Type Here to Get Search Results !

12th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் புறப்பட்டார் பிரதமர் மோடி
  • ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்பதற்காக கிர்கிஸ்தான் பிரதமர் மோடி புறப்பட்டார். மாநாட்டின் இடையே ரஷ்ய அதிபர் விளாடிமின் புதிர் மற்றும் சீன அதிபர் ஜின்பிங் உள்ளிட்டோரையும் சந்தித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்துகிறார்.
லோக்சபா பா.ஜ. தலைவராக மோடி தேர்வு
  • பார்லி. லோக்சபா தலைவராக பிரதமர் மோடியும், துணை தலைவராக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் நியமிக்கப்பட்டனர்.
  • இதே போன்று ராஜ்யசபா பா.ஜ., தலைமாநிலங்களவை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளானர் 
  • மேலும் லோக்சபா பா.ஜ., தலைமை கொறடாவாக டாக்டர் சஞ்சய் ஜெய்ஸ்வாலும், ராஜ்யசபா பா.ஜ, தலைமை கொறடாவாக நாராயண்லால் பஞ்சாரியாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருது
  • கடந்த 2018-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருதுக்கு புகழ்பெற்ற எழுத்தாளர் அமிதாவ் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். அதில், மேற்கு வங்க முன்னாள் ஆளுநர் கோபால கிருஷ்ண காந்தி, அமிதாவ் கோஷுக்கு ஞானபீட விருதினை வழங்கி கெளரவித்தார்.
  • ஆங்கிலத்தில் நாவல்களையும், கட்டுரைகளையும் எழுதியுள்ள அமிதாவ் கோஷ், ஞானபீட விருது பெறும் முதல் ஆங்கில எழுத்தாளர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். 
இந்தியாவுக்கான சீன துாதர் நியமனம்
  • இந்தியாவுக்கான புதிய சீன துாதராக, சன் வெய்டாங் நியமிக்கப்பட்டுள்ளார்.இந்தியாவுக்கான சீன துாதராக இருந்தவர், லுா ஜாஹூயி. இவர், சீன அரசின் வெளியுறவு துறை, துணை அமைச்சராக, சமீபத்தில் நியமனம் செய்யப்பட்டார்.
  • இந்நிலையில், சீன வெளியுறவு துறையின் திட்டம் மற்றும் கொள்கை பிரிவு இயக்குனராக உள்ள, சன் வெய்டாங், இந்தியாவுக்கான துாதராக நியமிக்கப்பட்டுள்ளார். 



முத்தலாக் மசோதாவுக்கு ஒப்புதல்
  • முத்தலாக் மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார். வரும் பார்லி., கூட்டத்தொடரில் முத்தலாக் மசோதா நிறைவேறும் எனவும் அவர் தெரிவித்தார். 
'ஹைபர் சோனிக்' விமானம்: இந்தியா சாதனை
  • இந்தியா முதல் முறையாக ஒலியை மிஞ்சும் வேகத்தில் செல்லும் ஆளில்லா ஹைபர் சோனிக் விமானத்தை வெற்றிகரமாக இயக்கி சாதனை செய்துள்ளது. 
  • ஒடிசா மாநிலத்தில் உள்ள அப்துல்கலாம் தீவில் நடைபெற்ற இந்த சோதனையில் முற்றிலும் உள்நாட்டு தொழில் நுட்பத்தில் உருவாக்கப்பட்ட ஆளில்லா விமானம் இயக்கி வெற்றிகரமாக சோதித்து பார்க்கப்பட்டது. 
  • 20 நிமிடங்கள் மட்டுமே பறக்க விடப்பட்ட அந்த விமானம் மணிக்கு 6 ஆயிரத்தி 174 கிலோ மீட்டர் வேகத்தில், ஹைப்பர் சோனிக் என்ற ஒலியை மிஞ்சும் வேகத்தில் பறந்தது.இதன் மூலம் ஹைப்பர்சோனிக் வேகத்தில் செல்லும் விமானத்தை இயக்கும் இந்திய தொழில் நுட்பம் முழு வெற்றியை எட்டி உள்ளதாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் தெரிவித்துள்ளது. 
ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • ஆதார் சட்டத் திருத்த மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் எந்த ஒரு தனிநபரும் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டால் தவிர, எந்த திட்டத்திற்கும் ஆதார் வழங்குமாறு கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 
காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி 6 மாதம் நீட்டிப்பு
  • ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி மேலும் 6 மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜம்மு - காஷ்மீரில், மெஹபூபா முப்தி தலைமையிலான, ஆட்சிக்கு அளித்து வந்த ஆதரவை, கடந்த 2018, ஜூன், 20ம் தேதி, பா.ஜ., வாபஸ் பெற்றது. 
  • இதையடுத்து, அங்கு, கவர்னர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. கவர்னர் ஆட்சி அமைந்து, ஆறு மாதங்கள் நிறைவடைந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்துவதற்கான பரிந்துரையை, ஜம்மு - காஷ்மீர் மாநில கவர்னர் சத்யபால் மாலிக் அனுப்பினார். 
  • இந்நிலையில், ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாத காலத்திற்கு நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. காஷ்மீர் மாநில கவர்னரின் பரிந்துரையின்படி மத்திய அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தொழிற்சாலை உள்கட்டமைப்பின் தலைவரானார் ரோஜா
  • ஆந்திர அரசின் முக்கியத்துறையில் ரோஜாவுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. அதாவது ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்.எல்.ஏ ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
பர்கூரில் 50,000 ஆண்டுகளுக்கு முந்தைய கற்கால ஆயுதங்கள் கண்டெடுப்பு
  • கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் ஒன்றியம் கந்திகுப்பம் அருகே ஏர்கெட்டு என்ற மலைப் பகுதியில், 50,000 ஆண்டுகளுக்கு முற்பட்ட மேல்நிலை பழைய கற்காலத்தைச் சேர்ந்த கல் ஆயுதங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. 
  • மேல்நிலை பழைய கற்காலம் என்பது, பழைய கற்காலத்துக்கும் புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலத்தைக் குறிப்பதாகும்.
மணல் அள்ளுவதற்கு தடை: ஆந்திர அரசு அதிரடி உத்தரவு
  • மணல் முறைகேட்டை தடுக்கும் விதமாக, தற்போதுள்ள மணல் எடுக்கும் சட்டம் ரத்து செய்யப்படுகிறது. தற்போதுள்ள மணல் கொள்கை ரத்து செய்யப்படுகிறது. 
  • புதிய கொள்கை ஜூலை 1 ஆம் தேதி அறிவிக்கப்படும். மணலை இலவசமாக எடுத்துக் கொள்ளும் சட்டத்தை பயன்படுத்தி வெளி மாநிலங்களுக்கு முறைகேடாக மணல் கடத்தப்பட்டு வந்ததால் இந்த நடவடிகை எடுக்கப்பட்டுள்ளது.
ஐ.நா.வில் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்த இந்தியா
  • வரலாற்றில் முதன்முறையாக ஐ.நா அமைப்பில் இஸ்ரேல் நாட்டுக்கு ஆதரவாக இந்தியா வாக்களித்துள்ளது. இதையடுத்து, இஸ்ரேல் இந்தியாவுக்கு நன்றி தெரிவித்துள்ளது.
  • பாலஸ்தீனத்தில் `ஷாகீத்' என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ஐ.நா.வில் தங்களை கண்காணிப்பு அங்கத்தினராக்க வேண்டுமென்று ஷாகீத் அமைப்பு கேட்டிருந்தது.
  • இதற்கு, கடும் எதிர்ப்பு தெரிவித்த இஸ்ரேல் , ஷாகீத் அமைப்பு தீவிரவாதிகளுடன் தொடர்புடையது. இந்த அமைப்பை அங்கத்தினராக்கக் கூடாது என்கிற தீர்மானத்தைக் கொண்டு வந்தது. 
  • இஸ்ரேல் கொண்டு வந்த தீர்மானம் 28-14 என்ற அடிப்படையில் வெற்றி பெற்றது. இந்தியா, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுக்கு ஆதரவாக வாக்களித்தன. பாகிஸ்தான், சீனா, ரஷ்யா எகிப்து, மொராக்கோ போன்ற நாடுகள் தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தன
  • `லெபனானைத் தலைமையகமாக கொண்டு ஷாகீத் அமைப்பு செயல்படுகிறது. மனித உரிமை அமைப்பு என்ற போர்வையில் தீவிரவாதிகளுடன் இணைந்து செயல்படும் அமைப்பு இது. 



உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியாவுக்கு 141-ஆவது இடம்
  • உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 5 இடங்கள் பின்தங்கி, 141-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது. ஐரோப்பிய நாடான ஐஸ்லாந்து இந்த ஆண்டும் பட்டியலில் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் கடைசி இடம் பெற்றுள்ளது.
  • கடந்த 2018-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட பட்டியலில், 136-ஆவது இடம் பெற்றிருந்த இந்தியா, இந்த ஆண்டு 5 இடங்கள் பின்தங்கி 141-ஆவது இடத்தைப்பெற்றுள்ளது.
  • இந்தப் பட்டியலில், கடந்த 2008-ஆம் ஆண்டு முதல் ஐஸ்லாந்து முதலிடம் பெற்று வருகிறது. கடந்த ஆண்டு பட்டியலில் கடைசி இடத்தில் இருந்த சிரியா தற்போது ஓரிடம் முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு கடைசி இடத்தை ஆப்கானிஸ்தான் பெற்றுள்ளது. இந்த பட்டியலில் கடைசி 5 நாடுகள் வரிசையில், தெற்கு சூடான், ஏமன், இராக் ஆகிய நாடுகள் உள்ளன.
  • பூடான், பட்டியலில் 15-ஆவது இடத்தைப் பிடித்து, தெற்காசிய நாடுகளில் அமைதி மிகுந்த நாடாக உள்ளது. அதையடுத்து 72-ஆவது இடத்தில் இலங்கை உள்ளது. நேபாளம், 76-ஆவது இடத்தையும், வங்கதேசம், 101-ஆவது இடத்தையும் பெற்றுள்ளன. இந்த பட்டியலில் பாகிஸ்தான் 153-ஆவது இடத்தைப் பெற்றுள்ளது.
கஜகஸ்தான் புதிய அதிபர் பொறுப்பேற்பு
  • கஜகஸ்தானில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜமாட் டோகயேவ், அந்த நாட்டின் புதிய அதிபராக புதன்கிழமை பெறுப்பேற்றுக் கொண்டார்.
  • 30 ஆண்டுகளுக்குப் பிறகு முன்னாள் அதிபர் நூர்சுல்தான் நஜர்பயேவ் பங்கேற்காமல் நடைபெற்ற முதல் தேர்தல் இது என்றாலும், அவரால் இடைக்கால அதிபராக நியமிக்கப்பட்ட காசிம் ஜமார்ட் டோகயேவ்தான் தற்போது அதிபராகப் பொறுப்பேற்றுள்ளார்.
கனடாவில் டால்பீன், திமிங்கலம் வளர்க்க தடை- கனடா அரசின் புதிய சட்டம்
  • இயற்கை வளங்களையும், உயிரினங்களையும் பாதுகாப்பதற்கு ஏதுவாக 'ப்ரி வில்லி' என்ற புதிய சட்டம் குறித்த மசோதா கனடா நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. 
  • இந்த சட்டத்தின்படி தனி நபர்கள் மற்றும் தனியார் நிறுவனங்கள் யாரும் திமிங்கலங்கள் மற்றும் டால்பீன்களை பிடிப்பதற்கு தடை விதிக்க வலியுறுத்தப்பட்டது. இந்த சட்டம் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. 
  • இந்த புதிய சட்டம் உடனடியாக அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், இதனை மீறுபவர்கள் இந்திய மதிப்பில் ரூ.1 கோடி அபராதம் செலுத்த வேண்டும் எனவும் கூறப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel