Type Here to Get Search Results !

2nd & 3rd JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

குட்கா, பான் மசாலா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டு நீடிப்பு
  • தமிழகத்தில் குட்கா மற்றும் பான் மசாலா உள்ளிட்டவற்றுக்கு விதிக்கப்பட்ட தடை மேலும் ஓராண்டிற்கு நீடிக்கும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
  • முன்னதாக உடல்நலத்திற்கு தீங்கு விளைவிக்க கூடிய மெல்ல கூடிய புகையிலை, குட்கா மற்றும் பான்மசாலா பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதித்து கடந்த 2013-ம் ஆண்டு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.
  • கடந்த ஆண்டு குட்கா பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடை மே 23-ம் தேதியுடன் முடிந்து விட்டது. இந்நிலையில் இன்று இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள தமிழக அரசு, மாநிலத்தில் குட்கா பான் மசாலா பொருட்களை உற்பத்தி செய்ய கூடாது. அது போல அவற்றை சேமித்து வைக்கவும் கூடாது.
புதுச்சேரி சபாநாயகராக சிவக்கொழுந்து தேர்வு
  • மக்களவை தேர்தலில் புதுச்சேரி சபாநாயகராக இருந்த வைத்திலிங்கம் போட்டியிட்டார். இவர் வெற்றிபெற்றதையடுத்து புதுச்சேரி சபாநாயகர் பதவி காலியாக இருந்தது.
  • இந்நிலையில் இன்று இதற்கான வேட்புமனு தாக்கல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்துவை தவிர வேறு யாரும் வேட்புமனுத் தாக்கல் செய்யவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
  • இதனால் புதுச்சேரி சட்டப்பேரவையின் சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த வி.பி.சிவக்கொழுந்து போட்டியின்றி தேர்வானார். மேலும் நாளை கூடும் சட்டப்பேரவை கூட்டத்தில் சபாநாயகராக வி.பி.சிவக்கொழுந்து பதவி ஏற்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



ம.பி.யில் ஒ.பி.சி. இடஒதுக்கீடு அதிகரிக்க அவசர சட்டம்
  • மத்திய பிரதேசத்தில் மாநில அரசு இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை அதிகரிக்கும் அவசர சட்டம் கடந்த மார்ச்சில் கொண்டுவரப்பட்டு, ஏப்ரலில் அமல்படுத்த திட்டமிடப்பட்டது. 
  • லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் நன்னடத்தை காரணமாக தள்ளி வைக்கப்பட்டது.இந்நிலையில் தற்போதுள்ள ஓ.பி.சி க்கான இட ஒதுக்கீட்டை 14 சதவீதத்திலிருந்து 27 சதவீதமாக உயர்த்தி அவசர சட்டம் கொண்டு வரப்பட்டு நடக்க உள்ள சட்டசபை குளிர்கால கூட்டத்தொடரில் நிறைவேற்றப்படும். 
வரும் 8, 9ம் தேதி இலங்கை, மாலத்தீவுக்கு மோடி பயணம்
  • மாலத்தீவில் கடந்தாண்டு நவம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் இப்ராகிம் முகமது சோலிக் வெற்றி பெற்றார். அவரது பதவியேற்பு விழாவில் மோடி பங்கேற்றார். கடந்த டிசம்பரில் இந்தியா வந்த சோலிக், மாலத்தீவு வரும்படி மோடிக்கு அழைப்பு விடுத்தார். 
  • அதேபோல், மோடியின் பதவியேற்பு விழாவிற்கு வந்த இலங்கை அதிபர் சிறிசேனாவும் மோடிக்கு அழைப்பு விடுத்தார். இதை ஏற்று, இந்நாடுகளுக்கு மோடி செல்கிறார். முதலில், 8ம் தேதி மாலத்தீவு செல்கிறார். 9ம் தேதி அங்கிருந்து இலங்கை செல்கிறார்.
ஆக்ஸிஸ் வங்கியின் தலைவர் நியமனத்துக்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல்
  • ஆக்ஸிஸ் வங்கியின் தலைவராக நியமிக்கப்பட்ட ராகேஷ் மஹிஜாவுக்கு வங்கியின் இயக்குநர் குழு ஏற்கெனவே கடந்த மார்ச் மாதத்தில் அனுமதி அளித்தது.
  • இந்த நிலையில், ரிசர்வ் வங்கி கடந்த மாதம் இறுதியில் அனுப்பிய கடிதத்தில் அவரின் நியமனத்துக்கு தமது ஒப்புதலை வழங்குவதாக தெரிவித்துள்ளது.
  • ரிசர்வ் வங்கியின் அனுமதியை அடுத்து, ராகேஷ் மஹிஜா, ஆக்ஸிஸ் வங்கியின் தனிப்பட்ட இயக்குநர், செயல் சாரா (பகுதி நேரம்) தலைவராக 3 ஆண்டுகளுக்கு பதவியில் இருப்பார். இவரது நியமனம் 2019 ஜூலை 18-ஆம் தேதியிலிருந்து 2022-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி வரையில் அமலில் இருக்கும்.



சேர்க்கை விண்ணப்பத்தில் மத தேர்வாக மனித நேயத்தை சேர்த்த முதல் பெண்கள் கல்லூரி
  • கொல்கத்தாவைச் சேர்ந்த பெத்தூன் கல்லூரி, தனது கல்லூரி ஆன்லைன் விண்ணப்பத்தில் மதம் என்ற பிரிவின் கீழ் 'மனித நேயம்' (Humanity) என்றொரு பிரிவை இணைத்திருப்பது மாணவர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
  • 1879ம் ஆண்டு இந்தியாவின் முதல் பெண்கள் கல்லூரியான பெத்தூன் கல்லூரி தொடங்கப்பட்டது. இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசிய அளவில் மகளிருக்காக தொடங்கப்பட்ட முதல் கல்லூரி என்ற சிறப்புக்குரியது.
சிம்லா 6.7 கோடி வருடத்துக்கு முந்தைய மரத்தின் படிமம் கண்டுபிடிப்பு
  • சுமார் 6.7 கோடி வருடங்களுக்கு முந்தைய மரத்தின் படிமங்கள் சிம்லா மாவட்டத்தில் கிடைத்துள்ளன.
  • 'இந்த மரம் பல கோடி வருடங்களுக்கு முந்தையதாகும். சுமாராக இது 6.7 கோடி வருடங்களுக்கு முந்தையதாக இருக்க வாய்ப்பு உள்ளது. அந்த காலத்தில் டைனோசர்கள் வசித்து வந்துள்ளன. எனவே இந்த படிவங்களை மேலும் ஆய்வு செய்வதன் மூலம் பல தகவல்கள் கிடைக்க வாய்ப்புள்ளது' 
குன்னூர் வீரருக்கு தங்கப் பதக்கம்
  • கஜகஸ்தானில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான தடகளப் போட்டியில் குன்னூரைச் சேர்ந்த தடகள வீரர் ஸ்ரீகிரண் தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
  • நீலகிரி மாவட்டம், குன்னூர் வெலிங்டன் பகுதியைச் சேர்ந்தவர் நந்தகுமார் மகன் ஸ்ரீகிரண் (17). இவர், கஜகஸ்தானில் கடந்த மாதம் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற்ற 20 வயதுக்கு உள்பட்டோருக்கான "ஈரோசியன்' தடகளப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்றார். இதில், 800 மீட்டர் போட்டியில் ஒரு நிமிடம் 54.62 விநாடிகளில் இலக்கையெட்டி தங்கப் பதக்கம் வென்றார்.
ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் லிவர்பூல் அணி 6-வது முறையாக சாம்பியன்
  • ஐரோப்பிய சாம்பியன்ஸ் லீக் கால்பந்து போட்டி பல்வேறு நாடுகளில் நடந்து வந்தது. 32 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் நேற்று முன்தினம் இரவு மாட்ரிட் நகரில் இறுதிப்போட்டி அரங்கேறியது. இந்த போட்டியில் டோட்டனம் ஹாட்ஸ்புர் (இங்கிலாந்து கிளப்), லிவர்பூல் (இங்கிலாந்து கிளப்) அணிகள் பலப்பரீச்சை நடத்தின .
  • லிவர்பூல் அணி 2-வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி' வாய்ப்பில் முகமது சலா முதல் கோல் அடிக்க, 87-வது நிமிடத்தில் டிவோக் ஒரிஜி இன்னொரு கோல் திணித்தார்.முடிவில் லிவர்பூல் அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஹாட்ஸ்புரை வீழ்த்தி 6-வது முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel