 புள்ளிகள் அடிப்படையில் வென்ற பாக்கியோ உலக வெல்டர்வெயிட் சூப்பர் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றினார்.
இந்தோனேசியா பேட்மின்டன் வெள்ளிப்பதக்கத்துடன் திரும்பிய சிந்து
  • இந்தோனேசியா ஓப்பன் பேட்மின்டன் போட்டி, ஜகர்த்தாவில் நடந்தது. இன்று நடந்த இறுதிப் போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்துவும் ஜப்பானின் யமாகுஷியும் மோதினர். இதற்கு முன்பு, இவர்கள் இருவரும் 14 முறை மோதியுள்ளனர். 
  • இதில், சிந்து 10 போட்டிகளில் வெற்றியைப் பதிவுசெய்திருந்தார். யமாகுஷி 4 போட்டிகளில் வென்றுள்ளார். கடைசியாக இவர்கள் இருவரும் மோதிய 5 போட்டிகளில், சிந்து தொடர்ச்சியாக 4-ல் வென்றுள்ளார். 
  • போட்டி ஆரம்பித்ததும் எல்லாம் தலைகீழாக மாறியது. போட்டியின் தொடக்கம் யமாகுஷி ஆதிக்கம் செலுத்தினார். சிறப்பாக ஆடிய யமாகுஷி, முதல் செட்டை 21- 15 என்ற கணக்கில் கைப்பற்றினார். 
  • இரண்டாவது செட்டை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முனைப்பில் பி.வி.சிந்து விளையாடினார். இதற்கெல்லாம் இடமளிக்காமல், இரண்டாவது செட்டையும் 21-16 என்ற கணக்கில் யமாகுஷி கைப்பற்றி, நேர் செட் கணக்கில் வெற்றியைப் பதிவுசெய்து தங்கப்பதக்கம் வென்றார். 
  • இது அவருடைய நாளாக அமைந்துவிட்டது. இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த சிந்துவுக்கு வெள்ளிப்பதக்கம் வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel