Type Here to Get Search Results !

26th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஐ.நா. பாதுகாப்பு சபையில் உறுப்பினர் பதவி இந்தியாவுக்கு பாகிஸ்தான் ஆதரவு
  • சர்ச்சைக்குரிய சர்வதேச அரசியல் விவகாரங்களில் இறுதி முடிவு எடுக்கும் முக்கிய அதிகாரம் பெற்ற அமைப்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபை இயங்கி வருகிறது. 
  • இந்த அமைப்பில் வீட்டோ அதிகாரம் படைத்த வல்லரசு நாடுகளான அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், சீனா, ரஷியா ஆகிய நாடுகள் நிரந்தர உறுப்பு நாடுகளாக உள்ளன.
  • 15 உறுப்பினர்களை கொண்ட இந்த அமைப்பில் ஓராண்டுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் தற்காலிக உறுப்பினர்களாக ஐந்து நாடுகளை தேர்வு செய்வது வழக்கம். 10 தற்காலிக உறுப்பினர்களில் 5 நாடுகள் ஒவ்வொரு ஆண்டும் வெளியேறி, புதிய நாடுகள் இணைவது மரபாக இருந்து வருகிறது.
  • பதிதாக இணையும் நாடுகள் அடுத்த இரண்டாண்டுகளுக்கு இந்த பதவியை வகிக்கும். இந்நிலையில், வரும் 2021-22 ஆண்டில் ஆசிய-பசிபிக் நாடுகள் சார்பில் இந்த இடத்தை பெறுவதற்கு இந்தியா முயற்சித்து வருகிறது. இதற்கான தேர்தல் அடுத்த ஆண்டு ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ளது.
  • இந்நிலையில், ஐ.நா. பாதுகாப்பு சபையில் சுழற்சிமுறை (தற்காலிக) உறுப்பினர் பதவியில் இந்தியா இடம்பிடிக்க பாகிஸ்தான் உள்ளிட்ட 55 ஆசிய-பசிபிக் நாடுகள் ஆதரவு தர முன்வந்துள்ளன. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம், பூடான், சீனா, இந்தோனேசியா, ஈரான், ஜப்பான், குவைத், கிர்கிஸ்தான், மலேசியா, மாலத்தீவு, மியான்மர், நேபாளம், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, சிரியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், வியட்நாம் உள்பட ஆசியா-பசிபிக் பகுதியை சேர்ந்த 55 நாடுகளும் ஒருமனதாக முன்வந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபைக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி சையத் அக்பருதீன் தெரிவித்துள்ளார்.
அண்ணா பல்கலை., புதிய பதிவாளர் நியமனம்
  • அண்ணா பல்கலையின் பொறுப்பு பதிவாளராக இருந்து வந்தவர் குமார். இவரின் பதவி காலம் முடிவடைந்தது. இதனையடுத்து புதிய பதிவாளராக கருணாமூர்த்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
ஜி20 உச்சி மாநாடு : ஜப்பான் சென்றார் மோடி
  • ஜப்பானின் ஒசாகா நகரில் நாளை முதல் இரண்டு நாள்கள் நடைபெறும் ஜி20 உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் மோடி ஜப்பான் சென்று சேர்ந்தார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 
  • முன்னதாக இந்தியாவிலிருந்து புறப்படுவதற்கு முன் அவர் வெளியிட்ட அறிக்கையில், பெண்களுக்கு அதிகாரமளித்தல், செயற்கை நுண்ணறிவு மற்றும் பயங்கரவாதம் போன்ற பொதுவான சவால்களை சமாளிக்க தேவையான நடவடிக்கைகள் குறித்து ஜி20 மாநாட்டில் எடுத்துரைக்கப்படும் என மோடி தெரிவித்தார். 
  • மேலும் 2022ம் ஆண்டு இந்தியா தனது 75ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை கொண்டாடும் தருணத்தில் இந்தியாவில் ஜி20 நாடுகளின் உச்சிமாநாட்டை நடத்துவது என்ற குறிக்கோளை எட்ட ஒசாகாவில் நடைபெறும் உச்சிமாநாடு ஒரு முக்கிய படிகட்டு என மோடி தெரிவித்துள்ளார்.
  • ஜப்பானின் நடைபெறும் இந்த ஜி20 மாநாட்டில், ஜி20 நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்களும் பங்கேற்க உள்ளனர். அதன்படி, மத்திய நிதியமைச்சராக பொறுப்பேற்ற நிர்மலா சீதாராமன், ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்ததாஸ் ஆகியோர் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளதாகத் தகவல் தெரிவிக்கின்றன. 
  • மேலும் ஜி20 நாடுகளான அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, சீனா, ரஷ்யா‌, சவுதி அரேபியா, பிரேசில், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்க உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.‌



ஐ.பி மற்றும் ரா அமைப்புகளுக்கு புதிய தலைவர்கள் நியமனம்
  • மத்திய நுண்ணறிவுப் பிரிவான ஐ.பி தலைவராக அரவிந்த் குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
  • அசாம் - மேகாலயா பகுதியைச் சேர்ந்த அதிகாரியான இவர் 1984- ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரியாவார். மாவோயிஸ்ட்டுகள் மற்றும் காஷ்மீர் விவகாரங்களை கையாள்வதில் இவர் திறமை வாய்ந்தவர் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
  • 'ரா 'அமைப்பின் தலைவராக சமந்த் கோயல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். பஞ்சாபைச் சேர்ந்த இவர் 1984- ம் ஆண்டு பிரிவு ஐ.பி.எஸ். அதிகாரி ஆவார். 
  • இவர் 2016- ல் நடந்த சர்ஜிக்கல் ஸ்டிரைக் மற்றும் கடந்த பிப்ரவரி மாதம் பாகிஸ்தான் மீது நடைபெற்ற இந்திய விமானப்படைத் தாக்குதல்ஆகியவற்றை திட்டமிட்ட குழுவில் ஒருவராவார்.
  • 'ரா' என்பது மத்திய அரசின் வெளிநாட்டு உளவு விவகாரங்களை கவனிக்கும் அமைப்பு ஆகும். அதேபோல மத்திய உளவுப் பிரிவு ஐபி (IB) என்பது உள்நாட்டு புலனாய்வு அமைப்பு ஆகும்.
பொதுநல வழக்குகளை 5 மூத்த நீதிபதிகளும் விசாரிப்பார்கள்: உச்சநீதிமன்றத்தில் புதிய நடைமுறை
  • உச்சநீதிமன்ற வழக்கு விசாரணையில் புதிய நடைமுறை அமல்படுத்தப்பட இருக்கிறது. இதன்படி, பொதுநல மனுக்கள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் உள்பட 5 மூத்த நீதிபதிகளும் விசாரிப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கோடை விடுமுறைக்குப் பிறகு ஜூலை 1-ஆம் தேதி உச்சநீதிமன்றம் மீண்டும் திறக்கப்பட இருக்கிறது. அப்போது முதல் புதிய நடைமுறை அமலுக்கு வர இருக்கிறது.
  • முன்னதாக, தீபக் மிஸ்ரா உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தபோது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு மட்டுமே பொதுநல மனுக்களை விசாரிக்கும் என்ற நடைமுறை இருந்தது. இப்போது அந்த நடைமுறை மாற்றப்பட்டடுள்ளது.
  • இதன்படி தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் மட்டுமின்றி மூத்த நீதிபதிகள் எஸ்.ஏ.போப்டே, என்.வி.ரமணா, அருண் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் தலைமையிலான அமர்வும் பொதுநல மனுக்களை விசாரிக்கும். மூத்த நீதிபதிகளுக்கு தலைமை நீதிபதி பொதுநல மனுக்களை விசாரணைக்காக ஒதுக்குவார்.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் 
1. பொது நல மனுக்கள்
2. சமூக நீதி வழக்குகள்
3. தேர்தல் விவகாரங்கள்
4. ஆள்கொணர்வு மனுக்கள்
5. குற்றவியல் வழக்குகள்
நீதிபதி எஸ்.ஏ.போப்டே 
1. பொது நல மனுக்கள்
2. கல்வி நிறுவனங்களில் மாணவர் சேர்க்கை விவகாரங்கள்
3. நேரடி வரி தொடர்பான வழக்குகள்
4. தேர்தல் விவகாரங்கள்
5. வர்த்தக சட்டங்கள்
நீதிபதி ஆர்.எஃப். நாரிமன் 
1. பொது நல மனுக்கள்
2. வாடகை சட்டங்கள்
3. குடும்ப சட்டங்கள்
4. உரிமையியல் விவகாரங்கள்
5. தீர்ப்பாயங்கள், பல்வேறு ஆணையங்கள் பிறப்பிக்கும் உத்தரவுகளுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுக்கள்
நீதிபதி என்.வி.ரமணா 
1. பொது நல மனுக்கள்
2. இழப்பீடு விவகாரங்கள்
3. குற்றவியல் விவகாரங்கள்
4. நீதித்துறை அதிகாரிகள் தொடர்பான வழக்குகள்
5. ஆயுதப்படை, துணை ராணுவப் படை தொடர்பான வழக்குகள்
நீதிபதி அருண் மிஸ்ரா 
1. பொது நல மனுக்கள்
2. நில கையகப்படுத்துதல் விவகாரங்கள்
3. நிறுவன சட்டங்கள்
4. நீதிமன்ற அவமதிப்பு
5. கல்வி நிறுவனங்கள் தொடர்பான வழக்குகள்
சட்டத்தை கையில் எடுக்கும் பசு பாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டு சிறை ம.பி. காங். அரசு அதிரடி
  • பசு பாதுகாப்பு என்ற பெயரில் சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டு தலித்துகள், சிறுபான்மையினரை படுகொலை செய்யும் குண்டர்களை ஒடுக்க புதிய சட்டத்தை கொண்டு வருகிறது மத்திய பிரதேச காங்கிரஸ் அரசு. நாட்டிலேயே பசுபாதுகாப்பு குண்டர்களை ஒடுக்க சட்டம் கொண்டு வரும் முதல் மாநிலம் மத்திய பிரதேசம்.
  • கேரளாவில் நேற்று கூட பசுபாதுகாப்பு குண்டர்கள் அட்டூழியத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில்தான் மத்திய பிரதேசத்தில் ஆளும் காங்கிரஸ் அரசு பசுபாதுகாப்பு குண்டர்களுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கும் புதிய சட்டத்தைக் கொண்டுவர உள்ளது. 



இந்தியாவின் டாப் 10 காவல்நிலையங்களின் பட்டியலை வெளியிட்டது MHA
  • குற்றங்களை கண்டறிதல், குற்ற தடுப்பு நடவடிக்கைகள், சட்டம் ஒழுங்கை பாதுகாத்தல், போன்ற பல்வேறு பணிகளை கருத்தில் கொண்டு மத்திய அரசு இந்த விருதை வழங்கி வருகிறது.
  • இந்நிலையில், 2018 ஆம் ஆண்டின் நாட்டின் சிறந்த 10 காவல் நிலையங்கள் பட்டியலை மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் ராஜஸ்தான் மாநிலம் பிகேனர் மாவட்டத்தில் உள்ள கலு காவல்நிலையம் முதலிடத்தை பிடித்துள்ளது.
  • அந்தமான் நிகோபார் தீவுகளில் உள்ள நிகோபார் மாவட்டத்தை சேர்ந்த கேம்ப்பெல் பே காவல் நிலையம் 2-வது இடத்தில் உள்ளது. 
  • பெண்களுக்கான தனி உதவி மையம், தொழில்நுட்ப அறை, புகார் அளிப்பவர்கள் மற்றும் பார்வையாளர்களுக்கு சரியான காத்திருப்பு அறை ஆகிய வசதிகளுக்காக இந்த இடத்தில் உள்ளது.
  • முதல் 10 இடங்களில் 3-வது இடத்தில் மேற்குவங்க மாநிலத்தின் மூர்ஷிதாபாத்தில் உள்ள ஃபராக்கா காவல்நிலையம் உள்ளது. 
முதல் 10 இடங்களை பிடித்த காவல்நிலையங்கள்
1. கலு - ராஜஸ்தான்
2. காம்ப்பெல் பே - அந்தமான் நிகோபார் தீவு
3. ஃபரக்கா - மேற்கு வங்கம்
4. நெட்டப்பாக்கம் - புதுச்சேரி
5. குடகேரி - கர்நாடகா
6. சோப்பல் - சிம்லா
7. லகேரி - ராஜஸ்தான்
8. பெரியகுளம் - தமிழ்நாடு
9. முன்ஸ்யாரி - உத்தர்கண்ட்
10. சர்ச்சோரம் - கோவா
தேசிய யோகா போட்டியில் தமிழகத்துக்கு 8 தங்கம்
  • டெல்லியில் நடந்த தேசிய யோகா போட்டியில் தமிழக மாணவர்கள் 8 தங்கப் பதக்கங்களை வென்றனர். 17 வயதுக்குட்பட்டோர் பிரிவில் தமிழக மாணவர்கள், மாணவிகள் தலா 4 தங்கப்பதக்கம் பெற்றனர். 
கனடா நாட்டின் யங் ஆந்த்ரபிரனார் விருது' - சென்னைச் சிறுமிகள் சாதனை
  • கனடா நாட்டின் அரசின் கீழ் இயங்கும் `குளோபல் ஆந்த்ரபிரனார் கவுன்சில்' என்ற அமைப்பு கடந்த வாரம் ஆசிய அளவிலான `ஆசிய பசுபிக் பிசினஸ் அவார்டு" என்ற ஒரு விருது நிகழ்ச்சியைச் சென்னையில் தொகுத்து வழங்கியது. 
  • இந்த விருதுவிழாவில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகள் 'யங் ஆந்த்ரபிரனார்' என்ற கனடநாட்டின் விருதினைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
அகில இந்திய கைப்பந்து போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி வெற்றி
  • அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் நடந்து வருகிறது. 
  • ஆண்கள் பிரிவில் நடந்த ஒரு போட்டியில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-21, 19-21, 25-14, 26-24 என்ற செட் கணக்கில் வருமானவரி (குஜராத்) அணியை தோற்கடித்தது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel