Type Here to Get Search Results !

16th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

தீவிரவாதிகளுக்கு எதிராக எல்லையில் இணைந்து களம் இறங்கிய இந்திய-மியான்மர் ராணுவத்தினர்
  • தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து தொடங்கியுள்ளனர்.
  • இந்திய மற்றும் மியான்மர் ராணுவத்தினர் இணைந்து 3 வாரங்களுக்கு தீவிரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர்.
  • இரு நாடுகளும் தங்களது எல்லைப் பகுதியில் தொடங்கியுள்ள இந்த தீவிரவாதிகள் தேடுதல் வேட்டைக்கு ஆபரேசன் சன்ரைஸ் என பெயரிடப்பட்டுள்ளது.
  • முதல் கட்ட ஆபரேசன் சன்ரைஸ் 3 மாதங்களுக்கு முன்பு இந்திய-மியான்மர் எல்லையில் நடத்தப்பட்டது. இதில் வட கிழக்கு மாநிலங்களிலிருந்து இயங்கு தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன.
  • இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களை ஒட்டி அமைந்துள்ள மியான்மர் எல்லை 1,640 கி.மீ வரை நீள்கிறது.
  • கடந்த 2015-ம் ஆண்டு இந்திய-மியான்மர் எல்லையில் இரு நாடுகளும் இணைந்து நடத்திய தேடுதல் வேட்டை நடைபெற்றபோது, மணிப்பூரில் 18 ராணுவத்தினரை தீவிரவாதிகள் சுட்டுக் கொன்றது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவிடமிருந்து, 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்த பணி திட்டத்தை இந்திய பாதுகாப்புத்துறை இறுதி செய்கிறது
  • அமெரிக்காவிடமிருந்து, ஆளில்லா ஆயுதம் தாங்கிய 30 சீ கார்டியன் டிரோன்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ள இந்தியா, அதற்கான பணிகளை இறுதி செய்திருக்கிறது. 
பிளாஸ்டிக் உபயோகித்தால் நாளை முதல் அபராதம் தமிழக அரசு அதிரடி அறிவிப்பு
  • சுற்றுச்சூழலை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து தமிழக அரசு கடந்த ஜனவரி மாதம் உத்தரவு பிறப்பித்தது. கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் இந்த தடை அமலுக்கு வந்த நிலையில், பல்வேறு கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் தவிர்க்கப்பட்டுள்ளன.
  • இதை அடுத்து பிளாஸ்டிக் பொருட்களை உபயோகித்தால் அவர்களுக்கு அபராதம் விதிக்கும் நடைமுறை நாளை முதல் தமிழகத்தில் அமலுக்கு வருகிறது. இதற்காக, சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் சிறப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
  • அதன்படி, பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்கள், விற்பனை செய்பவர்கள், சேமித்து வைப்பவர்கள்,வணிகரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்கள், சிறிய கடைக்காரர்கள், பொதுமக்கள் என ஆறு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது.
  • பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்பவர்களுக்கு முதற்கட்டமாக ரூ. 2 லட்சம் அபராதத் தொகையும், இரண்டாவது முறையாக கண்டுபிடிக்கப்பட்டால் ரூ.5 லட்சம்அபராதத்தொகையும் வசூலிக்கப்படும். தொடர்ந்து மேற்கொள்ளும் பட்சத்தில் அவர்களது நிறுவனத்தின் உரிமை பறிக்கப்படும்.
  • அதேபோன்று பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் அபராதமும், இரண்டாவது முறை கண்டுபிடிக்கப்பட்டால் ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும்.
  • வணிக ரீதியாக பயன்படுத்தும் பெரிய கடைக்காரர்களுக்குரூ.25 ஆயிரம் முதல் கட்டமாகவும், இரண்டாம் கட்டமாக ரூ. 50 ஆயிரம் வரையிலும்,சிறிய கடைக்காரர்களுக்கு முதல் முறை ரூ.100, இரண்டாம் முறை ரூ.200, மூன்றாம் முறை ரூ.500 என்ற விகிதத்தில் வசூலிக்கப்படும்.
  • பொதுமக்களை பொறுத்தவரையில், அதிகாரிகள் வீடுகளில் சோதனை செய்யும்போது பிளாஸ்டிக் பொருட்களை வைத்து இருப்பது கண்டறியப்பட்டால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். தொடர்ந்து அவர்கள் பிளாஸ்டிக் பொருட்களை சேமித்து வைத்தால் ரூ.1,000வரை அபராதம் விதிக்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.



`மணிக்கு 1,200 கி.மீ செல்லும் வாகனம்' - சென்னை ஐ.ஐ.டி மாணவர்கள் குழு சாதனை
  • அமெரிக்காவில் உள்ள `ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனம் ஹைபர் லூப் தொழில்நுட்பம் மூலம் போக்குவரத்து வசதிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வுகள் மேற்கொண்டு வருகிறது. வாகனங்கள் செல்ல ட்யூப் போன்ற அமைப்பை அதன் மூலம் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்துக்கு மிக விரைவாகப் பயணிக்க முடியும் என்பதே ஹைப்பர் லூப் தொழில்நுட்பம். 
  • இந்தத் தொழில்நுட்பத்தை அடிப்படையாக வைத்து புதிய கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டியை ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறது. இந்தப் போட்டியில் உலகம் முழுவதிலுமிருந்து 1,600 குழுக்கள் கலந்துகொண்டன. 
  • அதில் 21 குழுவினர் மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளனர். ஆசியாவிலேயே சென்னை ஐ.ஐ.டி-யைச்சேரந்த குழு மட்டுமே இறுதிப் போட்டிக்குத் தேர்வாகியிருப்பது பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
  • சென்னை ஐ.ஐ.டி-யின் 30 மாணவர்களைக்கொண்ட `அவிஷ்கார்' என்ற குழு ஹைபர் லூப் தொழில்நுட்பம் சார்ந்த அதிவேக வாகனத்தின் மாதிரியை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த வாகனமானது மணிக்கு 1,200 கி.மீ வேகத்தில் செல்லக்கூடியதாகும். 
பாகிஸ்தானுக்கு ரூ.23 ஆயிரம் கோடி கடன் வழங்கும் ஆசிய வளர்ச்சி வங்கி
  • பாகிஸ்தான் கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கிறது. மந்தமான வளர்ச்சி, உயர் பணவீக்கம் மற்றும் அதிகப்படியான கடன் போன்ற காரணங்களால் பாகிஸ்தானின் பொருளாதாரம் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.
  • இந்த நிலையில், நிதி நெருக்கடியால் தவிக்கும் பாகிஸ்தானுக்கு 3.4 பில்லியன் அமெரிக்க டாலர்களை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.23 ஆயிரத்து 800 கோடி) கடனாக வழங்க ஆசிய வளர்ச்சி வங்கி முன்வந்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தானின் நிதி அமைச்சகத்துக்கும், ஆசிய வளர்ச்சி வங்கிக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது.
கருப்புப் பணம்: மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை அளிக்கிறது ஸ்விஸ் அரசு
  • ஸ்விட்சர்லாந்தில் கருப்புப் பணம் பதுக்கியுள்ளவர்களுக்கு எதிரான பிடி இறுகியுள்ள நிலையில், அந்நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்துள்ள மேலும் 50 இந்தியர்களின் விவரங்களை இந்திய விசாரணை அமைப்புகளுடன் பகிர்ந்துகொள்வதற்கான நடவடிக்கையை அந்நாட்டு அரசு அதிகாரிகள் தொடங்கியுள்ளனர்.
உலக வில்வித்தை போட்டி: இந்திய ஆடவருக்கு வெள்ளி
  • உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ரெக்கர்வ் பிரிவில் இந்திய அணி வெள்ளிப்பதக்கம் வென்றது.
  • நெதர்லாந்தின் டென்பாஸ்ச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியின் ஒரு பகுதியாக ரெக்கர்வ் ஆடவர் இறுதிச் சுற்று ஞாயிற்றுக்கிழமை நடந்தது. இதில் சீனாவிடம் 2-6 என்ற புள்ளிக் கணக்கில் தோல்வியுற்றது இந்தியா.
  • தருண்தீப் ராய், பிரவீண் ஜாதவ், அதானு ஆகியோர் வெள்ளிப் பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று.
  • இந்திய அணி வெள்ளி, 2 வெண்கலத்தோடு இந்த போட்டியில் மொத்தம் 8 பதக்கங்களை கைப்பற்றியுள்ளது.



பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி
  • உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான 22-வது லீக் ஆட்டமத்தில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி பந்து வீச்சைத் தேர்வு செய்தது.
  • முடிவில் இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 336 ரன்கள் எடுத்தது.
  • இந்நிலையில், 35-வது ஓவரில் மழை குறுக்கிட்டது. பின்னர் டி.எல்.எஸ் முறைப்படி பாகிஸ்தான் அணிக்கு 40 ஒவர்களில் 302 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. இதன்படி 30 பந்துகளில் 136 எடுக்க வேண்டிய சூழ்நிலை பாகிஸ்தான் அணிக்கு உருவானது.
  • முடிவில் பாகிஸ்தான் அணி 40 ஒவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 212 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் அதிகபட்சமாக குல்தீப் யாதவ், ஹர்திக் பாண்ட்யா, விஜய் சங்கர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
  • இதன்மூலம் பாகிஸ்தான் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 89 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றிபெற்றது.
  • இதுவரை பாகிஸ்தானுடன் விளையாடிய 7 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவே வெற்றி பெற்றுள்ளது.
கோஹ்லி 11,000 ரன் சாதனை
  • பாகிஸ்தானுக்கு எதிராக மான்செஸ்டர் நகரில் நடந்த உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், 57 ரன்களை கடந்த இந்திய அணி கேப்டன் விராத் கோஹ்லி, ஒருநாள் போட்டி வரலாற்றில் குறைந்த இன்னிங்சில் 11 ஆயிரம் ரன்களை எட்டிய வீரர் என்ற புதிய உலக சாதனை படைத்தார். 
  • இவர், 222 இன்னிங்சில் இம்மைல்கல்லை எட்டினார். இதற்கு முன், இச்சாதனை இந்திய ஜாம்பவான் சச்சின் (276 இன்னிங்ஸ்) வசம் இருந்தது. இரண்டாவது, மூன்றாவது இடங்களில் முறையே ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் (286 இன்னிங்ஸ்), இந்தியாவின் கங்குலி (288 இன்னிங்ஸ்) உள்ளனர்.
'பிபா' 20 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை கால்பந்து தொடரில் உக்ரைன் அணி சாம்பியன்
  • போலந்தில் 20 வயதுக்குட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் உக்ரைன், தென் கொரியா அணிகள் மோதின. 
  • போட்டியின் 5வது நிமிடத்தில் தென் கொரியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கிக்' வாய்ப்பில் லீ கோல் அடித்தார். இதன்பின், உக்ரைன் அணியினர் எழுச்சி பெற்றனர். 
  • சுப்ரிஹா (34, 53) இரண்டு கோல் அடித்தார். கடைசி கட்டத்தில் ஹிரோசி (89) கைகொடுக்க உக்ரைன் ரசிகர்கள் ஆர்ப்பரித்தனர். முடிவில், உக்ரைன் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம், முதல் கோப்பையை கைப்பற்றியது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel