Type Here to Get Search Results !

16th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மதுரையில் ரூ.20கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் : அமைச்சர் விஜயபாஸ்கர்
  • தமிழகத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் நோய் தடுப்பூசி, சிகிக்சை திட்டம் ரூ. 6.43 கோடியில் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். 
  • சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரூ.5 கோடியில் 128 சி.டி.ஸ்கேன் கருவி வழங்கப்படும் என்றும் மதுரையில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் உலக தரம் வாய்ந்த மருந்துகள் ஆய்வுக்கூடம் அமைக்கப்படும் என்றும் ஆண்டுக்கு 5000 மருந்து மாதிரிகளை பகுப்பாய்வு செய்யப்படும் என்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்
  • தமிழகத்தில் 3இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகிறது. 
  • இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாவது குறிப்பிடத்தக்கது. பந்தநல்லூர், புவனகிரி, நன்னிலம் உள்ளிட்ட 3இடங்களில் ஒப்பந்தத்தின்படி ஹைட்ரோகார்பன் எடுக்கப்படும்.



அறிமுகமானது முறைப்படுத்தப்பட்ட வாடகைத் தாய் மசோதா
  • குழந்தை இல்லாத தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெறுவது நடைமுறையில் உள்ளது. ஆனால், வாடகை தாய் முறை வர்த்தகரீதியாக பயன்படுத்தப்படுவது அதிகரித்துள்ளதாக புகார் எழுந்துள்ளது. 
  • குறிப்பாக, உலக அளவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்று தரும் வர்த்தக மையமாக இந்தியா மாறி வருவதாக சொல்லப்படுகிறது.
  • இதை முறைப்படுத்தும் வகையில் வாடகைத் தாய் ஒழுங்குமுறை மசோதா 2019-ஐ மத்திய அரசு மக்களவையில் அறிமுகப்படுத்தியுள்ளது. சட்டப்படி திருமணமாகி குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் நிறைவடைந்த இந்திய தம்பதிகள் வாடகைத் தாய் மூலம் குழந்தைகளை பெறலாம். குழந்தைப் பெற்று தரும் வாடகைத் தாய் அந்தத் தம்பதிகளின் உறவினராக இருக்க வேண்டும் என்பது கட்டாயம்.
  • ஒரு பெண் ஒரு முறை மட்டுமே வாடகைத் தாயாக இருக்க வேண்டும். அவ்வாறு வாடகைத் தாயாக இருக்கும் பெண் திருமணமாகி ஏற்கனவே குழந்தை பெற்றிருக்க வேண்டும். வாடகைத் தாயாக இருக்கும் பெண் 25 முதல் 35 வயது உடையவராக இருக்க வேண்டும்.
  • இந்த முறையை ஒழுங்குபடுத்துவதற்கு மத்திய மற்றும் மாநில அளவில் வாடகைத் தாய் வாரியம் அமைக்கப்படும் என மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. வாடகைத் தாய் மூலம் பெறப்பட்ட குழந்தைகளை தம்பதிகள் எக்காரணம் கொண்டும் கைவிட்டு விடக் கூடாது என அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளது.
தபால் துறை தேர்வுகள் ரத்து அமைச்சர் அறிவிப்பு
  • தபால் துறையில் தபால்காரர், உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்காக கடந்த ஞாயிற்றுக்கிழமை தேர்வுகள் நடத்தப்பட்டன. இதில் கேள்விகள் அனைத்தும் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தன. தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகள் புறக்கணிக்கப்பட்டன.
  • இந்த விவகாரத்தை தமிழகத்தைச் சேர்ந்த திமுக எம்பிக்கள் நேற்றைய தினம் மாநிலங்களவையில் எழுப்பினர். தபால்துறை தேர்வில் தமிழ் புறக்கணிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்ததுடன், தேர்வை ரத்து செய்துவிட்டு தமிழ் உள்ளிட்ட பிற மாநில மொழிகளிலும் தேர்வை ரத்து செய்யும்படி வலியுறுத்தினர்.
  • தபால் துறை தேர்வை தமிழில் நடத்துவதற்கு உத்தரவிடக் கோரி முழக்கம் எழுப்பினர். ஒரு கட்டத்தில் சபாநாயகரின் இருக்கையை முற்றுகையிட்டு முழக்கம் எழுப்பினர். இதனால் அவையில் கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் விளக்கம் அளிப்பார் என கூறியும் அதை அவர்கள் ஏற்கவில்லை.
  • இதனால் மீண்டும் அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக எம்பிக்களின் தொடர் எதிர்ப்பால் மாநிலங்களவை 4 முறை ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து பேசிய ரவிசங்கர் பிரசாத், தமிழ் உள்ளிட்ட அனைத்து பிராந்திய மொழிகளிலும் அஞ்சல் துறை தேர்வுகள் நடத்தப்படும்.
  • எனவே கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த அஞ்சல் துறை தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன என்றார் ரவிசங்கர் பிரசாத். தமிழக எம்பிக்களின் தொடர் போராட்டத்தை அடுத்து தபால் துறை தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஆந்திராவின் ஆளுநராக பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் நியமனம்
  • சத்தீஸ்கர் ஆளுநராக அனுசுயா யுகேயையும், ஆந்திராவின் ஆளுநராக பிஸ்வா பூசன் ஹரிச்சந்தனையும் நியமித்து குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் அறிவிப்பாணை வெளியிட்டுள்ளார்.
  • பிஸ்வா பூசன் ஹரிச்சந்தன் 1971-ஆம் ஆண்டு பாரதிய ஜன சங்கத்தில் இணைந்தவர். 1977-ல் ஜனதா கட்சி உருவாகும் வரை அதன் தேசிய நிர்வாக உறுப்பினராகவும், அதன் மாநில பொதுச் செயலாளராகவும் பொறுப்பு வகித்தவர். பின்னல் 1975-ல் MISA -ன் கீழ் தடுக்கப்பட்ட அவர் பாஜகவில் சேர்ந்தார், 1980 முதல் 1988 வரை அதன் மாநிலத் தலைவராக இருந்தார்.
  • 1988-ல் ஜனதா கட்சியில் சேர்ந்த அவர் மாநிலத்திற்கான அதன் துணைத் தலைவரானார். பின்னர் மீண்டும் ஏப்ரல் 1996-ல் பாஜகவில் இணைந்தார்.
  • 84 வயதான அரசியல்வாதி சிலிக்கா மற்றும் புவனேஸ்வர் தொகுதிகளில் இருந்து ஐந்து முறை ஒடிசா சட்டமன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



ரூ.100 கோடியில் சூரிய ஒளி மின்னாலை அமைக்க பெல் நிறுவனத்துக்கு அனுமதி
  • தேசிய அனல் மின் நிறுவனத்தின் (என்டிபிசி) சார்பில், ஆந்திர மாநிலம் சிம்ஹாத்ரியில் உள்ள அனல் மின்நிறுவனத்தில் புதிதாக 25 மெகாவாட் திறனுடைய மிதக்கும் சூரிய ஒளி மின்னாலையை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
  • இதற்கான பொறியியல் மற்றும் உதவி சாதனங்கள் கொள்முதல் மற்றும் கட்டுமானப் பணிகளை மேற்கொள்வதற்கான ஆணை பெல் நிறுவனத்துக்கு வழங்கப்பட்டுள்ளது. என்டிபிசி நிறுவனத்திடம் இருந்து பெல் நிறுவனத்துக்கு கிடைக்கப்பெற்ற இரண்டாவது ஆணை இதுவாகும்.
  •  ஏற்கெனவே தெலங்கானாவில் ராமகுண்டம் பகுதியில் 100 மெகாவாட் திறனில் சூரிய ஒளி மின்னாலை அமைக்கும் அனுமதியை பெல் நிறுவனம் பெற்றுள்ளது. 
  • இதனையடுத்து மிதக்கும் சூரிய ஒளி மின்னாலை வணிகத்தில் பெல் நிறுவனம் 130 மெகாவாட் நிறுவு திறனுடைய நிறுவனமாக வளர்ச்சி பெற்றுள்ளது. கடந்த 30 ஆண்டுகளாக புதுப்பிக்கத்தக்க ஆற்றலை மேம்படுத்தவும், ஊக்குவிக்கவும் பெல் நிறுவனமானது நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றி வருகிறது. 
சர்வதேச பவுதிக போட்டி : இந்தியாவுக்கு 2 தங்கம் மற்றும் 3 வெள்ளி பதக்கங்கள்
  • சர்வ தேச பவுதிக போட்டி என்பது மாணவர்களுக்கான வினா விடை போட்டி ஆகும். இந்த போட்டி கடந்த 7 முதல் 14 வரை இஸ்ரேல் நாட்டில் உள்ள டெல் அவிவ் நகரில் நடந்தது. இதில் உலகெங்கும் உள்ள 70 நாடுகளில் இருந்து 363 மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இந்த போட்டி ஞாயிறுடன் முடிவடைந்துள்ளது.
  • இதில் பல சுற்று போட்டிகள் நடந்துள்ளன. இதில் இந்திய மாணவர்கள் ஐவர் பதக்கம் வென்றுள்ளனர். இந்திய மாணவர்கள் இரு தங்கப்பதக்கமும் மூன்று வெள்ளி பதக்கங்களும் வென்றுள்ளனர். இவர்களில் மூவர் இந்தியாவில் நடந்த ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் முதல் இடங்களை பிடித்தவர்கள் ஆவார்கள்.
  • டில்லியை சேர்ந்த ஆர்சிட் புப்னா மற்றும் ராஜ்கோட்டை சேர்ந்த நிஷாந்த் அபாங்கி ஆகிய இருவரும் தங்கப்பதக்கம் வென்றுள்ளனர், மற்றும் இந்தூரை சேர்ந்த துருவ் அரோரா, சோனிபட்டை சேர்ந்த ஹர்ஷ்வர்தன் அகர்வால் மற்றும் சூரத்தை சேர்ந்த கௌஸ்துப் திகே ஆகியோர் வெள்ளி பதக்கங்கள் வென்றுள்ளனர்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல்: 3-ஆவது தங்கம் வென்றார் விஜயவீர்
  • ஜெர்மனியின் சூல் நகரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஆடவர் 25 மீ. பிஸ்டல் அணிகள் பிரிவில் இந்தியாவின் விஜயவீர், ராஜ்கன்வர் சிங், ஆதர்ஷ் சிங் உள்ளிட்டோர் சிறப்பாக செயல்பட்டு தங்கம் வென்றனர். இது விஜயவீர்வெல்லும் 3-ஆவது தங்கமாகும். ஆத்ர்ஷுக்கு இது 2-ஆவது தங்கமாகும்.
  • மேலும் 10 மீ ஏர் ரைபிள் ஆடவர் பிரிவில் ஹஸாரிகா, யஷ்வர்த்தன், பார்த்தி மகிஜா ஆகியோர் கொண்ட இந்திய அணி 1877.4 புள்ளிகளுடன் வெள்ளி வென்றது. 7 தங்கம் உள்பட மொத்தம் 16 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel