Type Here to Get Search Results !

ஊதியங்கள் சட்ட மசோதா 2019 / WAGE CODE BILL 2019

  • அனைத்து தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் ஊதியங்கள் சட்ட மசோதா 2019 மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதாவின் சிறப்பம்சங்கள் குறித்து தெரிந்து கொள்வோம்.
  • ஊதியங்கள் பட்டுவாடா சட்டம், குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம், ஊக்கத்தொகை பட்டுவாடா சட்டம் மற்றும் சம ஊதிய சட்டம் ஆகிய 4 சட்டங்களை ஒருங்கிணைப்பதே ஊதியங்கள் சட்ட மசோதா 2019. இதன்படி குறைந்தபட்ச ஊதியம் பெறுவது தொழிலாளர்களின் உரிமையாக்கப்படும். அனைத்து துறை சார்ந்த தொழிலாளர்களுக்கும் உரிய நேரத்தில் ஊதியம் கிடைப்பது உறுதி செய்யப்படும்.
  • தொழிலாளர் சங்கங்கள், நிறுவனங்கள் மற்றும் மத்திய அரசு பிரதிநிதிகள் அடங்கிய குழு தேசிய அளவில் தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிக்கும்.தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு எவ்வளவு நேரம் வேலை செய்ய வேண்டும் என்பது நிர்ணயிக்கப்படும், நிர்ணயித்த காலத்தை விட கூடுதலாக பணியாற்றினால் அது ஓவர் டைமாக கருதப்பட்டு வழக்கமான ஊதியத்தை விட இருமடங்கு அதிக ஊதியம் வழங்க வேண்டும்.
  • பணியிடங்களில் பாலின சமத்துவம் இருப்பது உறுதி செய்யப்படும். அரசு நிர்ணயித்த ஊதியத்தை வழங்காத நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தற்போதுள்ள குறைந்தபட்ச ஊதியங்கள் சட்டம் ,ஊதியங்கள் பட்டுவாடா சட்டம் ஆகியவை குறிப்பிட்ட துறைகளில் குறிப்பிட்ட அளவு ஊதியம் பெறுபவருக்கே பொருந்தும். 
  • இதில் 40 சதவிகித தொழிலாளர்களே பயனடைகின்றனர். 100 சதவிகித தொழிலாளர்களும் பயன்பெறுவதற்கு இந்த மசோதா வழிவகை செய்யும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel