Friday, 28 June 2019

28th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு கூடுதலாக 30,000 பேர் ஹஜ் பயணம் செல்லலாம் ஒப்புதல் அளித்தது சவுதி
 • ஜப்பான் சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி சவுதி இளவரசர் பின் சல்மானை சந்தித்து பேசினார். அப்போது இந்தியாவிலிருந்து வரும் ஹஜ் பயணிகளின் எண்ணிக்கையை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என சல்மான் உறுதி அளித்தார்.
 • ஹஜ் யாத்திரை என்பது முஸ்லிம்கள் ஆண்டு தோறும் சவூதி அரேபியா நாட்டில் உள்ள மக்கா நகருக்கு மேற்கொள்ளும் புனிதப் பயணம். இது முஸ்லிம்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
 • ரு முஸ்லிம் தன் வாழ்க்கையில் ஒருமுறையாவது இப்பயணத்தை செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது இறைவனை வணங்குவதற்கான ஓர் தனி முறையாகும். உடல் நலமும் பணவசதியும் உள்ள இசுலாமியர் ஓவ்வொரும் தன் ஆயுளில் ஒரு முறையேனும் ஹஜ் செய்ய வெண்டும் என அம்மார்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 • இந்நிலையில் ஜி20 மாநாட்டிற்காக ஜப்பான் சென்றுள்ள பிரதமர் மோடி, சவுதி அரேபிய இளவரசரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையேயான உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்தார். மேலும் இந்த சந்திப்பின் போது முதலீடு, எரிசக்தி பாதுகாப்பு, தீவிரவாதத்தை ஒழித்தல் உட்பட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது.
 • இந்தியா - சவுதி தரப்பு பேச்சு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் விஜய் கோகலை, தற்போது நாடு முழுவதிலுமிருந்து ஆண்டுதோறும் 1.70 லட்சம் முஸ்லிம்கள் புனித ஹஜ் பயணம் செல்கின்றனர்.
 • இந்த எண்ணிக்கையை 2 லட்சமாக அதிகரிக்க பிரதமர் மோடி, சவுதிஅரேபிய இளவரசரிடம் கோரிக்கை விடுத்திருந்தார். இந்த கோரிக்கையை ஏற்று கொண்ட சவுதி இளவரசர், கூடுதலாக 30 ஆயிரம் இந்திய முஸ்லிம்களுக்கு ஹஜ் புனித யாத்திரை வர அனுமதி அளிக்கப்படும் என உறுதி கூறியுள்ளார்.
2020-இல் உணவு சில்லறை விற்பனை ரூ. 61 லட்சம் கோடியை எட்டும்: மத்திய இணை அமைச்சர் பேச்சு
 • தஞ்சாவூரில் உள்ள இந்திய உணவு பதன தொழில்நுட்பக் கழகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உணவு பதப்படுத்துதலில் வளர்ந்து வரும் தொழில்நுட்பம் குறித்த தேசிய அளவிலான கருத்தரங்கத்தில் பங்கேற்ற அவர் பேசியது:
 • உலக அளவில் உணவு தானியங்கள் உற்பத்தியில் இந்தியா முன்னணியில் இருக்கிறது. உணவு சந்தையில் நாம் வளர்ந்து வரும் நிலையில், உணவு சில்லறை விற்பனையில் 2020 -ஆம் ஆண்டில் ரூ. 61 லட்சம் கோடியை எட்டுவோம் என எதிர்பார்க்கப்படுகிறது. 
 • பால், வாழை, மாம்பழம், நறுமணப் பொருள்கள், இறால், பயறு வகைகள், சிறு தானியங்கள், காய்கறிகள், தேயிலை ஆகியவற்றில் இந்தியா முதன்மை இடத்தில் உள்ளது. அறுவடைக்குப் பிந்தைய இழப்பானது விநியோகத் துறையில் மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால், ஒவ்வொரு ஆண்டும் இழப்பு கணிசமாக தொடர்வது வருத்தமளிக்கிறது.
 • அழுகாத விளைபொருள்களில் 3 முதல் 10 சதவீதமும், பாதி அழுகும் தன்மையுடைய பொருள்களான பால், மீன், மாமிசம், முட்டை ஆகியவற்றில் 10 முதல் 20 சதவீதமும், பழங்கள், காய்கறிகளில் 10 முதல் 20 சதவீதமும், தோட்டக்கலைப் பொருள்களில் 5 முதல் 16 சதவீதமும் தோராய இழப்பாக உள்ளது. எனவே, உணவு உற்பத்திக்குப் பிறகு பதப்படுத்துதல், பாதுகாத்தல் போன்றவற்றில் கவனம் செலுத்த வேண்டிய தேவை அதிகரித்துள்ளது.
 • விவசாயிகளின் வறுமையை ஒழிக்கும் வகையில் மத்திய அரசு ரூ. 6,000 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்தியாவின் உணவு சந்தையில் உணவு பதப்படுத்துதலின் பங்களிப்பு 32 சதவீதமாக உள்ளது. உணவு பதப்படுத்துதல் மாறி வரும் சூழலில் ஒவ்வொரு நாளும் புதிய கண்டுபிடிப்புகள் வருவதால், அத்துறை விரிவடைந்து வருகிறது.ஜம்முவில் ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு மசோதா நிறைவேற்றம்
 • ஜம்மு - காஷ்மீரில், ஜனாதிபதி ஆட்சியை மேலும் ஆறு மாதங்கள் நீட்டிக்க செய்யும் மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது.ஜம்மு - காஷ்மீரில், முதல்வர் மெஹபூபா முப்தி தலைமையில், மக்கள் ஜனநாயக கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. 
 • கடந்த ஆண்டு ஜூனில், இந்த கூட்டணி முறிந்ததை அடுத்து, அங்கு ஜனாதிபதி ஆட்சி பிரகடனம் செய்யப்பட்டது. இங்கு, லோக்சபா தேர்தலுடன், சட்டசபை தேர்தலையும் நடத்த, தேர்தல் ஆணையம் திட்டமிட்டது.ஆனால், மார்ச்சில் நடந்த புல்வாமா தாக்குதலுக்கு பின், சட்டம் - ஒழுங்கு நிலை கருதி, சட்டசபை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.
 • இந்நிலையில், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, இரண்டு நாள் பயணமாக, ஜம்மு - காஷ்மீர் சென்றார். அங்கு, கவர்னர் உட்பட, உளவு மற்றும் பாதுகாப்பு துறை உயர் அதிகாரிகளை சந்தித்து, மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை குறித்து ஆய்வு செய்தார்.
 • பின், டில்லி திரும்பிய அவர், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை மேலும், ஆறு மாதங்கள் நீட்டிக்கும் மசோதாவை, லோக்சபாவில், நேற்று தாக்கல் செய்தார்.
 • ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், பயங்கரவாதத்தை முழுமையாக ஒழித்து, மக்கள் அமைதியான வாழ்க்கை வாழ தேவையான அனைத்து நடவடிக்கைகளையும், நரேந்திரமோடி அரசு செய்து வருகிறது. இங்கு பாதுகாப்பை பலப்படுத்துவதற்காக, 2,307 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. 
ஜப்பானில் சவுதி இளவரசருடன் மோடி சந்திப்பு
 • ஜி20 நாடுகளின் உச்சி மாநாடு, ஜப்பான் நாட்டின், ஒசாகா நகரில் தொடங்கி நடந்து வருகிறது. இதில் பங்கேற்க நேற்று அதிகாலை ஒசாகா சென்றடைந்தார் பிரதமர் மோடி. ஜப்பான் பிரதமர் ஷின்சோ அபியை நேற்று அவர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
 • அப்போது, இரு நாடுகள் நடுவேயான வர்த்தகம், முதலீடு, மின்சக்தி, பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு உள்ளிட்ட பல விஷயங்கள் பேசப்பட்டது. இவ்வாறு அந்த ட்வீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment