Monday, 6 May 2019

6th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

3 எம்எல்ஏக்கள் மீதான பேரவைத் தலைவரின் நடவடிக்கைகளுக்கு உச்சநீதிமன்றம் தடை
 • தமிழக எம்எல்ஏக்களான ஏ.ரத்தினசபாபதி, வி.டி.கலைச்செல்வன், பிரபு ஆகியோரிடம் விளக்கம் கேட்டு தமிழக சட்டப்பேரவைத் தலைவர் பி.தனபால் நோட்டீஸ் அனுப்பியுள்ள விவகாரத்தில், அவரது மேல் நடவடிக்கைகள் அனைத்துக்கும் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தடை விதித்தது. 
ஒடிசாவுக்கு, ரூ.1,000 கோடி! பிரதமர் மோடி அறிவிப்பு
 • ஒடிசாவில், 'போனி' புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, நேற்று, நேரில் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, மாநிலத்துக்கு கூடுதல் உதவியாக, 1,000 கோடி ரூபாயை அறிவித்துள்ளார்.
 • புயல் உருவானது முதல், அது கரை கடந்தது வரை சரியாக கணித்தது, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை சிறப்பாக எடுத்தது ஆகியவற்றுக்கு, ஐக்கிய நாடுகள் சபை, பாராட்டு தெரிவித்துள்ளது.புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஒடிசாவுக்கு, மத்திய அரசு ஏற்கனவே, 381 கோடி ரூபாய் உதவித் தொகையை அறிவித்து இருந்தது. 
அறிமுகமானது வேலா நீர்மூழ்கி கப்பல் தயார்
 • ஐரோப்பிய நாடான பிரான்சின் தொழில்நுட்ப உதவியுடன் தயாரிக்கப்படும், 'ஸ்கார்பியன்' ரக நீர்மூழ்கி கப்பல்களில், நான்காவது கப்பலான, ஐ.என்.எஸ்., வேலா, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
 • நம் கடற்படைக்காக, ஆறு, ஸ்கார்பியன் ரக நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிப்பதற்காக, பிரான்ஸ் நாட்டுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.அந்நாட்டு தொழில்நுட்ப உதவியுடன், உள்நாட்டிலேயே, இந்த நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்படுகிறது.
 • மஹாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள, 'மாசகோன் டாக்யார்ட்' நிறுவனம், இந்த நீர்மூழ்கி கப்பல்களின் கட்டுமான பணியை மேற்கொண்டுள்ளது.இதுவரை, கல்வாரி, காந்தேரி, கராஞ்ச் ஆகிய நீர்மூழ்கி கப்பல்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. இதில், ஐ.என்.எஸ்., கல்வாரி, கடற்படையில் இணைந்துள்ளது. 
 • மற்றவை, சோதனை கட்டத்தில் உள்ளன.இந்நிலையில், நான்காவது நீர்மூழ்கி கப்பலான, வேலா, தயார் நிலையில் உள்ளது. இது நேற்று, அறிமுகம் செய்யப்பட்டது. 
 • இந்தநீர்மூழ்கி கப்பல்.ஐ.என்.எஸ்., வேலா என்ற நீர்மூழ்கி கப்பல், 1973ல் கடற்படையில் சேர்ந்தது. 37 ஆண்டுகால பணிக்குப் பின், 2010ல் அது படையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டது.தற்போது, அதே பெயரில், புதிய நீர்மூழ்கி கப்பல் தயாரிக்கப்பட்டுள்ளது.
மாநில அளவிலான கூடைப்பந்து போட்டியில் இந்தியன் வங்கி அணி 'சாம்பியன்'
 • 25-வது மாநில அளவிலான கூடைப்பந்து போட்டி சென்னை தியாகராயநகர் வெங்கட்நாராயணா ரோட்டில் உள்ள மாநகராட்சி திடலில் நடந்தது. 
 • இதன் ஆண்கள் பிரிவில் கடைசி லீக் போட்டியில் இந்தியன் வங்கி அணி 79-61 என்ற புள்ளி கணக்கில் வருமான வரி அணியை வீழ்த்தி 'சாம்பியன்' பட்டத்தை கைப்பற்றியது. வருமான வரி அணி 2-வது இடத்தையும், ஐ.சி.எப். அணி 3-வது இடத்தையும், அரைஸ் ஸ்டீல் அணி 4-வது இடத்தையும் பெற்றன.
 • சாம்பியன் பட்டம் வென்ற அணிகளுக்கு ரூ.40 ஆயிரமும், 2-வது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.30 ஆயிரமும், 3-வது இடம் பிடித்த அணிகளுக்கு ரூ.20 ஆயிரமும், 4-வது இடம் பெற்ற அணிகளுக்கு ரூ.10 ஆயிரமும் ரொக்கப்பரிசாக வழங்கப்பட்டன.ஹூஸ்டன் பல்கலை. கட்டடத்துக்கு இந்திய-அமெரிக்க தம்பதியின் பெயர்
 • அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்திலுள்ள கட்டடமொன்றுக்கு, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த தம்பதி துர்கா அகர்வால் மற்றும் சுசீலா அகர்வாலின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
 • பல்கலைக்கழகத்தின் பேராசிரியர்களான அந்த இருவரும், ஆய்வுப் பணிகளில் சிறந்த பங்களிப்பு வழங்கியதற்காக இந்த கெளரவம் அளிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.
 • பொறியியல் ஆய்வுத் துறைக்கான அந்தக் கட்டடம், 2017-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது ஆகும்.
ஆசிய ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்ற இந்திய வீரர்கள்
 • மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற 2019ம் ஆண்டுக்கான ஆசிய ஸ்குவாஷ் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடரின் ஆடவர் பிரிவின் இறுதிப் போட்டியில் ஹாங்காங் வீரர் லியோவை எதிர்த்து இந்தியாவின் சவுரவ் கோஷல் விளையாடினார். 
 • இதில் 11-9, 11-2, 11-8 என்ற செட் கணக்கில் அபாரமாக வென்று இந்திய வீரர் சவுரவ் கோஷல் பட்டத்தைக் கைப்பற்றினார்.
 • அதேபோல் மகளிர் இறுதிப் போட்டியில் முதல் நிலை வீராங்கனையான ஹாங்காங்கின் ஆனி அவ்-ஐ எதிர்த்து இரண்டாம் நிலை வீராங்கனையான இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா மோதினார். தொடக்கத்திலிருந்தே அபாரமாக ஆடிய இந்திய வீராங்கனை ஜோஷ்னா, 11-2 என முதல் செட்டை கைப்பற்ற, பின்னர் சுதாரித்துக்கொண்ட ஆனி இரண்டாவது செட்டை 6-11 எனக் கைப்பற்றினார். 
 • இதனால் ரசிகர்களிடையே பரபரப்பு தொற்றிக்கொண்டது. நான்காவது செட்டில் 11-6 என கைப்பற்றிய ஜோஷ்னா ஆசிய தனிநபர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றார்.
உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் முதலிடம்
 • உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. இதன்படி ஆண்கள் ஒற்றையர் தரவரிசையில் 31 வயதான செர்பியா வீரர் நோவக் ஜோகோவிச் (11,160 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார். 
 • இதன் மூலம் முதலிடத்தை 250 வாரங்கள் ஆக்கிரமித்த 5-வது வீரர் என்ற பெருமையை ஜோகோவிச் பெற்றுள்ளார்.
 • ஸ்பெயின் வீரர் ரபெல் நடால் (7,765 புள்ளிகள்) 2-வது இடத்தில் தொடருகிறார். சுவிட்சர்லாந்து வீரர் ரோஜர் பெடரர் (5,590 புள்ளிகள்) ஒரு இடம் முன்னேறி 3-வது இடத்தை பிடித்துள்ளார். 
உலக டென்னிஸ் தரவரிசை பட்டியலில் ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடம்
 • உலக டென்னிஸ் வீரர், வீராங்கனைகளின் தர வரிசைப்பட்டியலை சர்வதேச டென்னிஸ் சங்கம் நேற்று வெளியிட்டது. பெண்கள் ஒற்றையர் தரவரிசையில் ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனான 21 வயது ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா (6,151 புள்ளிகள்) முதலிடத்தில் நீடிக்கிறார்.

TNPSCSHOUTERS

Author & Editor

TNPSC Shouters is the premier online site for anyone who are preparing Government Exams.TNPSC Shouters was started in april 2015 as a Educational blog.We offers state-of- the art support to all the aspirants of TNPSC /Bank /Government exams.

0 comments:

Post a Comment