Type Here to Get Search Results !

10th JUNE CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

மருத்துவப் பணியில் முதன்முதலாக பயன்படுத்தப்பட்ட டிரோன் சேவை
  • உத்ரகாண்ட் மாநிலத்தில், தேஹ்ரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு உள்ளார்ந்த கிராமத்தின் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ரத்த மாதிரிகளை சுமந்துகெண்டு, 36 கிலோ மீட்டர் பறந்து, மாவட்ட மருத்துவமனையை சிறிதுநேரத்திலேயே சென்றடைந்தது ஆளில்லாத டிரோன்.
  • 36 கி.மீ. தூரத்தைக் கடப்பதற்கு இந்த டிரோன் எடுத்துக்கொண்ட நேரம் 18 நிமிடங்கள் மட்டுமே. ஆனால், இதே தூரத்தை சாலை வழியாக கடக்க 70 முதல் 100 நிமிடங்கள் வரை ஆகியிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
அனைத்து மாநிலங்களிலும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் மைக்க மத்திய உள்துறை அமைச்சகம் அதிகாரம் அளித்துள்ளது
  • வடகிழக்கு மாநிலங்களில் பலர் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக அசாம் மாநிலத்தில் இது போன்ற சம்பவங்கள் அதிகமாக நடந்துள்ளன. இதில் ஒரு முதியவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். அத்துடன் முன்னாள் ராணுவ வீரர் ஒருவரும் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு அகதியாக அறிவிக்கப்பட்டார். ஆவணங்களை அளித்த பிறகு அவர் பட்டியலில் இணைக்கப்பட்டார்.
  • இதை ஒட்டி வெளிநாட்டினர் தீர்ப்பாயத்தில் பலர் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்திய வெளிநாட்டவர் உரிமை சட்டத்தின்படி சட்ட விரோதமாக தங்கி உள்ள அனைவரும் தண்டனைக்குரியவர்கள் ஆவார்கள். 
  • அதை ஒட்டி தேசிய குடியுரிமை பட்டியல் அமைக்கப்பட்டு ஒரு சில நிபந்தனைகளுக்கு உட்படுவோருக்கு குடியுரிமை வழங்கப்பட்டு வந்தது. சமீபத்தில் அரசு அளித்துள்ள மசோதாவின் படி இந்திய குடியுரிமை பெற மேலும் சில விதிகளை அளித்துள்ளது.
  • இதன் மூலம் ஏற்கனவே பட்டியலில் இடம் பெற்றுள்ள பலரும் பட்டியலில் இருந்து விலக்கப்படும் சூழல் உருவாகி உள்ளது. அதை ஒட்டி பல குழப்பங்கள் ஏற்பட்டு பலர் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தை நாடும் நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அசாம் மாநிலத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் ஜூலை மாதம் 1 ஆம் தேதிக்குள் 1000 தீர்ப்பாயங்கள் அமைக்க உள்ளது.
  • அசாம் மாநிலத்தில் சுமார் 40 லட்சம் பேர் புதிய விதிமுறைப்படி நீக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 36 லட்சம் பேர் இதுவரை வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தை நாடி உள்ளனர். இந்த வழக்குகளை விரைவில் முடிக்க மத்திய உள்துறை அமைச்சகம் வெளிநாட்டவர் தீர்பாய விதிகளில் மாறுதல்கள் செய்துள்ளது.
  • அந்த மாறுதலின் படி ஒவ்வொரு மாநிலத்துக்கும் வெளிநாட்டினர் தீர்ப்பாயம் அமைக்க அதிகாரம் வழங்கப்பட உள்ளது. இந்த தீர்ப்பாயத்தில் தேசிய குடியுரிமை பட்டியலில் இருந்து விடுபட்ட யாவரும் அணுகி தங்கள் குறைகளை தெரிவிக்க முடியும். இது குறித்து விசாரிக்க அனைத்து மாவட்ட நீதிபதிகளுக்கும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. முறையீட்டுடன் அளிக்கப்பட்ட ஆவணங்கள் சரியாக இருந்தால் குடியுரிமை வழங்கவும் மாவட்ட நீதிபதிகளுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.



இந்தியாவில் முதல் முறையாக மின் வாகன சார்ஜிங் நிலையம் : உத்திரப் பிரதேசம்
  • யூனியன் பிரதேசமான டில்லியில் மட்டும் இவ்வாறு சார்ஜிங் செய்யும் நிலையங்கள் உள்ளன. அதுவும் டில்லி நகர்ப் பகுதியில் மட்டுமே இந்த நிலையங்கள் அமைந்துள்ளன. இதை நாடெங்கும் அமைக்க மத்திய மின் துறை அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக இதற்கான பணிகள் உத்திரப் பிரதேச மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளன.
  • இம்மாநிலத்தில் லக்னோ, கான்பூர், வாரணாசி, ஆக்ரா, நொய்டா, பிரயாக்ராஜ், காசியாபாத் மற்றும் மீரட் ஆகிய நகரங்களில் சார்ஜிங் நிலையங்கள் அமைய உள்ளன. அவ்வாறு சார்ஜிங் நிலையம் அமைக்க விரும்புவோரிடம் இருந்து மத்திய அரசு விருப்ப மனு கோரி உள்ளது. இந்த சார்ஜிங் நிலையங்கள் அமைப்பதன் மூலம் வேலை வாய்ப்புக்கள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது
வரி ஏய்ப்பு செய்வதை தடுக்க முடிவு ஜி 20 நிதியமைச்சர் மாநாட்டில் தீர்மானம்
  • ஜப்பானில் உள்ள புகோகா நகரில் ஜி 20 நாடுகளின் நிதியமைச்சர்கள், மத்திய வங்கி ஆளுநர்கள், பங்கேற்ற 2 நாட்கள் மாநாடு நிறைவு பெற்றுள்ளது. மாநாட்டு முடிவில் வெளியிடப்பட்ட கூட்டறிக்கையில் உலகப்பொருளாதாரம் மீண்டெழுந்தாலும் சர்வதேச வர்த்தக அரசியல் மோதல்கள் இன்னும் மந்தமான நிலையே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • அமேசான், ஆப்பிள், கூகுள், பேஸ்புக், ஆகிய பெரு நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபடுவதை தடுக்க 2020-ம் ஆண்டுக்குள் ஒருங்கிணைந்த வரி விதிப்பு முறையை உருவாக்க ஜி 20 நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் பங்கேற்றார்.
  • இந்த கூட்டத்தில் பேசிய நிர்லா சீதாராமன் சர்வதேச அளவிலான வரி விதிப்பு மற்றும் இரட்டை விதிப்பு தவிர்ப்பு, வரி ஏய்ப்பு தடுப்பு ஆகியவற்றுக்கு ஏற்ப வரி கொள்கைகள் உருவாக்கப்பட வேண்டியது அவசியம் என்று தெரிவித்தார். தற்போது பெரும்பாலான நாடுகள் தற்காப்பு கொள்கையை பின்பற்ற தொடங்கியுள்ளன. இதனால் சர்வதேச அளவிலான வர்த்தகத்தை பெருமளவு பாதிப்பதாக அவர் தெரிவித்தார்.
நிஸான் இந்தியா தலைவராக சினன் ஓஸ்கோக் நியமனம்
  • இந்தியாவில் நிஸான் மற்றும் டாட்ஸன் பிராண்டுகளின் வாகன தயாரிப்பு, விற்பனை, சந்தைப்படுத்துதல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகிய அனைத்து செயல்பாடுகளுக்கும் ஓஸ்கோக் தலைவராக இருப்பார் என்று அந்த அறிக்கையில் நிஸான் தெரிவித்துள்ளது. 
  • துருக்கியில் உள்ள நிஸான் நிறுவனத்தில் கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் நிர்வாக இயக்குநர் பொறுப்பை வகித்து வந்த ஓஸ்கோக், தாமஸ் குயெலுக்கு பதிலாக தற்போது இந்திய செயல்பாடுகளுக்கான பொறுப்பை ஏற்கவுள்ளார். 
  • கடந்த 1993-இல் ரெனோ நிறுவனத்தில் பணியை தொடங்கிய ஓஸ்கோக், சந்தைப்படுத்துதல், விநியோக நெட்வொர்க் மேலாண்மை, ரீடெயில் ஆபரேஷன் மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். நிஸான் நிறுவனத்தில் கடந்த 2015-இல் இணைந்தார்.
  • ஜப்பானில் யோகோஹாமாவில் தலைமையகத்தைக் கொண்டு இயங்கி வரும் நிஸான் நிறுவனம், டாட்ஸன், இன்ஃபினிட்டி, நிஸான் பிராண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட மாடல்களில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.
  • கடந்த 2018-இல் இந்நிறுவனம் சர்வதேச அளவில் 55.20 லட்சம் வாகனங்களை விற்பனை செய்ததன் மூலம் 11.6 லட்சம் கோடி யென்னை வருவாயாக ஈட்டியது.



இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவிப்பு
  • இந்திய கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஒய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். 2000-மாவது ஆண்டு அக்டோம்பரில் கென்யாவுக்கு எதிரான ஒருநாள் போட்டி மூலம் கிரிக்கெட்டில் யுவராஜ் சிங் அறிமுகமானார். 40 டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் விளையாடி 1900 ரன்கள் எடுத்துள்ள யுவராஜ் சிங் 3 சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது. 
கஜகஸ்தானின் புதிய அதிபராக பதவியேற்கும் டோகயேவ்
  • கஜகஸ்தானில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் இடைக்கால அதிபரான காசிம் ஜோமார்ட் டோகயேவ் வெற்றி அடையும் நிலையில் உள்ளதால், எதிர்க்கட்சியினர் தீவிரமாக போராட்டத்தில் இறங்கியுள்ளனர் .
  • கஜகஸ்தான் நாட்டில் கடந்த 30 வருடங்களாக அதிபராக பதவியில் இருந்த நூர்சுல்தான் நஜர்பயேவ் கடந்த மார்ச் மாதம் பதவி விலகினார். அத்துடன் இடைக்கால அதிபராக காசிம் ஜோமார்ட் டோகயேவை நியமித்தார். இதையடுத்து புதிய அதிபரை தேர்ந்து எடுப்பதற்காக நேற்று தேர்தல் நடந்துள்ளது. இந்த தேர்தலில் மொத்தம் 7 பேர் போட்டியிட்டனர்.
  • இந்தவேளையில் நேற்று வாக்குப்பதிவு முடிவடைந்ததும், நடத்தப்பட்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் ஜோமார்ட் டோகயேவுக்கு சாதகமாக அமைந்திருந்தன . அவர் 70 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகள் பெற்று அதிபர் ஆவார் என்றும், அமிர்ஷான் கொசனோவ் 15 சதவீத வாக்குகள் மட்டுமே பெறுவார் என்றும் கருத்துக்கணிப்பு அறிவிக்கப்பட்டது. 
'நேஷன்ஸ் லீக்' கால்பந்து: போர்ச்சுகல் சாம்பியன்
  • 'நேஷன்ஸ் லீக்' கால்பந்து தொடரில் போர்ச்சுகல் அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. பைனலில், 1-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்தை வீழ்த்தியது.
  • போர்ச்சுகலில், 'நேஷன்ஸ் லீக்' கால்பந்து தொடர் நடந்தது. இதன் பைனலில் போர்ச்சுகல், நெதர்லாந்து அணிகள் மோதின. முதல் பாதி முடிவு கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட போர்ச்சுகல் அணிக்கு கான்கலோ குடீஸ், ஒரு கோலடித்து கைகொடுத்தார். இதற்கு, கடைசி நிமிடம் வரை போராடிய நெதர்லாந்து அணியினரால் பதிலடி தர முடியவில்லை.
  • ஆட்டநேர முடிவில் போர்ச்சுகல் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, கோப்பை வென்றது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel