Type Here to Get Search Results !

5th MAY CURRENT AFFAIRS 2019 TNPSC SHOUTERS TAMIL PDF

"தலப்பாகட்டி பிரியாணி" பெயரை பயன்படுத்த 7 கடைகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை
  • திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணி உணவகம் சார்பில், தங்கள் நிறுவனர் நாகசாமி நாயுடு தொடங்கிய தலப்பாகட்டி பிரியாணி என்ற பெயரையோ அல்லது தங்களது வணிக குறியீட்டையோ பிறர் பயன்படுத்த அனுமதிக்க கூடாது என கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர். 
  • வாடிக்கையாளர்கள் மத்தியில் புகழ்பெற்ற தங்கள் கடையின் பெயரை பிறர் லாப நோக்கத்துக்காக பயன்படுத்துவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். இந்த வழக்கை நீதிபதி வைத்தியநாதன் விசாரித்தார். 
  • விசாரணை முடிவில் தலப்பாகட்டி பெயரை பயன்படுத்த கோடம்பாக்கம் தலப்பாக்கட்டு பிரியாணி உள்ளிட்ட ஏழு உணவகங்களுக்கு தடை விதித்து உத்தரவிட்டார். மேலும் இதுகுறித்து பதிலளிக்கும்படி அந்த 7 உணவகங்களுக்கும் உத்தரவிட்டார்.
தொழில்நுட்ப இயக்ககத்துடன் இணைந்து பொறியியல் கலந்தாய்வை நடத்தும் டிசிஎஸ் நிறுவனம் 
  • தமிழகத்தில் ஆண்டுதோறும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது. இதில் இந்த வருடத்திற்கான பொறியியல் கலந்தாய்வு 
  • இதில் நேரடி கலந்தாய்வு மற்றும் ஆன்லைன் கலந்தாய்வு என இரு முறைகளை கையில் எடுத்துள்ளது. இந்த ஆன்லைன் கலந்தாய்வு தமிழகத்தில் சுமார் 40 க்கும் மேற்பட்ட மையங்களில் நடைப்பெறுகிறது. எனவே இந்த பொறியியல் படிப்பிற்கான ஆன்லைன் கலந்தாய்வை இந்திய மென்பொருள் துறையில் முன்னணி வகிக்கும் " டிசிஎஸ் " (TATA CONSULTANCY SERVICES) நிறுவனம் நடத்த வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 
  • தமிழ்நாடு பொறியியல் சேர்க்கை மையம் ( Tamilnadu Engineering Admission Committee - "TNEA") பதவியில் இருந்து அண்ணா பல்கலைகழக துணை வேந்தர் எம்.கே. சூரப்பா விலகியதால் இந்த வருட பொறியியல் கலந்தாய்வை (Directorate Of Technical Education) தொழில்நுட்ப இயக்ககம் நடத்துக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



குத்துச்சண்டை போலந்தில் தங்கம் வென்ற இந்திய வீரர்கள்
  • போலந்து தலைநகரான வார்சாவில் நடைபெற்ற 36ஆவது ஃபெலிக்ஸ் ஸ்டாம் சர்வதேச குத்துச்சண்டை போட்டியில் , இந்திய வீரர்கள் கௌரவ் சோலங்கி, மணீஷ் கௌசிக் ஆகியோர் தங்கம் வென்றனர்.
  • ஒட்டுமொத்தமாக இந்தப் போட்டியில் இந்தியா 6 பதக்கங்களை வென்றுள்ளது. 2 தங்கம், ஒரு வெள்ளி, 3 வெண்கலம் வென்று இந்திய குத்துச்சண்டை வீரர்கள் சாதனை புரிந்துள்ளனர்.
  • 22 வயது சோலங்கி 52 கிலோ எடைப் பிரிவில் இங்கிலாந்து வீரர் வில்லியம் காவ்லேவை எதிர்கொண்டார். இதில், 5-0 என்ற கணக்கில் வென்றார் சோலங்கி.
  • கடந்த ஆண்டு நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் ஃபிளை வெயிட் பிரிவில் அவர் தங்கம் வென்றிருந்தார்.
  • காமன்வெல்த் போட்டியில் லைட் வெயிட் பிரிவில் வெள்ளி வென்ற 23 வயது மணீஷ் கௌசிக், ஃபெலிக்ஸ் ஸ்டாம் போட்டியில் 60 கிலோ பிரிவில் போட்டியிட்டு தங்கம் வென்றார். மொராக்கோ வீரர் முகமது ஹாம்அவுட்டை 4-1 என்ற கணக்கில் வீழ்த்தினார்.
  • இந்திய வீரர் ஹுசாமுதீன் (56 கிலோ எடைப் பிரிவு) வெள்ளியும், அரையிறுதி வரை முன்னேறிய மன்தீப் ஜங்ரா (69 கிலோ), சஞ்சீத் (91 கிலோ), அங்கித் கடானா (64 கிலோ) வெண்கலமும் வென்றனர்.
டிடிஹெச் நிறுவனங்களை தணிக்கை செய்ய "பிஇசிஐஎல்' க்கு அதிகாரம்: டிராய்
  • புதிய ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு இணக்கமாக கேபிள்டிவி, டிடிஹெச் நிறுவனங்கள் செயல்படுகிறதா என்பது குறித்து தணிக்கை செய்ய பொதுத் துறையைச் சேர்ந்த பிராட்காஸ்ட் என்ஜினியரிங் கன்சல்டன்ட் இந்தியா நிறுவனத்துக்கு (பிஇசிஐஎல்) அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்காற்று ஆணையம் (டிராய்) தெரிவித்துள்ளது.
  • எனவே, விநியோக தளத்தில் உள்ள ஆபரேட்டர்கள் அனைவரும் புதிய ஒழுங்காற்று விதிமுறைகளுக்கு இணக்கமாக இருப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.டிடிஹெச் மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் "ரேண்டம்' முறையில் தேர்வு செய்யப்பட்டு இந்த தணிக்கை பணி மேற்கொள்ளப்படும். மிக விரைவில் இந்த நடவடிக்கைகள் தொடங்கும் என்றார் அவர்.
  • புதிய கட்டண உத்தரவு மற்றும் விதிமுறைகளை மீறி செயல்படும் டிடிஹெச், கேபிள் டிவி ஒலிபரப்பு நிறுவனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், இது தொடர்பாக விரைவில் தணிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என ஏற்கெனவே டிராய் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
126 மணி நேரம் நடனமாடி முந்தைய உலக சாதனையை முறியடித்த 18 வயது பெண்
  • நேப்பாளை சேர்ந்த பன்டனா நேபாள் என்கிற பெண் 126 மணி நேரம் நடனமாடி முந்தைய கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். இவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
  • ஏற்கனவே கடந்த 2011ஆம் ஆண்டு, இந்தியாவை சேர்ந்த கலாமண்டலம் ஹேமலதா என்பவர், 123 மணி நேரம் 15 நிமிடம் நடனமாடியதே கின்னஸ் சாதனையாக இருந்தது.
  • இவரின் சாதனையை முறியடிக்கும் விதமாக, தற்போது நேபாள நாட்டைச் சேர்ந்த பன்டனா நேபாள், தொடர்ந்து 126 மணி நேரம் நடனமாடி புதிய கின்னஸ் சாதனையை ஏற்படுத்தியுள்ளார். இதனை உறுதிப்படுத்தும் விதத்தில் கின்னஸ் சாதனை பிரதிநிதிகள் அவரிடம் அதற்கான சான்றிதழ்களை வழங்கினர். மேலும்பன்டனா நேபாள் நேப்பாள் பிரதமர் நேரில் சந்தித்து பரிசுகள் வழங்கி கௌரவித்துள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel