Type Here to Get Search Results !

4th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கூடங்குளத்தில் அணுக்கழிவு மையம்
  • அணு உலையில் உருவாகும் புளூட்டோனியம் கழிவுகள், உலைக்கு வெளியே எடுக்கப்பட்டு கூடங்குளம் வளாகத்திற்குள்ளாகவே பாதுகாப்பாக வைக்கப்படும் வசதி தான் Away From Reactor எனப்படும் அணுக்கழிவு மையம்.
  • இந்த அணுக்கழிவு இந்தியாவிலேயே முதன் முதலாக கூடங்குளத்தில் தான் அமைக்கப்படவுள்ளது. 
  • கூடன்குளம் அணு உலை மையத்தில் 1000 மெகாவாட் திறன்கொண்ட இரண்டு அணு உலைகள் செயல்பட்டு வருகின்றன. அந்த அணு உலைகளில் எரிபொருளாக பயன்படும் யுரேனியும் பயன்பாட்டுக்குப் பிறகு, புளூட்டோனியம் அணுக்கழிவாக மாறுகிறது. அந்தக் கழிவு, அணு உலைக்கு கீழே உள்ள குட்டையில் சேமிக்கப்படுகிறது.
ஆந்திர நதிகளை இணைக்கும் போலாவரம் திட்டம் - முதல்வர் ஜெகன் உத்தரவு
  • ஆந்திர மாநிலத்தில் பாயும் கோதாவரி, கிருஷ்ணா உள்ளிட்ட நதிநீர் கடலில் வீணாக கலப்பதை தடுக்க மேற்கு கோதாவரியில் புதிய அணை கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில், புதிய முதல்வராக பொறுப்பேற்றுள்ள ஜெகன்மோகன் ரெட்டி இத்திட்டம் குறித்து அதிகாரிகளுடன் அமராவதியில் ஆலோசனை நடத்தினார்.
  • அப்போது இத்திட்டத்திற்காக மாநில அரசு 11 ஆயிரத்து 537 கோடி ரூபாய் செலவிட்டுள்ளதாகவும் மத்திய அரசு தரப்பிலிருந்து நான்காயிரத்து 810 கோடி ரூபாய் நிதி வரவேண்டியிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் இந்த திட்டத்துக்குத் தேவையான கட்டட பணிகளுக்கு முழுமையாக நிறைவேற்ற 12 ஆயிரம் கோடி ரூபாய் நிதி தேவைப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



இளையராஜாவுக்கே பாடல் உரிமை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
  • அகி மியூசிக் நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி ட்ரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து இளையராஜா இசையமைத்த பாடல்களை நாங்கள் உரிமம் பெற்று வைத்துள்ளோம். எனவே இளையராஜா தனது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. 
  • இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.
  • இதையடுத்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் இளையராஜா ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது.
  • வியாபார நோக்கத்துடன் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினால் அவரிடம் தகுந்த அனுமதி பெற வேண்டும் எனவும் தியேட்டர்களில் அவரது பாடல்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்தியன் ஆயில் நிறுவன இயக்குனர் நியமனம்
  • சென்னை:பொதுத்துறையைச் சேர்ந்த, இந்தியன் ஆயில் நிறுவனத்தின், தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களுக்கான, செயல் இயக்குனராக இருந்த, ஆர்.சித்தார்த்தன், சமீபத்தில், ஓய்வு பெற்றார்.
  • இதையடுத்து, புதிய செயல் இயக்குனராக, பி.ஜெயதேவன் நியமிக்கப்பட்டு உள்ளார். இவர், தமிழகம், புதுச்சேரி மாநிலங்களுக்கான, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்களின், ஒருங்கிணைப்பாளராகவும் செயல்படுவார்.
அசாமில் நேற்று மாயமான AN-32 ரக போர் விமானத்தை தேடும் பணி தீவிரம்
  • அசாமில் இருந்து நேற்று 12.27 மணியளவில் சென்ற AN-32 ரக போர் விமானம் மாயமானது. விமானத்தில் பயணித்த 13 பேர் குறித்து இதுவரை எந்த தகவலும் கிடைக்கிவில்லை. 
  • இதனை தொடர்ந்து அருணாச்சல பிரதேச மாநிலத்தில் நேற்று 13 பேருடன் மாயமான இந்திய விமானப்படை போர் விமானத்தை தேடும் பணியில் விமானப்படை மற்றும் ராணுவத்தினர் தீவிரப்படுத்தியுள்ளனர்.
ஜூனியர் ஹாக்கி: இந்தியா சாம்பியன்
  • பெண்களுக்கான ஜூனியர் ஹாக்கி தொடரின் பைனலில் அசத்திய இந்திய அணி, 1-0 என்ற கோல் கணக்கில் அயர்லாந்தை வீழ்த்தியது. அயர்லாந்தில், 21 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான சர்வதேச ஹாக்கி தொடர் நடந்தது. 
  • இந்தியா, அயர்லாந்து, கனடா, ஸ்காட்லாந்து அணிகள் மோதின. பைனலில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதியில் இரு அணியினரும் கோல் எதுவும் அடிக்கவில்லை. 45வது நிமிடத்தில் இந்திய அணிக்கு 'பெனால்டி கார்னர்' கிடைத்தது. 
  • இதை ககன்தீப் கவுர் கோலாக மாற்றினார். இதன் பின் அயர்லாந்து வீராங்கனைகள் அடுத்தடுத்து தாக்குதல் தொடுத்தனர். இருப்பினும் கிடைத்த மூன்று பெனால்டி கார்னர் வாய்ப்புகளையும் வீணடித்தனர். முடிவில் இந்தியா 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை கைப்பற்றியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel