Type Here to Get Search Results !

6th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

24 மணி நேரமும் கடைகள், வர்த்தக நிறுவனங்கள் திறந்து வைக்க தமிழக அரசு அனுமதி
  • ஆண்டு முழுவதும் 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களைத் திறந்து வைக்க வகை செய்யும் உத்தரவை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. மேலும், இரவு நேரங்களில் பணியாற்றும் பெண்களுக்கு உரிய பாதுகாப்பு வசதிகளை உருவாக்கித் தர வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டுள்ளது.
  • இந்த மாதிரி மசோதாவைச் செயல்படுத்தும் வகையில், தமிழகத்தில் மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகள், வணிக நிறுவனங்களை இயக்கிட அனுமதிக்கலாம் என்று மாநில தொழிலாளர் நல ஆணையர் அரசுக்கு கடிதம் அனுப்பியிருந்தார். இந்தக் கடிதத்தை ஏற்றுக் கொண்டு, முதல் கட்டமாக மூன்று ஆண்டுகளுக்கு 24 மணி நேரமும் கடைகளைத் திறந்து வைக்க அனுமதி அளிக்கப்படுகிறது .
அரசு கேபிள் டி.வி. நிர்வாக இயக்குநராக சங்கர் நியமனம்
  • தமிழ்நாடு அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் பொறுப்பை, ஜான் லூயிஸ் கூடுதலாகக் கவனித்து வந்தார். 
  • இந்த நிலையில், நிர்வாக இயக்குநர் பொறுப்பு, செய்தி மற்றும் மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் பி.சங்கரிடம் முழு கூடுதல் பொறுப்பாக அளிக்கப்பட்டுள்ளது என்று தனது உத்தரவில் கிரிஜா வைத்தியநாதன் தெரிவித்துள்ளார்.
நிதி ஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் ஒப்புதல்
  • நிதிஆயோக் குழுவை மாற்றியமைக்க பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். நிதி ஆயோக் உறுப்பினர்களில் ஒருவராக உள்துறை அமைச்சர் அமித்ஷா சேர்க்கப்பட்டுள்ளார்.
  • இதன்படி, நிதி ஆயோக் தலைவராக பிரதமர் மோடியும், துணைத் தலைவராக ராஜீவ்குமாரும் தொடர்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் மத்திய அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நரேந்திர சிங் தோமர் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
  • மத்திய அமைச்சர்கள் நிதின்கட்கரி, பியூஷ் கோயல், உள்ளிட்டோர் சிறப்பு உறுப்பினர்களாக இணைக்கப்பட்டுள்ளனர். நிதி ஆயோக்கின் துணைத் தலைவராக இருக்கும் பொருளாதார நிபுணர் ராஜீவ் குமார் மீண்டும் அதே பதவியில் நீடிக்கிறார்.
  • பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான நிதி ஆயோக் கூட்டம் வரும் 15ஆம் தேதி கூடுகிறது. இந்தக் கூட்டத்தில் மத்திய அரசின் வருவாயை மாநிலங்களுக்கு பகிர்ந்து அளிப்பது குறித்து விவாதிக்கப்படுகிறது.



ரூ.300 கோடிக்கு அணுகுண்டு வாங்க இந்தியா - இஸ்ரேல் ஒப்பந்தம்
  • ரூ.300 கோடிக்கு, 100க்கும் அதிகமான 'ஸ்பைஸ்' ரக வெடிகுண்டுகளை வாங்க, இந்தியா - இஸ்ரேல் இடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. 
  • புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக, பாகிஸ்தானின் பாலகோட்டில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத முகாம்களை, இந்திய விமானப்படை தாக்கி அழித்தது. அத்தாக்குதலில், 'ஸ்பைஸ்' ரக குண்டுகளை இந்திய விமான படை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம்
  • விப்ரோ நிறுவனத்தின் செயல் தலைவராக ரிஷாத் பிரேம்ஜி நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் விப்ரோவின் தலைமை செயல் அதிகாரியாக உள்ள அபிதாலி நீமுச்வாலா, ஜூலை 31-ல் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பேற்கிறார்.
ஆன்லைன் பணப் பரிமாற்றத்திற்கான சேவை கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு
  • ஆன்லைன் பணப்பரிமாற்ற சேவைக் கட்டணங்களை ரத்து செய்ய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது.
  • இரண்டாவது காலாண்டிற்கான நிதிக்கொள்கையை, மும்பையில் இன்று வெளியிட்ட ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், அனைத்து ஏடிஎம் கட்டணங்களையும் மறுஆய்வு செய்ய கமிட்டி அமைக்கப்படும் என்றார்.
  • இரண்டு மாதங்களுக்குள் இந்த கமிட்டி அறிக்கை சமர்ப்பிக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார். ரிசர்வ் வங்கியிடம் இருந்து வங்கிகள் பெறும் குறுகிய கால கடனான ரெப்போ வட்டி விகிதத்தை 0.25 சதவீதம் குறைக்கப்பட்டு, 5.75 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறிய சக்தி காந்த தாஸ், இதன் மூலம் வீடு, வாகன கடனுக்கான வட்டி விகிதம் குறையக்கூடும் என்றார்.
  • மார்ச் 31 -ம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 5.8 சதவீதமாக குறைந்த நிலையில், அதிவேகமாக வளர்ச்சியடையும் நாடுகளின் பட்டியலில் சீனா மீண்டும் முன்னிலை பெற்றது.



தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டுகள் சிறை இலங்கையில் வருகிறது புதிய சட்டம்
  • சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கும் வகையில், புதிய சட்டத்தை அமல்படுத்த இலங்கை அரசு முடிவு செய்துள்ளது.
  • இந்த தாக்குதலையடுத்து, இலங்கையில் ஃபேஸ்புக், ட்விட்டர் உள்ளிட்ட சமூக ஊடகங்களுக்கு 9 நாட்கள் தடை விதிக்கப்பட்டது. மேலும், தீவிரவாத தாக்குதல்களின் தொடர்ச்சியாக, அங்கு முஸ்லீம்களை குறிவைத்து தாக்குதல்கள் நடத்தப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் வெளியான தவறான தகவலால் அங்கு வன்முறை மற்றும் மோதல் சம்பவங்கள் அரங்கேறுவதாக கருதப்படுகிறது.
  • இந்தநிலையில், பதற்றத்தை தணிக்கும் விதமாக, சமூக ஊடகங்களில் தவறான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க இலங்கை அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. சமூக ஊடகங்களில் அவதுறான கருத்துக்கள் மற்றும் தவறான தகவல் பரப்பினால் 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் இலங்கை ரூபாய் மதிப்பில் 1 மில்லியன் அபராதம் விதிக்கும் புதிய சட்டத்தை அமல்படுத்தவும் முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
  • இலங்கை சட்டத் துறை அமைச்சர் கொண்டு வந்த இந்த சட்டத்திற்கு அந்நாட்டு அமைச்சரக் குழு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, இந்த சட்டம் விரைவில் அமலுக்கு கொண்டு வரப்பட உள்ளது. சிங்கப்பூரிலும் தவறான தகவல் பரப்பினால் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை தரும் சட்டத்தை சிங்கப்பூர் அரசு அமலுக்கு கொண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.
புதின் - ஷி ஜின் பிங் சந்திப்பு: சீனா - ரஷ்யா இடையே கையெழுத்தாகும் வணிக, ராணுவ ஒப்பந்தங்கள்
  • சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகப் போர் நடக்கும் சூழலில் ஷி ஜின்பிங் இந்த சுற்றுப் பயணத்தை மேற்கொண்டுள்ளார்.
  • இந்த பயணத்தின் போது மாஸ்கோ வனவிலங்கு பூங்காவில் இரண்டு பாண்டா கரடிகளை காட்சிப்படுத்துவதை தொடக்கிவைத்தார் ஷி ஜின்பிங்.
  • இரு நாடுகள் இடையேயான வணிகம், 2018ம் ஆண்டு 25 சதவீதம் அளவிற்கு உயர்ந்துள்ளது.
  • ரஷ்யாவில் சீனா 140 மில்லியன் டாலர்களை 2017ம் ஆண்டு முதலீடு செய்தது.
  • ரஷ்யாவின் லேக் பைகால் பகுதியில் சீன நிறுவனங்கள் அதிகளவில் முதலீடு செய்துள்ளன. அந்நிறுவனங்கள் சூழலியல் மாசை ஏற்படுத்துவதாக கூறி ரஷ்ய மக்கள் போராடினர்.
  • ஹுவாவே நிறுவனம் ரஷ்யாவின் எம்டிஎஸ் நிறுவனத்திற்கு 5 ஜி சேவையை மேம்படுத்தி தரும் ஒப்பந்தமும் இந்த சுற்றுப்பயணத்தில் கையெழுத்தாகியது.
உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக இன்ஃபண்டினோ இரண்டாவது முறை தேர்வு
  • உலகின் அதிக மக்களால் விரும்பி பார்க்கப்படும் விளையாட்டுகளில் முதன்மையானது கால்பந்தாட்டம். அதனை ஃபிஃபா எனப்படும் உலக கால்பந்து சம்மேளன அமைப்பு நிர்வகித்து வருகிறது.
  • 2019-2023-ம் ஆண்டுக்கான உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் தேர்தல் இம்மாதம் நடைபெற்றது. இந்த தேர்தலில் தற்போதைய தலைவர் இன்ஃபண்டினோ மீண்டும் போட்டியிட்டார். 
  • அவரை எதிர்த்து போட்டியிட யாரும் விருப்பம் தெரிவிக்காததால் இரண்டாவது முறையாக வெற்றி பெற்று உலக கால்பந்து சம்மேளனத்தின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel