Type Here to Get Search Results !

5th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தமிழக சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டத்திற்கு உலக வங்கி ரூ.2,000 கோடி கடன் கையெழுத்தான ஒப்பந்தம்
  • தமிழகத்தில் சுகாதார திட்டங்களை செயல்படுத்த உலக வங்கி ரூ.2,009 கோடியை கடனாக வழங்க ஒப்புதல் வழங்கியுள்ளது. இதற்காக உலக வங்கி - மத்திய அரசு - தமிழக அரசு ஆகியவற்றிற்கு இடையே, டெல்லியில் முத்தரப்பு ஒப்புந்தம் கையெழுத்தாகியுள்ளது.
  • சர்வதேச அளவில் சுகாதார முன்னேற்ற நாடுகளின் நிதி ஆயோக் பட்டியலில் இந்தியா 3வது இடத்தில் உள்ளது. பிரசவ காலக்கட்டங்களின் போது தாய் இறப்பு விகிதம், ஒரு லட்சத்துக்கு 90 பேர் என்பதில் இருந்து, ஒரு லட்சத்துக்கு 62 பேர் என்ற அளவாக குறைந்துள்ளது. மேலும் பிரசவத்தின்போது பச்சிளம் குழந்தைகள் இறப்பு விகிதம், ஆயிரம் பேருக்கு 30 என்பதில் இருந்து ஆயிரம் பேருக்கு 20 ஆகவும் குறைந்துள்ளது.
  • உலக வங்கி வழங்கும் இந்த நிதியை பயன்படுத்தி தமிழ்நாடு சுகாதார பணிகள் சீர்திருத்த திட்டம் ஒன்றை தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வர மாநில அரசு முடிவு செய்துள்ளது. இத்திட்டத்தில் தமிழகத்தில் சுகாதார சேவையின் தரத்தை மேம்படுத்துதல், தாய்மைப்பேறு மற்றும் குழந்தைகள் மருத்துவ சேவையை மேம்படுத்துதல், தொற்றா நோய்களின் சுமையை குறைத்தல் ஆகியவையே நோக்கமாகும்
இந்தியாவின் அதிவேக 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சோதனை வெற்றி
  • இந்தியா - ரஷியா கூட்டு தயாரிப்பான 'பிரமோஸ் சூப்பர்சோனிக்' ஏவுகணை சுமார் 2 ஆயிரம் கிலோ எடை கொண்டதாகும். இந்த ஏவுகணை 200 கிலோ வெடிப் பொருளுடன் சுமார் 290 கிலோ மீட்டர் தூரம் வரை பறந்து சென்று தாக்கும் ஆற்றல் கொண்டது. 
  • நிர்ணயிக்கப்பட்ட பாதையில் செல்லும்போது, தேவைப்பட்டால் இலக்கிலிருந்து 20 கிலோ மீட்டர் தூரத்தில் இலக்கின் போக்குக்கு ஏற்ப திசைமாறிச் சென்று தாக்கும் வல்லமை கொண்டது.
  • இந்தியா மற்றும் ரஷ்யா இணைந்து தயாரித்த இந்த ஏவுகணை 290 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும். மணிக்கு 3 ஆயிரத்து 700 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லக் கூடியது. தரை, வான் மற்றும் கடலில் இருந்து இந்த ஏவுகணையை எதிரிகளை நோக்கி ஏவ முடியும்.
  • இதற்கு முன் பல முறை பிரமோஸ் ஏவுகணை சோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், பிரமோஸ் ஏவுகணையில், அவ்வப்போது புதுப்புது அம்சங்கள் சேர்க்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது போர் கப்பலை எதிர்க்கும் திறன் சோதிக்கப்பட்டது.



கிராமம் முழுவதும் சோலார் அடுப்புகள்: இந்தியாவின் முதல் கிராமம்
  • மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த பெடுல் மாவட்டத்தில் உள்ள பஞ்சா என்ற கிராமத்தில் உள்ள 75 வீடுகளிலும் விறகு அடுப்போ, மண்ணெண்ணெய் அடுப்போ, கேஸ் அடுப்போ இல்லை. இங்குள்ள குடிசை வீடுகள் உள்பட அனைத்து வீடுகளிலும் சோலார் அடுப்புகள் தான் உள்ளது.
  • சூரிய சக்தியின் பயனை இந்த கிராமத்தில் உள்ள அனைவரும் உணர்ந்திருப்பது மற்ற கிராமத்தினர்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது. இந்தியாவில் சோலார் அடுப்பை பயன்படுத்தும் முதல் கிராமம் என்ற பெருமையை இந்த கிராமம் பெறுகிறது. இதேபோல் இந்தியாவின் அனைத்து பகுதி மக்களும் செயல்பட்டால் கேஸ் என்பதே தேவையின்றி போகும்
மூன்று புதிய கேபினட் குழுக்களை அமைத்தார் பிரதமர் மோடி
  • மூன்று குழுக்கள் முறையே பாதுகாப்பு, முதலீடு மற்றும் வளர்ச்சி, வேளைவாய்ப்பு மற்றும் தொழில்வளர்ப்பு என வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மூன்று குழுவிற்கும் பிதரமர் மோடியே தலைமை தாங்குவார் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • இதில் நாட்டின் பாதுகாப்பிற்கான கேபினர் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
  • அதேப்போல் முதலீடு மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கான கேபினட் குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி, ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் இடம்பெற்றுள்ளனர்.
  • மூன்றாவது கேபினட் குழுவான வேலைவாய்ப்பு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாட்டு குழுவில் 10 பேர் இடம்பிடித்துள்ளனர். அதன்படி உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே துறை அமைச்சர் பியுஷ் கோயல், விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தாமர், மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் ரமேஷ் போக்கிரியால் நிஷாங்க், பெட்ரோலியம் மற்றும் இயற்கை வாயு துறை அமைச்சர் தர்மேந்திர ப்ரதான், திறன் மற்றும் தொழில்மேன்மையாக்கல் அமைச்சர் மகேந்திர நாத் பாண்டே மற்றும் மாநிலத்திற்கான அமைச்சர் சந்தோஷ் குமார் கங்காவர், ஹர்ப்ரீத் சிங் பூரி ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
G-20 மாநாட்டில் பங்கேற்க ஜப்பான் செல்கிறார் நிர்மலா சீதாராமன்
  • ஜப்பானில் வரும் ஜூன் 8 மற்றும் 9-ஆம் தேதிகளில் G-20 நாடுகளில் நிதி அமைச்சர்கள் பங்கேற்கும் G-20 மாநாட்டு நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்கவுள்ளார். அவருடன் ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாசும் இந்த இரண்டு நாள் மாநாட்டில் பங்கேற்க உள்ளார் என கூறப்படுகிறது.
  • நிதி அமைச்சராக பதிவியேற்ற பிறகு நிர்மலா சீதாராமன் பங்கேற்கும் முதல் சர்வேதச நிகழ்வு இதுவாகும். இந்த மாநாட்டில் சர்வதேச பொருளாதாரம் சந்தித்து வரும் சவால்கள், நாடுகளின் உள்கட்டமைப்புகளில் முதலீடுகளை அதிகப்படுத்துதல் மற்றும் சர்வதேச வரிவிதிப்பு குறித்தும் ஆலோசிக்கப்பட வாய்ப்புகள் உள்ளன.
  • மாநாட்டில் நடைபெறுவுள்ள கலந்துரையாடல்கள் கடந்த ஜூன் 28-29 ஆகிய தேதிகளில் நடைப்பெற்ற ஒசாகா உச்சி மாநாட்டின் தொடர்ச்சியாக இருக்கும் என தெரிகிறது.



சர்வதேச அளவில் தலைமைப் பதிவிக்கான விருத்துக்கு சுந்தர் பிச்சை தேர்வு
  • கூகுள் நிறுனவனம உலகளவில் அதிக பிரபலமானது, குறிப்பாக சுந்தர் பிச்சை அவர்களின் தலைமை பொறுப்பு கூகுள் நிறுவனத்தை அடுத்த கட்டத்திற்க்கு கொண்டு சென்றுள்ளது என்று தான் கூறவேண்டும்.
  • பின்பு அவருடன் அமெரிக்க பங்குச் சந்தையின் நாஸ்டாக்கின் தலைவர் அடினாஃப்ரைட் மேனும் அந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை மையமாக கொண்டு இயங்கிடவரும் அமெரிக்க இந்திய வர்த்தக கவுன்சில் சுந்தர் பிச்சை மற்றம் அடினா ப்ரைட் மேனை இந்த விருதுக்கு தேர்வு செய்துள்ளது. குறிப்பாக அடுத்த வாரம் நடைபெற உள்ள உச்சி மாநாட்டில் இந்த விருது வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதல்முறையாக இந்திய சமூக நல மைய தலைவராக தமிழர் தேர்வு பெருமைபடும் தமிழகம்
  • அல் அய்ன் இல் செயல்பட்டு வரும் இந்திய சமூக நல மையத்தின் தலைவராக தமிழகத்தை சேர்ந்த முபாரக் முஸ்தபா என்பவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
  • அபுதாபியில் உள்ள இந்திய தூதரகத்துடன் இணைந்து பல்வேறு நலப்பணிகளை செய்து வரும் இந்திய சமூக நல மையம் பல்வேறு சிறப்பு பணிகளை செய்து வருகிறது
  • இந்த சமூக நல மையத்தில் இந்தியாவி ன் அனைத்து மாநிலங்களில் இருந்தும் உறுப்பினர்கள் அதிக அளவில் உள்ளனர். இதற்கு முன்னதாக மற்ற மாநிலத்தவர் தலைவராக இருந்தபோதிலும்,15 ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது தான் முதல் முறையாக ஒரு தமிழரை ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது கூடுதல் தகவல்.
  • தமிழகத்தின் கீழக்கரை என்ற பகுதியை சேர்ந்தவர் முபாரக் முஸ்தபா . தற்போது நடைபெற்ற சமூக நல மையத்தின் நிர்வாக குழு தேர்தலில் புதிய தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருடன் துணை தலைவராக கேவி ஈசா பொதுச்செயலாளராக முகைதீன், பொருளாளராக சந்தோஷ் குமார் என்பவரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவிடம் ஹெலிகாப்டர் வாங்க இந்தியா முடிவு
  • கடற்படையை பலப்படுத்தும் வகையில், அமெரிக்காவிடமிருந்து ரூ.17,500 கோடி மதிப்புள்ள கடற்படை ஹெலிகாப்டர்களை வாங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • அமெரிக்காவிடம் இருந்து லாக்கீட் மார்ட்டின் - சிகோர்ஸ்கை எம்எச்- 60 ஆர் வகையை சேர்ந்த 24 ஹெலிகாப்டர்களை வாங்கப்பட உள்ளது. இதன் மூலம் கடற்படையின், கடலோர பாதுகாப்பு, கண்காணிப்பு, எதிரிகளின் அச்சுறுத்தல்களை சமாளிக்க முடியும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel