Type Here to Get Search Results !

25th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

கீழடியில் இரட்டைச் சுவர் கண்டுபிடிப்பு: தோண்ட, தோண்ட தொல்பொருட்கள்
  • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகே கீழடியில் நடைபெறும் 5-ம் கட்ட அகழாய்வில் அருகருகே 2 சுவர்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
  • கீழடியில் 2015-ம் ஆண்டில் மத்திய தொல்லியல் துறை அகழாய்வை மேற்கொண்டது. இதில் ஆயிரக்கணக்கான தொல் பொருட் கள் கண்டறியப்பட்டன. இவற்றை பரிசோதித்ததில் 2,500 ஆண்டுகள் பழமையான நகர நாகரீகம் கீழடியில் இருந்துள்ளது கண்டறியப்பட்டது.
  • தொடர்ந்து மத்திய தொல்லியல் துறை 2-ம் கட்ட மற்றும் 3-ம் கட்ட அகழாய்வோடு நிறுத்தி கொண்டது. இதையடுத்து தமிழக தொல்லியல் துறை 4-ம் கட்ட அகழாய்வை மேற்கொண்டது. இந்த அகழாய்வு துணை இயக்குநர் சிவானந்தம் தலைமையில் கடந்த ஆண்டு ஏப்.18 முதல் செப். 30 வரை நடைபெற்றது. தொடர்ந்து 5-ம் கட்ட அகழாய்வுக்கு, கடந்த ஆண்டு டிசம்பரில் மத்திய அரசு அனுமதி வழங்கியது.
  • நிதி ஒதுக்கீடு தாமதம், மக்களவைத் தேர்தல் போன்ற காரணங் களால் அகழாய்வு தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் 5-ம் கட்ட அகழாய்வுக்கு ரூ.47 லட்சம் ஒதுக்கப்பட்டு, ஜூன் 13-ல் பணிகள் தொடங்கின. இந்நிலை யில், கருப்பையா என்பவருக்குச் சொந்தமான நிலத்தில் முதற்கட்டமாக 4 குழிகள் தோண்டியதில் 5 மீட்டர் ஆழத்தில் பழங்கால மண்பாண்ட ஓடுகள், பானைகள், அழகுப் பொருட்கள் கிடைத்தன.
  • முருகேசன் என்பவருக்குச் சொந்தமான இடத்தில் நேற்று குழிகளைத் தோண்டியபோது 2 அடி ஆழத்திலேயே நீண்ட சுவர் ஒன்று தென்பட்டது. அதனருகே பாதி அளவுக்கு மற்றொரு சுவரும் இருந்தது.
  • இந்த இரண்டு சுவர்களிலும் மூன்று அடி நீளம், ஒரு அடி அகலம், 10 செ.மீ. உயரம் கொண்ட செங்கற்கள் இருந்தன. கற்கள் நல்ல உறுதித் தன்மையுடன் உள்ளன. 'இந்தச் சுவர் கட்டிடத்தின் மேற்பகுதியா, கீழ்பகுதியா என்று கண்டறிய முடிய வில்லை. முழுமையாகத் தோண்டிய பிறகுதான் உறுதியாகக் கூற முடியும் என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.
தமிழகத்துக்கு 40. டி.எம்.சி திறந்துவிட வேண்டும் - கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
  • காவிரி மேலாண்மை வாரியத்தின் நான்காவது ஆலோசனைக் கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, புதுச்சேரி மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 
  • கடந்த மாதம் நடைபெற்ற கூட்டத்தில் குறுவை சாகுபடிக்காக தமிழகத்துக்கு 9.19 டி.எம்.சி தண்ணீர் திறந்துவிட உத்தரவிடப்பட்டது. ஆனால், கர்நாடக அரசானது அந்த நீரை வழங்கவில்லை. தமிழக தரப்பில் இன்றைய கூட்டத்தில் இதுதொடர்பாக வலியுறுத்தப்பட்டது. 
  • இந்த மாத இறுதிக்குள்ளாவது வரையறுக்கப்பட்ட நீரை வழங்க வேண்டும் எனக் கோரிக்கை விடப்பட்டது. தமிழகத்தில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு குறித்தும் தெரிவிக்கப்பட்டது. உச்சநீதிமன்ற தீர்ப்பை மீறும் வகையில் கர்நாடக அரசு மேக்கே தாட்டூவில் அணைகட்டுவது தொடர்பாகவும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
  • இந்தக் கூட்டத்தில் பிலிகுண்டுலு பகுதியில் இருந்து ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்.சி தண்ணீரும், ஜூலை மாதத்துக்கு 31.24 டி.எம்.சி தண்ணீரை கர்நாடக அரசு தமிழ்நாட்டுக்கு திறந்துவிட வேண்டும். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி இடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் நீர்ப்பங்கீடு தொடரும். காவிரியில் நீர் வரத்து மற்றும் மழையைப் பொறுத்து தமிழகத்துக்குத் தேவையான தண்ணீர் திறக்க வேண்டும் என ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
நெம்மேலியில் கடல்நீரை குடிநீராக்க புதிய சுத்திகரிப்பு நிலையம் முதல்வர் அடிக்கல் நாட்டுகிறார்
  • சென்னை அருகே நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் இரண்டாவது சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படவுள்ளது. தினமும் 15 கோடி லிட்டர் குடிநீரைச் சுத்திகரிக்கப்படும் இந்த நிலையத்துக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டுகிறார்.
  • இந்த இரு சுத்திகரிப்பு நிலையங்களும் சென்னையின் மொத்தக் குடிநீர்த் தேவையில் 30 சதவீதத்தைப் பூர்த்தி செய்தன. 



அவிநாசி அருகே 400 ஆண்டுகள் பழைமையான நடுகற்கள் கண்டுபிடிப்பு
  • அவிநாசி அருகே பெரிய ஒட்டபாளையத்தில் 400 ஆண்டுகள் பழைமையான கால்நடை மேய்க்கும்போது மாண்ட வீரர்களின் நடுகற்களை திருப்பூர் வீரராசேந்திரன் தொல்லியல் மற்றும் வரலாற்று ஆய்வு மையத்தினர் செவ்வாய்க்கிழமை கண்டுபிடித்துள்ளனர்.
  • இங்கு கிடைத்துள்ள முதல் நடுகல் 100 செ.மீ. உயரமும், 50 செ.மீ. அகலமும் உடையதாகும். 2 ஆவது நடுகல் 90 செ.மீ. உயரமும் 50 செ.மீ. அகலமும் கொண்டதாகும். இந்த இரு நடு கற்களிலும் வீரனின் அள்ளிமுடிந்த குடுமி இடதுபுறம் சாய்ந்துள்ளது. 
  • வளர்ந்து தொங்கும் காதில் உள்ள குண்டலம் வீரனின் தோள்களைத் தொட்டவாறு உள்ளது. வீரர்கள் கழுத்தில் கண்டிகை, சரப்பளி வகை அணிகலன்களும், தோள்மீது மாலையும் முழங்கையில் கடகவளை, மணிக்கட்டில் வீரக்காப்பும், கால்களில் வீரக்கழலும் அணிந்து அழகு ஓவியமாகக் காட்சியளிக்கின்றனர். இரு வீரர்களுமே இடையில் மட்டும் ஆடை அணிந்து, அவர்களை இடதுபுறம் தாக்கும் புலியை வணங்கும்படி இந் நடுகற்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. 
  • இதுவரை கொங்கு மண்டலத்தில் கிடைத்துள்ள பெரும்பாலான நடுகற்களில் வீரர்கள் தங்கள் கையிலுள்ள குறுவாள் அல்லது ஈட்டி மூலம் புலியைத் தாக்கும் வண்ணம்தான் கண்டறியப்பட்டன. ஆனால், இந்த இரு நடுகற்களிலும் ஆயுதங்கள் இல்லாமல் வீரர்களின் வலதுபுறம் கவைக்கோல் காட்டப்பட்டுள்ளது. 
  • கால்நடைகளை மேய்க்கும்போது அவற்றின் உணவுக்காகக் காட்டிலுள்ள செடி, கொடிகளை வெட்டுவதற்காகக் கையில் கவைக்கோலுடன் மேய்ப்பவர்கள் செல்வதை நாம் இன்றும் பார்க்க முடிகிறது. இதன் மூலம் பண்டைய தமிழ்ச் சமூகத்தில் கால்நடை மேய்க்கும்போது தங்கள் இன்னுயிரை ஈத்தவர்களுக்கு நடுகற்கள் எடுக்கும் வழக்கம் இருந்துள்ளதை நாம் அறிய முடிகிறது. 
"சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலம் கேரளா " - நிதி ஆயோக் அறிக்கை
  • நாட்டிலேயே சுகாதாரத்துறையில் சிறந்த மாநிலமாக கேரளா திகழ்கிறது என்று 'நிதி ஆயோக்' வெளியிட்டுள்ள சுகாதார தரவரிசை பட்டில் மூலம் தெரிவித்துள்ளது.
  • இவற்றில் பெரிய மாநிலங்கள் பட்டியலில் கேரளா முதலிடத்தில் உள்ளது. இதனைத் தொடர்ந்து ஆந்திரா, மகாராஷ்டிரா இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தில் உள்ளது. இந்தப் பிரிவில் கடைசி இடத்தில் உத்திரபிரதேசம் உள்ளது. இதற்கு முன்பு பிகார் மற்றும் ஒடிசா இடம்பெற்றுள்ளன. சிறிய மாநிலங்கள் பட்டியலில் மிஷோரம் முதலிடத்தில் உள்ளது. அதேபோல யூனியன் பிரதேசங்கள் பட்டியலில் சண்டிகர் முதலிடத்தில் உள்ளது.
இந்திய கடலோர காவல்படை இயக்குநராக கே.நடராஜன் நியமனம்
  • மும்பை மேற்கு மண்டல கடலோர காவல்படையின் கூடுதல் இயக்குநராக தமிழகத்தை சேர்ந்த கே.நடராஜன் பணியாற்றி வந்தார். இந்நிலையில் இந்திய கடலோர காவல் படையின் புதிய இயக்குநராக அவர் நியமிக்கப்பட்டுள்ளார். மத்திய அமைச்சரவையின் நியமனங்கள் குழு இதை அறிவித்துள்ளது.
  • தற்போது இந்த பதவியில் இருக்கும் ராஜேந்திர சிங்கின் பதவி காலம் வரும் 30 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து ஜூலை 1 ஆம் தேதி முதல் நடராஜன் புதிய இயக்குநராகப் பதவியேற்கிறார்.



பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை
  • வரும் ஆகஸ்ட் முதல் பிளாஸ்டிக் இறக்குமதிக்கு தடை விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
  • நாடு முழுவதும் நாள் ஒன்றுக்கு 20 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவு உருவாகிறது. அவற்றில் 13 ஆயிரம் டன் மட்டும் சேகரிக்கப்படுகிறது. எனவே, காற்று மாசை கட்டுப்படுத்தும் விதமாக, ஆகஸ்ட் மாதத்தில் இருந்து பிளாஸ்டி இறக்குமதிக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம். 
சிகாகோ 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் அரசு சார்பாக 25 பேர் பங்கேற்பு: மாஃபா பாண்டியராஜன்
  • 10-வது உலகத் தமிழாராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறுகிறது. வட அமெரிக்க தமிழ்ச் சங்கங்களின் கூட்டமைப்பான பெட்னாவும் சிகாகோ தமிழ்ச் சங்கமும் இணைந்து இந்த மாநாட்டை நடத்துகின்றன.
  • சிகாகோவில் ஜூலை 4-ந் தேதி முதல் 7-ந் தேதி வரை நடைபெறும் இம்மாநாட்டுக்கு தமிழக அரசு ஆதரவளித்துள்ளது. இது தொடர்பாக சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், சிகாகோ மாநாட்டில் தமிழக அரசு சார்பாக 25 பேர் பங்கேற்க உள்ளனர்.
ஸ்வீடனில் நடந்த 1,500 மீட்டர் ஓட்டத்தில் தங்கம் வென்ற பியூ.சித்ரா
  • கடந்த ஏப்ரல் மாதம் தோஹாவில் நடந்த ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில், 4 நிமிடங்கள் 12.65 வினாடிகளில் ஓட்டத்தை நிறைவு செய்து தங்கம் வென்றார்.
  • கடந்த 2014-ம் ஆண்டு 5 ஆயிரம் மீட்டர் ஓட்டத்தில் காமன்வெல்த் சாம்பியன் பட்டம் வென்ற கென்யாவைச் சேர்ந்த மெர்ஸி இரண்டாம் இடம் பெற்றார்.
  • இந்நிலையில், ஸ்வீடன், ஃபோக்சமில் நடந்த பெண்களுக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில் சித்ரா தங்கம் வென்றார்.
  • நெதர்லாந்தில் ஆடவருக்கான 1,500 மீட்டர் ஓட்டத்தில், ஜின்சன் ஜாஜ்சன் 3 நிமிடங்கள் 39.69 வினாடிகளில் இலக்கை நிறைவு செய்தார்.
  • வேறு ஒரு உயரம் தாண்டுதல் போட்டியில், முரளி ஸ்ரீசங்கர் தேசிய சாதனை படைத்து தங்கம் வென்றார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel