Type Here to Get Search Results !

15th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் 2019 ஆம் வருட இந்திய அழகியாக தேர்வு
  • ஒவ்வொரு வருடமும் இந்திய அழகிப்போட்டி நடைபெற்று அதில் அந்த வருடத்துக்கான அழகியை தேர்வு செய்வது வழக்கமாகும். இவ்வாறு தேர்ந்தெடுக்கப்படும் இந்திய அழகி அந்த வருட பிரபஞ்ச அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதி பெறுகிறார். 
  • இரண்டாவதாக வருபவர் உலக அழகிப் போட்டியில் கலந்துக் கொள்ளும் தகுதியை அடைகிறார்.
  • இந்த போட்டியில் ராஜஸ்தானை சேர்ந்த 20 வயதுப் பெண்ணான சுமன் ராவ் இந்திய அழகியாக தேர்வு செய்யப்பட்டார். அவருக்கு சென்ற வருட இந்திய அழகியான தமிழகத்தை சேர்ந்த அனுகீரீதி மகுடம் சூட்டினார். அத்துடன் இரண்டாம் இடத்தில் ஹரியானாவை சேர்ந்த ஷிவானி ஜாதவ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
கி.மு., 3ம் நுாற்றாண்டு தொல்லியல் சான்றுகள் நாங்கூரில்கண்டுபிடிப்பு
  • நாங்கூரில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில், கி.மு., 3ம் நுாற்றாண்டைச் சேர்ந்த, தொல்லியல் சான்றுகள் கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளன.
  • பட்டினப்பாலையிலும், பொருநராற்றுப்படையிலும், சங்ககால வாழ்விடமாக, நாங்கூர் குறிப்பிடப்பட்டுள்ளது. கரிகால் சோழன், நாங்கூர் வேளின் பெண்ணை மணந்ததாக, ஒரு செய்தியும் உள்ளது.
  • தாய்லாந்தில் உள்ள, தாக்குவா பகுதியில் கிடைத்த, ஒன்பதாம் நுாற்றாண்டைச் சேர்ந்த தமிழ் கல்வெட்டில், நாங்கூருடையான் என்பவர், அங்கு, ஒரு குளம் வெட்டியுள்ளதாக குறிப்பிட்டுள்ளது
  • நாங்கூரில் நடந்த அகழாய்வில், பல சான்றுகள் கிடைத்துள்ளன. அங்கு, சிவன் கோவில்கள், வைணவ தலங்கள் இருந்திருக்கின்றன என்பது, தெரிய வந்துள்ளன.அகழ்வாயில், கறுப்பு, சிவப்பு பானை வகையும், மீன் உருவம் உள்ள பானையோட்டுக் கீறல் குறியீடு, கூறை ஓடு, சுடுமண் பொம்மை, திருமால் உருவம் பொரித்த முத்திரைப் பதிவு, கண்ணாடி மற்றும் கல் மணிகள் கிடைத்துள்ளன.
நோவார்டிஸின் துணைத் தலைவராக சஞ்சய் மூர்தேஸ்வர் நியமனம்
  • மருந்து தயாரிப்புத் துறையைச் சேர்ந்த நோவர்டிஸ் இந்தியா நிறுவனத்தின் துணைத் தலைவராக சஞ்சய் மூர்தேஸ்வர் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
  • இவரது நியமனம் ஜூன் 15, 2019-லிருந்து அமலுக்கு வந்துள்ளதாக மும்பை பங்குச் சந்தையிடம் நோவார்டிஸ் இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
2024-க்குள் அனைத்து வீடுகளிலும் குழாய் மூலம் குடிநீர்
  • மத்தியில் புதிய அரசு அமைந்த பின் நடக்கும் முதல் நிதி ஆயோக் கூட்டம் இன்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது. இந்த நிதி ஆயோக் கூட்டத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட பல மாநில முதல்வர்கள் மற்றும் மத்திய அமைச்சர்கள் பங்கேற்றனர். மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி மற்றும் தெலுங்கானா முதல்வர் கே. சந்திரசேகர ராவ் ஆகிய இருவர் மட்டும் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்கவில்லை.
  • நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி நாட்டில் நிலவும் வறுமை, வேலைவாய்ப்பின்மை, வறட்சி, வெள்ளம், மாசு, ஊழல் மற்றும் வன்முறை ஆகியவற்றிக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்று தெரிவித்தார்.
  • நாட்டின் வருவாயை உயர்த்த மத்திய மாநில அரசுகள் இணைந்து ஏற்றுமதியை அதிகரிக்க பணியாற்ற வேண்டும் எனவும், மாநில அளவில் ஏற்றுமதி அதிகரித்தால் நாட்டின் வருவாய் மற்றும் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.
  • தொடர்ந்து பேசிய அவர் மனிதர்கள் வாழ குடிநீர் மிகவும் அவசியம். முறையான நீர் மேலாண்மையை செயல்படுத்தாத காரணத்தால் இன்று நாட்டில் தண்ணீர் தட்டுப்பாடு நிலவுகிறது. அதன் தாக்கம் ஏழை எளிய மக்களை அதிகம் பாதிக்கிறது. 
  • வறட்சி மற்றும் குடிநீர் தட்டுப்பாட்டை தீர்க்க அனைவரும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டியது அவசியம். ஒவ்வொரு துளி நீருக்கும் அதிக வேளாண் உற்பத்தி என்ற இலக்குடன் செயல்பட வேண்டும் எனவும் தெரிவித்துக்கொண்டார்.
  • அதேப்போல் வரும் 2022-ஆம் ஆண்டிற்குள் விவசாயிகளின் வருவாய் இரட்டிப்பாக்கப்படும் என்று மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. அதை நிறைவேற்ற மீன்வளம், கால்நடை வளர்ப்பு, தோட்டக்கலை, காய்கறி, பழங்கள் வளர்ப்பு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும். 
  • விவசாயத்திற்கு தேவையான கட்டமைப்பு சீர்திருத்தங்கள் மேற்கொள்ள கார்ப்பரேட் முதலீடுகள், வலுவான தளவாடங்கள் மற்றும் போதுமான சந்தை ஆதரவு தேவை. உணவு உற்பத்தித்துறையை விட உணவு பதப்படுத்தும் துறை வேகமாக வளர வேண்டும்.
  • 2025 க்குள் இந்தியாவில் முற்லுமாக காசநோய் ஒழிக்கப்படும், வரும் 2022 க்குள் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க திடடமிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்கள் விவசாயிகளை சென்று சேரவேண்டும்.
ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கிய நாட்டின் முதல் பெண் அதிபரானார்
  • ஊழலை எதிர்த்துப் போராடிய ஜுஜானா கேப்புதோவா ஸ்லோவோக்கியாவின் முதல் பெண் அதிபராக பதவியேற்றார்.
  • உயர் மட்ட ஊழலை விசாரித்த ஜான் குசியாக் என்ற பத்திரிகையாளர் கடந்த பிப்ரவரி மாதம் கொல்லப்பட்டார்.
  • இதனால் நடைபெற்ற தொடர் போராட்டத்தால் ஆளும் இடதுசாரி கட்சியான ஸ்மெர் ஆட்டம் கண்டது.



டிவி சீரியல் தலைப்புகள் கட்டாயம் பிராந்திய மொழிகளில் இருக்க வேண்டும்
  • தொலைக்காட்சிகளில் ஒளிப்பரப்பாகும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மற்றும் சீரியர்களில் தொடக்கத்தின் போதும் நிகழ்ச்சியின் முடிவின் போதும் பிராந்திய மொழிகளில் தலைப்பு மற்றும் நடிகர்களின் பெயரை போட வேண்டும் என மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.
  • இதுதொடர்பாக பேசிய அத்துறையின் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், பிராந்திய மொழியோடு ஆங்கில மொழியை சேர்த்துக் கொள்ள விருப்பப்பட்டால் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம் என்றும், அதற்கு எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றும் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
29 அமெரிக்க பொருட்களுக்கான சுங்க வரியை உயர்த்தியது இந்தியா
  • இந்தியாவில் இருந்து இறக்குமதியாகும் உருக்கு மற்றும் அலுமினியத்திற்கும் அமெரிக்கா வரிகளை விதித்து வரும் நிலையில், அதற்கு பதிலடியாக, அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள், பாதம் பருப்பு, வால்நட், அக்ரூட் பருப்புகள் போன்ற 29 பொருட்கள் மீதான வரி விதிப்பை இந்தியா அதிகரித்து உள்ளது. இந்த வரி உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது.
  • ஏற்கனேவே இந்தியப் பொருட்கள் வரி விலக்கு பெற உதவிய, வர்த்தக முன்னுரிமை நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்கா ரத்து செய்ததால், இந்தியா இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.
  • அதேசமயம், இந்தியாவின் வரி உயர்வை, 301ஆவது பிரிவின் கீழ் அமெரிக்க வர்த்தகத் துறை விசாரணை செய்ய இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. 
  • வரி விதிப்பு குறித்து இரு நாட்டு அதிகாரிகள் தரப்பில் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும் முடிவு எடுக்காததால் இந்த வரி உயர்வு அமல்படுத்தப்படுவதாக இந்தியா தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அபி ஷோடெக் டென்னிஸ் அக்‌ஷயா சாம்பியன்
  • அபி ஷோடெக் ரேங்கிங் 14 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான டென்னிஸ் போட்டி சென்னையில் நடைபெற்றது. இதில் 200 சிறுவர், சிறுமிகள் பங்கேற்றனர். 
  • இந்நிலையில் சிறுமிகளுக்கான ஒற்றையர் பிரிவில் அக்‌ஷயா ரிவேரியா - பி.தன்யா ஆகியோர் மோதினர். அதில் 6-3, 6-4 என்ற நேர் செட்களில் அக்‌ஷயா வென்று சாம்பியன் ஆனார். 
  • அதேபோல் சிறுமிகளுக்கான இரட்டையர் பிரிவில் அக்‌ஷயா ரிவேரியா/மெர்லின் சுவிட்டி-பி.தன்யா/டி.வி.தேவ ஆகியோர் மோதினர். அந்தப்போட்டியில் அக்‌ஷயா/மெர்லின் இணை 7-5, 6-7, 10-2 என்ற செட்களில் போராடி வென்றது.சிறுவர்களுக்கான ஒற்றையர், இரட்டையர் இறுதிப்போட்டிகள் இன்று நடைபெற உள்ளன.



எப்ஐஎச் சீரீஸ் பைனல்ஸ் ஹாக்கி இந்தியா சாம்பியன்
  • ஒடிஷா மாநிலம் புவனேஸ்வரில் நடைபெற்ற இந்த தொடரில் மொத்தம் 8 அணிகள் இரு பிரிவுகளாக லீக் சுற்றில் மோதின. 
  • இந்த நிலையில், சாம்பியன் யார் என்பதை தீர்மானிப்பதற்கான இறுதிப் போட்டியில் இந்தியா - தென் ஆப்ரிக்கா அணிகள் நேற்று மோதின.தொடக்கத்தில் இருந்தே ஆதிக்கம் செலுத்திய அணி 5-1 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது. 
  • இந்திய வீரர்கள் வருண் (2வது, 49வது நிமிடம்), ஹர்மான்பிரீத் (11வது, 25வது நிமிடம்), விவேக் (35') ஆகியோர் கோல் அடித்தனர். தென் ஆப்ரிக்கா சார்பில் பாட்ஸ் (53') ஆறுதல் கோல் போட்டார். 
எப்ஐஎச் மகளிர் ஹாக்கி சீரிஸ்: உருகுவேயை வென்றது இந்தியா
  • ஒலிம்பிக் தகுதிச் சுற்று ஆட்டங்களுக்கு தேர்வு பெற உதவும், இப்போட்டி ஹிரோஷிமாவில் நடைபெறுகிறது. உருகுவேயுடன் நடைபெற்ற ஆட்டத்தில் தொடக்கம் முதலே இந்தியா ஆதிக்கம் செலுத்தியது.
  • ராணி, குர்ஜித், ஜோதி ஆகியோர் தொடக்கத்திலேயே அபாரமாக கோலடித்தனர். 51-ஆவது நிமிடத்தில் உருகுவே தரப்பில் டெரஸா கோலடித்தார். எனினும் அடுத்த 56 ஆவது நிமிடத்தில் லால்ரேமிசியாமி வெற்றி கோலை அடித்தார். இறுதியில் 4-1 என வென்றது இந்தியா.
உலக வில்வித்தை: இந்தியாவுக்கு வெண்கலம்
  • டென்பாஸ்ச் நகரில் நடைபெற்று வரும் இப்போட்டியில் மகளிர் காம்பவுண்ட் பிரிவில் ஜோதி சுரேகா வெண்ணத்தின் அபாரமான செயல்பாட்டால் அணிகள் பிரிவில் துருக்கியை 229-226 என்ற புள்ளிக் கணக்கில் வீழ்த்தி வெண்கலம் வென்றது. இந்திய அணியில் ஜோதி, முஸ்கன் கிரார், ராஜ் கவுர் ஆகியோர் இடம் பெற்றிருந்தனர்.
  • தனிநபர் பிரிவில் துருக்கியின் ஏசிம் போட்ஸானை 10-9 என்ற புள்ளிக் கணக்கில் வென்று மற்றொரு வெண்கலம் வென்றார் ஜோதி.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel