Type Here to Get Search Results !

15th JULY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

காமராஜர் மணிமண்டபத்தை காணொலி காட்சி மூலம் முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்
  • கல்விக் கண் திறந்த காமராஜருக்கு மதுரை மாவட்டம் திருமங்கலம் தொகுதிக்குட்பட்ட கள்ளிக்குடியில் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், தமது சொந்த செலவில் காமராஜருக்கு மணிமண்டபம் கட்டி உள்ளார். 
  • ரூ.25 கோடி செலவில் 12 ஏக்கர் பரப்பளவில் விருதுநகரில் அமைக்கப்பட்டுள்ள கல்விக் கண் திறந்த காமராஜரின் மணிமண்டபத்தை முதல்வர் பழனிசாமி திறந்து வைத்தார்.
நாசா பயிற்று மொழியாக தமிழ் இணைப்புக்கு ஒப்புதல்
  • அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசாவின் பயிற்று மொழிகளில் தமிழ் மொழி சேர்க்கப்பட உள்ளது.
  • பத்தாவது உலக தமிழ் மாநாட்டின் போது நாசாவுக்கு ஒரு தமிழர் கோரிக்கை ஒன்றை அனுப்பி இருந்தார். அதில் உலகின் மிகப் பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிருவனமான நாசாவில் தமிழ் பயிற்று மொழியாக ஏற்றுக் கொள்ளப்படுமா என கேள்வி எழுப்பி இருந்தார். அதற்கு உடனடியாக பதில் அளித்த நாசா அவர் கோரிக்கைக்கு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தது
என்.ஐ.ஏ சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றம்
  • தேசிய புலனாய்வு அமைப்பிற்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் சட்டத் திருத்த மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
  • நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு பதவியேற்ற பின்பு தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவை கொண்டு வர முடிவு எடுத்தது. இதனையடுத்து, என்.ஐ.ஏவுக்கு கூடுதல் அதிகாரம் அளிக்கும் இந்தச் சட்டத்திருந்த மசோதாவை கடந்த 8ஆம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மக்களவையில் தாக்கல் செய்தார்.
  • இந்நிலையில் இன்று இந்த மசோதா மீதான விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. இந்த மசோதாவிற்கு காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்தச் சட்டத் திருத்த மசோதாவின் அதிகாரத்தை மத்திய அரசு தவறாக பயன்படுத்தக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
  • தேசிய புலனாய்வு அமைப்பு சட்டத் திருத்த மசோதாவில் இரண்டு முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இந்தச் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் அனைத்தையும் மத்திய அளவிலுள்ள ஒரு சிறப்பு புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். அதேபோல இச்சட்டத்தின் கீழ் வரும் வழக்குகளை விசாரிக்க ஒரு சிறப்பு நீதிமன்றமும் அமைக்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.



இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு நபார்டு வங்கி விருது
  • நபார்டு வங்கியின், 38வது ஆண்டு துவக்க விழா, சென்னையில், சமீபத்தில் நடந்தது. இதில், தமிழகத்தில் சுய உதவிக்குழு - வங்கி இணைப்பு திட்டத்தின் கீழ், ஐ.ஓ.பி., சிறப்பாக பணியாற்றி வருகிறது. 
  • குறிப்பாக, கிராமப்புற பெண்களுக்கு முக்கியத்துவம் அளித்து, மகளிர் சுய உதவிக்குழு இணைப்பு வாயிலாக, அவர்களை வங்கி சேவைக்கு உட்படுத்தி உள்ளது.
  • இதற்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில், 2018 - -19ம் நிதியாண்டில், பொதுத் துறை வங்கிகளில், சுய உதவிக்குழு - வங்கி இணைப்பில், மிகச் சிறப்பாக பணியாற்றிய வங்கிக்கான இரண்டாம் பரிசை, ஐ.ஓ.பி.,க்கு, நபார்டு வங்கி வழங்கி உள்ளது.
ஹிமாச்சல் ஆளுநர் குஜராத்துக்கு இடமாற்றம் ஹிமாச்சல் ஆளுநராக பாஜகவின் கல்ராஜ் மிஸ்ரா நியமனம்
  • ஹிமாச்சல் பிரதேசத்தின் புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் கல்ராஜ் மிஷ்ரா நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேநேரம் ஹிமாச்சல பிரதேச ஆளுநராக இருந்த ஆச்சார்யா தேவ்ரட் குஜராத் ஆளுநராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
  • இந்நிலையில் கடந்த 2019 லோக்சபா தேர்தலில் கல்ராஜ் மிஸ்ரா போட்டியிடவில்லை. இந்த சூழலில் அவரை ஹிமாச்சல் பிரதேச ஆளுநராக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவிட்டுள்ளார்.
இரண்டு ஆண்டுகளில் இல்லாத சரிவு : மொத்த விலை பணவீக்கம் 2.02 சதவீதமாக குறைந்தது
  • நாட்டின் மொத்த விலை பணவீக்கம், ஜூன் மாதத்தில், இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, 2.02 சதவீதமாகக் குறைந்துள்ளது.மொத்த விலை பணவீக்கம், தொடர்ந்து இரண்டாவது மாதமாக, ஜூன் மாதத்திலும் குறைந்துள்ளது. 
  • இது, 23 மாதங்களில் இல்லாத அளவுக்கு, 2.02 சதவீதமாகக் குறைந்து உள்ளது.கடந்த, 2017ம் ஆண்டு, ஜூலை மாதத்தில், மொத்த விலை பணவீக்கம், 1.88 சதவீதமாக இருந்தது. 
  • அதன் பிறகு, இந்த ஆண்டு ஜூன் மாதத்தில் தான், 2.02 சதவீதமாக குறைந்த அளவில் உள்ளது.காய்கறிகள், எரிபொருள், மின்சாரம் ஆகியவற்றின் விலை குறைவால், ஜூன் மாதத்தில், இந்த அளவுக்கு மொத்த விலை பணவீக்கம் குறைந்துள்ளது.



அதிநவீன குண்டுகளை கொள்முதல் செய்கிறது இந்தியா
  • 50 கி.மீட்டர் தொலைவில் உள்ள இலக்கையும் தாக்கி தகர்க்கும் அதிநவீன வெடிகுண்டை, அமெரிக்காவிடமிருந்து வாங்க இந்திய ராணுவம் முடிவு செய்துள்ளது. இந்தியா வாங்க திட்டமிட்டுள்ளவை எக்ஸ்காலிபர் ரக வெடிகுண்டுகளாகும்.
  • இந்தியாவின் இந்த அதிரடி வான்வழி தாக்குதலின் போது, இஸ்ரேலிடமிருந்து வாங்கப்பட்ட ஸ்பைஸ் 2000 ரக குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. எனினும் இது போன்ற சூழலை கையாள மேலும் அதிநவீன ஆயுதங்கள் தேவைப்படுவதாக ராணுவம் கருதியது.
  • இந்நிலையில் எக்ஸ்காலிபர் ரக குண்டுகளை பயன்படுத்த ஏதுவாக அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட எம் -777 அல்ட்ரா-லைட் பீரங்கிகளை இந்திய ராணுவத்தில் இணைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது
சர்வதேச கோர்ட் பாகிஸ்தானுக்கு ரூ.41 ஆயிரம் கோடி அபராதம் விதித்து அதிரடி
  • பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ரெகோ நகரில் தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய வளங்கள் மிகுந்து காணப்படுகின்றன. இதனால் பல்வேறு நாடுகளை சேர்ந்த சுரங்க நிறுவனங்கள் இங்கு தங்கம் மற்றும் தாமிரம் வெட்டி எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றன.
  • அந்த வகையில் சிலி மற்றும் கனடாவை சேர்ந்த 'டிசிசி' என்கிற கூட்டு நிறுவனத்துக்கு ரெகோ நகரில் சுரங்க பணிகள் குத்தகைக்கு விடப்பட்டிருந்தது. 
  • கடந்த 2011-ம் ஆண்டு அந்த நிறுவனத்துடனான ஒப்பந்தத்தை பலுசிஸ்தான் மாகாண அரசு திடீரென ரத்து செய்தது. இதை எதிர்த்து, அந்நிறுவனம் பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது.
  • ஆனால் அந்நிறுவனத்தின் ஒப்பந்தம் பாகிஸ்தான் சட்டத்துக்கு எதிரானது என கூறி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. அதனை தொடர்ந்து, அந்த நிறுவனம் இந்த விவகாரத்தை சர்வதேச நடுவர் கோர்ட்டுக்கு கொண்டு சென்றது. 
  • அங்கு இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது. இதில் பாகிஸ்தான் அரசு சட்டவிரோதமான முறையில் 'டிசிசி' நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்வது உறுதி செய்யப்பட்டது.
  • இதையடுத்து, இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் அரசுக்கு 5.97 பில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.41 ஆயிரம் கோடி) சர்வதேச நடுவர் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது. பாகிஸ்தான் ஏற்கனவே பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வரும் நிலையில் சர்வதேச கோர்ட்டின் இந்த உத்தரவு பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு ஏற்படுத்தி உள்ளது.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியா முதலிடம்
  • ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டிகள் ஜெர்மனியில் கடந்த 13ஆம் தேதி தொடங்கியது. முதல் நாள் போட்டியில் ஆடவர் 25 மீட்டர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்திய வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலம் ஆகிய மூன்று பதக்கங்களையும் வென்றனர். இதன் மூலம் முதல் நாளிலே இந்திய சிறப்பான தொடக்கத்தை பெற்றது.
  • அத்துடன் மொத்தமாக முதல் நாளில் 2 தங்கம், 2 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலப் பதக்கம் எனப் பல பதக்கங்களை இந்தியாவென்றது. அதேபோல இரண்டாவது நாள் முடிவில் 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் வென்று இந்திய முதலிடம் பெற்றது.
  • இந்நிலையில் மூன்றாம் நாளான நேற்று மேலும் 3 பதக்கங்களை இந்திய பெற்றது. நேற்று நடைபெற்ற 10 மீட்டர் ஏர் ரைஃபில் போட்டியில் தமிழ்நாட்டை சேர்ந்த இளவேனில் வளரிவான் தங்கப்பதக்கத்தை வென்றார். இதே போட்டியில் இந்தியாவின் மெஹோலி கோஷ் வெள்ளிப்பதக்கத்தை வென்றார்.
  • அத்துடன் 50 மீட்டர் பிஸ்டல் போட்டியில் இந்தியாவின் பிரியா ராகவ் வெள்ளிப்பதக்கம் வென்றார். இதன்மூலம் 6 தங்கம், 6 வெள்ளி மற்றும் 2 வெண்கல பதக்கங்களுடன் பதக்கப்பட்டியலில் இந்திய அணி முதலிடத்தில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel