Type Here to Get Search Results !

19th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஏலகிரி மலையில் சோழர் காலத்து கல்வெட்டு, நடுகல் கண்டெடுப்பு
  • ஏலகிரி மலையில் உள்ள நிலாவூரில் வயல் வெளியில் அண்மையில் மேற்கொண்ட கள ஆய்வில் கி.பி. 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பிற்காலச் சோழர்களின் கல்வெட்டு, நடுகல் ஆகியவை ஒரே இடத்தில் இருப்பது தெரியவந்தது.
  • கல்வெட்டானது படுத்த நிலையில் உள்ளது. இது 5 அடி நீளமும், 3.5 அடி அகலமும் உள்ளது. பெரிய பலகைக் கல்லில் எழுதப்பட்டுள்ளது. சுமார் ஆயிரம் ஆண்டுகளுக்கு ஜெயங்கொண்ட சோழ மண்டலத்தில் எயில் நாடு இருந்ததையும், அப்போது ஏற்பட்டப் போரில் ஊர் அழிந்தபோது இவ்வீரனும் இறந்தான் என்பதை இக்கல்வெட்டு எடுத்துரைக்கிறது.
  • இதில் உள்ள ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்பது பல்லவர் காலத்தில் தொண்டை மண்டலம் என்று அழைக்கப்பட்ட பகுதி. பிற்கால சோழர்களின் ஆளுகையின் கீழ் இப்பகுதி வந்த பிறகு ஜெயங்கொண்ட சோழ மண்டலம் என்று பெயர் மாற்றம் பெற்றதை அறிய முடிகிறது. 
  • இக்கல்வெட்டில் இடம் பெறும் எயில் நாடு என்பது திருப்பத்தூர், ஏலகிரி மலை ஆகிய ஊர்களை உள்ளடக்கிய பகுதி. ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய சோழர்களின் நாட்டுப் பிரிப்பு முறையை இக்கல்வெட்டு மூலம் அறியமுடிகிறது.
  • இக்கல்வெட்டின் அருகில் நடுகல் உள்ளது. அந்த நடுகல்லில் உள்ள வீரன், கல்வெட்டுக் குறிப்பிடும் வீரனாக இருக்கலாம். 5 அடி உயரமும், 3.5 அடி அகலமும் கொண்ட பெரிய பலகைக் கல்லில் வீரனின் தோற்றம் பிரமாண்டமாகச் செதுக்கப்பட்டுள்ளது. வலது கையில் நீண்ட வாளும், இடையில் கச்சுடன் கூடிய குறுவாளும் உள்ளன. வலதுபக்கம் கொண்டையும், காதுகளில் உள்ள காதணிகளும் நுட்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • வீரனின் கழுத்தில் ஆபரணங்கள், கைகளில் கடகங்கள், கால்களில் வீரக்கழல்கள் உள்ளன. வலதுபக்க மேல் மூலையில் இரு தேவர்கள் இவ்வீரனை சொர்க்கத்துக்கு அழைத்துச் செல்லும் காட்சியும் இடம் பெற்றுள்ளது.
சிகாகோ உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் சொற்குவைத் திட்டம் தொடக்கம்
  • அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெறவுள்ள உலகத் தமிழாராய்ச்சி மாநாட்டில் ஜூலை 5-ஆம் தேதி நிகழ்ச்சியில் தமிழக அரசின் சொற்குவைத் திட்டம் தொடங்கி வைக்கப்படவுள்ளதாக தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க. பாண்டியராஜன் கூறினார். 
  • பத்தாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு அமெரிக்காவின் சிகாகோவில் உள்ள சாம்பர்க் கருத்தரங்கு மையத்தில் வரும் ஜூலை 4-ஆம் தேதி முதல் 7-ஆம் தேதி வரை 4 நாள்கள் நடைபெறவுள்ளது. 
இலங்கையின் முதல் செயற்கைக் கோள் ராவணா 1 வெற்றிகரமாக செலுத்தப்பட்டது
  • ஜப்பான் நாட்டின் குயுஷு தொழில்நுட்ப கல்லூரியில் பயின்ற இரு இலங்கை பொறியாளர்கள் திரிந்து தயரதே மற்றும் துலானி சாமிகா இணைந்து இலங்கைக்கான செயற்கைக் கோளை வடிவமத்தனர். 
  • இந்த் செயற்கைக் கோள் ஜப்பான் நாட்டில் உள்ள ஜப்பான் அரசின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி மாதம் 18 ஆம் தேதி அனுப்பப்பட்டது. அங்கிருந்து கடந்த ஏப்ரல் மாதம் 17ஆம் தேதி அன்று அமெரிக்காவுக்கு அனுப்பபட்டது.
  • ராவணா 1 என பெயரிடப்பட்ட இந்த செயற்கைக் கோள் நேற்று விண்ணில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் உதவியுடன் ஏவப்பட்டது. தற்போது இந்த் செயற்கைக் கோள் பூமியின் இருந்து 400 கிமீ உயரத்தில் பூமியை சுற்றி வருகிறது. இந்த ராவண 1 செயற்கைக்கோள் 11.3 செமீ X 10 செமீ X அளவில் உள்ள சிறிய செயற்கைக் கோளாகும் இதன் எடை சுமார் 1.5 கிலோ ஆகும்.



காவல்துறையினருக்கு வார விடுமுறை... அதிரடி உத்தரவிட்ட முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி
  • ஆந்திர மாநில காவல்துறையில் உள்ள காவலர் முதல் இன்ஸ்பெக்டர் வரை இருப்பவர்களுக்கு வார விடுமுறை வழங்கப்படுகிறது. இதற்கான உத்தரவை அதிரடியாக வெளியிட்டார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி.
  • குறிப்பாக சுகாதாரத்துறையில் பணிபுரியும் பணியாளர்களின் ஊதியத்தை ரூ.3000 -லிருந்து ரூ.10000-மாக உயர்த்தினார். மேலும் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் ரேஷன் பொருட்கள் அனைத்தையும் வீட்டிற்கே சென்று விநியோகிக்கப்படும் என்று அறிவித்தார். 
போச்சாம் கிராண்ட் பிரிக்ஸ்: தங்கம் வென்றார் சித்ரா
  • போச்சாம் கிராண்ட் பிரிக்ஸ் தடகள போட்டிகள் சுவீடனில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியின் 1500 மீட்டர் பிரிவு ஓட்டப் பந்தயத்தில் இந்தியா சார்ப்பில் கேரளா மாநிலத்தை சேர்ந்த பி.யூ. சித்ரா பங்கேற்றார். 
  • இந்த போட்டியில் முன்னாள் காம்ன்வெல்த் போட்டி சாம்பியனான கென்யாவின் மெர்சி செரோனோ முந்தி பந்தய தூரத்தை 4:12.65செகன்ட்களில் கடந்து தங்க பதக்கம் வென்றார்.
  • ஆண்களுக்கான 15,00 மீட்டர் ஓட்டப் பந்தய போட்டியில் பங்கேற்ற இந்தியாவின் ஜன்சன் ஜான்சன், பந்தய தூரத்தை 3:39.69 செகன்ட்களில் கடந்து வெள்ளி பதக்கத்தை வென்றார். இவர் ஆசிய போட்டியில் தங்க பதக்கம் வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
  • லாங் ஜம்ப் போட்டியில் பங்கேற்ற இந்திய தேசிய அளவிலான சாதனை படைத்த வீரர் முரளி ஸ்ரீசங்கர் 7.93 மீட்டர் தூரம் தாண்டி தங்க பதக்கம் வென்றார்.
விக்டோரியா மாநிலத்தில் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கும் சட்டம் அமல்
  • உலகின் பல்வேறு நாடுகளில் கருணைக் கொலை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், கடந்த 2017ம் ஆண்டு கருணைக் கொலையை ஏற்றுக்கொள்வதற்கான சட்டங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.
  • இதன்மூலம் குணப்படுத்த முடியாத நோயினால் அவதிப்படுவோர், தங்களை கருணைக் கொலை செய்ய அனுமதி கோரினால், மருத்துவர்களின் உதவியுடன் கருணைக்கொலைக்கு அனுமதி வழங்கப்படும். இந்த சட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது. 
  • நோயால் அவதிப்பட்டு, உயிர்பிழைக்க வாய்ப்பு இல்லாத பட்சத்தில் அந்த நபர் தன்னை கருணைக் கொலை செய்யும்படி டாக்டர்களிடம் கேட்க முடியும்.
  • இதற்கான அனுமதியை பெறுவதற்கு, வசிப்பிட ஆவணங்கள், பல மருத்துவர்களின் மதிப்பீட்டு சான்றிதழ்கள் உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன. கடும் காய்ச்சலால் அவதிப்பட்டு 6 மாதத்திற்கு மேல் உயிர்வாழ வாய்ப்பு இல்லை என்ற நிலையில் உள்ள வயது முதிர்ந்த நோயாளிகள் அல்லது மோட்டார் நியூரான் நோய் மற்றும் மல்டிபிள் ஸ்கிளிரோசிஸ் போன்ற கொடிய நோய் பாதிப்புக்கு ஆளாகி ஒரு வருடம் மட்டுமே ஆயுட்காலம் கொண்டவர்களுக்கு மட்டுமே இந்த சட்டத்தின்கீழ் கருணைக் கொலைக்கு அனுமதி அளிக்கப்படும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel