Type Here to Get Search Results !

2nd AUGUST 2019 CURRENT AFFAIRS TNPSC SHOUTERS TAMIL PDF

58 பழமையான சட்டங்களை நீக்குவதற்கு பார்லி.,ஒப்புதல்
  • பிரதமர் மோடி தலைமையிலான, இரண்டாவது, தே.ஜ., கூட்டணி அரசு, பார்லிமென்டின் முதல் கூட்டத் தொடரிலேயே, பல மசோதாக்களை தாக்கல் செய்து, நிறைவேற்றி வருகிறது.
  • அந்த வகையில், மக்களுக்கு பயன்படாமல் இருக்கும், 58 பழமையான சட்டங்களை நீக்குவதற்கான மசோதா, கடந்த, 29ல், லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டது. 
  • இந்நிலையில், 'நீக்குதல் மற்றும் திருத்தம் மசோதா, 2019-ஐ' ராஜ்யசபாவில், சட்ட அமைச்சர் ரவி சங்கர் பிரசாத், நேற்று தாக்கல் செய்தர்.
  • பின், குரல் ஓட்டெடுப்பு மூலம், மசோதா நிறைவேற்றப்பட்டது. மசோதா, பார்,யின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்டதையடுத்து, ஜனாதிபதியின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
ஜாலியன் வாலா பாக் அறக்கட்டளை மசோதா நிறைவேறியது
  • சுதந்திர போராட்டத்தின் போது, 1919ம் ஆண்டில், பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலா பாக் என்ற இடத்தில், ஆங்கிலேய அரசு விதித்த தடையை மீறி, ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர். அவர்கள் மீது, ஆங்கிலேய ராணுவ அதிகாரி, டயர், பீரங்கி தாக்குதல் நடத்த உத்தரவிட்டார்; இதில், நுாற்றுக்கணக்கானோர் இறந்தனர். 
  • இந்திய சுதந்திர வரலாற்றில், இந்த கொடிய சம்பவம், 'ஜாலியன்வாலா பாக் படுகொலை' என, குறிப்பிடப்படுகிறது. இதை யொட்டி, அங்கு, 1951ம் ஆண்டு, நினைவகம் அமைக்கப்பட்டது. 
  • இதை, ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது. இந்த அறக்கட்டளையின் நிரந்தர உறுப்பினராக, காங்., தலைவர் நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இந்நிலையில், அறக்கட்டளையில், காங்., தலைவருக்கு வழங்கப்பட்டுள்ள நிரந்தர உறுப்பினர் அங்கீகாரத்தை ரத்து செய்யும் நோக்கில், ஜாலியன்வாலா பாக் அறக்கட்டளை சட்ட திருத்த மசோதாவை, லோக்சபாவில், கலாச்சாரத் துறை அமைச்சர், பிரகலாத் படேல் நேற்று தாக்கல் செய்தார்.
  • ஜாலியன் வாலாபாக் அறக்கட்டளை சட்ட திருத்த மசோதா விவகாரம் தொடர்பாக, லோக்சபாவில், நேற்று ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது; பின், குரல் ஓட்டு மூலம், இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது. 
சட்ட விரோத செயல்கள் தடுப்பு மசோதா நிறைவேறியது
  • பயங்கரவாத செயல்களுடன் தொடர்புடையவர்களை, 'பயங்கரவாதி' என அறிவித்து, அவரின் சொத்துக்களை பறிமுதல் செய்ய வகை செய்யும், சட்ட திருத்த மசோதா, பார்லிமென்டில், நேற்று நிறைவேறியது. 
  • மசோதாவின் சில அம்சங்களை, மத்திய அரசின் நோக்கத்தை, காங்கிரஸ் எதிர்த்தாலும், மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளித்து, வெற்றி பெறச் செய்தது. அதுபோல, பகுஜன் சமாஜ் கட்சியும், இந்த மசோதாவை ஆதரித்தது. 
இந்தியாவில் வங்கிச் சேவையை தொடங்க பேங்க் ஆஃப் சீனாவுக்கு அனுமதி
  • இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934-இன் இரண்டாவது அட்டவணையில் பேங்க் ஆஃப் சீனா லிமிடெட் சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோன்று ஜனா ஸ்மால் பைனான்ஸ் வங்கியும் இரண்டாவது அட்டவணையில் இணைக்கப்பட்டுள்ளது என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
  • மேற்கண்ட வங்கிகள் தவிர, எஸ்பிஐ, ஹெச்டிஎஃப்சி வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, ஐசிஐசிஐ வங்கி உள்ளிட்ட அனைத்து வணிக வங்கிகளும் இரண்டாவது அட்டவணையில்தான் இடம்பெற்றுள்ளன. 
  • எனவே, இவை அனைத்தும் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளுக்கு ஏற்ப செயல்பட வேண்டியது கட்டாயம்.



மக்களவையில் நிறைவேறியது அணைப் பாதுகாப்பு மசோதா
  • நாடு முழுவதும் அணைப் பாதுகாப்புக்கு ஒரே மா‌திரியான வழிமுறைகளை வகுக்கும் நோக்கத்துடன் கொண்டு வரப்பட்டிருக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவை கடந்த 29ஆம் தேதி ஜல் சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் அறிமுகம் செய்து வைத்தார். 
  • இதைத் தொடர்ந்து மசோதா மீது நடந்த விவாதத்தின்போது பேசிய திமுக எம்.பி. ஆ.ராசா, அணைப் பாதுகாப்பு மசோதா தமிழகத்தின் உரிமைகளை பறிக்கும் வகையில் இருப்பதாக கூறினார். 
  • பிரேசில், ஆஸ்திரேலியா, சீனா, பிரான்ஸ், மெக்சிகோ போன்ற நாடுகளில் கூட அணைப் பாதுகாப்பு சட்டமாக இல்லாமல் விதிமுறைகளாக மட்டுமே இருப்பதாக‌ கூறினார்.
  • இதைத் தொடர்ந்து மசோதா குறித்து விளக்கம் அளித்த ஜல்சக்தி துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் முல்லைப் பெரியாறு அணையை போல ஒரு மாநிலத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை மற்ற மாநிலத்தில் அமைந்திருந்தால், ‌உரிமைக்கு பாத்தியப்பட்ட மாநிலம் பாதிக்கப்படாத வகையில் மசோதாவில் விதிமுறைகள் கொண்டு வரப்பட்டிருப்பதாக கூறினார். குறிப்பாக இந்த மசோதாவினால் தமிழ்நாட்டுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாது என வாக்குறுதி அளித்தார்.
ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்
  • மத்தியில் ஆட்சியில் உள்ள பா.ஜ.க தலைமையிலான அரசு கடந்த ஆட்சிக்காலத்தில் இருந்தே தகவல் அறியும் உரிமை (ஆர்.டி.ஐ) சட்டத்தைத் திருத்துவதற்கு முனைப்புடன் செயல்பட்டது. 
  • ஆனால், மாநிலங்களவையில் போதிய பலம் இல்லாத காரணத்தினாலும், பலத்த எதிர்ப்புகளினாலும் கடந்த நாடாளுமன்றக் கூட்டத்தொடரில் ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்தை நிறைவேற்ற முடியவில்லை.
  • மக்களவையில் எளிதாக நிறைவேற்றப்பட்ட ஆர்.டி.ஐ சட்டத்திருத்த மசோதா, மாநிலங்களவையில் பிரதான எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புக்கிடையே டி.ஆர்.எஸ் மற்றும் பி.ஜே.டி ஆகிய கட்சிகளின் ஆதரவோடு நிறைவேற்றப்பட்டது.
  • இந்த நிலையில், இன்று ஆர்.டி.ஐ சட்டத்திருத்தத்துக்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். புதிய சட்டத்திருத்தம் இன்றுமுதல் அமலுக்கு வருகிறது. 
இந்திய பத்திரிகையாளருக்கு ரமோன் மகாசேசே விருது
  • பிலிப்பைன்ஸ் முன்னாள் அதிபர் ரமோன் மகசேசே (Ramon Magasaysay) நினைவாக, அவர் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படுகிறது. 
  • ஆசியாவின் நோபல் என்று அழைக்கப்படும் இவ்விருது சமூக சேவை, கலை, இலக்கியம், வளரும் தலைவர்கள் என பல பிரிவுகளில் வழங்கப்படுகிறது.
  • இந்த ஆண்டிற்கான (2019) விருது, இந்தியாவை சேர்ந்த ரவீஷ் குமார் (என்டிடி டிவி) பிலிப்பைன்சின் ரேமுண்டோ புஜன்டே கயாப்யாப், தென் கொரியாவின் கிம் ஜோங் கி, மியான்மரின் கோ ஸ்வீ வின், தாய்லாந்தின் அங்கனா நீலபைஜித் ஆகியோருக்கு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தில் தமிழகம் முதலிடம் - மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன்
  • தமிழகத்தில் ஒரு கோடியே 57 லட்சம் குடும்பங்கள் ஐந்து லட்சம் ரூபாய் காப்பீட்டுத் திட்டத்தை பெற்றுள்ளனர் என மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மாநிலங்களவையின் கேள்வி நேரத்தின் போது பதிலளித்த மத்திய சுகாராத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் ஏற்கெனவே தமிழகத்தின் அம்மா காப்பீட்டுத் திட்டம் செயல்பட்டு வரும் நிலையில் மத்திய அரசின் ஆயுஷ்மான் பாரத் பிரதான் மந்திரி ஜான் ஆரோக்யா யோஜனாவுடன் இணைந்திருப்பதாக தெரிவித்தார்.
  • தேசிய மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் ‌மத்தியப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், கர்நாடகா‌, மேற்கு வங்கம் குடும்பங்களும் பயனடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைப் பொறுத்தவரை சிறுநீரக பாதிப்புகளுக்கான சிகிச்சைக்கு காப்பீட்டுத் திட்டம் அதிகம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தமிழக சுகாராத்துறை தெரிவித்துள்ளது.
  • 2012ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் நடப்பாண்டு மார்ச் மாதம் வரை 34 லட்சத்து 76 ஆயிரம் பேருக்கு மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் மூலம் ஐந்தாயிரத்து 800 கோடி ரூபாய் செலவிடப்ப‌ட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தெரிவ‌த்துள்ளது‌‌. நாட்டில் உள்ள 11 மாநிலங்கள் தங்களின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை மத்திய அரசு திட்டத்துடன் இணைத்துள்ளன.



ஹிமாதாஸ் - யுனிசெஃப் இந்தியா அமைப்பின் இளம் தூதுவராக நியமனம்
  • ஐரோப்பாவின் போலந்து மற்றும் செக் குடியரசு நாடுகளில் நிகழ்ந்த தடகளப் போட்டிகளில் ஒரே மாதத்தில் மொத்தம் 5 தங்கப் பதக்கங்கள் பெற்று அசத்தினார் ஹிமா தாஸ்.
  • இதனையடுத்து, யுனிசெஃப் இந்தியாவின் முதல் இளம் தூதுவராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • அஸ்ஸாம் மாநிலத்தின் நாகவோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இந்த 19 வயதேயான தங்க மங்கை. கடந்த 2018 ஆசிய விளையாட்டில், மகளிர் 400 மீட்டர் ரிலே ஓட்டத்தில் தங்கம் வென்றார் ஹிமா தாஸ்.
துப்பாக்கி சுடுதல்: ஆதர்ஷ் சிங் தங்கம்
  • மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல், 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவில் ஹரியானாவின் ஆதர்ஷ் சிங், 2 தங்கம் வென்றார்.டில்லியில், சர்தார் சஜ்ஜன் சிங் சேத்தி நினைவு மாஸ்டர்ஸ் துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. 
  • இதில் ஆண்களுக்கான 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் ஹரியானாவின் ஆதர்ஷ் சிங், 584 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். 
  • அடுத்து நடந்த பைனலில் அசத்திய இவர், 27 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார். வெள்ளி, வெண்கலப் பதக்கத்தை முறையே ராணுவ அணியின் குர்மீத் (26 புள்ளி), பஞ்சாப் அணியின் அன்ஹத் ஜவான்டா (22 புள்ளி) வென்றனர்.
  • ஜூனியர் 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு பைனலில் அசத்திய 17 வயது வீரரான ஆதர்ஷ் சிங், 30 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்து தங்கம் வென்றார். 
  • சண்டிகரின் விஜய்வீர் சிங் (27 புள்ளி), ஹரியானாவின் ஆயுஷ் சங்வான் (21 புள்ளி) முறையே வெள்ளி, வெண்கலம் கைப்பற்றினர்.
தடகளம்: இந்தியாவுக்கு வெண்கலம்
  • உலக கோப்பை நடை போட்டியில், 7 ஆண்டுகளுக்கு பின் இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கம் கிடைத்துள்ளது.கடந்த 2012ல் ரஷ்யாவில், சர்வதேச தடகள கூட்டமைப்பு (ஐ.ஏ.ஏ.எப்.,) சார்பில் உலக கோப்பை நடை போட்டி நடந்தது. இதில் ஆண்கள் அணிகளுக்கான 20 கி.மீ., நடை போட்டியில், கே.டி. இர்பான், பாபுபாய், சுரிந்தர் சிங் ஆகியோர் இடம் பெற்றிருந்த இந்திய அணி, 4வது இடம் பிடித்து பதக்கம் வெல்லும் வாய்ப்பை இழந்தது. 
  • முதல் மூன்று இடங்களை பிடித்த முறையே சீனா, உக்ரைன், ஆஸ்திரேலியா அணிகள் பதக்கம் வென்றன.இப்போட்டியில் உக்ரைன் அணியில் இடம் பெற்றிருந்த ரஸ்லான் டிமிட்ரென்கோ, தடை செய்யப்பட்ட ஊக்க மருந்து பயன்படுத்தியது தற்போது உறுதியானது. இதனால் இவர், உடனடியாக தகுதிநீக்கம் செய்யப்பட்டார். தவிர, உக்ரைன் அணி வென்ற வெள்ளிப் பதக்கம் பறிக்கப்பட்டது. 
  • மூன்றாவது இடம் பிடித்த ஆஸ்திரேலியாவுக்கு வெள்ளிப் பதக்கமும், 4வது இடம் பிடித்த இந்தியாவுக்கு வெண்கலப் பதக்கமும் வழங்கப்பட்டது. 



கத்தாரில் ஹலால் சான்றிதழ் பெற்ற பதஞ்சலி நிறுவனம்
  • பிரபல யோகா குரு தயாரிப்பான பதஞ்சலி பொருட்களுக்கு கடந்தஆண்டு கத்தார் நாடு தடை விதித்திருந்த நிலையில், தற்போது ஹலால் சான்றிதழ் வழங்கி உள்ளது. 
  • இதன் காரணமாக பதஞ்சலி அரபுநாடான கத்தாரில் தனது விற்பனையை தொடங்கும் என தெரிகிறது.
ரஷ்யாவுடன் செய்த அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறியது அமெரிக்கா
  • ரஷ்யா - அமெரிக்கா இடையே பனிப்போர் காலத்தில் செய்துகொள்ளப்பட்ட மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து முறைப்படி விலகிவிட்டது அமெரிக்கா.
  • மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம் (இன்டர்மீடியேட் ரேஞ்ஜ் நியூக்ளியர் ஃபோர்சஸ் டிரீட்டி) 1987-ம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்டு ரீகன் மற்றும் சோவியத் ஒன்றியத் தலைவர் மிகயீல் கோர்பச்சேவ் இடையே கையெழுத்தானது.
  • 500 கி.மீ. முதல் 5,500 கி.மீ தூரம் சென்று தாக்கவல்ல ஏவுகணைகளை இந்த ஒப்பந்தம் தடை செய்தது.
  • 9M729 ஏவுகணைகள் பலவற்றை ரஷ்யா பயன்பாட்டுக்கு கொண்டுவந்திருப்பது தொடர்பாக தங்களிடம் ஆதாரங்கள் இருப்பதாக அமெரிக்கா சொல்லியது. இந்த வகை ஏவுகணைகளை நேட்டோ SSC-8 வகை ஏவுகணைகள் என்று புரிந்துவைத்திருந்தது. 
  • அப்போது இந்த குற்றச்சாட்டை தமது கூட்டணி நாடுகளின் அமைப்பான நேட்டோவிடம் அமெரிக்கா தெரிவித்தது. அமெரிக்காவின் குற்றச்சாட்டை நேட்டோ நாடுகள் ஏற்றுக்கொண்டன.கோர்பச்சேவ்-ரீகன் இடையில் 1987ல் கையெழுத்தாகும் மத்திய தூர அணு ஆயுத ஒப்பந்தம்.
  • பனிப் போர் காலத்தில் எட்டப்பட்ட மற்றொரு ஒப்பந்தமான 'புதிய தொடக்க ஒப்பந்தம்' (நியூ ஸ்டார்ட் டிரீட்டி) 2021ம் ஆண்டு பிப்ரவரியில் காலாவதியாகிறது. நீண்டதூரம் சென்று தாக்கும் அணு ஆயுதங்களை மட்டுப்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம் புதுப்பிக்கப்படும் வாய்ப்பு மிகக் குறைவாகவே இருப்பதாகத் தெரிகிறது.
மிஸ் இங்கிலாந்து: இந்திய பெண் தேர்வு
  • இங்கிலாந்தில் வசிக்கும், இந்திய வம்சாவளியை சேர்ந்த 23 வயது பெண் டாக்டர் பாஷா முகர்ஜி, மிஸ் இங்கிலாந்தாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel