Type Here to Get Search Results !

1st JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மே மாத ஜிஎஸ்டி வசூல் ரூ.1,00,289 கோடி
  • 2019 ம் ஆண்டின் மே மாதத்தில் ரூ.1,00,289 கோடி ஜிஎஸ்டி வசூலிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
  • இந்த அறிவிப்பின் படி,மொத்த ஜிஎஸ்டி வசூல் - ரூ.1,00, 289 கோடி சிஜிஎஸ்டி - ரூ.17,811 கோடி எஸ்ஜிஎஸ்டி - ரூ.24,462 கோடி ஐஜிஎஸ்டி - ரூ.49,891 கோடி (இறக்குமதியுடன் ரூ.24,875 கோடி) செஸ் - ரூ.8,125 கோடி (இறக்குமதி உள்ளிட்ட வசூல் ரூ.953 கோடி)
சமூக நல திட்டங்களைப் பெற வருமான உச்சவரம்பு ரூ.72 ஆயிரமாக உயர்வு
  • பெண் குழந்தைகள், மகளிர் மற்றும் சமூகத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளவர்களின் மேம்பாட்டை உறுதி செய்யும் வகையிலும், நிலையான வளர்ச்சிக்கான இலக்குகளை எட்டும் வகையிலும் தமிழக அரசின் மகளிர் நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. 
  • ஆதரவற்ற பெண்கள், விதவைகள், ஆதரவற்ற குழந்தைகள், மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரை மேம்படுத்தவும், சமநிலை அடையவும் பல சிறப்புத் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. 
  • மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு ஏழை விதவையர் மகள் திருமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்களின் கீழ் பயன்பெற இதுவரை நிர்ணயிக்கப்பட்டிருந்த ஆண்டு வருமான உச்சவரம்பு, ரூ.24 ஆயிரத்தில் இருந்து ரூ.72 ஆயிரமாக உயர்த்தப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது.
தேசிய தரவரிசையில் சென்னை பல்கலைக்கழகத்திற்கு முன்னேற்றம்
  • தேசிய தரவரிசையில் 2 ஆண்டுகளுக்கு முன் 41-வது இடத்தில் இருந்த சென்னை பல்கலைக்கழகம் தற்போது முதல் 20 இடங்களுக்குள் முன்னேற்றியிருப்பதாக துணைவேந்தர் துரைசாமி தெரிவித்துள்ளார்.



தேசிய சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டி: ஆண்கள் பிரிவில் தமிழ்நாடு சாம்பியன்
  • குடியாத்தத்தில் கே.எம்.ஜி. கல்லூரியில் 5 நாள்கள் நடைபெற்ற தேசிய அளவிலான சப்-ஜூனியர் வலுதூக்கும் போட்டிகளில் தமிழ்நாடு ஆண்கள் பிரிவு சாம்பியன் பட்டம் வெற்றது.
  • தமிழ்நாடு வலுதூக்கும் சங்கமும், வேலூர் மாவட்ட வலுதூக்கும் சங்கமும் இணைந்து சப்- ஜூனியர், மாஸ்டர்ஸ் வலுதூக்கும் போட்டிகளை நடத்தின. ஆண்களுக்கான மாஸ்டர் 2-ஆம் பிரிவில் சிறந்த வலுதூக்கும் வீரர் மற்றும் இந்தியாவின் இரும்பு மனிதர் பட்டத்தை தமிழகத்தைச் சேர்ந்த சீவூர் சி. மூர்த்தி, மாஸ்டர் 4-ஆம் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த ஏ. இளமுருகன் சிறந்த வலுதூக்கும் வீரர் என்ற பட்டத்தையும் தட்டிச் சென்றனர்.
  • சப் - ஜூனியர் பிரிவில் சிறந்த வலுதூக்கும் வீரர் பட்டத்தை ராஜஸ்தானைச் சேர்ந்த நரேஷ் ராம்வாத், பெண்கள் பிரிவில் கேரளத்தைச் சேர்ந்த நந்தனா ஆகியோர் பெற்றனர். 
  • ஆண்கள் பிரிவில் 190 புள்ளிகள் பெற்று தமிழ்நாடு முதலிடத்தையும், 161 புள்ளிகள் பெற்று மகாராஷ்டிரம் 2-ஆம் இடத்தையும், 125 புள்ளிகள் பெற்று மத்தியப் பிரதேசம் 3-ஆம் இடத்தையும் பிடித்தன. பெண்கள் பிரிவில் 65 புள்ளிகள் பெற்று மகாராஷ்டிரம் முதலிடத்தையும், 53 புள்ளிகள் பெற்று மணிப்பூர் 2-ஆம் இடத்தையும், 32 புள்ளிகள் பெற்று அஸ்ஸாம் 3-ஆம் இடத்தையும் பிடித்தன.
டிரம்ப் அதிரடிக்குப் பதிலடி: ரூ.4.2 லட்சம் கோடி அமெரிக்கப் பொருள்கள் மீது சீனா கூடுதல் வரி விதிப்பு
  • தங்கள் நாட்டுப் பொருள்களுக்கு அமெரிக்கா கூடுதல் வரி விதித்துள்ளதற்குப் பதிலடியாக, அந்த நாட்டிலிருந்து இறக்குமதியாகும் ரூ.4.2 லட்சம் கோடி (6,000 கோடி டாலர்) மதிப்பிலான பொருள்களுக்கு 25 சதவீதம் வரை கூடுதல் வரி விதிப்பதாக சீனா அறிவித்துள்ளது.
  • 10 சதவீதம் முதல் 25 சதவீதம் வரை இந்த வரி உயர்வு இருக்கும். அமெரிக்காவிலிருந்து இறக்குமதியாகும் அழகுசாதனப் பொருள்கள், விளையாட்டு சாதனங்கள், இசைக் கருவிகள், ஒயின், ஆணுறைகள், வைரம், மரப் பொருள்கள், துணி வகைகள், பொம்மைகள் ஆகிய பொருள்கள் மீது கூடுதல் வரி விதிக்கப்படுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel